Mar 27, 2006

இப்படிக்கூட நடக்குமா? ஜூவியில் அதிர்ச்சி செய்தி! (27Mar06)

ஜூனியர் விகடன் ஏப்ரல் 31 தேதியிட்ட இதழில் இருந்து:

கழுகார் வரவுக்காக வழி மீது விழி வைத்துக்காத்திருந்தோம். வழக்கமாக, தாமதம் ஆவதாயிருந்தால் மிஸ்டு கால் ஒன்று கொடுப்பார் - அதையும் காணவில்லை என்பதால் ஆவல் அதிகமாகி விட்டது.

பயங்கரமான பதட்டத்துடன் உள்ளே நுழைந்தார் மிஸ்டர் கழுகு.

"காரமான செய்தியுடன் வந்திருக்கிறேன். முதலில் கூலா எதாவது கொடுங்க" என்றார்.

பிரிட்ஜில் சில்லென்று இருந்த தர்பூசணி ஜூஸோடு அவரை குளிர்வித்தோம்.

"அறிவாலயமும் போயஸ் கார்டனும் வழக்கத்துக்கு அதிகமாகவே பரபரப்பாயிருக்கிறதே, உங்கள் செய்தியாளரை அனுப்பவில்லையா"

"எப்போதும் அங்கே ஒரு செய்தியாளர் இருப்பாரே, பரபரப்பாய் இருப்பதைப்பற்றித் தகவல் ஒன்றும் சொல்லவில்லையே" என்றோம்.

"ஒரு உறுதி செய்யப்படாத தகவல் இருக்கிறது, உங்களிடம் சொல்லலாமா என்று தயக்கமாகவும் இருக்கிறதே" என்றார்.

"நீங்கள் சொன்னாலே அது உறுதியான தகவலாகத்தான் இருக்கும், சும்மா பிகு பண்ணாதீங்க" என்றோம் கார போண்டா பிளேட்டை அவர் முன் நகர்த்தியவாறே.

"போயஸ் கார்டன் வட்டாரத்துலே புதுசா சில பெரிய டெக்னிகல் ஆசாமிகள் நடமாட்டம் இருக்குதுன்னு சொல்லியிருந்தேன் நினைவிருக்கா"

"ஆமாம், போன வாரம் அட்டைப்படத்துலேயே மாண்டேஜ் கொடுத்திருந்தோமே, எப்படி மறக்கும்?"

"எச் ஓ ஸி ன்னு ஒரு நிறுவனம்தான் எல்லா மின்னணு வாக்கியந்திரங்களுக்கும் ஸாப்ட்வேர் தயார் செய்து குடுக்கறவங்க. இந்த பெரிய தலைங்களுக்கும் அந்த நிறுவனத்துக்கும் நெருங்கின தொடர்பு இருக்காம். ஸாப்ட்வேரில சின்னதா ஒரு மாற்றம் செஞ்சுட்டா, தேர்தல்லே ஜெயிச்சுடலாம்ன்றதுதான் திட்டம்."

" அடடா, இது அறிவாலயத்துக்குத் தெரியாதா?"

"தெரியாம போகுமா? அவங்க பங்குக்கு அவங்களும் தேவையான ஸாப்ட்வேர் மாற்றம் எல்லாம் செஞ்சு தயாராத்தான் இருக்காங்க. எச் ஓ ஸி நிறுவனத்துக்கும் சன் டிவிக்கும் உள்ள தொடர்பைப் பயன்படுத்திக் காரியத்தை சாதிச்சுக்கலாம்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம். சன் டிவியின் பெரிய தலைங்க எல்லாம் டெல்லிக்கு ஏற்கனவே பறந்துட்டாங்களாம்"

"அப்படி என்னதான் மாற்றம் செய்வாங்களாம்?"

___________________________________________________________________________________

தட்டச்ச கஷ்டமாக இருப்பதால், இன்னும் இரண்டு மணி நேரத்தில் முழுப்பதிவும் இடுகிறேன். இல்லாத பட்சத்தில், இங்கே சென்று படித்துக்கொள்ளுங்கள்.

10 பின்னூட்டங்கள்:

dondu(#4800161) said...

ஏப்ரலுக்கு ஏது ஸ்வாமி 31 நாட்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மணியன் said...

//ஜூனியர் விகடன் ஏப்ரல் 31 தேதியிட்ட இதழில் இருந்து//

ஆஹா, ஒன்னாம் தேதிக்கு முன்னாலேயே ஆரம்பிச்சாச்சா ?

Gokul Kumar said...

நம்மாளுக கிரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லீங்ணா

PS said...

Try using http://www.suratha.com/reader.htm

MRS .Arunkumar said...

Mr.Suresh

APril first is nearing....

பழூர் கார்த்தி said...

தலைவர் பெனாத்தல் சுரேசு வாழ்க.. புரச்சிப் புயல் சுரேசு வாழ்க.. வருங்கால தமிழகம் சுரேசு வாழ்க..
வலைப்பதிவு சிகரம் சுரேசு வாழ்க !!

இந்த பாராட்டெல்லாம், முதல் ஏப்ரல் ஃபூல் பதிவு போட்டதுக்காக உங்களுக்கு நான் வழங்கறது..

****

ஏப்ரல் பூல்..
ஏமாந்தாங் கூல்..
கேப்பங் கூழ்..
இப்படியெல்லாம் நாங்க ஏமாற மாட்டோமே :-))

Anonymous said...

:-))

Idly Vadai said...

நல்லா தான் இருக்கு முழு edition சூப்பர். இந்த ஐடியாவை patent செய்துவிடுங்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

கருத்து சொன்னவர்களுக்கும், கண்டுபிடித்தவர்களுக்கும் நன்றி. Too Obvious:-)

ஆனால், இதை என் அடுத்த பதிவுக்கான பில்ட்-அப்பாகத்தான் எழுதினேன். ஏப்ரல் 1 என் நோக்கம் அல்ல.

நன்றி PS. சுரதா மொழிமாற்றி உள்ளதைத்தானே மாற்றிக்கொடுக்கும், இந்த மாதிரி டுபாக்கூர்களை அல்லவே:-)

malathi said...

babu en systemle un flash varave elliye
enna seyyardu

 

blogger templates | Make Money Online