Nov 20, 2007

பாடம் 4 - வேலை செய்யாதவன் தான் வீரமான வேலைக்காரன் (Wifeology)

இன்னிக்கு வர பாடம், ரொம்ப முக்கியமான பாடம்.

கல்யாணம் ஆனவங்க யோசிச்சுப்பாருங்க, உங்கள் தங்கமணி எப்ப உங்களுக்கு வேலை கொடுக்க ஆரம்பிச்சாங்கன்னு?

ஞாபகம் வந்துருச்சா?

ஹனிமூன் போனீங்களே, அங்கே என்ன நடந்தது?

சே.. அதைச் சொல்ல வரலைப்பா! ஏ சர்டிபிகேட் மேட்டர் எல்லாம் கிடையாதுன்னுதான் முதல்லியே சொல்லிட்டேனே!

இப்ப ஞாபகம் வருதா?

"ஸாரிங்க, என் ஹேண்ட்பேக்கை ஹோட்டல்ரூமிலேயே விட்டுட்டு வந்துட்டேன்.. கொஞ்சம் ப்ளீஸ் போயி எடுத்துகிட்டு வந்துடறீங்களா?"

ஆமாம். இப்படி சாதாரணமா, ஸாரி, ப்ளீஸ் எல்லாத்தோடயும் ஆரம்பிக்கற வேலை வாங்கற டெக்னிக்தான் பிற்காலத்துல "வெட்டியாத்தானே பொட்டி தட்டிகிட்டு இருக்கே, அந்தப் புடவைக்கெல்லாம் ரிவைவ் போட்டாதான் என்னவாம்?" என்று பரிணாம வளர்ச்சி அடையுது.

முளையிலேயே கிள்ளவேண்டிய விஷயத்தை வளரவிட்டுட்டு அப்பால குத்துதே குடையுதேன்னு சொல்றதில எந்த அர்த்தமும் இல்லை.

ரொம்ப கேர்புல்லா ஹேண்டில் பண்ணவேண்டிய ஏரியா இது. ரொம்ப அசட்டுத்தனமாவும் ஹேண்டில் பண்ண முடியாது, ரொம்ப புத்திசாலித்தனமாவும் ஹேண்டில் பண்ண முடியாது.

"ஆஹா, நீ சொல்லவே வேணாம்.. இதோ போய் செஞ்சுடறேன்"னு முதல்ல ஆரம்பிச்சீங்கன்னா, பிற்காலத்துல வலைப்பூ பாக்க முடியாது, சேலைப்பூ தான் பாக்க முடியும்.

ஓவர் புத்திசாலித்தனமா ஒருத்தர் நடந்துகிட்டாராம். அவர் தன் அனுபவத்தை நண்பர்கிட்ட பகிர்ந்துகிட்டார் இப்படி:

"என் மனைவி காலைலே ப்ரேக்பாஸ்ட் பண்றதை பார்த்தேன். தேவையில்லாத மூவ்மெண்ட் நிறைய, காய்கறிகள் எல்லாம் நறுக்கி வச்சுகிட்டு வேலைய ஆரம்பிக்கறதில்லை, நிறைய ஐடில் டைம் நடுவுல.. டைமை வேஸ்ட் பண்றா. டைம் மேனேஜ்மண்ட் படி, லெப்ட் ஹாண்ட் மூவ்மெண்ட், ரைட் ஹாண்ட் மூவ்மெண்ட், ப்ரெபரேஷன்ஸ் எல்லாத்தையும் ஒரு நாள் அனலைஸ் பண்ணி சார்ட் போட்டுக் கொடுத்தேன் அவளுக்கு"

"இம்ப்ரூவ்மெண்ட் தெரிஞ்சுதா?"

"நல்ல இம்ப்ரூவ்மெண்ட். முன்னெல்லாம் ப்ரேக்பாஸ்ட் பண்றதுக்கு அவளுக்கு 30 நிமிஷம் ஆகும். இப்பல்லாம் எனக்கு 10 நிமிஷம்தான் ஆகுது"

இல்லை, "செய்ய முடியவே முடியாது"ன்னு ஸ்ட்ராங்கா சொன்னீங்கன்னா, விளைவும் தவிட்டு ஒத்தடம் ரேஞ்சுக்கு ஸ்ட்ராங்காத்தான் இருக்கும்.

அதனால, இந்த இரண்டு எக்ஸ்ட்ரீமுக்கும் நடுவுல ஏதோ ஒரு இடத்துல இருக்கு நமக்கான தீர்வு!

உப்புமா செய்வது எப்படின்னு செய்முறைக்குறிப்பு போட்டிருக்கேன், படிச்சுப் பாத்து அதன் சாராம்சத்தை மட்டும் எடுத்துகிட்டு, எல்லா வேலைக்கும் இதையே அப்ளை பண்ணலாம்.

உப்புமா செய்வது எப்படி

உப்புமா செய்ய ஆரம்பிக்கும் முன் சொல்ல வேண்டிய வசனங்கள் - "சமையல்லே இருந்து இன்னிக்கு உனக்கு ரெஸ்ட். அய்யா சமையலை சாப்பிட்டதில்லையே நீ? சாப்பிட்டவங்களைக் கேட்டுப்பாரு.. நளபாகம்னு சொல்வாங்களே அது என் கைவண்ணம்தான். இனிமே குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாச்சும் ப்ளீஸ் சமைங்கன்னு கெஞ்சப்போறே பாத்துக்க!"

1. அடுப்பை "ஹை"யில் ஏற்றி வைத்துக்கொள்ளவும். ஆண்கள் குறைந்த நெருப்பில் எப்போதும் சமைப்பதில்லை.

2. ரவையை அதன் பாத்திரத்திலிருந்து வேகமாக ஒரு தட்டில் கொட்டிக்கொள்ளவும். வேகம் மிகவும் அவசியம். அப்போதுதான் ரவை வீடு முழுவதும் தெறிக்கும்.

3. அடுப்பில் வாணலியை ஏற்றி, வாணலியில் ஒரு சொட்டு எண்ணெய் அல்லது நெய் விடவும். (அடுப்பு "ஹை"யில் எரியவேண்டும், மறக்காதீர்கள்)

4. ரவையை வாணலியில் கொட்டவும்.

5. டிவியில் என்ன ஓடுகிறது என்று பார்த்துவிட்டு வரவும்.

6. இப்போது வாணலியின் அடியில் உள்ள ரவை சற்றே கருத்தும் மேல்புறம் ஒரு மாற்றமும் இல்லாமலும் காணப்படும். ஒரே கிளறு. மேல்பாகம் கீழும், கீழ்பாகம் மேலும் செல்லும் வண்ணம் கிளறவும்.

7. ஈமெயில் எதாவது வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு வரவும்.

8. இப்போது ரவை சமச்சீராக கருத்து இருக்கும். அதை ஒரு தட்டில் கொட்டவும். அடுப்பை அணைக்கவும்.

9. டிவி பார்த்துக்கொண்டே வெங்காயத்தை உரித்து, அதன் தோலியை வரவேற்பரையில் கொஞ்சம், சமையலறையில் கொஞ்சம், மேலும் வீட்டில் உள்ள மற்ற அறைகளில் கொஞ்சம் என சமச்சீராக பரப்பவும். வெங்காயத்தை சமச்சீரற்ற துண்டுகளாக நறுக்கவும்.

10. மறுபடி அடுப்பை ஹையில் பற்றவைத்து, எண்ணெய் ஊற்றவும்.

11. எண்ணெய் கருகும் வாசனை வந்தவுடன் கடுகைப் போடவும். உடனே வெடிக்கவேண்டும். பிறகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, கடலைக்காய் - எது கிடைக்கிறதோ எல்லாவற்றையும் போட்டுவிட்டு, கிளறுவதற்கான கரண்டியைத் தேடவும்.

12. இப்போது போட்ட பருப்புகள் எல்லாம் "கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு"ன்னு பாட ஆரம்பித்திருக்கும். அதன் தலையில் நறுக்கிய வெங்காயம், முழுத் தக்காளியை நேரடியாக எடுத்து ரெண்டே துண்டாக வெட்டி அதன்மேல் போடவும்.

13. வெங்காயம் தக்காளி கோபம் தணிந்து குழைய ஆரம்பிக்கும்வரை கிளறவும்.

14. இப்போது அதன்மேல் தண்ணீரை ஊற்றவும். அடுப்பின் தணலைச் சற்று குறைத்துக்கொண்டால்,மறுபடி மெயில் பார்க்க / மசாலா மிக்ஸ் பார்க்க நேரம் கிடைக்கும்.

15. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ரவையைக் கொட்டிக் கிளறவும். வெந்து 5 நிமிடம் கழித்து இறக்கவும் (உப்புமா இப்போது சிவாஜி ஆகியிருக்கும் - பாத்திரத்தோடு ஒன்றி இருக்கும்).

************"உப்பு போடவேண்டும் என்று சொல்லாதது தெரியாமல் செய்த பிழை அல்ல!"*************************

உப்புமா சாப்பிடும்போது சொல்லவேண்டிய வசனம் : "என்ன இருந்தாலும் நீ செய்யறது போல வரலை, இல்லையா? எந்த வேலையா இருந்தாலும் உனக்கு இருக்க இன்வால்வ்மெண்ட், கமிட்மெண்ட் எல்லாம் எனக்கு வர்றதில்லை. சும்மாவா சொன்னாங்க இதனை இதனான் இவள்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவள்கண் விடல்- னு?"

இதுவும் உறுதியான மெத்தட் கிடையாதுதான். இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கலாம்.

இன்னிக்கு வீட்டுப்பாடம் உப்புமாதான்.

54 பின்னூட்டங்கள்:

jaseela said...

அந்தப் புடவைக்கெல்லாம் ரிவைவ் போட்டாதான் என்னவாம்?" என்று பரிணாம வளர்ச்சி //ohhhh....Revive ellam aathukkari pudavaikku pottirukkela?! ...unga secrets ellam weliya waruthu....ha...ha.ha

தேவ் | Dev said...

விவகாரமான வேலைக்காரன் :-)

Ganesh Babu said...

காலையிலயே ஆரம்பிச்சாச்சா?

//"என்ன இருந்தாலும் நீ செய்யறது போல வரலை, இல்லையா? எந்த வேலையா இருந்தாலும் உனக்கு இருக்க இன்வால்வ்மெண்ட், கமிட்மெண்ட் எல்லாம் எனக்கு வர்றதில்லை. சும்மாவா சொன்னாங்க இதனை இதனான் இவள்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவள்கண் விடல்- னு? //

திருக்குறள் வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம். நீங்க சொல்றத பாத்தா வஞ்சப்புகழ்ச்சி அணிதான் வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம் போல இருக்கே!

துளசி கோபால் said...

அடப்பாவி....குடும்பத்தில் குழப்பம் வரணுமா?

போனவாரம்தான் வகுப்புக்கு ஒரு புது மாணவரைச் சேர்த்துவிட்டேன்.

இந்த பாடம் 4 வகுப்புக்கு அவரை அனுப்பப்போறதில்லை :-))))

Geetha said...

En husband veetula senja uppumaava eppadi exacta neenga receipe potirukireenga. Ella aambalingalum engayaavadhu poi training edukireengala enna:)

அந்தோ பரிதாபம் said...

ஐயோ.. ஐயோ.. இதை நீங்க ரங்கமணிகளுக்கா சொல்லிக்குடுக்கிறீங்க.. நிறைய காலமா தங்கமணிகள் இதைத் தான் செய்திட்டு வாறாங்க...

தாமோதர் சந்துரு said...

இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா, ஆளை விடுங்க. ஏதோ மூணு வேளை தங்கமணி கஞ்சி ஊத்துக்கிட்டிருக்குது. அதுக்கும் வேட்டு வெச்சுருவீங்க போல. எத்தனை பேரு குடிய கெடுக்கப் போறீங்கலோ தெரியலையே.

செந்தழல் ரவி said...

உப்புமா மேட்டர்தான்னாலும் அனுபவிச்சி எழுதியிருக்கீங்க...

உப்பு போடாததுக்கு சொல்யூஷன் சொல்லலியே...

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் உப்பை போட்டு, கால் டம்பள் தண்ணீரை நேரடியாக பைப்பில் நிரப்பி, படக்கென கொட்டி கிளறோ கிளறு என்று கிளறுவது...

அனுபவிச்சி எழுதியிக்கமாதிரி தெரியுதுங்னா !!!!!!!!

Anonymous said...

அன்புள்ள சுரேஷ்,
தவறுதலாய் உங்கள் வீட்டு தொலைப்பேசி எண்ணை அழுத்திவிட்டேன். அதனால் என்ன, தங்கள் மனையாளுடன் சில
மணி துளிகள் இனிமையாய் பேசி பொழுதைக் கழித்தேன். அவரின் பல சந்தேகங்களுக்கு என்னால் இயன்ற தீர்வை சொன்னேன். தற்செயலாய் தங்கள் வலைப்பதிவை பற்றியும் பேச்சு வந்தது. தங்கமணி என்று அழைப்பப்படும் இல்ல கிழத்திகளுக்காகவும், நீங்கள் சில விஷயங்களை அருமையாய் எழுதிகிறீர்கள் என்றதும், பெருமையால் திக்குமுக்காடிப் போய் விட்டார். உடனே படிக்கிறேன் என்று வாக்குறுதியும் தந்தார். அவர் படித்தாரா என்பதை தெளிவுப்படுத்துமாறு அன்புடன்
கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் அன்பு சகோதரி

gulf-tamilan said...

//இன்னிக்கு வீட்டுப்பாடம் உப்புமாதான்//
ippadi uppumaa seithaal lifelong kitchen pakkam varavidamal seivargalaa???

Anonymous said...

///ன்புள்ள சுரேஷ்,
தவறுதலாய் உங்கள் வீட்டு தொலைப்பேசி எண்ணை அழுத்திவிட்டேன். அதனால் என்ன, தங்கள் மனையாளுடன் சில
மணி துளிகள் இனிமையாய் பேசி பொழுதைக் கழித்தேன். அவரின் பல சந்தேகங்களுக்கு என்னால் இயன்ற தீர்வை சொன்னேன். தற்செயலாய் தங்கள் வலைப்பதிவை பற்றியும் பேச்சு வந்தது. தங்கமணி என்று அழைப்பப்படும் இல்ல கிழத்திகளுக்காகவும், நீங்கள் சில விஷயங்களை அருமையாய் எழுதிகிறீர்கள் என்றதும், பெருமையால் திக்குமுக்காடிப் போய் விட்டார். உடனே படிக்கிறேன் என்று வாக்குறுதியும் தந்தார். அவர் படித்தாரா என்பதை தெளிவுப்படுத்துமாறு அன்புடன்
கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் அன்பு சகோதரி////

சகோதரி...நிறைவு பாகத்துக்கு மேட்டர் கொடுத்திட்டியெம்மா ? இவரை மீண்டும் பினாத்த வெப்பே போலிருக்கே

gulf-tamilan said...

//அவர் படித்தாரா என்பதை தெளிவுப்படுத்துமாறு அன்புடன்
கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் அன்பு சகோதரி//
:((((

Seetha said...

அடிசக்கை..
வாத்யாரு ஊருக்கு போயிருக்காரு வரட்டும்.
வேலை முடிச்சுட்டு நம்ம வீட்டுக்கு வரும்போது பசி வயத்தைக் கிள்ளும். மனுஷன் தன்னாலே சுகமா கணினிக்குள்ள பூந்திட்டு (லீவ் வேற ஜாலியா அனுபவிச்சுகிட்டு),அய்யோ நான் இப்போ சமைக்கணுமேன்னு கவலைப்படுவேன். இவுரு சுகமா, 'வாயேன் சப்வே சாண்ட்விச் சாப்பிடலாமேன்னுவாரு.'
இபொல்லாம் 'சப்வே 'இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டும்னு மனசு அடிச்சிகிர அளவுக்கு அந்த சாண்ட்விச் சாப்பிட்டாச்சு.

எங்க மாமியார் தங்கமணிகளின் மனது தங்கமணிகளுக்கு தான் தெரியும்ங்க்றதால, 'அய்யோ பாவும் நீ என்ன பண்ணுவே, நான் இருந்தாலாவது சமைச்சிருப்பேனே,இவனும் ஒண்ணும் பண்ணமாட்டான்' அப்பிடின்னு அன்பா சொல்வாங்க.((கு)ரங்குமணிகளுக்கு என்ன தெரியும் தங்கத்தின் அருமை.

Siva said...

சும்மா சொல்லக்கூடாது. அனுபவிச்சு எழுதியிருக்கீங்க

jaseela said...

இன்னிக்கு வீட்டுப்பாடம் உப்புமாதான்//
ippadi uppumaa seithaal lifelong kitchen pakkam varavidamal seivargalaa???//correct point!nichayam athuthaan nadakkum.intha mathiri ellam adukkalaiya azhukkakkura samayalai thangamanigal wirumbirathillai...(etho ennaal mudinja tips....pona pogattum)

கோபிநாத் said...

:)))

பினாத்தல் சுரேஷ் said...

ஜெஸிலா,

உண்மைகள் வெளியே வரத்தான் செய்யும்.. அதைப்பத்தியெல்லாம் கவலைப்படற லெவலை எப்பவோ தாண்டியாச்சு!

தேவ்.. விவகாரம் நான் பண்றனா? நீங்களா?

கணேஷ் பாபு, வஞ்சப்புகழ்ச்சி இல்லை அது, நெஞ்சப்புகழ்ச்சி :-)

பினாத்தல் சுரேஷ் said...

துளசி அக்கா, இது கருத்தியல் ரீதியான வன்முறை! வன்மையாகக் கண்டிக்கிறேன். எங்கள் சங்கத்தின் மூத்த அங்கத்தை பங்கம் செய்யும் உங்கள் நோக்கத்தை நிறைவேற விடமாட்டோம்..

கீதா, இது ஆராய்ந்து செய்யப்பட்ட ரெசிப்பி. இதை உங்கள் கணவர் ஏற்கனவே செய்துவிட்டிருந்தால் அவரை எங்கள் வகுப்புக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவும், நன்றி.

அந்தோ பரிதாபம், தங்கமணிகளுக்கு தேவைன்னா இப்படியும் பண்ணுவாங்க, எப்படியும் பண்ணுவாங்க!

பினாத்தல் சுரேஷ் said...

துளசி அக்கா, இது கருத்தியல் ரீதியான வன்முறை! வன்மையாகக் கண்டிக்கிறேன். எங்கள் சங்கத்தின் மூத்த அங்கத்தை பங்கம் செய்யும் உங்கள் நோக்கத்தை நிறைவேற விடமாட்டோம்..

கீதா, இது ஆராய்ந்து செய்யப்பட்ட ரெசிப்பி. இதை உங்கள் கணவர் ஏற்கனவே செய்துவிட்டிருந்தால் அவரை எங்கள் வகுப்புக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவும், நன்றி.

அந்தோ பரிதாபம், தங்கமணிகளுக்கு தேவைன்னா இப்படியும் பண்ணுவாங்க, எப்படியும் பண்ணுவாங்க!

பினாத்தல் சுரேஷ் said...

தாமோதர் சந்துரு, இந்த பரீட்சார்த்த யோசனைகளை முயற்சித்துப்பார்க்குமுன் உங்கள் அறிவையும் பயன்படுத்தவேண்டும். தவறான வழிமுறைகள் மட்டுமே சோறில்லாமைக்கு வழிவகுக்கும்!

செந்தழல் ரவி (போலியா? - ப்ளாக்கர் ஐடியில் இல்லையே, எனிவே, வார்த்தைகள் சரியாகவே உள்ளதால் அனுமதித்திருக்கிறேன்), நன்றி.

குண்டுவைத்த அன்பு (?) அனானி சகோதரி, என் இல்லத்து போன் எண் தெரிந்த ஒரே அனானி நீங்கள் தான்.. இதிலேயே க்ளூ விட்டுவிட்டீர்களே! ஆனால் இதுக்கெல்லாம் பயப்பட்டுறுவோமா (அல்லது பயப்பட்டதை வெளிய காமிச்சுப்போமா?)

பினாத்தல் சுரேஷ் said...

கல்ப் தமிழன், நோக்கமே அதுதானே :-)

அனானி, முந்தைய அனானியின் நோக்கம் நிறைவேறாது எனத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறேன்! (பக்கு பக்குன்னுதான் இருக்கு)

ஆமாம் கல்ப் தமிழன் - சோகமேதான் :-(((((

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க சீதா,

//மனுஷன் தன்னாலே சுகமா கணினிக்குள்ள பூந்திட்டு (லீவ் வேற ஜாலியா அனுபவிச்சுகிட்டு),//

இதையெல்லாம் இன்லாண்டு லெட்டர்லே எழுதினீங்களோ?

//நான் இப்போ சமைக்கணுமேன்னு கவலைப்படுவேன். இவுரு சுகமா, 'வாயேன் சப்வே சாண்ட்விச் சாப்பிடலாமேன்னுவாரு.'//

அதுதாங்க ஆம்பள மனசு! உங்களைச் சமைக்கவிடமாட்டாங்க (குறிப்பா கடுப்புல இருக்கும்போது:) டேஸ்ட் அதுக்கேத்த மாதிரிதானே இருக்கும்

//(கு)ரங்குமணிகளுக்கு என்ன தெரியும் தங்கத்தின் அருமை.// இந்த வார்த்தை வன்முறை வெறியாட்டத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறேன்!

சிவா, நன்றி.

ஜெசிலா, ஒப்புதல் வாக்குமூலத்த்துக்கு நன்றி. இதெல்லாம் tried and tested formula ஆச்சே:-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபிநாத்.

ramachandranusha(உஷா) said...

http://nunippul.blogspot.com/2005/11/blog-post_20.html பிள்ளைகளா! இதைப்படித்து வாழ்வில்
உருப்படும் வழியைப் பாருங்கள்

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க உஷா அக்கா,

மறுநாளே அதுக்கு பதிலடியும் கொடுத்திட்டோமில்ல?

இராமநாதன் said...

//சே.. அதைச் சொல்ல வரலைப்பா! ஏ சர்டிபிகேட் மேட்டர் எல்லாம் கிடையாதுன்னுதான் முதல்லியே சொல்லிட்டேனே!//

ஆனானப்பட்ட மணிரத்னமே ஆனாலும் அப்பப்ப நடுவுல "அந்த அரபிக்கடலோரம்" சீக்குவன்ஸ் வப்பாரு..

நீர் என்னடான்னா ட்ரையா கடல வறுத்து உப்புபோடாம கொடுக்குறீரு. இதுல வருங்கால ரங்கமணிகளெல்லாம் எப்படி கவனத்தோட பாடம் கேப்பாங்கன்னு எதிர்ப்பார்க்குறீங்க?

இராமநாதன் said...

//
"நல்ல இம்ப்ரூவ்மெண்ட். முன்னெல்லாம் ப்ரேக்பாஸ்ட் பண்றதுக்கு அவளுக்கு 30 நிமிஷம் ஆகும். இப்பல்லாம் எனக்கு 10 நிமிஷம்தான் ஆகுது"//

இன்னிக்கு கார்த்தால கூட brb இன் 10னு போட்டுருந்தீங்களே.. இதானா மேட்டரு.. உப்புமா சரியா வந்துதா?

பினாத்தல் சுரேஷ் said...

ராம்ஸு,

கேள்வி எல்லாம் நியாயமாத்தான் இருக்கு

யதார்த்த இலக்கியமான இதனோடு வெகுஜன சமரசவாதியான மணிரத்னத்தை ஒப்பிடுவதில் எத்தனை பூனைக்குட்டிகள் வெளியே வந்துள்ளன என எண்ணிக்கொண்டு இருக்கிறேன்!! எண்ணி முடித்தவுடன் பதில் சொல்கிறேன்.

இராமநாதன் said...

பொதுவா தண்ணிபோட்டு ரவா உப்புமா பண்ணினா அது ரவா போட்ட தண்ணி உப்புமாவா ஏன் ஆகுதுன்னு ரொம்ப நாளா சந்தேகம்.

இப்பதான் தெரியுது.. உம்ம ரெசிபியத்தான் பாலோ பண்ணிகிட்டிருந்திருக்கிறேன்னு..

பினாத்தல் சுரேஷ் said...

//இன்னிக்கு கார்த்தால கூட brb இன் 10னு போட்டுருந்தீங்களே.. இதானா மேட்டரு.. //

ராணுவ ரகசியம் எல்லாம் சிம்பிளா போட்டு உடைக்கறயே டாக்டர்!

இலவசக்கொத்தனார் said...

பினாத்தல் ஐயா,

இதில் எனக்கு முழு ஒப்புதல் இல்லை. நம் நண்பன் ஒருவன், பெயர் எல்லாம் எதுக்கு, இந்த டெக்னிக்கை பயன்படுத்தி உப்புமா செய்யப் போக, அங்க நடந்தது என்ன தெரியுமா?

இந்த மாதிரி மெயில் செக் பண்ண, மசாலா மிக்ஸ் பார்க்க அப்படின்னு போகாம ஒழுங்கா கிச்சனுக்குள் இருந்து உப்புமா ஒழுங்காப் பண்ணப் பாருங்க அப்படின்னு கிச்சன் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அது சரியா வரும் வரை நீ செய்வதுதான் உனக்கு டின்னர் என்றும் சொல்லிட்டாங்க. ஒரு வழியா உப்புமா ஒரு அளவுக்கு சரியா பண்ணக் கத்துக்கும் பொழுது மெனுவை தோசையா மாத்திட்டாங்க. இப்படி மெனுதான் மாறுதே தவிர கிச்சன் அரெஸ்டுக்கு முடிவையே காணும்.

ஆனா இவன் செய்யறது எல்லாம் இவனுக்கு மட்டும்தான். இவன் ஆபீஸில் இருந்து வருவதற்குள் அவங்க நல்ல டின்னர் சாப்பிட்டு விட்டு சீரியல் மருமகள்களுக்கு சப்போர்ட் செய்ய ரெடி ஆகிடறாங்க.

இராமநாதன் said...

//யதார்த்த இலக்கியமான //
இந்த லேபிள் கொடுத்தா என்னென்ன மேட்டரெல்லாம் எழுத வேண்டியிருக்கும்னு தெரிஞ்சா இந்த தொடருக்கு இந்த லேபிளைக் கொடுக்குறீரு? சென்சாரெல்லாம் 'துண்டக் காணோம் துணியக் காணோம்"னு ஓடுற அளவுக்கு எழுதணும். தெரியுமில்ல?

இனி வரப்போற தொடரின் அத்தியாயங்களை சிலாகிச்சு கோணல் பக்கங்கள்ல கட்டுரை வராம இருந்தாச் சரி.

இலவசக்கொத்தனார் said...

எதுக்காக சொல்ல வரேன்னா, எல்லா டெக்னிக்குமே பேக்பயர் ஆகும் சாத்தியங்கள் உள்ளது. அந்தந்த நேரத்திற்கு ஏற்ற மாதிரி அட்ஜெஸ்ட் பண்ணிக்கணும் அப்படின்னு ஒரு டிஸ்கி போட்டுக்குங்க. அதான் நல்லது.

பினாத்தல் சுரேஷ் said...

கொத்ஸு.. இங்கேயே கமெண்டுல இந்த டிஸ்கி போட்டிருக்கேனே:

http://penathal.blogspot.com/2007/11/4-wifeology.html#comment-4185510657129432875

மத்தபடி உங்க நண்பருக்கு அனுதாபத்தைத் தவிர என்ன சொல்றதுன்னே தெரியலை.. மெனு தினம் தினம் மாறுமா? கொத்ஸு பரோட்டாவும் உண்டா மெனுவில?

வல்லிசிம்ஹன் said...

"ஆஹா, நீ சொல்லவே வேணாம்.. இதோ போய் செஞ்சுடறேன்"னு முதல்ல ஆரம்பிச்சீங்கன்னா, பிற்காலத்துல வலைப்பூ பாக்க முடியாது, சேலைப்பூ தான் பாக்க //

யப்பா:)) என்ன விவரம், என்ன விவரம்!!!!!
எங்க வீட்டில வெந்நீர் கூட வைக்கத் தெரியாத (ஆ)சாமி இருக்குதுப்பா.

cheena (சீனா) said...

mmmmmmmm உஅதவி யாருக்குச் செய்யுறோம் - துணைவிக்குத் தானே

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க வல்லி அம்மா,

வெந்நீர் கூட வைக்கத் தெரியாதா? அவரைக்கூட்டிட்டு வாங்க இங்கே.. கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு :-)

சீனா,

அன்புக்கு அடிபணியறதுக்கு நான் ரெடி.. அடக்குமுறைக்கு??

பாலராஜன்கீதா said...

//வல்லிசிம்ஹன் said...
எங்க வீட்டில வெந்நீர் கூட வைக்கத் தெரியாத (ஆ)சாமி இருக்குதுப்பா.//

வெந்நீர் என்றால் என்னங்க ? அதை எங்கே எப்படி வைக்கவேண்டும் என்று சொல்லுங்கள்.
;-)

Anonymous said...

//ஆமாம். இப்படி சாதாரணமா, ஸாரி, ப்ளீஸ் எல்லாத்தோடயும் ஆரம்பிக்கற வேலை வாங்கற டெக்னிக்தான் பிற்காலத்துல "வெட்டியாத்தானே பொட்டி தட்டிகிட்டு இருக்கே, அந்தப் புடவைக்கெல்லாம் ரிவைவ் போட்டாதான் என்னவாம்?" என்று பரிணாம வளர்ச்சி அடையுது.
//

இங்கே தான் மேட்டரே இருக்கு.


//ஸாரிங்க, என் ஹேண்ட்பேக்கை ஹோட்டல்ரூமிலேயே விட்டுட்டு வந்துட்டேன்.. கொஞ்சம் ப்ளீஸ் போயி எடுத்துகிட்டு வந்துடறீங்களா?"//

"அவ்ளோதான் விஷயம். வா, உன் கூட நான் வர்றேன் கம்பேனிக்கு"ன்னு சொன்னா வேலைக்காவாதா?

இளா

Anonymous said...

You have an excellent sense of humor. I loved it.

Rumya

சதங்கா (Sathanga) said...

// கிளறுவதற்கான கரண்டியைத் தேடவும்.//

ஹா ஹா ... நாந்தான் இப்படினு நெனச்சிட்டு இருந்தேன். எல்லோருமா ... பிறவிப் பயன் அடைகிறேன் சுரேஷ், இந்த வரிகளில்.

அரை பிளேடு said...

எல்லாம் சரிதான். நம்மை யாரும் சமையல் செய்ய சொல்லி சொல்லப் போவதில்லை. :))

பாத்திரம் கழுவசொன்னால் அல்லது துணி துவைக்க சொன்னால் தப்பிப்பது எப்படி என்று சொல்லித் தரவும். :))

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க ப்ரொபஸர்! வெந்நீர் எங்க வைக்கணும்னா கேக்கறீங்க? கேக்க வேண்டிய இடத்துல கேட்டா எங்க ஊத்தணும்னு கேப்பாங்க தெரியுமா?

இளா, கம்பேனிக்குன்னு ஆரம்பிக்கறது நல்ல ஐடியாதான்.. ஆனா பைனலா, "தோ, இதோ செஞ்சுடறேன்"க்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

நன்றி ரம்யா.

சதங்கா, கரண்டி தேடுவது சிலருக்கு தானாகவே அமைந்துவிடும் நற்பண்பு, சிலர் கஷ்டப்ப்ட்டு வளர்த்துக்கொள்வது. உங்களுக்கு தானாகவே இருக்கிறதா? நன்று.

அரை பிளேடு, நம்மை சமையல் செய்ய்ச் சொல்லி சொல்லப்போவதில்லைன்னா அதுக்கு இப்படி ஒரு உப்புமா பண்ணிக் காமிக்கணும்.. இப்ப நீங்களே புரிஞ்சிக்காங்க, துணி தோய்க்கறதுலே இருந்து எப்படித் தப்பிக்கறது, பாத்திரம் தேய்க்கிறதிலே இருந்து எப்படித் தப்பிக்கிறதுன்னு???

புதுகைதென்றல் said...

இதனால் சகலமானவர்களுக்கும் அரிய தருவது மிக முக்யமான் விஷயம்.

பார்க்க புதுகை தென்றல் பிளாக்

கோவைப்பழம் said...

அண்ணா! ஆகா! வாழ்க்கைல தமிழ்ல உள்ள Blogsலாம் பாக்கலாம்னு 'பெனாத்தல்'ல தடுக்கி விழுந்தேன்! இந்த வாரந்தான் வீட்டுல்லேந்து ஃபோன் பண்ணி 'என்னடா.. பொண்ணு பாக்க ஆரம்பிக்கவா?' ன்னு கேட்டாங்க! ('இப்போ வேண்டாம்'னேன்!) முதல் article-ஏ Wifeologyயா? எனக்குன்னே ஆரம்பிச்ச ப்ரைமர் மாதிரியே இருக்கே!

தஞ்சாவூரான் said...

என்னங்க, தங்கமணி இதப் படிச்சிட்டாங்களா இல்லையா?

தவிட்டு ஒத்தடம் பத்தி நீங்க கொஞ்சம் வெளாவாரியா சொல்லனும்னு எல்லாரும் வெயிட் பண்றாங்க :)

மங்களூர் சிவா said...

//"என்ன இருந்தாலும் நீ செய்யறது போல வரலை, இல்லையா? எந்த வேலையா இருந்தாலும் உனக்கு இருக்க இன்வால்வ்மெண்ட், கமிட்மெண்ட் எல்லாம் எனக்கு வர்றதில்லை. சும்மாவா சொன்னாங்க இதனை இதனான் இவள்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவள்கண் விடல்- னு? //

பின்னிட்டிங்க

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க புதுகை தென்றல் -- சைக்கிள் கேப்புல போஸ்டர் ஒட்டிட்டீங்களே!

கோவைப்பழம், முதல்லேயே இங்கேதான் தடுக்கி விழுந்தீங்களா? வாழ்க்கைக்கு எவ்வளவு உதவியா இருக்கு பாருங்க வலைப்பதிவுகள்! :-)

தஞ்சாவூரான், தவிட்டு ஒத்தடம் பத்தி கேக்கறதுல தெரிஞ்சிக்கிற ஆர்வம் தெரியலையே.. வேற ஒரு ஆர்வம்தான் தெரியுது :-)

வாங்க மங்களூர் சிவா.. ஏன் லேட்டு?

மங்களூர் சிவா said...

//
வாங்க மங்களூர் சிவா.. ஏன் லேட்டு?
//
சென்னைக்கு போயிருந்தேன் அதுதான்.
:-)))))

கோவைப்பழம் said...

முதல்ல இட்லிவடை(லை)ல விழுந்து எழுந்து ரெண்டாவதா உங்க பதிவுக்கு வந்தேன் (அதிர்ஷ்டவசமா)! Wifeology பாடம் கண்டிப்பா உதவியா தான் இருக்கு! சிலதெல்லாம் முன்னமே தெரிஞ்சுருந்தாலும், இப்படி கோர்வையா படிக்கறது நல்லாவே இருக்கு! உப்புமா உதாரணத்தை படிச்சுட்டு வாய் விட்டு சிரிச்சுட்டேன். நிஜம்தான், எனக்கும் தெரியும்னு சுமாரா உப்புமா செஞ்சா கூட, சீக்கிரமா கிச்சன் கிங் ஆகவேண்டியது தான்! உப்புமாக்கு மாவு எங்கடி இருக்குன்னு கேக்கறதே சிறந்தது! என் ஃப்ரன்டோட ஹஸ்பன்ட் இப்போ பகுதிநேர ட்ரைவர் வேலை பார்க்கிரார் (பைக்-க்கு), வேலை முடிஞ்சு டைடல்-லேந்து நுங்கம்பாக்கம் வந்து, Drag and Drop டு மைலப்பூர்! அதுவும் பீக் அவர்-ல! நெம்ப கஷ்டம்!

புதுகைதென்றல் said...

என்ன செய்யரது. டியுஷன் சென்டர் வாசல்ல தானே விளம்பர நோட்டிஸ் ஒட்ட முடியும். எல்லாம் ஒரு விளம்பர யுக்தி தான். அடுத்த வாரம் பாடங்கள் ஆரம்பம்.

சாமான்யன் Siva said...

<==
எங்கள் சங்கத்தின் மூத்த அங்கத்தை பங்கம் செய்யும் உங்கள் நோக்கத்தை நிறைவேற
வஞ்சப்புகழ்ச்சி இல்லை அது, நெஞ்சப்புகழ்ச்சி :-) ==>
ஒரே எதுகை மோனையா இருக்கு.

Sridhar Venkat said...

//அந்தோ பரிதாபம், தங்கமணிகளுக்கு தேவைன்னா இப்படியும் பண்ணுவாங்க, எப்படியும் பண்ணுவாங்க!
//

//நம்மை சமையல் செய்ய்ச் சொல்லி சொல்லப்போவதில்லைன்னா அதுக்கு இப்படி ஒரு உப்புமா பண்ணிக் காமிக்கணும்.. இப்ப நீங்களே புரிஞ்சிக்காங்க, துணி தோய்க்கறதுலே இருந்து எப்படித் தப்பிக்கறது, பாத்திரம் தேய்க்கிறதிலே இருந்து எப்படித் தப்பிக்கிறதுன்னு???//

Survival of the Fittest-னு சொல்லுவாங்களே... அந்த மாதிரியா? :-))

//'என்னடா.. பொண்ணு பாக்க ஆரம்பிக்கவா?' ன்னு கேட்டாங்க! ('இப்போ வேண்டாம்'னேன்!)//

நோட் த பாயிண்ட் 'இப்ப வேண்டாம்'. அவர் இன்னும் முழு விழிப்பு இல்லாமல் அரை தூக்கத்தில இருக்கிற மாதிரி இருக்கே. முழுசா முழிச்சுக்குங்க சாமி! வீட்டு பாடங்கள் இன்னும் அதிகபடுத்தி இம்போஸிஷன் மாதிரி ஏதாவது செய்ய சொல்லுங்க. :-)

யோசிப்பவர் said...

//அதனால, இந்த இரண்டு எக்ஸ்ட்ரீமுக்கும் நடுவுல ஏதோ ஒரு இடத்துல இருக்கு நமக்கான தீர்வு!//

அந்த ஏதோ ஒரு இடம், எந்த இடம் அப்படின்னு தெளிவா சொல்லி கொடுத்தீங்கன்னா, பிற்காலத்துல நான் யூஸ் பண்ணிக்குவேன்!!!;-))

 

blogger templates | Make Money Online