Mar 30, 2006

ஒண்ணரைப்பக்க துக்ளக் (30Mar06)

துக்ளக்கில் வரும் ஒண்ணரைப்பக்க நாளேடு பிரசித்தமானது. தேர்தல் நெருங்குகையில் தேர்தல் முடிவுகளின் சாத்தியக்கூறுகளுக்கு நாளேடுகளின் செய்திகள், அரசியல் நிகழ்வுகள் எப்படி மாறக்கூடும் என்று கணிக்கும் நகைச்சுவை மிகுந்த பக்கங்கள். வாய்விட்டுச் சிரிக்கலாம்.
 
ஆனால், முடிவுகளுக்கு ஏற்ப மற்ற பத்திரிக்கைகளில் வரப்போவதை மட்டும்தான் ஊகிக்க முடியுமா? துக்ளக்கில் வருவதை ஊகிக்க முடியாதா? நான் முயற்சிக்கிறேன்.
 
முதலில் தி மு க கூட்டணி வென்றால்:
 
அட்டைப்படம்:
 
ஒரு வட்டம் இன்னொரு வட்டத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார். (தி மு க கரை வேட்டிகள்)
 
ஆமா, நம்ம மாவட்டத்தை ஏன் போலீஸ் கைது செய்திருக்கிறாங்க?
 
அதுவா? பொதுக்குழுவிலே அவர் முதல்வர் டாக்டர் கலைஞர் வாழ்கன்னு சொன்னாராம்..
 
அதுக்கு ஏன் கைது செய்யறாங்க?
 
அவர் வருங்கால முதல்வர் ஸ்டாலின் வாழ்கன்னு சொல்லவே இல்லையாமே!
 
எச்சரிக்கை
 
தேர்தல் தொடங்கும் முன்னரே கமிஷனரை மாற்றியது, தேர்தல் நடக்கும்போதும் கண்மணிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தது, எண்ணிக்கையிலும் குளறுபடி ஆகிய பல குற்றச்சாட்டுகளை எடுத்துக்கொண்டு அதிமுக அணி ஜனாதிபதியை சந்திப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. தங்கள் பங்குக்கும் விதிமுறை மீறல் செய்த அதிமுக இதையெல்லாம் செய்யலாமா என்று கேட்பதைவிட செய்வதற்கு இவர்களாவது உள்ளார்களே என்று நினைப்பதுதான் புத்திசாலித்தனம்.
 
தலையங்கம்
 
நடந்தது நல்லதற்கில்லை
 
எதிர்பார்த்தபடியே தி மு க கூட்டணி சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. சீட் பங்கீட்டில் திமுக செய்த "தியாகங்களையும்" மீறி திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கலாம் - நமக்கு அல்ல.
 
ஏழு கட்சி கூட்டணியிலிருந்து சில கட்சிகள் பிரிந்து வந்துவிட்டிருந்தாலும், ஓட்டில் பெரிய மாற்றம் ஏதும் வந்து விடாது என்பதே நமது கருத்தாக இருந்தது.
 
துகளக் பிப்ரவரி முப்பதாம் தேதியிட்ட இதழில் இருந்து:
 
கே: வரும் சட்டசபைத் தேர்தலில் எந்த அணி ஜெயிக்கும் என நினைக்கிறீர்கள்?
 
ப: இப்போது உள்ள நிலைமையில் தி மு க கூட்டணியின் எண்ணிக்கை பலமாகவே இருக்கிறது. அதிமுக அதை முறியடிக்க பெரும் முயற்சியும் முனைப்பும் எடுக்க வேண்டி வரும். அதில்லாமல் மக்கள் கூட்டணி என்றெல்லாம் பம்மாத்துப் பண்ணிக்கொண்டிராமல் கூட்டணிக்கட்சிகளுக்கு உரிய மரியாதை தர ஜெயலலிதா முன்வரவேண்டும். அவர் அப்படிச் செய்வாரா என்பது சந்தேகம்தான்.
 
துக்ளக் ஏப்ரல் 31ஆம் தேதியிட்ட இதழில் இருந்து:
 
கே: ம தி மு க வின் வருகை அ தி மு க வுக்கு பலம்தானே?
 
ப: பலமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு சாதாரண வாக்காளன் தேர்தலுக்கு ஓட்டுப்போடச் செல்லும்போது ராஜீவ் காந்தி மற்றும் 21 பேர் இறந்த கொடூரத்தையும் அதற்குக் காரணமானவர்களையும் அந்தக் காரணமானவர்களை தமிழகத்தில் ஆதரிப்பவர்களையும் பற்றி யோசித்தால், இந்த பலம் பலவீனமாகவும் மாறக்கூடும். இப்படித்தான் நடக்கும் என்று நான் சொல்லவில்லை. இப்படியும் நடக்கலாம் என்றுதான் சொல்லுகிறேன்.
 
எனவே, நடப்பு அரசியலை உற்று நோக்கிக்கொண்டிருக்கும் யாருக்கும் தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் அளிப்பவை அல்ல.
 
ஆனால் ஆச்சரியம் அளிக்கும் சில செய்திகளும் இந்தத் தேர்தல் முடிவுகளில் இருக்கிறது.
 
234 தொகுதிகளில் 180-இல் திமுக கூட்டணி வென்றிருந்தாலும் கூட, வாக்குப்பதிவானது 55% என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டுப்போடாமலிருந்த 45% மக்களும் திமுக கூட்டணிக்கு எதிரானவர்களாக இருந்திருந்தால்? என்ற கேள்விக்கு விடை இப்போதைக்குக் கிடைக்காது. தி மு க அணி பெற்ற வாக்குக்களின் சதவீதம் 45% என்பதாகக் குறிப்பிடப்படுகிறது, இது ஒரு சுத்தப்பொய் -  இந்தச் சதவீதம் வாக்களித்தவர்களில் திமுக அணி பெற்ற வாக்குகள் தானே அன்றி மொத்த வாக்குக்களில் அல்ல. மொத்த வாக்களித்தவர்களில் திமுக அணி பெற்றுள்ள வாக்குக்கள் வெறும் 25% மட்டுமே.
 
அதாவது, நான்கில் ஒருவர்தான் திமுக அணிக்கு வாக்களித்துள்ளார். மீதி மூன்று பேரும் தி மு க அணிக்கு எதிராகத்தான் வாக்களித்துள்ளனர்.
 
இப்படி ஒரு எதிர்ப்பைச் சுமந்து கொண்டு திமுக ஆட்சி ஏறுகிறது, அதற்கு நமது வாழ்த்துக்கள்.
 
கேள்வி பதில்
 
முத்துசாமி, மொரப்பநாடு
 
கே: மீண்டும் கலைஞர் முதல்வர் ஆகிறாரே? இது பற்றி உங்கள் கருத்து?
 
ப: கலைஞர் முதல்வர் ஆகிறாரா? உங்கள் அறியாமையை எண்ணி வருத்தப்படுகிறேன்.
 
ரஜினிசெல்வா, பாண்டிச்சேரி
 
கே: பத்திரிக்கைகள்தான் ஆட்சியை வழிநடத்த வேண்டும் என்று கலைஞர் கூறியிருக்கிறாரே, இதுபற்றி?
 
ப: மகன் மேல் நம்பிக்கை போய்விட்டதா? ஸ்டாலின் கோபித்துக்கொள்ளப்போகிறார்.
 
அகமது இஸ்மாயில், கீழக்கரை
 
கே: தோல்வி கண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு உங்கள் அட்வைஸ் என்னவாக இருக்கும்?
 
ப: மோசமான ஆட்சி என்று சொல்ல முடியாத அளவில் ஆட்சி இருந்தாலும், சேரத்தகாத சில கட்சிகளுடன் கூட்டு வைத்ததால் தோல்வி காண நேரிட்டது. இருப்பினும், உங்களுக்கு இன்னும் 38% மக்கள் ஆதரவு இருக்கிறது, மனம் தளராமல் இருந்தால், திமுக செய்யும் தவறுகளின் பயனை அறுவடை செய்ய முடியும்.
 
___________________________________________________
 
இன்னும் சில நாட்களில் அடுத்த சாத்தியக்கூறுகளான அதிமுக அணியின் வெற்றிக்கும், மூன்றாம் அணி வெற்றிக்கும் ஒண்ணரைப் பக்க துக்ளக்குகளை வெளியிடுகிறேன்.

29 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) said...

:-))))))

Sud Gopal said...

//அதாவது, நான்கில் ஒருவர்தான் திமுக அணிக்கு வாக்களித்துள்ளார். மீதி மூன்று பேரும் தி மு க அணிக்கு எதிராகத்தான் வாக்களித்துள்ளனர்//

எய்ய்யா....எப்படி இப்படியெல்லாம்...

எனக்கென்னமோ நீங்க தான் சோவுக்கு முடியாத நாட்களில் ப்ராக்ஸியா எழுதறீங்கன்னு தோணுது.கலக்கிப்புட்டீங்க போங்க.

ஒரு '+' போட்டாச்சு.

கருப்பு said...

அருமையான அலசல். சோவையும் துக்ளக்கினையும் புகழ்ந்த மற்றும் புகந்து கொண்டிருப்பன வந்து அவசியம் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்னு ஹம்துன் said...

அருமை!
அதெப்படி சார், சோ மாதிரியே இமிடேட் பண்றீங்க!

என் பங்குக்கு:(அட்லீஸ்ட் இரண்டு மட்டும்)

கேள்வி: இந்த தேர்தல் முடிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
'சோ'பதில்: நான் நினைப்பது இருக்கட்டும். மக்களின் இந்த முடிவு பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அரசியல்கட்சிகள் நினைத்துப்பார்க்கவேண்டும்.

கேள்வி: பி.ஜே.பி. மோசமாகத் தோற்றிருக்கிறதே..?
'சோ'பதில்: அரசியலில் நல்லவர்கள் தோற்றுப்போவது அதிசயமில்லை. அண்ணாதுரை கூட ஒருமுறை தோற்றுப்போயிருக்கிறார். அந்தவகையில் பி.ஜே.பி.யை மக்கள் நல்லவர்களாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்!

தகடூர் கோபி(Gopi) said...

:-)))))

Unknown said...

Good one

Anonymous said...

கலக்கல்.

Geetha Sambasivam said...

Just now I read the full and original Thuglak. Now it is your turn in the same method. You are seeing everything very keen. Very fine observation.Pesamal neengalum oru paththirigai arambiyungal. Matara onnarai pakka Thuglak veliyeetai avaludan ethirparkiren.

ஸ்ருசல் said...

நன்று. சிறிது முயற்சித்திருந்தால், இன்னும் அருமையாக வந்திருக்கும்.

ஆனால், அதிமுக வீழ்ந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை.

Muthu said...

பினாத்தல்,

//அதாவது, நான்கில் ஒருவர்தான் திமுக அணிக்கு வாக்களித்துள்ளார். மீதி மூன்று பேரும் தி மு க அணிக்கு எதிராகத்தான் வாக்களித்துள்ளனர். இப்படி ஒரு எதிர்ப்பைச் சுமந்து கொண்டு திமுக ஆட்சி ஏறுகிறது, அதற்கு நமது வாழ்த்துக்கள். //
அது....

கலக்கல்...பி.ஜே.பி வென்றால் என்ன எழுதுவார் என்பதையும் சேர்த்துக்கொள்ளவும்...

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குமரன்.

நன்றி சுதர்சன்.கோபால்

நன்றி விடாது கருப்பு. மற்றவர்களை நாம் ஏன் இங்கே இழுக்க வேண்டும்?

நன்றி இப்னு ஹம்துன் - உங்கள் கேள்வி பதில்களும் அருமை.

நன்றி கோபி

நன்றி தேவ்

நன்றி அனானிமஸ்

நன்றி கீதா சாம்பசிவம் - நீங்கள் துக்ளக் அபிமானி (என நினைக்கிறேன்)யாக இருந்தும் இதை ரசித்ததற்கு.

நன்றி ஸ்ருசல் - முயற்சிக்கலாம். என் சோம்பேறித்தனம் ஒரு அளவுக்குமேல் முயற்சியை அனுமதிப்பதில்லை.

நன்றி முத்து(தமிழினி). not in weirdest dreams பற்றி எழுதச்சொல்கிறீர்களே:-))

பத்மா அர்விந்த் said...

அவன் விகடனுக்கு பிறகு ஒன்னரைப்பக்கமா. நன்றாகவே இருந்தது

dondu(#11168674346665545885) said...

அசத்தி விட்டீர்கள் சுரேஷ் அவர்களே. அப்படியே துக்ளக்கின் ஒன்றரைப் பக்க நாளேட்டைப் படிப்பது போலவே இருந்தது.

சமீபத்தில் 1970-ல் "துக்ளக் படமெடுக்கிறார்" என்றத் தலைப்பில் ஒரு தொடர் கதை வந்தது. அதில் எடுத்த ஒரு படத்தைப் பற்றிய விமரிசனங்கள் ஒவ்வொரு பத்திரிகையும் எப்படி எழுதியிருக்கும் என்பதை கிண்டலடித்தியிருப்பார் சோ அவர்கள். அவர் துக்ளக்கையும் விடவில்லை. அதையும் கிண்டலடித்தார்.

சில மாதங்களுக்கு முன்னால் வந்த தொடர்கதையிலும் வீரப்பன் ரேஞ்சில் இருந்த கொள்ளைக்காரன் தெரியாத்தனமாக சோ அவர்களையே கடத்தி வந்து படும் அவஸ்தைகளையும் படிக்கக் காணலாம். அதிலும் அவர் பகவத் கீதை மற்றும் கிருஷ்ண பரமாத்மாவைப் பற்றிப் பேச ஆரம்பிக்க டென்ஷன் ஆன அந்த கொள்ளைக்காரன் இந்த ஆசாமி (சோ) தன்னை கிஸ்னனைப் பத்திப் பேசியே கொன்று விடுவார் என அஞ்சுவதால் விட்டால் போதும் என்று அவரை விட்டு விடுவதாக அக்கதையில் குறிப்பிடப் பட்டிருக்கும்.

ஆக, நான் சொல்ல வருவது என்னவென்றால் நீங்கள் சோ அவர்களை கிண்டலடித்துக் குறிப்பிட்டதையெல்லாம் ஏற்கனவே பல்வேறு சமயங்களில் கடந்த 36 ஆண்டுகளாக துக்ளக்கிலேயே குறிப்பிட்டு வந்திருக்கிறார். நீங்கள் எழுதாதவை கூட அதிலேயே கிடைக்கும்.

அதுதான் சோ.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வண்ணம் இப்பின்னூட்டத்தின் நகலை சோ அவர்களைப் பற்றி நான் போட்ட என் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தேன்துளி,

நன்றி டோண்டு. துக்ளக்கின் நெடுநாள் வாசகன் நான். குறிப்பாக மற்றவரை பெர்சனலாக தாக்காத கிண்டலுக்கு ரசிகனும் கூட.

ஆனால் அதில் உள்ளதையெல்லாம் அப்படியே ஒத்துக்கொள்ளவேண்டும் என்று சோவே எதிர்பார்க்கமாட்டார் - இல்லையா?

dondu(#11168674346665545885) said...

"ஆனால் அதில் உள்ளதையெல்லாம் அப்படியே ஒத்துக்கொள்ளவேண்டும் என்று சோவே எதிர்பார்க்கமாட்டார் - இல்லையா?"

ஆயிரத்தில் ஒரு வார்த்தை பெனாத்தலாரே. "நினைவில் நின்றவள்" என்று முக்தா பிலிம்ஸின் படத்தில். அண்ணன் வி.எஸ். ராகவன் (?) அவர்கள் கொடுக்கும் யோசனையை தம்பியாக நடிக்கும் சோ அவர்கள் அப்படியே ஒத்துக் கொள்ள, அண்ணன் உடனே தன் யோசனையை வேகமாக வாபஸ் வாங்குவார். அவ்வளவு நம்பிக்கை தம்பியின் மேல். அவன் ஆதரிக்கும் எதுவும் உருப்படாது என்ற ரேஞ்சில் வேறு டயலாக். இப்படத்துக்கு கதை வசனம் சோ அவர்கள்தான்.

நான் சோ அவர்களை ஆதரித்துப் பின்னூட்டம் போடும்போது கூட அவர் கூறியதுடன் நான் ஒத்துப் போகிறேன் என்றுதான் கூறியிருப்பேன். அதுவும் என் சுய புத்தியில் கூறுவதே. எல்லோரும் அவர் சொல்வதை ஒத்துக் கொள்ள ஆரம்பித்தால் அவரே வாழ்க்கையை வெறுத்து விடுவார் என்றே தோன்றுகிறது. இம்மாதிரி லவ்-ஹேட் நிலையைத்தான் அவரும் எதிர்ப்பார்க்கிறார்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வண்ணம் இப்பின்னூட்டத்தின் நகலை சோ அவர்களைப் பற்றி நான் போட்ட என் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

மகேஸ் said...

துக்ளக் இதழ் இணையத்தில் கிடைக்குமா?. இதுவரை நான் படித்தது இல்லை.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி டோண்டு (மறுபடியும்).

வருகைக்கு நன்றி மகேஸ்.

groups.yahoo.com/thuglak இல் அங்கத்தினர் ஆனால் சில ஸ்கேன் செய்யப்பட்ட பக்கங்களைப்பார்க்க முடியும்.

Geetha Sambasivam said...

Your writing is very good. This is not mugasthuthi.Really it is wonderful. Oru nalla ezhuthai rasikka Thuglak abimaniyaga irunthal enna thappu?Nalla nagaichuvai ethuvum rasikka padum, athilum matravar manam nogatha muraiyil ezhuthukireerkal. Meendum Vazhthukkal. Thodaratuum ungal sevai.

பினாத்தல் சுரேஷ் said...

பெரிய பாராட்டுக்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி கீதா சாம்பசிவம்.

இலவசக்கொத்தனார் said...

அப்படி போடுங்க பெனாத்தலாரே. அடுத்த பகுதிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். கூடவே ரெண்டு கார்டூனும் போடலாமே.

:-)))))) எனப் போட்டுவிட்டு நிறுத்தலாமெனப் பார்த்தேன். ஆனால் அதை என் அணித்தலைவர் செய்து விட்டாரே.

மீனாக்ஸ் | Meenaks said...

அருமையாக எழுதியுள்ளீர்கள் சுரேஷ். மேலேயே வைத்திருங்கள். (Keep it up!!!) :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி இலவசக்கொத்தனார்; வெறும் :-)) போட்டு ஓடும் எண்ணம் வந்ததும் நியாயமோ?

நன்றி மீனாக்ஸ்.

பளு அதிகமாகிவிட்டது போல ஒரு உணர்வு. அடுத்த எடிஷன்களை வெளியிட ஒரு பயமும் வந்துவிட்டது.

ரங்கா - Ranga said...

:-) really nice!

தருமி said...

(ஏதாவது ஒரு) கூட்டணி அரசு அமைந்தால் ....? அதியும் இன்னொரு option-ஆக சேர்த்துக்கொள்ளுங்களேன்.

Anonymous said...

//அருமையான அலசல். சோவையும் துக்ளக்கினையும் புகழ்ந்த மற்றும் புகந்து கொண்டிருப்பன வந்து அவசியம் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.///

விடாது கறுப்பு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் யாராவது ரஜினிகாந்தை இமிடேட் செய்தால் ரஜினிகாந்த் மட்டமானவர் என்று அர்த்தமில்லை கண்மூடித்தனமான விமர்சனங்களை தயவு செய்து தூர எறியுங்கள்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ரங்கா, தருமி, ஷாஜி, அனானிமஸ்.

தருமி, ட்ரை பண்ணிட்டாப் போச்சு, ஐடியாவுக்கு நன்றி.

ஷாஜி, துக்ளக்குலே இதை நிச்சயம் போடமாட்டாங்க! அவள் லே கூட பாத்திங்கன்னா, வாசகர் காண்ட்ரிப்யூஷனைக் கிண்டலடிச்சதை மட்டும்தான் போட்டாங்க. இது முழுக்க முழுக்க சோ எழுதறதப்பத்தியது இல்லையா?

அனானிமஸ் நச்சுன்னு சொன்னீங்க. எனக்கு எழுத்து மேலதான் விருப்போ வெறுப்போ ஒழிய எந்த ஆள் மேலயும் இல்லை.

மகேஸ் said...

நன்றி பினாத்தலாரே,
நான் துக்ளக் yahoogroups ல் சேர்ந்து விட்டேன்.

துளசி கோபால் said...

யப்பா... எப்படிப்பா இதெல்லாம்...........?
ச்சும்மா ஒரு கலக்கு கலக்கிட்டீங்க!( எல்லாம் அப்படியே வருதுல்லெ?)

நல்லா இருங்க

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மகேஸ், துளசி அக்கா (ஒரு முறை குத்திக் காமிச்சப்புறம்தான் பின்னூட்டம் வருது:-))

 

blogger templates | Make Money Online