Mar 27, 2006

ஜூ வி அதிர்ச்சி செய்தி - முழு விவரம் (27Mar06) Full version

ஜூனியர் விகடன் ஏப்ரல் 31 தேதியிட்ட இதழில் இருந்து:

கழுகார் வரவுக்காக வழி மீது விழி வைத்துக்காத்திருந்தோம். வழக்கமாக, தாமதம் ஆவதாயிருந்தால் மிஸ்டு கால் ஒன்று கொடுப்பார் - அதையும் காணவில்லை என்பதால் ஆவல் அதிகமாகி விட்டது.

பயங்கரமான பதட்டத்துடன் உள்ளே நுழைந்தார் மிஸ்டர் கழுகு.

"காரமான செய்தியுடன் வந்திருக்கிறேன். முதலில் கூலா எதாவது கொடுங்க" என்றார்.

பிரிட்ஜில் சில்லென்று இருந்த தர்பூசணி ஜூஸோடு அவரை குளிர்வித்தோம்.

"அறிவாலயமும் போயஸ் கார்டனும் வழக்கத்துக்கு அதிகமாகவே பரபரப்பாயிருக்கிறதே, உங்கள் செய்தியாளரை அனுப்பவில்லையா"

"எப்போதும் அங்கே ஒரு செய்தியாளர் இருப்பாரே, பரபரப்பாய் இருப்பதைப்பற்றித் தகவல் ஒன்றும் சொல்லவில்லையே" என்றோம்.

"ஒரு உறுதி செய்யப்படாத தகவல் இருக்கிறது, உங்களிடம் சொல்லலாமா என்று தயக்கமாகவும் இருக்கிறதே" என்றார்.

"நீங்கள் சொன்னாலே அது உறுதியான தகவலாகத்தான் இருக்கும், சும்மா பிகு பண்ணாதீங்க" என்றோம் கார போண்டா பிளேட்டை அவர் முன் நகர்த்தியவாறே.

"போயஸ் கார்டன் வட்டாரத்துலே புதுசா சில பெரிய டெக்னிகல் ஆசாமிகள் நடமாட்டம் இருக்குதுன்னு சொல்லியிருந்தேன் நினைவிருக்கா"

"ஆமாம், போன வாரம் அட்டைப்படத்துலேயே மாண்டேஜ் கொடுத்திருந்தோமே, எப்படி மறக்கும்?"

"எச் ஓ ஸி ன்னு ஒரு நிறுவனம்தான் எல்லா மின்னணு வாக்கியந்திரங்களுக்கும் ஸாப்ட்வேர் தயார் செய்து குடுக்கறவங்க. இந்த பெரிய தலைங்களுக்கும் அந்த நிறுவனத்துக்கும் நெருங்கின தொடர்பு இருக்காம். ஸாப்ட்வேரில சின்னதா ஒரு மாற்றம் செஞ்சுட்டா, தேர்தல்லே ஜெயிச்சுடலாம்ன்றதுதான் திட்டம்."

" அடடா, இது அறிவாலயத்துக்குத் தெரியாதா?"

"தெரியாம போகுமா? அவங்க பங்குக்கு அவங்களும் தேவையான ஸாப்ட்வேர் மாற்றம் எல்லாம் செஞ்சு தயாராத்தான் இருக்காங்க. எச் ஓ ஸி நிறுவனத்துக்கும் சன் டிவிக்கும் உள்ள தொடர்பைப் பயன்படுத்திக் காரியத்தை சாதிச்சுக்கலாம்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம். சன் டிவியின் பெரிய தலைங்க எல்லாம் டெல்லிக்கு ஏற்கனவே பறந்துட்டாங்களாம்"

"அப்படி என்னதான் மாற்றம் செய்வாங்களாம்?"

அதைத்தான், பினாத்தல் சுரேஷுன்னு ஒரு அறிவுஜீவி இங்கே கீழே கொடுத்திருக்கார். இடது பக்கம் உள்ளது அ தி மு க ஆசைப்பட்ட வாக்குப்பதிவு சாப்ட்வேர், வலதுபக்கம் திமுக சாப்ட்வேர். வேணுமுன்னா நீங்களே முயற்சி பண்ணிப் பாருங்க.




ஏப்ரல் 31 ஒரு பெரிய தவறாகிவிட்டது, சுலபமாக எல்லாரும் கண்டுபிடித்துவிட்டார்கள். வேற தேதி போட்டிருந்தா குழப்பமாயிருக்கும். டோண்டு, மணியன், கோகுல்குமார், MRS அருண் குமார், சோம்பேறிப்பையன் ஆகியோர் கண்டுபிடித்து பின்னூட்டமும் உடனுக்குடனே போட்டுவிட்டார்கள்!

12 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

முந்தைய பதிவை பசித்த பிளாக்கர் தின்றது.. ஆனாலும் என் பொறுமை வென்றது. இந்தப்பதிவு சோதனையைத் தாண்டி நின்றது..வெட்டொட்டு வேலைதான் நேரத்தைக் கொன்றது.. (கவித - கவுஜ!)

குமரன் (Kumaran) said...

பின்னூட்டக் கவிதை நல்லா இருக்கு பினாத்தலாரே....

சாப்ட்வேர் மாற்றங்களும் நல்லாத் தான் இருக்கு.... :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குமரனாரே.. இதைக்கவிதைன்னு ஒத்துகிட்டதுக்கு:-)

siva gnanamji(#18100882083107547329) said...

april 31 enradhum vishayam purinchittadhu
ana idahai marukkum avanga arikkayai en veliyidalle?
"ippadi dmk seyvadhaga pulan visaranayil theriginradhu"--jj
"kedu varum pinne-madhi
kettu varum munne--idhai
thamizh samudhayam marakkumo?
ayyaho thamish nade--mu.ka

துளசி கோபால் said...

பினாத்தலாரே,

இது 'உண்மையாவே' நிஜமாயிருமா?



ஒரு + ஓட்டுப் போட்டாச்சு

Anonymous said...

நீ இன்னும் திருந்தவே இல்லியா?

பினாத்தல் சுரேஷ் said...

சிவஞானம்ஜி, நன்றி. உங்க ஃபாலோ அப் சூப்பர்!

வாங்க துளசி அக்கா,எங்க வீடெல்லாம் கூட உங்க கண்ணுல படறது என் பாக்கியம்:-)

நன்றி குழவி (குழலியை Duplicate செய்யும் முயற்சி அல்லவே?).. திருந்திட்டா எங்கே செல்லும் இந்தப்பாதைன்னு தெரியாததால்தான் இதே பாதையிலே தொடர்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...
This comment has been removed by a blog administrator.
முகமூடி said...

இவ்ளோ பெரிய லிஸ்டில் பச்சோந்தி மக்கள் கட்சி சின்னம் மட்டும் விடுபட்டது வெறும் விபத்தா அல்லது சூட்கேஸ் இடம் மாறியதாலா என்பதை வரப்போகும் பொதுக்குழுவில் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நீர் இருக்கிறீர் என்பதை மனதில் வைக்கவும்.

( விரைவில் பமக தேர்தல் மாநாடு நடக்கவிருக்கும் இந்த நேரத்தில் கட்டவுட்டில் அடி வாங்க ஆசையா? )

துளசி கோபால் said...

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க பினாத்தலாரே?

உங்க வீட்டுக்கு வராம எப்பவாச்சும் நாங்க இருந்துருக்கமா?
என்னா, வாறதும் தெரியாது போறதும் தெரியாது. அம்புட்டுதான்.

VSK said...

'நீ ஒரு எஞ்சின் டிரைவர்' என்று ஒரு புதிர் தொடங்கும்.
எங்கெங்கோ சுற்றி கடைசியில், 'அந்த எஞ்சின் டிரைவர் பேரு என்ன?"ந்னு புதிர் முடியும்.
அது போல, முதல் வரியிலேயே ஸஸ்பென்ஸை உடைத்து விட்டீர்களே!!

ஆனால், இது ஒரு நடக்கக் கூடிய சாத்தியம்தானே?
அவங்களே ஜெகஜ்ஜாலக்கில்லாடிகள்!
நீங்கள்ளாம் வேற சொல்லிக் குடுக்கிறீங்க!
இந்த நாட்டை 'பெரியார்'தான் காப்பாத்தணும்!

பினாத்தல் சுரேஷ் said...

தலைவரே..

கட் அவுட் வெக்கணும்னும் நான் ஆசைப்படலே, அதை உடைச்சாலும் வருத்தப்படமாட்டேன். ஆனா உங்க வலைப்பதிவுலே ஒரு லின்க்கு கூட கொடுக்காம இருக்கீங்களேன்னு என் ஆதரவாளர்கள் கேக்கறதை நான் எவ்வளவு கஷ்டப்பட்டு அடக்கறேன் தெரியுமா? அதுக்கேத்த அளவு மரியாதை எதிர்பாக்கறது தப்பா?

துளசி அக்கா,

வந்த சுவடே தெரியாம போறது பின்னூட்ட நாயகிக்கு சரியா?

SK,

நன்றி. மார்ச் 1.3ஆம் தேதின்னு சொல்லியிருக்கலமோன்னு இப்ப தோணுது!

 

blogger templates | Make Money Online