May 7, 2007

அறுக்கப்போவது யாரு? (07 May 07)

சன் டிவியின் அமைப்பில் தரமான நகைச்சுவை சாத்தியமில்லை என ஏற்கனவே
ஒருமுறை சொல்லியிருந்த ஞாபகம். இந்த வாரம் அசத்தப்போவது யாரு பார்த்தபின்
மேலும் உறுதிப்பட்டது இந்த எண்ணம்.

ரெக்கார்ட் செய்து பார்த்ததில் ஒரு மணிநேர ப்ரோக்ராமை - நம்புங்கள் -20
நிமிடத்தில் பார்த்துவிட முடிந்தது. வெளிப்படையான விளம்பரங்கள், இந்தியத்
தொலைக்காட்சியில் முதல்முறை உசத்தி கண்ணா உசத்தி நம்பர் 1
நியூஸ்பேப்பர்களை தயவு தாட்சண்யமே இல்லாமல் தள்ள முடிந்த்து. ஆனால்
நிகழ்ச்சிக்குள்ளே வரும் விளபரங்களைத் தள்ள முடியவில்லை.

இதே நிகழ்ச்சியை விஜய் டிவியில் பார்த்தபோது இதே காமெடியன்கள் எப்படி
நடந்துகொண்டார்கள் என்று ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. நேரடியாகவே
பாண்டியராஜனையும் சின்னி ஜெயந்த் சடகோபன் ரமேஷையும் கிண்டலடிப்பார்கள்,
நிகழ்ச்சியை உடனே துவக்குவார்கள்.

இங்கேயோ, பள்ளிப்பேச்சுப்போட்டியில் ஆரம்பிப்பார்களே "ஆன்றோரே சான்றோரே
என்னைப்போன்றோரே .. தாமரைத் தடாகத்தின் நடுவில் அமர்ந்திருக்கும் தலைவர்
அவர்களே (அவர் ஒரு காலுடைந்த ஸ்டீல் நாற்காலியில் பேன் காற்று போதாமல்
விசிறி வீசிக்கொண்டிருப்பார்:-))" ரேஞ்சுக்கு,

சன் டிவி எங்களுக்கு வாழ்வளித்தது, சிட்டிபாபுவும் மதன்பாபுவும்தான்
உலகத்திலேயே சிறந்த காமெடியன்கள், அழகென்ற சொல்லுக்கு சந்தியா, நேரில்
இறங்கிவந்த கட்வுள் இன்றைய நடுவர் (அது எவனா இருந்தாலும் சரி) என்று
ஐந்து நிமிடம் புகழ்பாடி நிகழ்ச்சியை அரை நிமிடத்தில் முடிக்கிறார்கள்.

பத்து செகண்ட் டைமில் கான்சப்டுக்கு காமெடி செய்கிறார்களாம்.. அவள்விகடன்
வாசகர் கடிதத்திலேயே இந்த போலித்தனத்தை கிண்டலடிக்கிறார்கள்! டைம்
கொடுத்து நகைச்சுவை வருமா? முதல்ல விட்டொழிங்கப்பா இந்த கேனத்தனத்தை!

இதோடு முடிந்ததா? அவர்கள் பிட்டை முடித்தவுடன் இந்த சிறப்பு நடுவருடைய
பந்தா மற்றும் விளம்பரம் - இந்தத் திறமைகள் எல்லாம் எங்கெங்கோ கொட்டிக்
கிடந்ததை சன் டிவி சேகரித்துத் தந்து பெரும் சேவை செய்கிறது என்ற
ரேஞ்சில்!

எங்கெங்கோ எல்லாம் கொட்டிக்கிடக்கவில்லை - விஜய் டிவியில் இருந்து
அப்படியே லம்ப்பாக அள்ளிக் கொண்டு வந்தது என்பது கூடத் தெரியாத
குழந்தைகளா இந்த நடுவர்கள்? ஒரு ஆள் கூட புதிதாகச் சேர்க்கப்படவில்லை!
தரம் நீர்த்தது மட்டும்தான் சன் டிவியின் சாதனை!

இந்த விளம்பரம் எல்லாம் போதாது என்று நிகழ்ச்சிக்குள்ளேயேகூட சுய
முதுகுசொறிதல் ஜகஜ்ஜோதியாக ஆரம்பித்துவிட்டது!

தயாநிதி மாறனுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிப்பது என்றிலிருந்து
நகைச்சுவை ஆனது? எந்த மிமிக்ரி முயற்சியும் இல்லாமல், செயல்களையோ
பாவனைகளையோ மிகைப்படுத்தி நகைச்சுவை ஆக்கும் முயற்சி ஏதுமின்றி விளம்பர
பாணியில் ஒரு பாட்டு -- வேறு அரசியல் தலைவர்களைக் கிண்டல் செய்வது,
மிமிக்ரி செய்வது எல்லாம் தடை செய்யப்பட்டிருக்கிறது போல! விளம்பரம்
மட்டும்தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது!

சூப்பர் 10 என்ற இன்னொரு நிகழ்ச்சி விளம்பரக்கருவி ஆகி பல நாள் ஆகிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு ஆள் நடிகனாக ஆசைப்பட்டு ராசிக்கல்காரனிடம்
வருகிறானாம் (இது அப்படியே விவேக்கின் பாளையத்தம்மன் கான்சப்ட் - என்ன,
அதில் சிரிப்பு வரும் - அது ஒன்றுதான் வித்தியாசம்!) ராசிக்கல்காரன்
சொல்கிறான் - சின்னி ஜெயந்திடம் போ.. பாரதிராஜா என்று சொல்ல வந்த
வசனகர்த்தா இந்த வாரத் திரைப்படம் "கண்களால் கைது செய்" பார்த்து அலர்ட்
ஆகி ஆளை மாற்றிவிட்டார் போல!

ஒவ்வொரு நிகழ்ச்சியின் ஒவ்வொரு வசனத்திலும் அரசியலோ விளம்பரமோ கலக்காமல்
இருப்பதில்லை. இதனால் முதலில் பாதிக்கப்படுவது படைப்பாளியின் சுதந்திரம்.
விளைவு குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுதல்.

இன்னொரு நிகழ்ச்சி பார்த்தேன், எஸ் பி பாலசுப்பிரமணியம் வழங்கும்
"என்னோடு பாட்டுப் பாடுங்கள்" - ஜெயா டிவியில்.

நல்ல குரல்கள், வித்தியாசமான பாடல்கள் என்று பங்களிப்போரின் ஒத்துழைப்பு
ஒரு பக்கம் இருந்தாலும், தொகுத்து வழங்குவது எப்படி என்பதற்கு பாடமாக
அமைகிறது எஸ் பி பியின் வழங்கும் விதம்.

மெல்லிய நகைச்சுவையோடு அழைப்பதாக இருக்கட்டும், ஒரு சின்ன வரியையோ,
பின்னணி இசையையோ பாடிக்காட்டுவதாக இருக்கட்டும், நன்றாகப்பாடியவரை
வாழ்த்துவதாக இருக்கட்டும், நன்றாகப் பாடாதவரை சுட்டிக்காட்டுவதாக
இருக்கட்டும் (நாங்கள்லாம் ஹைதர் காலம்மா - நானம் இல்லை நாணம்.. சொல்லு
நாணம்), பாடல் பற்றிய மேலதிகத்தகவல்களைப் பகிர்ந்துகொள்வதாக இருக்கட்டும்
(ஜோசப் கிருஷ்ணாதான் இந்தப்பாட்டுக்கு பியானோ வாசிச்சாரு, முதல் முறை
நானும் சி-மைனர் ஸ்ருதி எடுக்கலை, ரெண்டாவது டேக்லேதான் ஓக்கே ஆச்சு),
முடிவில் "வெற்றியை நம்பமுடியவில்லை" என்ற பெண்ணிடம், "நம்பும்மா,
நாந்தான் பாலு, யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்" என்று கலாய்ப்பதாக
இருக்கட்டும் -- Wholesome entertainer!

ஒரு இடம் தவிர வேறெப்போதும் ஜெயா டிவி பிரதாபம் பாடி அறுக்கவில்லை,
யாரையும் குறை சொல்லும்போதுகூட வலிக்காமல் சொன்ன விதம், கர்வம் என்பதை
முற்றிலுமாக அறியாதவர் என்பதைத் தெளிவாகக் காட்டியது! 36000 பாட்டுக்கள்
பாடியவர் தன் தவறுகளை ஒப்புக்கொள்ளவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை -
இருந்தாலும் புதுப்பாடகர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக அதையும் செய்கிறார்!

பிறரைப் பாராட்டுவதற்கு தனி ஸ்டைலே வைத்திருக்கிறார் - தன்னனான.. என்று
ரசித்து மயங்கி ஆலாபனை செய்துகொண்டே ராட்சசன்மா இந்த இளையராஜா! பாடு
பாடும்போது ஒரு மாதிரி இருந்தது, படமாப் பாத்தப்போ படம்
எடுத்தப்புறம்தான் பாடினேனா தோணற அளவுக்கு நடிச்சு வைச்சுருந்தான் அந்தப்
படுபாவி கமலஹாசன்! இப்படிப்பட்ட உள்ளத்தில் இருந்து வரும் பாராட்டுகளோடு
அசத்தப்போவதுவின் பாராட்டுக்கள் உதட்டளவில் என்று தெளிவாகவே தெரிகிறது!

என்னதான் இருந்தாலும், சன் டிவிதான் மேக்ஸிமம் வியூவர்ஷிப்! நம்ம
விதியைத்தான் நொந்துகொள்ளவேண்டும்!

33 பின்னூட்டங்கள்:

கார்த்திக் பிரபு said...

good post

but jaya tv yilum kena thanama sila seydhtigal undu

indru morning oory il potanical garden la jeyalalitha vaitha rose sediyai agarriyadhrku makkal edirpu therivithaargalam..ippoi marupadiyum dmk karanga payandhu poi andha sediyaia thirupi angeye nataagalam

adhanlaa makal makilchiyamm

ena kodumai saravana idhu

makaluku vera velaye illaya??

முத்துகுமரன் said...

//என்னதான் இருந்தாலும், சன் டிவிதான் மேக்ஸிமம் வியூவர்ஷிப்! நம்ம
விதியைத்தான் நொந்துகொள்ளவேண்டும்!
//

இந்த பதிவுக்கு எத்தனை ஹிட் :-)

* நானெல்லாம் பாட்டு கேக்குறதுக்கு தவிர வேற எதுக்காகவும் சன், ஜெயா தொலைக்காட்சி பக்குறது இல்லை. *

லொடுக்கு said...

//தொகுத்து வழங்குவது எப்படி என்பதற்கு பாடமாக
அமைகிறது எஸ் பி பியின் வழங்கும் விதம்.//

சென்ற வாரம் நானும் பார்த்தேன். மனிதன் கலக்குகிறார்.

அசத்தப்போவது யாரு பற்றி உங்கள் கண்ணோட்டமே எனது கண்ணோட்டமும். பேத்தல்.

பொன்ஸ்~~Poorna said...

//என்னதான் இருந்தாலும், சன் டிவிதான் மேக்ஸிமம் வியூவர்ஷிப்//
சீக்கிரமே குறைஞ்சிடும்னு தோணுது.. இப்ப விஜயும் கொஞ்சம் மேல வந்துகிட்டிருக்கு.. ஜெயா, சன் ரெண்டு பேரும் விஜய்யைப் பார்த்துக் காப்பி செய்திட்டிருக்காங்க.. எப்படியும் அந்த அளவுக்கு வரலையே..

உண்மைத்தமிழன் said...

//யாரையும் குறை சொல்லும்போதுகூட வலிக்காமல் சொன்ன விதம், கர்வம் என்பதை
முற்றிலுமாக அறியாதவர் என்பதைத் தெளிவாகக் காட்டியது! 36000 பாட்டுக்கள்
பாடியவர் தன் தவறுகளை ஒப்புக்கொள்ளவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை -
இருந்தாலும் புதுப்பாடகர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக அதையும் செய்கிறார்!//

உண்மைதான் சுரேஷ்.. எஸ்.பி.பி. இன்னமும் தான் ஒரு பாடகன்தான் என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கும் பைத்தியக்கார பாடகர்..

அவருடைய வெற்றிக்குக் காரணமே அவருடைய இந்த அவையடக்கம்தான்..

என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியின் வெற்றிக்கான காரணங்கள், முழுக்கவே பாடும் நிலா திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான்..

Anonymous said...

அசத்தப்போவது யாரு முதலிரண்டு எபிசோடுகள் பார்த்ததோடு சரி .. நோ கமெண்ட்ஸ்

விஜய்யின் கலக்கப்போவது யாரும் கடுப்பேற்றத்தான் செய்கிறது. எஸ்.வி சேகர் நகைச்சுவை என்ற பெயரில் அவ்வப்போது தன் மேதாவித்தனத்தை வெளிப்படுத்திக்கொள்கிறார்

"என்னோடு பாட்டு பாடுங்கள்" குறித்து நான் என்னவெல்லாம் எழுதவேண்டுமென நினைத்தேனோ அதையெல்லாம் சொல்லியிருக்கீங்க. தவறுகளை திருத்துவதாகட்டும், தகவல்களை சொல்வதாகட்டும் அவ்வளவு தன்னடக்கம், பிறர் மனம் நோகாமல் சொல்லெவேண்டுமென்ற உயர்ந்த பண்பை எஸ்.பி.பியிடமிருந்து எல்லோரும் கற்றுக்கொள்ளவேண்டும்.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

இளையராஜா மற்றும் கமல் பற்றி பாலு சொன்னது எந்தப் பாட்டைப் பாடும்போது என்று சொல்லுங்களேன்!

Bharath said...

Absolutely right.. people are so frustrated by Sun's antics ..
Creativity'a kilo enna vilai'nnu Kekkum Sun TV will definitely be the factor for their defeat in the coming election.

Anonymous said...

copycat SunTv
anbudan also they copied from VijayTV coffee with Anu

பினாத்தல் சுரேஷ் said...

கார்த்திக் பிரபு,

ஜெயா டிவியும் அதே குட்டைதான். குறிப்பா நியூஸைப்பொறுத்தவரை அந்தப்பக்கமே திருப்பாம இருக்கறதுதான் மனநலத்துக்கு நல்லதுன்னு நெனைக்கிறேன். ஆனா அவங்க நிகழ்ச்சிகளுக்குள்ள சன் மாதிரி ஊடுறுவறது இல்லைன்னும் நெனைக்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

முத்துகுமரன்,

நல்ல கேள்வி. நல்ல முடிவும் கூட (இசை தவிர வேறெதற்கும் டிவி தொடுவதில்லை)

உங்கள் கேள்விக்கு விடை -- மெஜாரிட்டி வியூவர்ஷிப்பெல்லாம் இல்லைங்க! எதோ மீடியமா ஓட்டிகிட்டிருக்கேன் :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி லொடுக்கு. நிஜமாவே கலக்கறாரு!

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸ்,

குறையறதுன்றது நடந்தாலும் (அதுவே ரொம்பக்கஷ்டம்), உடனே இந்த மாதிரி நிகழ்ச்சிகளை நிறுத்திடுவாங்க! எதோ சொத்தை சொள்ளை இருந்தாலும் இதாவது வருதே!

எங்க ஊர்லே இப்போதைக்கு இந்த ரெண்டு சேனல் மட்டும்தான் :-(

பினாத்தல் சுரேஷ் said...

உண்மைத் தமிழன்,

//என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியின் வெற்றிக்கான காரணங்கள், முழுக்கவே பாடும் நிலா திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான்.. //

100 சதவீதம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை.

பினாத்தல் சுரேஷ் said...

விக்கி,

//விஜய்யின் கலக்கப்போவது யாரும் கடுப்பேற்றத்தான் செய்கிறது. எஸ்.வி சேகர் நகைச்சுவை என்ற பெயரில் அவ்வப்போது தன் மேதாவித்தனத்தை வெளிப்படுத்திக்கொள்கிறார்//

இது மூணா? நான் இன்னும் அதைப்பார்க்கவில்லை. பழைசு நெட்லே இருக்கறது மட்டும்தான் பார்த்தேன், ஊருக்கு வந்தபோது ரெண்டு எபிசோட் பாத்தேன் - அவ்வளவுதான்.

// உயர்ந்த பண்பை எஸ்.பி.பியிடமிருந்து எல்லோரும் கற்றுக்கொள்ளவேண்டும்//

குறிப்பா - வாயப்பயம் கால்லே போட்டா வ்யுக்கும் வாய்லே போட்டா இநிக்கும் டைப் காம்பியர தேவதைகள், பார்ட் டைம் அஷ்டாவதானிகள் :-)

பினாத்தல் சுரேஷ் said...

வித்யாசாகரன்,

கமலைப்பற்றிச் சொன்னது - காக்கிசட்டை படப்பாடல் - சிங்காரி சரக்கு போது.

இளையராஜா பற்றிச் சொன்னது தம்தன தம்தன தாளம் வரும் பாடின்போது என நினைக்கிறேன் - அது போன எபிஸோட், மறந்துவிட்டது :-(

பினாத்தல் சுரேஷ் said...

அனலிஸ்ட்,

இதை போன எலக்ஷன் அப்பவே சொன்னேன் நான் - சன் டிவி திமுக கூட்டணிக்கு பலவீனம் என - கூட்டணி பலம் ஸ்ட்ராங்கா இருந்தப்ப தப்பிச்சது, அடுத்த முறை... நீங்க சொல்றாப்பல நிச்சயம் நடக்கலாம்.

பினாத்தல் சுரேஷ் said...

அனானி 1 - நன்றி
அனானி 2 - உண்மை! காபி அடிக்கறது மட்டுமில்லாம தான் தான் சூப்பர்னு பெருமை அடிக்கறதுதான் டூ மச்!

தருமி said...

// சன் டிவிதான் மேக்ஸிமம் வியூவர்ஷிப்..//

மாறிக்கிட்டு வருதுன்னு நினைக்கிறேன். எப்படியோ நாங்கள் மாறிட்டோம். விஜய் டி.வி.க்குத்தான் இப்போ முதலிடம்.

பினாத்தல் சுரேஷ் said...

மாறினா சரிதான் தருமி :-)

ஆதிபகவன் said...

90% சன் டிவியின் நிகழ்ச்சிகள் வெறும் ஜால்ராதான். அதிகமான நிகழ்ச்சிகள் மற்ற டிவி சானல்களில் சுட்டவைதான்.
சொந்தமாக சரக்கு எதுவுமே இல்லாத ஒரு சானல்.

//பத்து செகண்ட் டைமில் கான்சப்டுக்கு காமெடி செய்கிறார்களாம்.. //
தனியாக காமடி பண்ணத்தேவையில்லை
இதுவே ஒரு காமடிதான்.

வெளிநாடுகளில் ஒளிபரப்பப்படும் சானல்களில் சன் டிவிதான் பளிச் என தெளிவாகத் தெரிகிறது.

இங்கு பின்னூட்டம் இட்டவர்கள் எல்லோருமே சன் டிவியை மட்டம்தட்டிதான் எழுதியிருக்கிறார்கள். ஆனால் சன் டிவிக்குத்தான் அதிக பார்வையாளர்கள்.

எதிர்காலத்தில் குறையுமென எதிர்பார்ப்போம்.

Geetha Sambasivam said...

nanga epovume UJALA than. he he he PODHIGAI onnu than virummmmmmmmbbbbbbbi parpom. ipo nalla velaiya inge athuvum illai. thapichom, konja nalukavathu.
But Realy say Podhigai is giving super programmes from morning to evening. Really worth seeing.

Nakkiran said...

I felt the same... good post...

கார்த்திக் பிரபு said...

ஆனா அவங்க நிகழ்ச்சிகளுக்குள்ள சன் மாதிரி ஊடுறுவறது இல்லைன்னும் நெனைக்கிறேன்.
//

thats rit pa

தகடூர் கோபி(Gopi) said...

பினாத்தலாரே,

சன், ஜெயா இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

இவங்களோட காபி லிஸ்ட்:

விஜய்:கலக்கப்போவது -> சன்:அசத்தப்போவது (அதே பழைய குழு)

விஜய்:காபி வித் அனு -> சன்:அன்புடன்

விஜய்: -> குற்றம் நடந்தது என்ன
சன்:நிஜம்

மா(தெலுங்கு):பாடாலனி உந்தி ->
ஜெயா:என்னோடு பாட்டுப் பாடுங்கள் (அதே மேடை அமைப்பு. அதே S.P.B)

DD பொதிகை:துள்ளாத மனமும் துள்ளும் -> ஜெயா:சொக்குதே மனம் (அதே பழைய குழு)

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

அட காபி விசயத்துல விஜய் டிவி கூட இருக்குதுங்க. (ஜோடி நம்பர் 1, கலக்கப் போவது, சூப்பர் சிங்கர், etc.,) ஆனா அவங்க நிகழ்ச்சிகள் எல்லாம் அவர்களின் ஸ்டார் குழுமத்தின் Star Oneலிருந்து தமிழுக்கு இறக்குமதியானவை. அடுத்தவங்களை பாத்து வலைவீசி காப்பியடிக்கலை.

ஜெயா/சன் இரண்டிலுமே உண்மையான காமெடி ஷோ அதோட "செய்திகள்" தான். ஒரே செய்தியை இவங்க சொல்றதும் அவங்க சொல்றதும் கேட்டா நம்மள நெனச்சி சிரிக்கறதா இல்ல அழுவறதான்னு கொழப்பமே வந்துடும். :-P

பினாத்தல் சுரேஷ் said...

ஆதி பகவன்,

//தனியாக காமடி பண்ணத்தேவையில்லை
இதுவே ஒரு காமடிதான்.// சரியாச்சொன்னீங்க!

சன் டிவி தெளிவாத் தெரிஞ்சுகிட்டிருந்தது உண்மைதான், ஆனா, இப்ப ஜெயாவும் தெளிவாவே வருது. எதோ பேண்ட்விட்த்துலே விளையாடறாங்கன்ற வரைக்கும் தெரியுது. அதுக்கு மேலே தெரியறதுக்கு மேட்டர் தெரியாது.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க கீதா!

பொதிகை பார்ட்டியா நீங்க, அவங்ககிட்டே புரோக்ராம் நம்பிப் பாக்கற மாதிரி இருக்கும். ஆனா எப்பவும் ஒரு கவர்ன்மெண்ட் ஆபீஸ் னு வெளிப்படையாத் தெரிஞ்சுகிட்டே இருக்குமே :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நக்கீரன்.

நன்றி கார்த்திக் பிரபு.

பினாத்தல் சுரேஷ் said...

கோபி, விரிவான கருத்துக்கு நன்றி.

காபி அடிக்கறதை ஒரு பெரிய விஷயமா இன்னிக்கு ஆக்கமுடியாத நிலைமை நமக்கு. அப்படி ஒரு கலாச்சாரத்துல வளர்த்துட்டாங்க :-(
அந்தாக்ஷரி, ஜோடிப்பொருத்தம், ஒலியும் ஒளியும் மாதிரி நிகழ்ச்சிகளை யார் உருவாக்குனாங்க, யார் காப்பியடிச்சாங்கன்னு சொல்ல முடியுமா?

விஜயில் வரும் ப்ரேஞ்சைஸ் நிகழ்ச்சிகள் காபிரைட்டுக்குட்பட்டனவா? ஸ்பெயினில் ஒரு சமயம் டிவியை திருப்பிக்கொண்டிருந்தபோது, ஸ்பானிஷ், ப்ரெஞ்ச், ஜெர்மன் மொழிகளில் ஒரே நேரத்தில் மில்லியனர் நிகழ்ச்சி. பங்கேற்பவரும் நடத்துபவரும் மட்டும்தான் வித்தியாசம், காமெராக்கோணங்களில் ஆரம்பித்து, ஸ்கிரீனில் தெரியும் எழுத்துரு அளவு, பின்னணி இசை எல்லாம் ஒரே மோல்ட்! நிச்சயம் காபிரைட் இருக்கும். ஆனால் எல்லா காபிரைட்டுக்கும் உள்ள சட்ட ஓட்டைகளில் புகுந்து விளையாடியிருப்பார்கள் சன் டிவிக்காரர்கள்!

//உண்மையான காமெடி செய்திகள்தான்// அப்படிப்போடுங்க.. ஆனா சமயத்தில சிரிப்பையும் மீறி எரிச்சல் வருதே :-(

rv said...

குறிப்பு: இது ஒரு பீட்டர்/பி.ந/அறிவுஜீவிப் பின்னூட்டு!

சன், ஜெயால்லாம் பாக்க தேவையில்லாத குடுப்பினை எனக்கு...

BBC Prime, ட்ராவல், டிஸ்கவரி சயன்ஸ், ட்ராவல்&அட்வென்சர், அனிமல் ப்ளானட் போதும்..

நியுஸ் சானல்னா யூரோநியூஸ்... நியுஸ் படிக்கிற ஆளுங்க கூட கிடையாது இதுல... சும்மா பேக் க்ரவுண்ட்ல ப்ளேபாக் கொடுப்பாங்க...

இந்த தமிழ்நாடு டைப் அரசியல் காமெடி வேணுமின்னா இருக்கவே இருக்கு பாக்ஸ் நியுஸ், சி.என்.என்... :)))

ரொம்ப பீட்டர் விட்டாச்சு... தமிழ்நாட்டில் இருக்கும்போது பாக்குற ஒரே தமிழ் சானல்... ஸ்டார் விஜய்!!!!!!!! ஆனா அவங்களோட கலக்கப்போவது யாரு, லொள்ளுசபா லெவலும் ரொம்ப சுமார்தான்...

தகடூர் கோபி(Gopi) said...

//ஆனால் எல்லா காபிரைட்டுக்கும் உள்ள சட்ட ஓட்டைகளில் புகுந்து விளையாடியிருப்பார்கள் சன் டிவிக்காரர்கள்!//

இந்த விசயத்துல எல்லா டிவிக்காரங்களும் ஒன்றுதான். அப்படியே யாரேனும் நீதிமன்றத்துக்கு போனா, தீர்ப்பு வர்றத்துக்குள்ள (நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சம்பந்தப்பட்டவர்களை சரி கட்ட) பல விசயம் மாறிடும்.

//அப்படிப்போடுங்க.. ஆனா சமயத்தில சிரிப்பையும் மீறி எரிச்சல் வருதே :-(//

ரெண்டு பேருமே அவங்க ஆட்சி நடக்கும் போது நாட்டுல தேன்மாரி பொழியிதுன்னும் எதிர் கட்சியா இருக்கும்போது மக்கள் வாழவே முடியாத துயரத்துல இருக்கறதாகவும் காட்டும் போது அதை ஆராய்ச்சி பண்ணீங்கன்னா எரிச்சல் தான் வரும். காமெடி பாத்தா அனுபவிக்கனும் ஆராயக் கூடாது. :-)

பினாத்தல் சுரேஷ் said...

ராம்ஸு..

அறிவுஜீவி, பி ந பின்னூட்டம்கூட பீட்டா வர்ஷன்லே வருதா?

கலக்கப்போவது, லொள்ளு சபா எல்லாம் எப்பவும் சூப்பரா இருக்குமுன்னு சொல்லமுடியாது, ஆனா நல்ல காமெடி கிடைச்சா அங்கேதான் கிடைக்கும்ன்ற நிலைமை.. அவ்வளவுதான்.

பினாத்தல் சுரேஷ் said...

கோபி..

அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது..

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க.. அதான் அனுபவிக்கறோமே:-(

 

blogger templates | Make Money Online