தோழர்களே..
தேர்தல் நெருங்கி விட்டது. இனி பத்திரிக்கைகளின் சூடு வெய்யிலுக்குப் போட்டி போடும்.
Lies, bigger Lies and Statistics என்று கூறுவார்கள், அதற்கும் மேலாக இந்தக் கருத்துக்கணிப்புகளைக் கூற வேண்டும். இடியோ இடியுடன் கூடிய மழையோ, வெயிலோ, புயல் காற்றோ அல்லது லேசான காற்றோ என்று எல்லாவற்றையும் தொட்டுச்சென்று, முழுமையாக தவறு எனச்சொல்லமுடியாத கருத்துக்கணிப்புகள்..
ஜெயலலிதா விரும்பிய வண்ணம் உளவுத்துறை கணிப்பு வெளியிடுகிறது.
தி மு க கூட்டணியின் மனம் கவர்கிறது குங்குமம் கணிப்பு.
இந்தியா டுடேவும் குமுதமும் அவர்கள் மனம் கவர்ந்த கருத்துக்கணிப்பு வெளியிடுகின்றன.
நாம் என்ன செய்வது? நம் மனம் கவர்ந்த கணிப்பை யார்தான் வெளியிடுவார்?
எனவே, "நமக்கு நாமே" திட்டத்தின் படி, இந்த flash மென்பொருளை உருவாக்கி இருக்கிறேன்.
சில வாக்கியங்களுடன் உங்கள் உடன்பாட்டையோ எதிர்ப்பையோ, slider bar-ஐ னகர்த்தி உங்கள் மனநிலையை மென்பொருளுக்குத் தெரிவியுங்கள், உங்கள் மனம் கவர் கருத்துக்கணிப்பைப் பாருங்கள்.
உங்களுக்கு வந்த விடையை பின்னூட்டமாக எனக்குத் தெரிவியுங்கள்.
மறவாதீர், கருத்துக்கணிப்பு வரலாற்றில் இந்த மென்பொருள் ஒரு முக்கியமான மைல்கல்!
Mar 24, 2006
மனம் கவர் கருத்துக்கணிப்பு flash (24 mar 06)
Subscribe to:
Post Comments (Atom)
38 பின்னூட்டங்கள்:
எனக்கு வந்த விடை:- அதிமுக 157, திமுக 31, மட்ரது 46:- ஸ்ரீதர்
என்னங்க சூரியனும்,கையும்,மாங்காயும், அருவாளையும் வச்சிக்கிட்டு நான் என்ன பண்ணுவேன்?
கருத்துக் கணிப்பு செமத்தியா இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கேள்விகளையும் சேர்த்திருக்கலாம்.
எனக்கு வந்ததோ "தொங்கும் சட்டமன்றம்".
ஃபிளாஷில் உங்கள் கைவண்ணம் தொடரட்டும்.
நன்றி நன்மனம். தீவிர அதிமுக ஆதரவாளரோ?
கைப்புள்ள, வாங்க - னீங்க நம்ம காட்சி. எனக்கும் கிட்டதட்ட அதேதான் வந்தது.
சுதர்சன்.கோபால் - நன்றி.15 கேள்விகள் மிகவும் குறைவுதான், ஒத்துக்கொள்கிறேன். இது முதல் முயற்சி என்பதால் கேள்விகளைக் குறைத்து, கணக்கிடுதலில் அதிக கவனம் செலுத்தினேன். (வெறும் அல்காரிதம் எழுத மட்டும் மூணு மணி நேரம் ஆச்சுன்னா பாத்துக்குங்களேன் - கேள்விகள் அதிகமாகி இருந்தால், இந்த 3 மணி நேரம் இன்னும் சற்று அதிகமாகி, எனக்கு விவாகரத்தும் ஆகியிருக்கும்:-)
:(( நான் மூன்றுதரம் ட்ரை செய்தேன். மூன்றுமுறையும் தொங்கு சட்டமன்றம் தான். திமுக 117; அதிமுக 58; மூன்றாவது 59. விஜயகாந்திற்கு நல்ல எதிர்காலம் தான். கருத்துக்கணிப்பு எனது மனதிற்கு ஒவ்வாததாக வருகிறதே, Flash சரியில்லை. :)
நன்றி ஷாஜி, நன்றி சுதர்சன் (நீங்க வேற சுதர்சன்.கோபால் வேறயா? இவ்வளவு நாளும் ஒரு ஆள்னு நெனச்சுகிட்டிருந்தேன்)
சுதர்சன், உங்களுக்கு வந்த முடிவைச் சொல்லலியே!
மணியன்.. கடைசிக்கேள்விக்கு பதிலை கொஞ்சம் மாத்திசொல்லிப்பாருங்க.
யார் ஆண்டாலும் நாடு உருப்படப்போவதில்லைன்றீங்க, விஜயகாந்த் வந்தாலும் தப்புன்றீங்களே!
உண்மைய சொல்லப்போனா, சு.கோ சொன்ன மாதிரி Sample Set சின்னது.
//நீங்க வேற சுதர்சன்.கோபால் வேறயா? இவ்வளவு நாளும் ஒரு ஆள்னு நெனச்சுகிட்டிருந்தேன்//
நீங்க மட்டுமில்லை.நிறையப் பேருக்கு இந்தக் குழப்பம் இருக்கு.
அண்ணாச்சி சுரேசு.. கலக்கி எடுக்கறீங்க.. நல்லா இருக்கு கருத்துக்கணிப்பு...
எனக்கு வந்த விடை 'தொங்குதய்யா சட்டமன்றம்'.. அனேகமா அதுதான் நடக்கும்னு நினைக்கேன்..
எப்படியிருந்தாலும், உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!!!
நன்றி சு கோ (மீண்டும்) - இதுக்குத்தான் நான் எப்பவும் ஃபுல் பெயரையும் எழுதிடறது.
நன்றி சோம்பேறிப்பையன் - மனம் போல விடை!
எனக்கு வந்தது தொங்கும் சட்டமன்றம்.
திமுக கூட்டணி - 106
அதிமுக கூட்டணி - 78
மற்றது - 50
எதுமே சரியா படலையே ஹ்ம்
ந்ன்றி கீதா.
தோழர்ஸ்,
என்ன ஆச்சு, தமிழ்மணம் முகப்பில் இருந்து காணாமல் போனதும் ஒரு கமெண்ட்டையும் காணோம்??
Nice work Suresh
பினாத்தல் - நன்றாக இருக்கு ஆனா.. இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன். தப்பா எடுத்துக்காதீங்க :-)
i got, DMK Alliance Majarity and 'Koottani aatchi'.
சுரேஷ்,
நல்லா பண்ணியிருக்கீங்க. உங்க பெயரை இனிமே அசத்தல் சுரேஷ் அப்படின்னு மாத்திக்கலாம். எனக்கு வந்ததும் "தொங்குதையா சட்டமன்றம்". நான் எதிர்பார்த்ததும் இதேதான். அதனால் உங்கள் கருத்துக்கணிப்பு சாப்ட்வேர் பிரமாதம். :)
எனது கருத்தாக இப்பதிவைச் சிலவாரங்களுக்கு முன்னால் இட்டிருக்கிறேன்.
http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post.html
good try!
என்ன சார், திரும்பவும் தமிழ்மண முகப்பில் வந்து வந்து போகிறது :) நான் நீங்கள் ஏதேனும் புதியதாக சேர்த்திருக்கிறீர்களோ என்று வந்து பார்த்து ஏமாந்தேன் :(
சுரேஷ் நல்ல முயற்ச்சி
எனக்கு வந்தது திமுக கூட்டணி ஆட்சி..(மொத்தம் 157, திமுக 83, காங்கிரஸ் 33, பாமக 21, கம்யூனிஸ்ட் 17.)
ஆனால் விஜயகாந்த் தமிழகத்தை சீர்திருத்துவாரா என்பதற்கும், இறுதி கேள்விக்கு பூஜ்ஜியம் அளித்தும் 35 இடங்கள் வருவது எப்படி???
இதைத்தான் பத்திரிக்கைகளும் செய்து விஜயகாந்திற்கு ஆதரவு பெருகுகிறது என்கிறார்களோ:-)))))))( குமுதத்தில் பகுதிநேர வேலை ஏதும் செய்கிறீர்களா:-)))))
It is very interesting.
It is a hung assembly. That was what I got. It may be true. Wait and See.
மணியன், ஏதோ தவறு இருக்கு, இங்கெ பாருங்க:
http://groups.google.com/group/Thamizmanam/msg/6e98dc2b50f17b38
நன்றி சிறில் அலெக்ஸ், இட்லிவடை, பாவக்காய், முத்து, பொட்டிக்கடை, முத்துக்குமரன், கீதா சாம்பசிவம் & தேன் துளி.
இட்லிவடை, குறைகளை சுட்டி காண்பிக்க முடியுமா? என்ன போச்சு, வெர்ஷன் 2 விட்டுட்டா போவுது:-)
முத்து, இந்தக்கணிப்பின் அதிசயமே அதுதானே? நீங்கள் நெனச்சது வரும்:-)
முத்துக்குமரன், இந்த அல்காரிதம் எப்படின்னா, முதல்ல திமுகவுக்கு எதிரான பாயிண்டை கூட்டிக்கழிச்சி திமுகவை ஃபிக்ஸ் பண்ணி, பிறகு அதிமுகவை கூட்டி கழிச்சி அதிமுகவை ஃபிக்ஸ் பண்ணிட்டு மிச்சம் மூன்றாம் அணிக்கு போயிடும். ரெண்டும் சரியில்லன்னு நீங்க சொன்னா அதுதானே அர்த்தம்?
ADMK front - 172
3rd front - 25
the other party - 37
ADMK amooga vettri!
Ithu thaan Nadunilaimaiyaana karuthu kanippu!
(Thaanai thalaivar Icarusu Pirakaasuji manam makila innum sirithu natkalukku thanglishil mattume maru mozhiya uruthi eduthu irukiraen!) :))
.:dYNo:.
மட்டுறுத்தல் பயன் படுத்துவதால், இப்போது அனானிமஸ் பின்னூட்டங்களையும் அனுமதிக்கத் துவங்கினால், முதல் கமெண்ட்டே டைனோ..நன்றி டைனோ.
யார் மேலோ உள்ள கோபத்தில(:-)) எங்களுக்கு இல்லை படிக்க கஷ்டம் கொடுக்கறீங்க:-)
I Got DMK but coalition Govt.
I hope, after gathering all comments, you will publish an Extract of this version.:-))!!!
நன்றி இப்னு ஹம்துன்,
நல்ல ஐடியாதான்.. பாக்கலாம் இன்னும் கொஞ்சம் சேர்ந்தா அஃபிஷியல் கருத்துக்கணிப்பாவே மாத்திடலாம்..
Here is my tally!
DMK front 128 [72+26+16+14]
ADMK Front: 35 [27+5+3]
Vijayjanth front: 71 [50+21]
Howzzzit!
உங்கள் மனம்தான் அதில் தெரிகிறது SK.
சுரேஷ்,
உங்களின் 'தவறிழைத்தான் பினாத்தலன்' பதிவில் கேட்டிருந்தீர்களே ஒரு கேள்வி? பின்னூட்டமே இல்லை என. இப்போது பார்த்தீர்களா? மக்கள் எல்லாம், வேட்பாளர்களை விட தேர்தல் 'மூடில்' அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தேர்தல் சம்பந்தமாக எது பதிவிட்டாலும், கண்டிப்பாக பின்னூட்டமும் எகிறும். அது தான் இப்போதைய விற்றுத்தீர்க்கும் சரக்கு!
பிகு: அசத்தலான பதிவுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி துபாய்வாசி..
பின்னூட்டம் ரொம்ப வரதையோ கம்மியா வரதையோ பத்தி கவலைப்படாத மகான் னிலைமைக்கு நான் இன்னும் போயிடலியே.. என்ன பண்ண???
Really good one
I got results as
DMK - 123
ADMK - 51
3rd front - 60
Vijayakanth bagged 45 seats..
Namba mudiyavillai....
நன்றி Karthikeyan muthurajan.
I got DMK koottani aatchi....
உதய சூரியன் லோகோ வெச்ச பார்ட்டிக்கு கூட்டணி ஆட்சியா? எங்கேயோ இடிக்குதே:-)
எனக்கும் தொங்கும் சட்டமன்றம்தான் கிட்டியது.
திமுக கூட்டணி: 84
அதிமுக கூட்டணி: 90
மூன்றாம் அணி: 60
மூன்றாம் அணிக்கு லிவரேஜ் கிடைப்பது நல்லதுதான் என நினைக்கிறேன்.
You are very clever person.
you impose your ideas very cleverly on others without their knoledge.
You have formated your questionaire in such a way,even if one wishes that DMK will form a government of its own with obsolute majority ,ultimately he will get the result "coalition government"only as per your wish.
Supper idea!
Supper cleverness!
thanks arunagiri and anbazhaga,
anbazagan - I dont agree with the accusation - it was not because of the questions, it was because of DMK's stance this election - they have to win 90% of their seats for a simple majority, a tall order! YOU CAN GET DMK INDEPENT FROM THIS SOFTWARE, I tried it.
Post a Comment