Nov 5, 2007

பாடம் 2 - தயார் ஆகுங்க மக்களே - wifeology

கல்யாணம் பண்ணி வாழப்ப்போற பையா, பாவப்பட்ட பையா.. சில புத்திமதிகளைச் சொல்லப்போறார் ஐயா.. கேட்டுக்கோ மெய்யா..

எல்லாத்தையும் பாட்டாவே பாட முடியாதுங்கறதால, மேட்டருக்கு வரேன்.

இன்னிக்கு நம்ம பாடத்துல நாம பாக்கப்போற விஷயம் - கல்யாண்த்துக்கான முன்னேற்பாடுகள்.

ஒரு ஜோக் சொல்வாங்க, கல்யாணத்துக்கு முன்னால அவன் பேசினான், அவள் கேட்டாள், கல்யாணத்துக்கு அப்புறம் அவள் பேசினாள், அவன் கேட்டான், 10 வருஷம் கழிச்சு ரெண்டு பேருமே பேசினாங்க - ஊரே கேட்டுதுன்னு.. (நம்ம நிலைமையெல்லாம் எப்படி சிரிப்பா சிரிக்குது பாத்தீங்களா?)

அவன் பேசினதுக்கும் அவள் பேசினதுக்கும் இடையே ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி என்ன? ஏன் அப்படி ஆனது?

பெண் என்னும் ஜீவராசிகளுக்கென்றே சில அடிப்படை குணாதிசயங்கள் உண்டு. அவற்றைப் புரிந்து கொள்ளாததாலும், புரிந்துகொள்ள முயற்சி செய்யாததாலும்தான் இது நடக்கிறது.

சில அடிப்படைப்பாடங்களை கவனிக்கலாம்.

1. லாஜிக் தவிர். பெண்மை தவறேல்!

பெண்களுக்கு லாஜிக்கே இல்லைன்னு நான் சொல்லவரலை. இருக்கு. ஆனா, நமக்குப் புரியாம எங்கேயோ மூலையில மறைஞ்சுகிட்டு இருக்கு. இந்தப்பாடத்தை ஒரு உதாரணம் மூலமா விளக்கறேன்,

நம்ம பிரண்டு அப்பாவி கோயிந்து, மனைவியோட ஷாப்பிங் மால் போனார். 3 மணிநேரம் சுத்தினாங்க அம்மணி, ஒண்ணும் பெரிசா வாங்கலை. (சிறிசா வாங்கனதுலேயே பர்ஸ் பழுத்துடுச்சுன்னு வைங்க - அது கணக்குல வராது). ஒரு கடையில அரை மணிநேரம் செலவு பண்ணிட்டு வெளிய வராங்க, அப்ப தலைவர்
கேக்கறாரு:

"கடையிலெ எதாச்சும் வாங்கினயா? ஏன் இவ்வ்ளோ நேரம்?"

"ஒண்ணும் வாங்கலை! வாங்கினாத்தான தப்பு? வெறுமனே பாத்தா என்ன தப்பு?"

"இதுக்கா அரை மணி நேரம்"னு கேள்விய மனசுக்குள்ளே அடக்கிட்டு, அடுத்த கடைக்கு உள்ளே போகாம, வெளிப்பக்கமா ஒரு பென்சுல உக்கார்ந்துகிட்டு, கண்களுக்கு குளிர்ச்சி கொடுத்துகிட்டு இருக்கார். அம்மணி வராங்க, இவர் விடற லுக்கை லுக்கு விட்டுடறாங்க.

"என்ன கண்ணு அலைபாயுது?"

நம்ம கோயிந்து லாஜிக்லே புலியாச்சே.. புத்திசாலித்தனமா கேக்கறாராம்..

"தப்பா எதாச்சும பண்ணேன்? வெறுமனே பாத்தா தப்பில்லைன்னு நீதானே சொன்னே?"

என்னா ஆயிருக்கும் அவர் கதின்றத வாசகர்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

(இந்த மாதிரிக் கேள்விக்கு எப்படி பதில் சொல்றதுன்றதை பின்னால வர பாகங்கள்லே சொல்றேன்)

2. அர்த்தத்துக்கு அர்த்தம்

நவீன கவிதைகள் எல்லாம் வரதுக்கு ரொம்ப நாள் முன்னாலேயே அர்த்ததுகுள்ளே அர்த்தம் வச்சு பேசத் தெரிஞ்சவங்க நம்ம பெண்கள். தமிழ்ப்பதிவுகள் ஆரம்பிக்கறதுக்கு பலகோடி வருஷத்துக்கும் முன்னாலேயே வரிக்கு வரி உள்குத்து வச்சுப் பேசத் தெரிஞ்சவங்க!

அவங்க எதாச்சும் பேசினாங்கன்னா நேரடியான அர்த்தம் மட்டும் எடுத்துக்காதீங்க!

உதாரணமா, "இன்னிக்கு என்ன தேதி"ன்னு கேட்டா அதுக்குள்ளே, "அடுத்த வாரம் என் பிறந்த நாள் வருது, கிப்ட் ரெடியா" என்ற கேள்வியோ, "சம்பளம்தான் வந்தாச்சு இல்ல, எங்கயாவது போயி அதை ஊதிவிட்டுட்டு வரலாமா?" என்ற கேள்வியோ உள்ளே பதுங்கி இருக்கும்!

சாப்பாடு விஷயத்துல கூட, "இன்னிக்கு டின்னர் என்ன பண்ணலாம், தோசையா, உப்புமாவா?" அப்படின்னு ஒரு கேள்வி வந்தா உடனடியா பதில் சொல்லிடக்கூடாது. எது பண்ரதால அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையோ அதைச் சொல்லித் தப்பிச்சுடறதுதான் புத்திசாலித்தனம். அட்வான்ஸ்டு கணவர்கள், நேரடியா அவங்க ஆப்ஷன்ஸில முதல்ல என்ன சொல்றாங்களோ அதையே சொல்லிடுவாங்க. இல்லாட்டி, காலப்போக்குல, "இன்னிக்கு டின்னர் என்ன? தோசையா, வேறே எதாச்சுமா?" என்று அறிவுறுத்தப்படுவார்கள். இதுக்கும் திருந்தாதவர் ஒருத்தர் வீட்டுல நடந்த சம்பவம்:

"இன்னிக்கு டின்னர் வேணுமா?

"ஆப்ஷன்ஸ் என்ன?"

"யெஸ் ஆர் நோ"!

3. Omit your commitments

வரலாற்று ஆசிரியர்கள், ஞாபகசக்தி க்ராண்ட் மாஸ்டர்கள் என இருக்கும் எல்லாரின் ஞாபகசக்தியையும் சுலபமாக மிஞ்சும் ஒரு பெண்ணின் ஞாபகசக்தி. "நம்ம கல்யாணம் முடிஞ்ச நாலாவது நாள், அன்னிக்குக்கூட நான் அந்த ஊதாக்கலர் சல்வார் போட்டிருந்தேன், நீங்க சிவப்புல வெள்ளை ஸ்ட்ரைப்ஸ் டி ஷர்ட் போட்டிருந்தீங்க, நீங்க ஆபீஸ்லே இருந்து அரவிந் போனை அட்டெண்ட் பண்ணிட்டு வந்தப்போ நான் கேட்டேனே, அந்த GUCCI ஹேண்ட்பேக், அப்ப ஒத்துக்கிட்டீங்களே, மறந்துபோச்சா?" என்பது பொன்ற கேள்விகளைத் தவிர்க்க ஒரே வழி எதிலும் கமிட் ஆகாமல் இருப்பதுதான்.

எனவே, எண்ணிச் செய்க கமிட்மெண்ட், எண்ணாதார் உண்ணும் உணவும் பனிஷ்மெண்ட்!

இந்த ஞாபகசக்தி இருந்தாலுமே, நமக்கு அவங்க செய்த கமிட்மெண்ட்கள் செலக்டிவ் அம்னீஷியாவில் காணாமல் போவதும் லாஜிக்கை மீறிய விஷயம்தான். (அதாவது நம்ம லாஜிக்கை)

இதுவே ரொம்ப நீளமா போயிட்டதால, அடுத்த வாரமும் இதே சப்ஜெக்ட் தொடரும்.

வீட்டுப்பாடம்:

1. http://www.yoest.org/archives/shopping_male_female_gap_tom_peters.jpg

48 பின்னூட்டங்கள்:

Anonymous said...

வரலாற்று ஆசிரியர்கள், ஞாபகசக்தி க்ராண்ட் மாஸ்டர்கள் என இருக்கும் எல்லாரின் ஞாபகசக்தியையும் சுலபமாக மிஞ்சும் ஒரு பெண்ணின் ஞாபகசக்தி. "நம்ம கல்யாணம் முடிஞ்ச நாலாவது நாள், அன்னிக்குக்கூட நான் அந்த ஊதாக்கலர் சல்வார் போட்டிருந்தேன், நீங்க சிவப்புல வெள்ளை ஸ்ட்ரைப்ஸ் டி ஷர்ட் போட்டிருந்தீங்க, நீங்க ஆபீஸ்லே இருந்து அரவிந் போனை அட்டெண்ட் பண்ணிட்டு வந்தப்போ நான் கேட்டேனே, அந்த GUCCI ஹேண்ட்பேக், அப்ப ஒத்துக்கிட்டீங்களே, மறந்துபோச்சா?"

சூப்பர்.

முரளிகண்ணன் said...

தலை, உண்மையிலேயே உபயோகமாத்தான் இருக்கும் போல இருக்கே!!!

நளாயினி said...

அடப்பாவி களா.. இப்படியும் செய்வீங்களா. இதெல்லாம் தெரியாமல் இருந்திட்டனே இவ்வளவு காலமும்.

சரி சரி சொல்லுங்கள் . கேட்டு தெரிஞ்சுகொண்டு என்டை ஆளை செக்பண்ணிப்பாக்கிறன் இனிமேல். அது சரி ஏதும் ஏடாகுhடமாகிடாது தானே.

கதிர் said...

//அனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே!!//

இந்த பதிவை அனுபவச் சிதறல்கள்னு சொல்லலாம்னு நினைக்கிறேன். ஆனா மனசுக்குள்ள அடங்குடா தம்பின்னு குரல் கேக்குதே!

ACE !! said...

அனுபவஸ்தர்னா சும்மாவா?? கலக்கல் பாயிண்ட்ஸ் :D

//"தப்பா எதாச்சும பண்ணேன்? வெறுமனே பாத்தா தப்பில்லைன்னு நீதானே சொன்னே?"//

வி.வி.சி.

கொத்ஸ் உங்கள ஆசிரியர்னு சொன்னப்ப சும்ம கலாய்கிறார்னு நினைச்சேன்.. ஆனா நீங்க சூப்பர் வாத்தியாரா இருக்கீங்க.. :D :D

gulf-tamilan said...

//எண்ணிச் செய்க கமிட்மெண்ட், எண்ணாதார் உண்ணும் உணவும் பனிஷ்மெண்ட்!//
:)))

இவன்....இளையவன் said...

//பெண் என்னும் ஜீவராசிகளுக்கென்றே சில அடிப்படை குணாதிசயங்கள் உண்டு. அவற்றைப் புரிந்து கொள்ளாததாலும், புரிந்துகொள்ள முயற்சி செய்யாததாலும்தான் இது நடக்கிறது.//

ஆமா முயற்சி பன்னினா மட்டும் புரியபோவுதா? பன்னாம இருக்கிறதே நல்லது.

//கல்யாணம் பண்ணி வாழப்ப்போற பையா, பாவப்பட்ட பையா.. சில புத்திமதிகளைச் சொல்லப்போறார் ஐயா.. கேட்டுக்கோ மெய்யா..//

முதல் கிளாஸ்ல இருந்து எங்கள பயமுறுத்திகிட்டே இருக்கீங்க!

வேற வழியே இல்லையா?

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ் உங்கள ஆசிரியர்னு சொன்னப்ப சும்ம கலாய்கிறார்னு நினைச்சேன்.. //

யோவ். நான் உண்மையைத்தான்யா சொன்னேன்.

Anonymous said...

நடக்கட்டும்.....நடக்கட்டும்.........

ACE !! said...

//யோவ். நான் உண்மையைத்தான்யா சொன்னேன்//

அதான் ஒத்துகிட்டோமில்ல.. அப்புறம் ஏன் இம்புட்டு ரென்சனு.. :)

பினாத்தல் சுரேஷ் said...

பேரைச்சொல்லாம வந்ததிலேயே, உங்க பயம், திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன எல்லாமே தெரிகிறது :-)

முரளி கண்ணன், உபயோகமா இல்லாம லாண்டரிக் குறிப்பு கூட எழுதினதில்லை நாங்க!

நளாயினி,

//சரி சரி சொல்லுங்கள் . கேட்டு தெரிஞ்சுகொண்டு என்டை ஆளை செக்பண்ணிப்பாக்கிறன் இனிமேல். அது சரி ஏதும் ஏடாகுhடமாகிடாது தானே.//

இப்படி ஒரு தீராத பாவத்துக்கு ஆளாயிட்டேனே.. பரிகாரமா ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கறேன்.. உங்க ஆளையும் இதைப் படிக்க சிபாரிசு பண்ணிடுங்க ப்ளீஸ்!!

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி, கரெக்டா குரல் கேக்குது.. அப்படியே மெயிண்டெயின் பண்ணிக்க!

சிங்கம்லே ஏஸ்..

உபயோகப்பட்டா சரி.. அது என்ன சந்தேகம் என் வாத்தியார்ஷிப் மேலே??

வாங்க கல்ப் தமிழன்.. நன்றி.

கணேஷ் பாபு,

விளம்பரம் பாத்துருக்கீங்களா? எல்லா விளம்பரத்திலேயும் முதல்லே ஒரு பயம் கிளப்பி அப்புறமாதான் விளம்பரமே ஆரம்பிக்கும்.. அப்படித்தான் இதுவும்..

முயற்சி பண்ணாமலே புரியாதுன்னு எப்படி முடிவு பண்ணீங்க?

Anonymous said...

பயல்களா, இந்த கிழ போல்ட்டுங்க பேச்சை எல்லாம் கேக்காதீங்க. இந்த காலத்துல அவ அவ நாற்பதாயிர்ம், ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறா. ஹவுஸ் ஓய்ப் வேணும்னு கண்ணுல எண்ணைய விட்டு தேடினா கூட கிடைக்காது. அப்படியிருக்க, ஹேண்டு
பேக்குத்தான், புருஷன கேட்டுக்கிட்டு இருக்கா போறா பாருங்க. ஆயிரத்து ஐநூறு ஸ்கொயர் பீஃட் பிளாட் புக் செஞ்சிட்டேன், வீக் எண்டு பார்ட்டி அது இதுன்னு காசை வீணாக்காம, மாசா மாசம் இ எம் ஐ, முப்பாதாயிரம் கட்டணும், சிக்கனமா
இருங்கன்னு பொண்ணுங்க தெளிவா இருக்குதுங்க. இதுல அரத்தல் புரத்தலாய் பாடம் எடுக்கிறாராம். ஸ்டூபிட்

பினாத்தல் சுரேஷ் said...

கொத்ஸு, சிங்கலே ஏஸு.. சன்தை தீந்துதா?

வாங்க ஜெசிலா, எல்லாம் உங்க ஆசீர்வாதம்.

முதல் அனானிய எப்படி ஒரு பயந்த ஆண்னு நம்ம துப்பறியும் குழு கண்டுபிடிச்சுதோ, அப்படியே, இப்ப வந்திருக்க அனானி ஒரு பெண் அனானி அதுவும் சத்தமா பெண்ணீயம் பேசும் அனானின்னு கண்டுபிடிச்சு சொல்லியிருக்கு.

அனானி,

// ஆயிரத்து ஐநூறு ஸ்கொயர் பீஃட் பிளாட் புக் செஞ்சிட்டேன், வீக் எண்டு பார்ட்டி அது இதுன்னு காசை வீணாக்காம, மாசா மாசம் இ எம் ஐ, முப்பாதாயிரம் கட்டணும், சிக்கனமா
இருங்கன்னு பொண்ணுங்க தெளிவா இருக்குதுங்க// ஆகா! எந்த உலகத்துல இருக்கீங்க அனானி? கொஞ்சம் தரையில காலை வைங்க.. சுத்துமுத்தும் பாருங்க..

கிழபோல்ட்டுங்க நாங்க எங்க பார்வைய கூர்மையா வச்சிருக்கறதாலதான் இளைய தலைமுறைய காப்பாத்த முடியுது.

உங்கள் உடோப்பியா எனக்கும் பிடித்துதான் இருக்கு.. ஆனா :-((

வல்லிசிம்ஹன் said...

இப்படி சைகாலஜி புரிஞ்சு வச்சிருக்கிற சுரேஷைப் புரிஞ்சுக்காமப் போயிட்டேனெனு
தங்கமணி என்னைக் கூப்பிட்டு சொன்னாங்க:))0

பாடம் நல்லாத்தான் இருக்கு.

Unknown said...

இதுக்கும் நல்லா சிரிச்சேன். ஏன்னு நீங்க கேட்க மாட்டீங்கன்னு தெரியும்!

//உங்க ஆளையும் இதைப் படிக்க சிபாரிசு பண்ணிடுங்க ப்ளீஸ்// இதோ இன்னிக்கு அதான் வேல. என்ன கஷ்டம்னா - ஆளு "தமிளு" படிச்சு முடிக்கறதுக்குள்ள நானே படிச்சு (சிரிச்சிட்டே படிச்சா அதுவேற புரியாது:-)))) சொல்லிடுவேன்....

அ. அம்மா, //பொண்ணுங்க தெளிவா இருக்குதுங்க//, சரி தான்! ஆண்களையும் தெளிவு படுத்தக் களம் இறங்கியுள்ள வீரர் பி.சு.(க்காத) வை வாழ்த்தி வரவேற்போம்!! நம் பணி அவர்தம் தங்கமணி "இடித்து"ரைக்க விட்டுப் போனவற்றை எடுத்துரைப்பதே!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வல்லி சிம்ஹன்.

நன்றி கெக்கேபிக்குணி.

//இதோ இன்னிக்கு அதான் வேல. என்ன கஷ்டம்னா - ஆளு "தமிளு" படிச்சு முடிக்கறதுக்குள்ள நானே படிச்சு (சிரிச்சிட்டே படிச்சா அதுவேற புரியாது:-)))) சொல்லிடுவேன்....//

அய்யய்யோ ஒரு சதி நடக்குதே.. என்னால ஒண்ணும் பண்ண முடியலியே!!

இலவசக்கொத்தனார் said...

பெனாத்தல்,

என்ன ஸ்டுப்பிட் அது இதுன்னு அனானிப் பின்னூட்டம் எல்லாம் வருது? அனானியா வந்து இப்படி எல்லாம் திட்டறதை எல்லாம் பார்த்தா நீர் உண்மைதான் சொல்லறீருன்னு நிரூபணம் ஆகுதே!!

நாகை சிவா said...

//பெண் என்னும் ஜீவராசிகளுக்கென்றே சில அடிப்படை குணாதிசயங்கள் உண்டு.//

அதை சொல்லி தான் தெரிஞ்சுக்கனுமா ;)

// அவற்றைப் புரிந்து கொள்ளாததாலும், புரிந்துகொள்ள முயற்சி செய்யாததாலும்தான் இது நடக்கிறது. //

முடியுமா, நடக்குமா? நினைச்சாலே அம்புட்டு மலைப்பா இருக்கே சாமி.

நாகை சிவா said...

//இந்த பதிவை அனுபவச் சிதறல்கள்னு சொல்லலாம்னு நினைக்கிறேன். ஆனா மனசுக்குள்ள அடங்குடா தம்பின்னு குரல் கேக்குதே!//

நானும் அதே தான் சொல்லுறேன் தம்பி, அடங்கு... அவங்க எல்லாம் வாழ்ந்து முடிச்சவங்க... நாம் இனிமே தான் ஸ்டார்ட் பண்ணும், நீ அவரை ஒவரா உசுப்பேத்தி விட்டு அவரும் அதை நம்பி எடக்குமடக்கா சொல்லிக்குடுத்தா சந்தில நிக்க போவது தான் நாம் தான். மைண்ட்ல வச்சுக்கோ

தகடூர் கோபி(Gopi) said...

:-)) பிரசெண்ட் சார்

கோபிநாத் said...

\\தோசையா, உப்புமாவா?"\\\

இப்போதான் பாயிண்டுக்கு வந்திருக்கீங்க ;))

\\எனவே, எண்ணிச் செய்க கமிட்மெண்ட், எண்ணாதார் உண்ணும் உணவும் பனிஷ்மெண்ட்!\\

ரொம்ப கொடுமையான பனிஷ்மெண்ட் போல..! ;)

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்..

நாம உண்மையத்தான் சொல்றோம். அதான் பூனைக்குட்டிங்க வெளுய வந்துகிட்டே இருக்குது..

நாகை சிவா,

சைக்கிள் கேப்புல //அவங்க எல்லாம் வாழ்ந்து முடிச்சவங்க... // அப்படின்னு ஆட்டோ ஓட்டறியே.. நியாயமா யோசிச்சுப்பாரு..

வாங்க கோபி.

வாங்க கோபிநாத்..

Unknown said...

ஏன் என் பின்னூட்டம் வெளியிடப்படவில்லை?

இவன்....இளையவன் said...

//முயற்சி பண்ணாமலே புரியாதுன்னு எப்படி முடிவு பண்ணீங்க?//

முயற்சி பன்ன பேசிக்கா கல்யாணம் ஆகனுமா?

//பயல்களா, இந்த கிழ போல்ட்டுங்க பேச்சை எல்லாம் கேக்காதீங்க//

சரி நீங்கதான் சொல்லுங்க!
கிழபோல்ட்டு பேச்சதான் கேக்ககூடாது
ரெட்ட ஜடை போட்டுட்டு பத்தாம் க்ளாஸ் பள்ளிகூடம் போற பொன்னுகிட்ட கேக்கலாமா?
(கல்யாணம் ஆயிடாலே ஆம்பிளை எல்லாம் கிழபோல்ட்டு
ஆனா நீங்க சாகுற வரைக்கும் குமரிங்க)

//சிக்கனமா இருங்கன்னு பொண்ணுங்க தெளிவா இருக்குதுங்க//

சொல்லிகிட்டாங்க...
இருக்குதுங்க-ன்னா என்ன ஆடா மாடா?

குசும்பன் said...

"புத்திமதிகளைச் சொல்லப்போறார் ஐயா.. கேட்டுக்கோ மெய்யா..

எல்லாத்தையும் பாட்டாவே பாட "///


சார் ஒவ்வொருத்ததையும் கஷ்டபட்டு பள்ளி கூடத்துக்கு கூட்டி வந்தா நீங்க பாட்டுக்கு பாட்டு பாடி பாதி பேரை விடட்டி விட்டுட்டீங்க:(

வீட்டு பாடம் செய்யலையா ரெண்டு அடி கூட அடிக்கனுமா அடிச்சுக்குங்க.ஆனா தயவு செய்து பாட மட்டும் செய்யாதீங்க!

குசும்பன் said...

கல்யாணத்துக்கு முன்னால அவன் பேசினான், அவள் கேட்டாள், கல்யாணத்துக்கு அப்புறம் அவள் பேசினாள், அவன் கேட்டான், 10 வருஷம் கழிச்சு ரெண்டு பேருமே பேசினாங்க - ஊரே கேட்டுதுன்னு.. (நம்ம நிலைமையெல்லாம் எப்படி சிரிப்பா சிரிக்குது பாத்தீங்களா?) "

இந்த டைம் லென்தில் ஏதோ தப்பு இருக்கே, எப்படி இவ்வளோ மெதுவா நடக்கும் , எங்கோ தப்பு நடந்திருக்கு:)

குசும்பன் said...

"கண்களுக்கு குளிர்ச்சி கொடுத்துகிட்டு இருக்கார். "

அப்படின்னா என்னா சார்? ஐஸ் கட்டி எடுத்டு கண்ணில் வெச்சுக்கனுமா?
அப்படி வெச்சா கூடவா திட்டுவாங்க.

(பாருங்க சார் எம்புட்டு வெள்ளேந்தியா இருக்கேன்னு)

குசும்பன் said...

"நீங்க சிவப்புல வெள்ளை ஸ்ட்ரைப்ஸ் டி ஷர்ட் போட்டிருந்தீங்க, நீங்க ஆபீஸ்லே இருந்து அரவிந் போனை அட்டெண்ட் பண்ணிட்டு வந்தப்போ நான் கேட்டேனே, அந்த GUCCI ஹேண்ட்பேக், அப்ப ஒத்துக்கிட்டீங்களே, மறந்துபோச்சா?""

நம்ம ஆளுங்களும் சும்மா சாமான்ய பட்ட ஆளுங்க இல்லை நாலு இடத்தில் நாலுவிதமா வாக்குறுதி கொடுத்து விட்டு எங்க என்னா சொன்னோம் என்பதில்தான் சிக்கலே ஒழிய அவன் ஞாபகசக்தியில் இல்லை!!

Unknown said...

இது தான் நான் போட்டு நீங்கள் "தடை செய்த?" பின்னூட்டம்:

P.S. (not postscript): கவலப்படாதீங்க, எங்க ஆளுக்கு "எத்தயும் உடாம":-) படிச்சுச் சொல்லிடறேன்.

//இலவசக்கொத்தனார் said...
என்ன ஸ்டுப்பிட் அது இதுன்னு அனானிப் பின்னூட்டம் எல்லாம் வருது? அனானியா வந்து இப்படி எல்லாம் திட்டறதை எல்லாம் பார்த்தா நீர் உண்மைதான் சொல்லறீருன்னு நிரூபணம் ஆகுதே!!//
பாருங்க இ.கொ.வின் அப்பட்டமான உள்குத்து! அவரு ஆக்சுவலா அனானி அம்மாவுக்கு வழிமுழியறாரு!

தைரியம் இருந்தா பின்னூட்டம் வெளியிடாமல் இருக்கவும்;-)

பினாத்தல் சுரேஷ் said...

கெக்கேபிக்குணி.. எதை வெளியிடாம விட்டோம்?

கணேஷ் பாபு,

முயற்சி பண்ண, முன்முடிவுகள்லே இருந்து வெளிய வரணும் :)

அனானிக்கு இன்னும் ஒரு பெரிய பதில் போடறேன்..

பினாத்தல் சுரேஷ் said...

குசும்பன்:

//பாட்டுக்கு பாட்டு பாடி பாதி பேரை விடட்டி விட்டுட்டீங்க:(//

அதுக்குள்ளே ஓடினா என்ன பண்ண முடியும்? யாருக்கு இழப்பு?

//எப்படி இவ்வளோ மெதுவா நடக்கும் // அனுபவமில்லாதத காமிச்சுட்ட பாத்தியா? மீண்டும் அவனும் பேச ஆரம்பிக்க 10 வருஷமாச்சும் ஆகும். சொல்லப்போனா இதுவே பாஸ்ட்.

//(பாருங்க சார் எம்புட்டு வெள்ளேந்தியா இருக்கேன்னு)//

தோடா!!!

//நாலு இடத்தில் நாலுவிதமா வாக்குறுதி கொடுத்து விட்டு எங்க என்னா சொன்னோம்//

நாலு இடமா? என்ன கொடுமை சரவணா இது??

பினாத்தல் சுரேஷ் said...

பெண்ணீய அனானிக்கு:

நாம இந்தப் பதிவுல சொன்ன விஷயம் மூணு:

1. லாஜிக் தவிர்.


//ஹேண்டு
பேக்குத்தான், புருஷன கேட்டுக்கிட்டு இருக்கா போறா பாருங்க. ஆயிரத்து ஐநூறு ஸ்கொயர் பீஃட் பிளாட் புக் செஞ்சிட்டேன், வீக் எண்டு பார்ட்டி அது இதுன்னு காசை வீணாக்காம, மாசா மாசம் இ எம் ஐ, முப்பாதாயிரம் கட்டணும்,//

ஹேண்டு பேக் புருஷனை நம்பமாட்டாங்களாம், 1500 அடிக்கு வீடு இவனை நம்பி வாங்கிடுவாங்களாம்.. என்னா லாஜிக்கு சார் இது?

2. அர்த்தத்துக்குள் அர்த்தம்:

//இந்த கிழ போல்ட்டுங்க பேச்சை எல்லாம் கேக்காதீங்க.// அனுபவஸ்தன்னு உள்குத்து இருக்கு பாடுங்க ;))

3. கமிட்மெண்ட் ஒழித்தல் - அதாவது, இப்ப நமக்குப் பதிலா அவங்க கமிட் ஆயி, அதை நம்ம கமிட்மெண்டு ஆக்கிடுவாங்களாம்!

நான் சொன்ன எல்லா பாயிண்டையும் ஒரு பின்னூட்டத்திலேயே நிரூபித்த அனானிக்கு நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

கெக்கேபிக்குணி,

முழுசா, ஒழுங்கா, நல்லபடி படிச்சுக்காட்டியிருந்தா இன்னேரம் அவர்கிட்டே இருந்து வாழ்த்து பின்னூட்டம் வந்திருக்குமே!

கொத்தனாருக்கும் எனக்கும் நடுவில் புயல்மூட்ட ஆசைப்படும் உங்கள் ராப்ர்ட் க்ளைவ் உக்தி ஜெயிக்காது.

//தைரியம் இருந்தா பின்னூட்டம் வெளியிடாமல் இருக்கவும்;-)//

எனக்கு தைரியம் இருக்கறதா எங்கயாவது வாய்தவறியாவது சொல்லி இருக்கேனா?

rv said...

நிஜமாவே உம்ம தங்கமணி & கோ படிச்சுதான் இந்த பதிவெல்லாம் வெளியில வருதா?

ஏற்கனவே அக்கா பையன குத்தாலத்துல மிதிச்சதுக்கே ரியாக்ஷன் என்னன்னு சொல்லலை..

ஆகவே எனக்கு டவுட் இருக்கு. அடுத்த தடவை காவேரிப்பக்கம் வருவேளோனோ பெனாத்தலார் சார்? அப்ப நேரடியா பேசித்தீர்த்துக்கலாம். :)

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி ராம்ஸு.. என்ன இது சிறுபிள்ளைத்தனமான கேள்வி? பாத்தா பதிவு ரிலீஸ் ஆகுமா இல்லை வேறெதாச்சும் அட்மிட் ஆகுமா?

rv said...

ஆக மொத்தம்... வீட்ல என்னவோ வெளியில என்னவோனு சொல்றா மாதிரி சோடா போட்டு சவடால் விடுறது எல்லாம் இங்கன மட்டுந்தானு கன்பர்ம் ஆயிடுச்சு.

சரி சரி.. க்ளாஸ் எடுங்க. ஆனா எங்கள க்ளாஸ் எடுக்க வச்சிராதீங்க.

பினாத்தல் சுரேஷ் said...

இல்லைன்னு எப்ப சொன்னேன் ராம்ஸ்?

பயப்படறதுக்கு மட்டும் என்னிக்கும் நான் பயந்ததே இல்லை

சதங்கா (Sathanga) said...

//பயப்படறதுக்கு மட்டும் என்னிக்கும் நான் பயந்ததே இல்லை//

இது சூப்பர்.

Unknown said...

//முழுசா, ஒழுங்கா, நல்லபடி படிச்சுக்காட்டியிருந்தா இன்னேரம் அவர்கிட்டே இருந்து வாழ்த்து பின்னூட்டம் வந்திருக்குமே!// அப்படின்னுட்டு, இது வேற:
//(தங்கமணி) பாத்தா பதிவு ரிலீஸ் ஆகுமா இல்லை வேறெதாச்சும் அட்மிட் ஆகுமா?//
வாழ்த்து பின்னூட்டத்துக்கென்ன! தாராளமா! சொல்லுங்க எத்தன வேணும்!?

//நிஜமாவே உம்ம தங்கமணி & கோ//
மாட்டினார்! செமயா! வாழ்த்து பின்னூட்டம் தானே கேட்டீங்க?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

சுவாரஸ்யாமாய் இருக்குது.பின்னூட்டமும்தான்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சதங்கா (முதல் வருகையோ?)

கெபி,

அவர் கையால ஒரு பின்னூட்டம் போட்டா 1000 போட்ட மாதிரி.

நன்றி சிவா.

Unknown said...

கலக்கல் ... இது உண்மையிலேயே 'அனுபவச் சிதறல்கள்' தான்...

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தஞ்சாவூரான் :-)

மங்களூர் சிவா said...

பின்னூட்டத்தை வெச்சே ஆண் பின்னூட்டம் பெண் பின்னூட்டம் அதிலும் பெண்ணீய பின்னூட்டம்லாம் புட்டு புட்டு வைக்கிறீங்களே ஐயா

க்ரேட்

\\தோசையா, உப்புமாவா?"\\\

\\எனவே, எண்ணிச் செய்க கமிட்மெண்ட், எண்ணாதார் உண்ணும் உணவும் பனிஷ்மெண்ட்!\\

\\
"நீங்க சிவப்புல வெள்ளை ஸ்ட்ரைப்ஸ் டி ஷர்ட் போட்டிருந்தீங்க, நீங்க ஆபீஸ்லே இருந்து அரவிந் போனை அட்டெண்ட் பண்ணிட்டு வந்தப்போ நான் கேட்டேனே, அந்த GUCCI ஹேண்ட்பேக், அப்ப ஒத்துக்கிட்டீங்களே, மறந்துபோச்சா?""
\\

இவ்ளோ டஃப்பாவா கேப்பாங்க
அவ்வ்வ்வ்வ்வ்வ்

அந்த ரெண்டாவது அனானிக்கு பதில் சூப்பர்

மெளலி (மதுரையம்பதி) said...

கலக்குங்க சுரேஷ், அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்....

sathya said...

Very good gr8 post

how to type comments in tamizh pls help

sathya

Vidhoosh said...

//வீட்டுப்பாடம்:
//

:)) How much i'm missing those days.

 

blogger templates | Make Money Online