Dec 26, 2007

தரைவாழ் விண்மீன்கள் - 3

சாதாரணப்படம் இல்லை என்பதை முதல் காட்சியிலேயே (இந்தப்பதிவில் சொல்லியிருக்கிறேன்) நிறுவிவிடுகிறார் ஆமிர்.
 
பார்வை - Perspective -  என்ற கவிதையின் அர்த்தத்தை தன் மனம் போன போக்கிலே தெரிவிக்கும் இஷானுக்கு, "நீ சொன்னது சரிதான், ஆனால் நம் ஆசிரியருக்கு அவர் சொன்ன வார்த்தைகளில் சொன்னால் மட்டும்தான் சரி" என்று ஆறுதல் சொல்லும், உயரமான இடத்திலிருந்து எட்டிப்பார்க்கும் இஷானைக்கண்டு பயந்து அவசர அவசரமாக ஓடிக் காப்பாற்றச்செல்லும், இஷானின் படத்துக்குப் பரிசு கிடைத்த உடன், எல்லோரையும் விட அதிகமாக, உணர்ச்சி வெறியோடு கைதட்டும் -- ராஜன் தாமோதரன் என்ற சிறுவனின் பாத்திரப்படைப்பு,
 
எதோ கூப்பிட்டுவிட்டார்களே என்று உள்ளே நுழைந்து, தன்னைப்பற்றிய கிண்டலைப்பார்த்து கடுப்பேறி, மற்றவனையும் விடவில்லை என சமாதானமாகி, கார்ட்டூனில் வலதுபக்கம் மாறி இருக்கும் மருவைத் திருத்தி வரையும் இந்தி ஆசிரியர் கதாபாத்திரம்,
 
டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்களைப் பட்டியல் போடும் காட்சியில், மூன்றுமுறை இஷானைப்பற்றித்தான் சொல்லப்போகிறார் ராம்ஷங்கர் என இஷானையும், நம்மையும் எதிர்பார்க்கவைத்து, வேறு ஆட்களை (ஐன்ஸ்டீன், டாவின்ஸி கடைசியாக ராம்ஷங்கர்) சொன்ன சாமர்த்தியமான வசனங்கள்,
 
இஷானின் தலையைச்சுற்றிப் பறக்கும் ரயில்வண்டி, அதைத் துரத்தும் ட்ராகன் என்று பாடல்காட்சிகளில் மட்டுமின்றி, ப்ளூட்டோவை "இன் டு" செய்யும் பூமி, பறக்கும் எழுத்துக்கள், வண்ணங்கள் ஓடி உருப்பெறும் ஓவியம் என கதைக்குத் தேவையான அளவுக்கு இயல்பாகவும் நேர்த்தியாகவும் படம் நெடுக இடம்பெற்றிருக்கும் வரைகலை,
 
"டிஸ்லெக்சியா என்றால் என்ன என்பதை என் மனைவி இணையத்தில் பார்க்கிறாள்" என்று அமர்த்தலாகச் சொல்லும் தந்தையிடம், "நல்லது, Care எடுப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களே, அதற்கு" என்று சாலமன் தீவுகளின் மரம்வெட்டும் முறையை உதாரணமாகக் கூறி உணரவைக்கும் காட்சி அமைப்பு,
 
இஷான் அவஸ்தியின் உலகம் தனியானது, மற்றவர்போல அடித்துப் பிடித்து அவசரமாக அலுவலகமோ பள்ளியோ செல்ல விரைவதில்லை என்பதை மென்மையாக மாற்றித் தெரிவிக்கும் பின்னணி இசை,
 
டாகுமெண்டரி போல் எடுக்கப்பட்ட "கோ ந ஜாயியே - தாரே ஜமீன் பர்" (தொலைத்துவிடாதீர்கள் தரைவாழ் நட்சத்திரங்களை) என்ற பாடல் - இசை - ஆக்கம்,
 
"எண்ணமெல்லாம் வண்ணமம்மா!" முதல் பாடல் படமாக்கிய விதம்!
 
ஆமீர்கானுக்கு முதல் படமாமே இயக்குநராக? டுமீல் விடுகிறார். இல்லை கமல்ஹாசன் போல பெயரைப் போட்டுக்கொண்ட முதல் படமாக இருக்கலாம்!

15 பின்னூட்டங்கள்:

குசும்பன் said...

இத இத இததான் எதிர்பார்த்தேன்! சும்மா "நச்"ன்னு இருக்கு.

குசும்பன் said...

///முதல் பாடல் படமாக்கிய விதம்! ஆமீர்கானுக்கு முதல் படமாமே இயக்குநராக? டுமீல் விடுகிறார்.///

இயக்குநராக வேறு ஒருவர் இருந்தார் அவரை நீக்கிவிட்டு இவர் இயக்குநர் பொருப்பையும் கவனித்துக்கொண்டார். அந்த பழய இயக்குநர் கிரியேட்டிவ் ஹெட் என்று பெயரில் வருபவர், பெயர் நினைவில் இல்லை.

ஜெஸிலா said...

என்ன ஆச்சு அவ்வளவுதானா? தொடரும் போடலையா? இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கே!?

கோபிநாத் said...

என்ன தல டக்குன்னு முடிச்சிட்டிங்க...;)

பினாத்தல் சுரேஷ் said...

vவாங்க குசும்பன்.. கொஞ்சம் லேட்டானாலும் பிக் அப் பண்ணிடுவோமில்ல?

ஆமாம், நானும் கேள்விப்பட்டேன். அவ்வை சண்முகியை ஹிந்திலே எடுத்தப்ப, கமலுக்கும் இதேபோல நேர்ந்து, சாச்சி 420தான் கமல் இயக்குநர்னு பேர் போட்டுகிட்ட முதல் படம். அதேபோல இந்தாளுக்கும் ஆயிருக்கேன்னு ஆச்சர்யப்பட்டேன்.

ஜெஸிலா, இன்னும் ஒண்ணாவது வரும். சொல்லவேண்டியது இருக்கே :-)

பத்மா அர்விந்த் said...

சுரேஷ்
அந்தக் குழந்தையின் முக பாவங்கள் அற்புதம். பாடல் படமாக்கியவிதமும் பாடலின் கருத்துக்களும் எனக்கு பிடித்திருந்தது. அமெரிக்க பள்ளிகளில் டிச்லெக்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாலை வேளையில் தனியாக சிறப்பு வகுப்பு எடுப்பதோடு பெற்றோர்களுக்கும் அது குறித்தும் குழந்தையின் படிப்பில் எப்படி ஈடுபபடுவது என்பது குறித்தும் சொல்கிறாகள். ஒரு பில் காஸ்பி தொலைகாட்சியில் கூட இது குறித்து விரிவாக வரும். ஏனென்றால் பில் காச்பியின் மகன் இதனால் பாதிக்கப்பட்டவர். ஒரு பெற்றோராக ஆரம்பத்தில் தன் மகனிடம் தான் நடந்து கொண்ட முறையும், பள்ளி கவுன்சிலர்கள் சொன்னபின் ஏற்பட்ட மாற்றத்தையும் சொல்லி இருப்பார். இத்தனைக்கும் பில் காஸ்பி படிப்பு துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இதை பற்றி பரவலாக விழிப்புணர்வு இல்லாமல், peer pressure ஆல் பிள்ளைகளை படுத்தும் பெற்றோர்கள் உணர வேண்டும்.

சுல்தான் said...

//"டிஸ்லெக்சியா என்றால் என்ன என்பதை என் மனைவி இணையத்தில் பார்க்கிறாள்" என்று அமர்த்தலாகச் சொல்லும் தந்தையிடம், "நல்லது, Care எடுப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களே, அதற்கு" என்று சாலமன் தீவுகளின் மரம்வெட்டும் முறையை உதாரணமாகக் கூறி உணரவைக்கும் காட்சி அமைப்பு//

அந்த பகுதிதான் இந்தப் படத்தின் மூலம் ஆமிர்கான் சொல்ல வந்த மொத்த கருத்தாக நான் நினைக்கிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அந்த பழய இயக்குநர் கிரியேட்டிவ் ஹெட் என்று பெயரில் வருபவர், பெயர் நினைவில் இல்லை//

Amol Gupte!

பெனாத்தலாரே! பாத்திரப் படைப்புகளை நச்-னு சொல்லிட்டீங்க! அப்படியே பாடல்களின் ஆழத்தையும் தொட்டுச் செல்லுங்க! ஒரு விமர்சனம் முழுமையாகி விடும்!

Seetha said...

penathals reading all of you guys reviews i feel aamirkhan has achieved what professionals in this field cannt achieve for yrs.

no fonts at teh moment. so apologies again.

Anu said...

I am yet to see the movie, but thanks to you for the excellent review, it has kindled the interest to go and see the movie.
I am reminded of my friend's 4 year old son's attitude towards life. Naanga avan endha game velayadinalum, "yaaru da winner' appadinnu ketta, "There was no winner Amma. We just played" appadinnu solran. May be that is what they are taught to think at the day care center in the US. Avan appadi sollumbodhu, yaaru adult, yaaru child nnu solradhu?

பினாத்தல் சுரேஷ் said...

கோபிநாத்,

முடிச்சாங்களா? யாரு? எப்ப?

பத்மா,

படிப்புக்கும் அறிவுக்கும் குழந்தைகளுடன் நடத்தைக்கும் சம்மந்தமே கிடையாது. பில் காஸ்பி யாரென்று தெரியாது, ஆனால் அவரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது என்றுதான் தெரிகிறது,

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க சுல்தான். ஆமாம். ரொம்ப பவர்புல்லான காட்சி அது.

ரவி, அமோல் குப்தாவா? கானாபிரபாவின் வலைப்பதிவில் மேக்கிங் ஆப் தாரே ஜமீன்பர் பார்த்தேன். அதில் அமோலின் ஸ்கிரிப்டை வானளாவப் புகழ்ந்தார் ஆமீர்.

பினாத்தல் சுரேஷ் said...

சீதா, வாஸ்தவம். சினிமா என்ற மீடியத்தின் முழு சக்தியை எத்தனையோ படங்கள் துஷ்பிரயோகம் செய்தாலும், இப்படியும் சில படங்கள் ஆக்கபூர்வமாய் உபயோகிக்கின்றன.

அனு,

//"There was no winner Amma. We just played"//

இந்தப்பக்குவம் வந்துவிட்டால் வேறென்ன வேண்டும்?

பத்மா அர்விந்த் said...

பில் காச்பி ஒரு நகைச்சுவை கலைஞர். இந்திய தொலை காட்ச்சியில் முன்பெல்லாம் அவருடைய சில படைப்புக்கள் வரும். படிப்புக்கும் குழந்தை வளர்ப்புகும் தொடர்பில்லை என்றாலும், பள்ளிக்குழந்தைகளின் பாடதிட்டங்களை வகுக்கவும், குழந்தைகளின் படிப்பை பற்றியும் மனநலம் பற்றியுமான துறையில் படித்தவருக்கு தெரிந்திருக வேண்டும் என்பது ஒரு எதிர்பார்ப்பே. அவருடைய பில்காஸ்பி ஷோ கிடைத்தால் பாருங்கள், குழந்தைகளின் பதின்ம வயது கோளாரு, பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளின் எதிர்பார்ப்பு, பெற்றோர் குழந்தைகள் உரையாடல் ஆகிய பலவற்றையும் மிக யதார்த்தமாக நகச்சுவையுடன் எடுத்திருப்பார்.

Boston Bala said...

இந்தப் பதிவில் சுல்தானை வழிமொழிந்து விடுகிறேன் :)

 

blogger templates | Make Money Online