என் இனிய தமிழ் வலை ரசிகப்பெருமக்களே,
ஒவ்வொரு கட்சியிலும் பல பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டம் வார்த்தைகளுக்குள் அகப்படாத வானவில் போன்றது. நாளொரு கட்சி, பொழுதொரு கொள்கை என்று மாறிக்கிடக்கும் காட்சிகள் அவர்கள் துன்பத்தைத் தூண்டிக்கொண்டும் இன்பத்தைத் தாண்டிக்கொண்டும் ஒரு ராஜாங்கம் நடாத்துகிறது.
எந்தச் சந்தர்ப்பத்தில் என்ன குட்டிக்கதை சொல்லலாம் என அவர்கள் முட்டிக்கொண்டிருக்கிறார்கள், சிந்தனையைத் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பினாத்தலாரின் தாயுள்ளத்தை இச்செய்தி அடைந்தபோது அவர் உடைந்தே விட்டார்.
"ஆஹா இந்த நிலை எய்திடலாமோ..சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,குட்டிக்கதைகள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று அன்றே பாரதி சொன்னதை (என்ன அவர் வேற என்னவோ சொன்னாரா? அதெல்லாம் எதுக்கு இப்ப?) நனவாக்கிட அல்லும் பகலும் பாராமல் குட்டிக்கதைகளை உருவாக்கினார்.
கீழே உள்ள தகவல் சுரங்கத்தில் கட்சிக்கொடியை அழுத்தினால் ஒவ்வொரு கட்சிக்கும், தற்போதைய நிலைக்கும், தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மாறக்கூடிய நிலைகளுக்கும், மேலும் பல்வேறு சாத்தியக்கூறுகளுக்கும் குட்டிக்கதைகளை கருவாக்கி உருவாக்கி அதை பேச்சாளர் உபயோகிக்கும் எருவாக்கியும் விட்டார்.
எந்த உரிமை பிரச்சினையும் இல்லாமல் அனைவருக்கும் இலவசமாக உபயோகிக்கும் உரிமையையும் அள்ளிக்கொடுத்திருக்கிறார்.
அனைவரும் வருக, குட்டிக்கதைகளைப் பருக!
(மின்னஞ்சல் மூலமாக பிளாக்கரில் எழுத்துக்கோவைகளை மட்டுமே ஏற்ற முடிகிறது, embedded object-ஐ அல்ல; என்பதை முந்தைய சோதனை மூலமாக அறிந்து கொண்டேன். சுட்டிக்காட்டிய துபாய்வாசிக்கும், ஜீவ்ஸுக்கும் நன்றி. சுட்டிக்காட்டாமல் பார்த்து ஏமாந்தவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்)
Mar 21, 2006
குட்டிக்கதைகளுக்கான database - version 1.2 (21 Mar 06)
Subscribe to:
Post Comments (Atom)
15 பின்னூட்டங்கள்:
பயனுள்ள பதிவு :) உங்களது பல இடுகைகளில் நல்ல original ideas வெளிப்படுகின்றன. வாழ்த்துக்கள். மேன்மேலும் கலக்குக!
நன்றி வாய்ஸ். original ideas என்பதையே பெரிய பாராட்டாகக் கருதுகிறேன்.
அது வெறும் பெரிய பாராட்டு இல்லிங்க, பலே பெரிய பாராட்டு :) நீங்க குடுத்த எல்லா options ஐயும் இன்னும் சொடுக்கிப் பாக்கல்ல. பாதியிலயே வயிரு வலிச்சிடுச்சு :)
மொத மொத இந்தப் பதிவுக்கு நாந்தான் கொரல் உட்டேன்... ஆனா காணோம் :(
அன்புடன்
ஜீவா
மிகவும் அருமை :-)
மீண்டும் நன்றி வாய்ஸ்.
ஜீவ்ஸ், உங்க பின்னூட்டம் (தோல்வி அடைந்த) வெர்ஷன் 1.0க்குதானே.. அதிலே பத்திரமா இருக்கு.
இட்லிவடை.. குட்டிக்கதைன்னா நீங்க முதல்ல இருப்பீங்கன்னு தெரியும், நன்றி.
TESTING 1..2..3..
:-))
very nice !
By far, this IS the best post on this election scene!
Absolutely original!
இட்லி வடைக்குக்ப் போட்டியா இது? அவர் எழுத வேண்டிய எல்லாப்பதிவையும் ஒரே பதிவா போட்டுட்டீரே? இது நியாயமா? தர்மமா சாமியோவ்?
கலக்கிட்டீங்க, பிடிங்க பாராட்டை. நிறைய நகைச்சுவைஉணர்வும் பொறுமையும் வேண்டும்.
நேற்று சரியாக வராததால் மறுபடி பார்க்கவில்லை. இனி version எல்லாம் பார்த்துப் படிக்க வேண்டும் போல இருக்கு :))
மிகமிக நன்று.
ஆனாலும் காங்கிரசுக்கு நீங்கள் இப்படி வஞ்சகம் செய்திருக்கக் கூடாது.
விஜயகாந், கார்த்திக்கை விட்டுவிட்டீர்களே?
சின்னவன், எஸ் கே, லார்டு லபக்குதாஸ், துபாய்வாசி, மணியன், வன்னியன் - நன்றி.
லார்டு லபக்குதாஸ் - என்ன ரொம்ப நாளா ஆளைக்காணோம்?
துபாய்வாசி, நான் யாருக்கும் போட்டியும் இல்லை.. எனக்கு யாரும் போட்டியும் இல்லை. (எப்படி பன்ச் டயலாக்?)
வன்னியன், யோசிச்சுப் பாருங்க, எவ்வளவுன்னுதான் எழுதறது? இதுவே ஒரு பத்து பதிவு போடற நேரம் எடுத்துக்கொண்டது!
கலக்கலுங்க. எல்லாரும் சொன்னதை நானும் சொல்லறேன்...at the risk of repetition...100% ஒரிஜினல் க்ரியேட்டிவ் பதிவு. படிக்க செம ஜாலியா இருந்துச்சு.
மேலே தூக்கி வைங்க
:)-
நன்றி கைப்புள்ள,
நாளை மறுநாள் அடுத்த ஃபிளாஷ், தயாராகிக்கொண்டிருக்கிறது.
Post a Comment