Mar 20, 2006

யார் சொன்னது துக்ளக் நடுநிலையற்றது என்று? (20 Mar 06)

துக்ளக்கை ஒரு நடுநிலை ஏடு அல்ல என்று சொல்பவர்கள் கவனத்துக்கு:
 
துக்ளக் ஒன்று தனது அரசியல் நிலைப்பாட்டிற்காக நியாயங்களைத் துறந்த பத்திரிக்கை அல்ல.
 
தமிழ் முரசு போலவோ, தினமலர் போலவோ அல்லது நமது எம் ஜி ஆர் போலவோ அப்பட்டமாகவா துக்ளக் தன் அரசியல் நிலைப்பாட்டைக்காண்பிக்கிறது?
 
துக்ளக்குக்கும் டாக்டர் நமது எம் ஜி ஆருக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் என்னால் உடனடியாகச் சொல்ல முடியும்.
 
1. நமது எம் ஜி ஆர் ஒரு நாளிதழ், துக்ளக் ஒரு வார இதழ்.
 
2. விளம்பரப்படியே பார்த்தால் கூட, நடுநிலையான செய்திகளுக்கு துக்ளக், நாட்டு நடப்பை அறிய நது எம் ஜி ஆர் படிக்க வேண்டும்.
 
3. நமது எம் ஜி ஆரில் கட்சி சார்ந்த செய்திகள் மட்டுமே இருக்கும். துக்ளக்கில் எதிர்க்கட்சிகள் சார்ந்த செய்திகளே இருக்கும்.
 
4. நமது எம் ஜி ஆரில் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் எனத் தெளிவாகக் கூறப்படும். துக்ளக்கில், யாருக்கு ஓட்டுப்போடக்கூடாது என மறைமுகமாகக் கூறப்படும்.
 
5. நமது எம் ஜி ஆரில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளே காணப்படும். துக்ளக்கில் சர்க்காரியா கமிஷன் வரை பழைய செய்திகளும் இருக்கும்.
 
6. நமது எம் ஜி ஆர் மற்றவர்களை மட்டும் திட்டும், துக்ளக் அவ்வப்போது தன்னையும் கூடத் திட்டிக்கொள்ளும்.
 
இனிமேலாவது துக்ளக்கும் நமது எம் ஜி ஆரும் ஒன்று எனக் கூறாதீர்கள். தெரிந்ததா?
 
(இது ஒரு முன்னோட்டப் பதிவு. பெனாத்தலாருக்கும் தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. நாளை எதிர்பாருங்கள்.. குட்டிக்கதைகளுக்கான ஒரு ஃபிளாஷ் தகவல் சுரங்கம்)
 
 

22 பின்னூட்டங்கள்:

ஸில்வியா said...

Nadu nilai endral enna? Thayavu seithu 'cho' baanitil bathil solla vendam

CrazyTennisParent said...

பெனாத்தலாரே,

தேர்தல் ஜுரம் பிடிச்சாலும் பிடிச்சது..இப்படியா...கலக்குங்க..
(டோண்டு வர்றதுக்குள்ளே எஸ்கேப்)

Geetha Sambasivam said...

etharku ivvalavu kobam Thuglakidam?Neengal avrkal karuthai etru kolla vendam. It is very simple.

srini said...

There is one similarity between thuglak and namathu MGR. Both are extremist in their stand.

முகமூடி said...

நடக்கட்டும் நடக்கட்டும்...

;))

ஜோ/Joe said...

டோண்டு சார் சீரியசா வந்து உம்மை பாராட்டி பின்னூட்டம் விடுவார்..அப்ப தெரியும் உம்மோட நக்கல் லட்சணம்!ஹி.ஹி

இலவசக்கொத்தனார் said...

அது ஏங்க வித்தியாசம் மட்டும் ஆறு ஆறா சொல்லணும்ன்னு விதி எதனாச்சும் இருக்கா?

பினாத்தல் சுரேஷ் said...

சில்வியா,
//Nadu nilai endral enna? Thayavu seithu 'cho' baanitil bathil solla vendam//

தெரியலையேங்க!

(சோ பாணிதானே கூடாதுன்னீங்க?, நாயகன் கமல் பாணி கூடாதுன்னு சொல்லலியே?)

முத்து, ஜோ,

அதென்ன டோண்டுவுக்கு அவ்வளவு பயப்படறீங்க? அதெல்லாம் ஒண்ணும் கடிச்சி சாப்பிட்டுற மாட்டாரு. என்ன ராஜாஜி, சோன்னு பதிவு போட்டா ஒரு பின்னூட்டம் அவர்கிட்டே இருந்தும், ஒரு படிக்க முடியாத மெயில் அவரோட பரம(?) ரசிகர்கிட்டே இருந்தும் கேரண்டி இல்லையா?

ஸ்ரீனி,

கரெக்டுதான், ஆறு வித்தியாசம் இருந்தா பல ஒற்றுமையும் இருக்குன்னுதானே அர்த்தம்?

முகமூடி,

ஏதோ உங்க ஆசீர்வாதம், நடத்தறோம், நடத்தறோம்!

பினாத்தல் சுரேஷ் said...

ஆஹா மன்னிச்சுக்குங்க கீதா சாம்பசிவம்.. ஓவர்சைட்!

எனக்கு என்னங்க கோபம், எதோ தெரிஞ்சத (நெனச்சத) சொன்னேன் அவ்வளவுதாம்..நாம யாரு கருத்தையும் ஏத்துக்க மாட்டோமில்ல.. எதா இருந்தாலும் முதல்ல நம்ம கருத்தா மாத்திகிட்டுதான் ஏத்துக்குவோம்!

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம் அண்ணா,

அது ஒரு மரபு.. அம்புட்டுதேன். தமிழன் பொது அறிவை ஆறு ஆறா வித்தியாசம் காட்டிதானே வளர்த்தாங்க குமுதம் காரங்க!

dondu(#11168674346665545885) said...

"நமது எம் ஜி ஆரில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளே காணப்படும். துக்ளக்கில் சர்க்காரியா கமிஷன் வரை பழைய செய்திகளும் இருக்கும்."
அவற்றையெல்லாம் தைரியமாக மறுபடி வெளியிட்டு தன் நிலையிலும் உறுதியாக நிற்பார். பழைய நிலையிலும் புது நிலையிலும் மாறுதல்கள் இருந்தால் அவற்றையும் தைரியமாகக் குறிப்பிடுவார் சோ அவர்கள்.

அவரைப் போன்றவர்களை வைத்துத்தான் ஐயன் வள்ளுவர் கூறுகிறார்:

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

அவரைப் போல மற்ற பத்திரிகையாளர்கள் இருந்தாலே நாடு உருப்பட்டுவிடும்.

இப்பின்னூட்டத்தை உண்மை டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அதன் நகலை சோ பற்றிய என் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். என்னுடைய பரம ரசிகரிடமிருந்து செந்தமிழில் மெயில் வேண்டுபவர் நான் குறிப்பிட்ட என்னுடைய சோ பற்றிய அப்பதிவில் இப்பின்னூட்டத்துக்கு எதிர்வினை தருக, தருக என வரவேற்று, முப்பத்தைந்தாம் வட்டச் செயலாளர் என்னிடம் காசுவாங்கி கொண்டு வந்த இம்மாலையை போட்டுக் கொண்டு செல்கிறேன். வணக்கம். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க டோண்டு.. கருத்துக்கு நன்றி. (என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தமைக்கும்)

சொலல்வலன் சோர்விலன் -- சோ மட்டுமா?

ஜோ/Joe said...

பெனாத்தல் .இதோ சார் வந்துட்டாரு..இப்போ என்ன செய்வீங்க ..ஹை..இப்போ என்ன செய்வீங்க!

dondu(#11168674346665545885) said...

"சொலல்வலன் சோர்விலன் -- சோ மட்டுமா?"
ஹி ஹி ஹி. எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: கொடுத்த காசுக்கு வாடிய மாலை போட்டுச் சென்ற முப்பத்தைந்தாம் வட்டச் செயலாளரே, உனக்கு இருக்குடி ஆப்பு.

பினாத்தல் சுரேஷ் said...

ஜோ, எதிர்பார்த்துத்தானே பதிவே போடறோம்..

டோண்டு, சீரியஸாவே உங்களைத்தான் நானும் சொன்னேன்.

ஈழபாரதி said...

சோ பக்கச்சார்புடையவர் அல்ல என்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்சார்ந்த அரசியலின் பக்கமும், அவர்தாய் நாட்டின் பாசம் காரணமாகவும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறுபவர் அவர். அவர்மீது விருப்புடையவர்கள், அவர் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்பதில்லை, சோ சொன்னால் சரியாய் இருக்கும் என்ற சுயபுத்தியின்பால் சிந்தியாது முடிவெடுக்கிறார்கள், இதற்கு எனது நண்பரே சாட்சி, இந்தியாவில் நான் இருந்தகாலத்தில் எனது நண்பருடன் பலமணிநேரமாக வாக்குவாதம் நடந்தது சோ பற்றி, அவரும் கூறுகிறார் சோ ஒரு புத்திகூர்மையானவர் அவர்சொல்லுறபடிதான் நடக்கும் நடப்பதை சொல்லக்கூடியவர், நடந்ததைத்தான் சொல்வார், அவர்பத்திரிகையில் பொய்செய்திகள் வந்ததே இல்லை என்று, சரி விடுதலைப்புலிகள்பற்றி அவரது கருத்து இருக்கட்டும் அது தனிப்பட்டகருத்தாக இருக்கலாம். அனால் ஈழத்தமிழர் பற்றி பிழையான செய்தி வந்திருக்கிறதே, தமது ராணுவத்திமீது பற்று இருக்கவேண்டியதுதான் அதற்காக பிழையான செய்தியை பத்திரிகையில் போடலாமா?என்றேன், என்ன என்று கேட்டார், ஈழத்தில் விடுதலைப்புலிகளினால்தான் தமிழர்கு துண்பம், இந்தியராணுவத்தால் தமிழர் துண்பப்படவில்லை என்றும் ராணுவம் தமிழர்கு உதவுகிறது, என்றும் போட்டிருக்கிறதே என்று பத்திரிகையை காட்டினேன், அங்கு நடந்த அழிவின் சாட்சியாய் நான் இருக்கிறேன் இதற்கு என்ன சொல்கிறாய் என்று கேட்டேன், அவன் செய்தியை வாசித்தபின் சொன்னான், சோ சொன்னால் சரியாய்தான் இருக்கும் என்று. அவர்மீது பற்று கொண்டவர்களால் உண்மையை ஆராய்ந்துபார்க்கமுடிவதில்லை.

gowrikrishna said...

vanakkam penathalar suresh

kalakkunga,

ini parunga, ellarum sollapogum vasanam

vanthutanya! vanthutan !

dondu(#11168674346665545885) said...

நன்றி பெனாத்தல் சுரேஷ் அவர்களே. நீங்கள் என்னைத்தான் சொன்னீர்கள் என்பதில் நான் கிட்டத்தட்ட உறுதியாக இருந்தேன். இருப்பினும் அவ்வாறு இல்லாமல் போய் அசடு வழியக்கூடாது என்றுதான் 35-ஆம் வட்டச் செயலாளரை இழுத்தேன்.

என்னிடம் ஒரு கெட்டப் பழக்கம் என்னவென்றால் (மற்றவர்கள் என்னைப் பற்றிக் கருதுவதைச் சொன்னேன்) எதிர்ப்பு வரவர என் பிடிவாதமும் அதிகரிக்கும். என்ன, மற்றவர்கள் பார்வை கோணத்தையும் புரிந்து கொள்வதால் ரொம்ப சண்டையெல்லாம் வருவதில்லை.

ஏதாவது புரியும்படிக் கூறியிருக்கிறேனா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Geetha Sambasivam said...

ellavatraiyume oversight aga parkireerkal. Thuglakaiyum cherthu. Athu than ellam ippadi therikirathu.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஈழபாரதி, கௌரிஷங்கர், டோண்டு மற்றும் கீதா சாம்பசிவம்.

ஈழபாரதி, சிலர் தங்கள் குழந்தைப்பருவ ஆதர்சங்களைக் கலைத்துக்கொள்ள விரும்புவதில்லை.

கௌரிஷங்கர், அடுத்ததையும் பாருங்க!

டோண்டு, மற்றவர் கோணத்தைப் பார்த்தால் பிடிவாதம் குறைய அல்லவா வேண்டும்? குழப்புகிறீர்களே.. (உங்கள் ரசிகர் மூணு கமெண்டு போட்டிருந்தாரு! வாழ்க மாடரேஷன்!)

கீதா சாம்பசிவம், உங்கள் கருத்துக்கு நன்றி என்பதைத் தவிர எதையும் கூற முடியவில்லை:-)

dondu(#11168674346665545885) said...

மற்றவர் கோணத்தைப் பார்த்து அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும்போது நான் என் நிலையில் இருப்பதுதானே நல்லது? அதைத்தான் பிடிவாதம் என்கிறீர்களா? என் பரம ரசிகனையே எடுத்துக் கொள்ளுங்கள். அவன் பார்வை கோணம் என்ன? எல்லோரும் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் அவன் துரதிர்ஷ்டம் டோண்டு ராகவனிடம் போய் தன் மிரட்டலை வைத்துக் கொண்டான். போடா ஜாட்டான் என்று தூக்கி எறிந்து விட்டேன். அவனுடைய பழைய நண்பர்கள் கிட்டத்தட்ட எல்லோருமே அவனை ஒதுக்கி விட்டனர். தனியே கிடந்து ஊளையிடுகிறான்.

இப்போது இந்தப் பதிவின் மேட்டருக்கு வருவோம்.

"சிலர் தங்கள் குழந்தைப்பருவ ஆதர்சங்களைக் கலைத்துக்கொள்ள விரும்புவதில்லை."
நிச்சயம் அது எனக்கு பொருந்தாது. சோ அவர்களின் பத்திரிகையை நான் அதன் முதல் இதழிலிருந்தே படித்து வருபவன். அல்ப சலுகைகளுக்காகப் பல்லிளிக்கும் மற்றப் பத்திரிகையாளர்கள் நடுவில் அவர் ஒரு இமயமாக நிற்கிறார். அதற்காக அவர் சொல்லுவது எல்லாமே சரி என்று சொல்லிவிடுவேன் என்று பொருள் இல்லை. பத்திரிகையை அவர் நடத்தும் முறையையும் மற்றவர் நடத்தும் முறையையும் பார்த்துவிட்டு பேசுங்கள்.

அது சரி, நடுநிலை என்று எதைக் கருதுகிறீர்கள்? நடக்கும் விஷயம் ஒன்றைப் பற்றி எழுதும்போது அதைப் பற்றி அபிப்பிராயமே வைத்துக் கொள்ளக்கூடாதா? சோ என்ன செய்கிறார் என்றால் செய்திகளைக் கூறும்போது தன் விருப்பு வெறுப்புகளை அதில் நுழைப்பதில்லை. விமரிசனம் செய்யும்போது கருத்து கூறுகிறார்.

பாஜக ஆதரவாளராக இருந்தாலும் அக்கட்சியினர் அசடு வழியும்போது அதை கோட்டா செய்வதில் அவர்தான் முதல். தன்னம்பிக்கை உள்ள மனிதரால்தான் அவ்வாறு செய்ய முடியும்.

தன் பத்திரிகையில் தனிமனிதத் தாக்குதலை செய்யாத வெகு சில பத்திரிகையாளர்களில் அவர் முக்கியமானவர்.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய சோ பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க:

http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஷாஜி said...

அசத்துங்க பெனாத்தல் அண்ணே...

தேர்தல் திருவிழா தொடங்கியாச்சி.. நீங்க அலங்காரம் பண்ணுவீங்களோ அலங்கோலம் பண்ணுவீங்களோ எல்லாக் கட்சிக்காரங்களுக்கும் நல்ல உருப்படியான 'பதிவா' போட்டு தாக்கணும்.. சரியா...?

 

blogger templates | Make Money Online