இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது பதிவெழுதி. யாரும் என்னை மிஸ் செய்ததாகத் தெரியவில்லை. எனவே ஒருவேளை விலக நேர்ந்தாலும் "மனக்கனத்துடன் விடை பெறுகிறேன்" "போகாதே போகாதே என் பதிவா" போன்ற பதிவுகள் தேவைப்படாது என்பது திண்ணம் ஆகிவிட்டது :-)
ஊருக்குப் போனதில் பெரும்பாலும் இணையத்தின் தொடர்பில் இருந்து அறுபட்டேன். அரை மணிநேரம், கால்மணிநேரம் என்று பார்த்ததில் மின்னஞ்சல் தவிர வேறெதுவும் கவனிக்க முடியவில்லை. ஊரில் இருந்து திரும்பி வந்தும் தட்டச்ச முடியாத நிலையில் படிக்க மட்டுமே முடிந்தது.. ஏன் தட்டச்ச முடியாத சூழல்? கடைசியாகச் சொல்கிறேன்.
படித்த / பார்த்த / கேள்விப்பட்ட விஷயங்களில் என் பரிதாபத்துக்கு ஆளானவர்கள் ரஜினிகாந்த், கலைஞர் டிவி, ஞாநி, ஆற்காடு வீராசாமி!
ரஜினிகாந்த் தெளிவாகப் பேசினாலே குழப்புவார்கள், குழப்பமாகப் பேசினால்? குசேலன் அடிவாங்க வேண்டிய படம்தான் என்றாலும் மன்னிப்பு வருத்தம் என்பதைப் போட்டு வறுத்து எடுத்ததில் எனக்கு உடன்பாடில்லை. என்னவோ ரஜினிகாந்த் மட்டுமே கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் பாலம் போலவும் அவர் தப்பாக ஒருவார்த்தை (அது கூட சொல்லவில்லை, ஊடகங்கள் பிரம்மாண்டப்படுத்திவிட்டன) சொன்னால் அடுத்த செகண்ட் பிரச்சினை வெடிக்கும் போலவும் என்னா பில்ட் அப்! இதில் செய்தி சொன்ன அடுத்த செகண்ட் க்ரூசிபை பண்ணக்காத்திருக்கும் சக நடிகர்கள், ஊடகங்கள், பதிவர்கள்!
கலைஞர் டிவி விநாயகர் சதுர்த்தியை விடுமுறை நாள் என்று சொன்னது தவறு என்று சொன்ன அனைவரும், விநாயகர் சதுர்த்தி என்று சொல்லி இருந்தாலும் எகிறிக் குதித்திருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஞாநியின் பூணூல் மீண்டும் ஆராய்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. கலைஞர் அரசைத் திட்டும்போது மட்டுமே இந்த ஆராய்ச்சி செயல்படுவது ஆச்சரியம். இதில் அங்கங்கே கேட்கும் இன்னொரு குரல்: முற்போக்குப் பாப்பானை நம்பாதே! சரிதான்.
கரெண்ட் கட்டைக் கண்டுபிடித்தது ஆற்காடு வீராசாமி என்று தினமணி கார்ட்டூன் போட்டிருக்கிறதாம். என்னவோ இதுக்கு முன்னே யாரும் கரெண்ட் கட்டே பார்க்காதது போல. அநியாயம்.
இப்போது, கழுத்தெலும்புக்கதை.
சென்னை (மாநகர எல்லைக்குள் மட்டும்) போக்குவரத்து பெரும் அளவில் சீராகிவிட்டது போலத்தான் தோன்றியது. ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட முக்கியத்தடங்களில் 6 வழிப்பாதைகள் நீளத்தை அதிகப்படுத்தினாலும் சீரான ஓட்டத்துக்கு வழி வகுக்கிறது. கத்திப்பாராவின் முடிக்கப்பட்ட பகுதியை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தினேன். இந்த அளவுக்கு இந்தப்பாலத்தால் நன்மை ஏற்படும் என நினனக்கவில்லை. அருமையான ஓட்டம். நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் 6 ஆண்டுகளுக்கு முன்பே கட்டிவிட்டிருந்த தரையடிப்பாலம் இப்போதுதான் உபயோகத்துக்கு வரத் தொடங்கி இருக்கிறது. பல இடங்களில் குறைகள் இருக்கலாம் - ஆனால் போக்குவரத்துத் துறை நிவாரண முயற்சிகளை எடுத்து வருவதே பாராட்டத்தக்க விஷயம்.
ஆனால், மக்கள் இன்னும் போக்குவரத்து விதிகளை மதிக்கத் தயாராக இல்லை என்பதை என் விடுப்பு முடியும் தருவாயில் கண்டேன்.
கோயம்பேடு SAF விளையாட்டு வளாகத்துக்கு எதிரே ஒரு சிக்னல். நான் வரும்போது ஆரஞ்சு அணைந்து சிகப்பாகி விட்டது. சிகப்பு விழுந்தால் நிறுத்தவேண்டும் எனக் கற்ற பாடத்தில் நிறுத்தினேன். பின்னால் ஒரு டெம்போ, அட இவன் நிறுத்தவா போகிறான் என்ற எண்ணத்தில் முழுவேகத்தில் வந்து என் வண்டியின் பின்னால் இடிக்க, வண்டியை விட்டுப் பறந்தேன், கிழே விழுமுன் மூன்று சுற்றுக்கள் சுற்றியதாக சிக்னலில் இருந்த போக்குவரத்துக் காவலர் பின்னால் அறிவித்தார். எங்கே அடிபட்டது என்று தெரியும் முன்னால் நெற்றிப்பொட்டிலிருந்து ரத்தம் கசிவதை உணர்ந்தேன். ஹெல்மெட்டோடு வண்டி ஓட்டுவது பழக்கமின்மையால் திட்டிக்கொண்டே (நல்லவேளையாக) உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன். அந்த ஹெல்மட்டின் தகரம் உடைந்து, அது கீறியதால்தான் நெற்றிப்பொட்டில் ரத்தம் என்பது புரிந்ததும் திகில்!
கையைக்காலை ஆட்ட முடியவில்லை. இடுப்பெலும்பில் எதோ வலி. உடலெங்கும் பட்சபாதம் பார்க்காமல் சிராய்ப்புகள். என்ன செய்வது என்று புரியாமல் முதலில் நாராயணையும் ஐகாரஸ் பிரகாஷையும் அழைத்தேன் (இவர்களைச் சந்திக்கத்தான் சென்றுகொண்டிருந்தேன்). பிறகு என் உறவினரையும் அழைத்தேன்.
போலீஸ்காரர் தெளிவாக என் மீது தவறில்லை, டெம்போ மீதுதான் தவறு என உணர்ந்து டெம்போக்காரரைப் பிடித்து வைத்துவிட்டார். டெம்போக்காரர் கண்ணில் என்னைவிட அதிகம் வலியும் பயமும். இரவு வரை என்னுடனே சுற்றியதில் அவர் பரிதாபக்கதை தெரிந்தது. கேஸ் எதுவும் வேண்டாம் என்று விட்டுவிட்டோம்.
நாராயணும் பிரகாஷும் உடனே வந்து ஆறுதல் அளித்தார்கள். காலில் ஒன்றும் ஆகவில்லை , நடக்க முடிகிறது ஆனால் இடுப்பில் உட்கார்ந்து எழும்போது மட்டும் வலி எனத் தெரிந்தது.இடது உள்ளங்கை வீங்கி விட்டது, வலது கையைச் சுற்ற முடியவில்லை.
மருத்துவமனையில் உடனடியாக எடுக்கப்பட்ட எக்ஸ் ரேக்கள் வலது கழுத்தெலும்பு உடைந்திருப்பதையும், இடது கை விரல் எலும்புகள் சில பிசகி இருப்பதையும் காட்டின. இடுப்பில் எதுவும் இல்லை.
பெரிய அடி என்று சொல்லமுடியாவிடினும், இரண்டு கைகளுமே டிஸ் ஏபிள் ஆகிவிட்டிருக்கிறது. தலைக்கு வந்தது நிச்சயமாக தலைப்பாகையோடு போனது! இனி அந்த ஹெல்மட்டையும் வண்டியையும் உபயோகிக்க முடியாது.
விபத்து நடந்து 15 நாட்கள் ஆன நிலையில் கழுத்தெலும்புக்கு இன்னும் 10 நாள் ஆகும் என்று சொல்கிறார்கள், கை கூடிவிட்டது, இடுப்பு சரியாகிவிட்டது.
நீதி: எவ்வளவு கஷ்டமாய் இருந்தாலும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் போடுங்கள்.
Sep 13, 2008
ஆறிப்போன விஷயங்களும் ஆறாத கழுத்தெலும்பும் (13 Sep 08)
Subscribe to:
Post Comments (Atom)
75 பின்னூட்டங்கள்:
suresh,
Now how is your health?. last year also you took a break in blogging. july-august 2007. So i think you take a interim break.
My wishes for speedy recovary
விரைவில் குணமாக வாழ்த்துக்கள் சுரேஷ்.
சுரேஷ்,
உங்களுக்கு நேர்ந்த விபத்துக்காக வருந்துகிறேன். நீங்கள் குறிப்பிட்ட சிக்னலில் பெரும்பாலும் யாரும் வண்டிகளை நிறுத்துவது கிடையாது, எப்பொழுதாவது போலீஸ்காரர் இருக்கும்பொழுது தவிர. சென்னை போக்குவரத்து விதிகளை, நாம் நேர்மையாக பின்பற்ற நினைத்தாலும், சில சமயங்களில் முடிவதில்லை. ஆளில்லாத சிக்னலில், சிகப்பு எரியும்பொழுது, ரொம்ப யோக்கியமாக வண்டியை நிறுத்தினால், பின்னால் வரும் வண்டிகளின் வசைகள் தாங்க முடியவில்லை. அதற்காகவே சில சமயம் மீற வேண்டியதாகிறது. மக்களிடம், போக்குவரத்து விதிகள் என்பது போலீஸார் முன்னிலையில் மட்டுமே பின்பற்ற வேண்டியது என்ற எண்ணமே பரவியிருப்பது வருந்ததக்கது!!:(
விரைவில் குணமாக வாழ்த்துக்கள் சுரேஷ்.
விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்!
”முதலில் நாராயணையும் ஐகாரஸ் பிரகாஷையும் அழைத்தேன் (இவர்களைச் சந்திக்கத்தான் சென்றுகொண்டிருந்தேன்).”
இட்லிவடை க்ரூப்பு ஸ்பெஷல் மீட்டிங்?
ஐயோ முருகா..
பினாத்தல் ஸார்.. ஏதோ டூர் அடிக்கப் போயிருக்கீங்கன்னு நினைச்சேன்..
நல்லபடியா அதிகம் காயமில்லாம தப்பிச்சவரைக்கும் நல்லது..
உடம்பு குணமாயிரும்.. அதுவரைக்கும் அலுங்காம, குலுங்காம பெட்ல இரெஸ்ட் எடுங்க..
அப்புறமா வந்து பதிவெல்லாம் படிச்சுக்கலாம்.. எழுதிக்கலாம்..
சுரேஷ், ரொம்ப வருத்தமாக உள்ளது. :-(
விதியாகப்பட்டது வலியது. அதை யாரும் வெல்ல முடியாதுன்னு பழையபடி நிரூபணமாகி இருக்கே......
விபத்துன்னு ஏற்பட்டு உடம்பு நல்லா ஆனாலும் பழைய நிலைக்குத் திரும்ப வருசக்கணக்காகுதுன்னு சொல்ல எனக்கும் சான்ஸ் கிடைச்சதே.
உடம்பைப் பார்த்துக்குங்க. கழுத்துவலி இருப்பதால் 'மாட்டேன், வேணாம்'ன்னு சொல்லவும் தலையை ஆட்டாமல் இருப்பது நல்லது. குறிப்பாக தங்கமணியிடம்.
:((
என்ன சொல்றதுன்னே தெரியல.. விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.
ஹெல்மெட் உபயோகித்தலை அரசு இன்னமும் சற்று அதிகமாய் கட்டாயப்படுத்தினால் நல்லது என்று தோன்றுகிறது.
//இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது பதிவெழுதி. யாரும் என்னை மிஸ் செய்ததாகத் தெரியவில்லை. எனவே ஒருவேளை விலக நேர்ந்தாலும் "மனக்கனத்துடன் விடை பெறுகிறேன்" "போகாதே போகாதே என் பதிவா" போன்ற பதிவுகள் தேவைப்படாது என்பது திண்ணம் ஆகிவிட்டது :-) //
அட ஆமாமுல்ல... :))
யாரும் தேடலையேன்னு சொல்லிக்காம போயிடாதீங்க. விலகறதுக்கு முன்னாடி கண்டிப்பா பதிவு போடணும். அப்பத்தான் நாங்க வருந்தி, வருந்தி அழைப்போம் :). அப்புறமா நீங்க பாசப்படையை துடைக்க, உதற, காயவைக்க மனம் வரமாட்டேங்குது. அப்படின்னு அடுத்த பதிவு போட்டு ஜாலியா எண்ட்டர் ஆகிக்கலாம்.
சென்னையில் நிறைய இடங்களில் இந்த பிரச்னை உண்டு,சில signal களில் யாருமே சிவப்பு எரிந்தால் கூட நிற்க மாட்டர்கள்.அதுவும் உங்களுக்கு விபத்து ஏற்பட்ட அந்த சிக்னல் இடத்தில் இந்த பிரச்னை எப்பவுமே உண்டு, நாம் நிற்க வேண்டுமா ,நிற்க கூடாதா என்பதே தெரியாது.ஒரு முறை திருமங்கலத்தில் நான் இப்படி நிற்க பின்னால் வந்த டெம்போ நிற்க முடியாமல் brake அடித்து ,வலது புறம் திரும்பி சமாளித்தான் ,ஆனால் போலீஸ் காரன் என்னை திட்டினினான் "நான் உன்னை நிற்க சொன்னேனா? என்று ,எப்படியிருக்கிறது?
//படித்த / பார்த்த / கேள்விப்பட்ட விஷயங்களில் என் பரிதாபத்துக்கு ஆளானவர்கள் ரஜினிகாந்த், கலைஞர் டிவி, ஞாநி, ஆற்காடு வீராசாமி!//
:)))
//இதில் அங்கங்கே கேட்கும் இன்னொரு குரல்: முற்போக்குப் பாப்பானை நம்பாதே! //
ஹா..ஹா...ஹா...
சத்தியமா இந்த வரியை படிக்கறப்ப சிரிப்ப அடக்க முடியல :)
இப்போது உடல் நிலை எப்படியிருக்கிறது?
சென்னையில் வண்டி ஓட்டுபவர்கள் எல்லோரும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுத்தான் வண்டி ஒட்டுகிறார்கள்.
ஒருவேளை பதிவின் முற்பாதிக்கும் பிற்பாதிக்கும் ஏதும் சம்மந்தம் இருக்குமோ!!!
சீக்கிரம் குணம் அடைய பிராத்திக்கிறேன்.
T ஜங்ஷனில் வண்டியை நிறுத்தி இருபக்கமும் பார்த்தால், என்னவோ அற்பப் புழுவை பார்ப்பது போல பார்த்து "ஊருக்கு புதுசா? L போர்டா?"ன்னு கேட்கிறார்கள். என்னத்தைச் சொல்ல?
இன்னும் ஊரில்தான் இருக்கிறீர்களா? உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
முக்கியமாக நல்ல டாக்டராக பாருங்கள். சென்னை மருத்துவமனைகளைப பற்றிப் படித்ததில் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
அடடா, விரைவில் முழு உடல்நலமும் பெற விழைகிறேன்.
கழுத்தெலும்பு இடுப்பெலும்பு சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் குணமடைந்த பிறகு ஆர்த்தோ மருத்துவர் சொல்லித் தரும் எளிய உடற்பயிற்சிகளை விடாமல் செய்ய மறக்காதீர்கள்.
எழுதத் தெரிந்தவனை எந்த உடல்நலக் குறைவும் சோர்வடையச் செய்து விடுவதில்லை.
முழுவீச்சுடன் மீள்வீர்கள்.
நாராயணுக்கும் ப்ரகாஷுக்கும் பாராட்டுக்கள்.
Suresh,
Sankar mentioned about the accident. Looks like you really escaped from a major problem by God's grace or Helmet's grace, consdiering you are an Athigar or a nAththigar respectively :)
Above is just to cheer you up ONLY :))
Hope you have recovered to a large extent now, my wishes for a speedy and full recovery !
இப்ப பதிவு குறித்து :
அதென்ன, politically correct-ஆ பேசறீங்க ?
முதலில், ரஜினிக்கு ஆதரவா ஒரு ஸ்டேட்மண்ட் followed by கலைஞர் டிவிக்கு ஆதரவா ஒண்ணு,
அது போலவே, ஞானிக்கு ஆதரவா ஒண்ணு followed by ஆர்க்காட்டார்க்கு ஆதரவா ஒண்ணு ;-)
பொழச்சுபீங்கன்னு தான் தோணுது :)
எ.அ.பாலா
Adada.. Enna ippadi solliteenga...We (Ennayum seththu neray peru irupangannu nambikai thaan!) are eagerly looking for your blog posts. Adi pattadhu kurithu romba varutham thaan...Seekirama poorana gunam petru thirumbavum muzhu veechil blog post panna vazhthukkal.
வருத்தமாக உள்ளது.
விரைவில் முற்றிலும் நலம் பெற வேண்டிக்கொள்கிறோம்.
பதிவெல்லாம் வருது! ஆபீஸ் போக ஆரம்பிச்சாச்சா!!
ரீச்சர், இல்லை மாட்டேன்னு எல்லாம் மண்டை ஆட்ட எங்களுக்குக் கழுத்தெலும்பு எல்லாம் வேண்டாம். முதுகெலும்பு இல்லாம இருந்தால் போதும் என்பது வைப்பாலஜி எழுதின இவருக்குத் தெரியாதா? நீங்க வேற.
நன்றி முரளி கண்ணன். ஒவ்வொரு ஆண்டுமே ஆகஸ்ட் மாதத்தில் அப்ஸ்காண்டு ஆவேன். இந்த முறை நீண்டு விட்டது :-)
நன்றி இளைய பல்லவன்.
நன்றி யோசிப்பவர். //போக்குவரத்து விதிகள் என்பது போலீஸார் முன்னிலையில் மட்டுமே பின்பற்ற வேண்டியது என்ற எண்ணமே பரவியிருப்பது வருந்ததக்கது!!:(// உண்மை. நல்ல சாலைகளுக்கு நாம் தகுதி இல்லையோ என்ற யோசனையை வரவழைத்த நிகழ்வு.
நன்றி லக்கிலுக்.. உங்களையெல்லாம் சந்திக்க வைத்திருந்த வார இறுதியில்தான் அடி!
அனானி, கலவர பூமியிலும் கிசுகிசு கேக்குது!
நன்றி உண்மைத் தமிழன். இப்ப ரொம்பவே பரவாயில்லை.
நன்றி சரவணகுமரன்.
நன்றி துளசி அக்கா. அட.. இருந்திருந்து அம்மணி பணிவிடை எல்லாம் செய்யறாங்களேன்னு நானே அகமகிழ்ந்து போயிருக்கேன்! அதுவும் இல்லாம, இல்லை மாட்டேன்னு சொல்ல முடியாத நிலைமைக்கு வந்து 10 வருஷமாச்சு - கழுத்து எலும்புக்கும் அதுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை!
நன்றி சென்ஷி. ஹெல்மட்டை உபயோகப்படுத்துவதற்கும் உங்கள் போலீசாரைச் சந்திக்கும் தைரியத்துக்கும் நிறையச் சம்மந்தம் இருக்கிறது. அது இல்லாத ஒரே காரணத்தாலேயே நான் ஹெல்மட் அணிந்தேன்.அரசாங்கம் கட்டாயப்படுத்துவதா? ரெட் சிக்னனில் நிற்பதையே கட்டாயப்படுத்த முடியவில்லை!
//பாசப்படையை துடைக்க, உதற, காயவைக்க மனம் வரமாட்டேங்குது. அப்படின்னு அடுத்த பதிவு போட்டு ஜாலியா எண்ட்டர் ஆகிக்கலாம்.// உங்களை எல்லாம் நம்பி அந்த ரிஸ்க் எடுக்க முடியாது போலிருக்கே :)
பாபு,
//போலீஸ் காரன் என்னை திட்டினினான் "நான் உன்னை நிற்க சொன்னேனா? // போலீஸ்காரர்களுக்கு விதிமுறைகள் தெரியுமா என்றே சந்தேகமாக இருக்கிறது.
//சென்னையில் வண்டி ஓட்டுபவர்கள் எல்லோரும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுத்தான் வண்டி ஒட்டுகிறார்கள்.// எல்லாரும் கொஞ்சம் விதிமுறைகளின் மீதும் பாரத்தைப் போட்டால் எவ்வளவோ தேவலாம்.
நன்றி குசும்பன்,,
//ஒருவேளை பதிவின் முற்பாதிக்கும் பிற்பாதிக்கும் ஏதும் சம்மந்தம் இருக்குமோ!!!// புரியவில்லையே?
நன்றி சுல்தான்,
துபாய் வந்துவிட்டேன். கட்டு பிரிக்கும்வரை சென்னையில் இருக்க முடியாது - குழந்தைகளின் படிப்பு இங்கே.. டாக்டர் பற்றி - அது அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான்:-)
ரத்னேஷ், நன்றி..
//எழுதத் தெரிந்தவனை எந்த உடல்நலக் குறைவும் சோர்வடையச் செய்து விடுவதில்லை.// உண்மைதான்.
எ அ பாலா.. நன்றி..
பொலிடிகலி கரெக்ட் -- யோசிச்சு எல்லாம் செய்வதில்லை... தானா அமைஞ்சுடறதுதான் :)
நன்றி பாலராஜன் கீதா.. உங்களையும் சந்திக்க முடியவில்லை இந்தமுறை.
கொத்தனார்.. கரெக்டா கண்டு பிடிச்சுடறீங்கப்பா.. இன்னிக்குதான் ஜாயினிங் :) துளசி அக்காவுக்கு பதிலில் வழக்கம்போல ரெண்டு பேரும் ஒன்றேதான் :)
நீங்கள் பூரண நலம் பெற்று மீண்டும் இடையுறாது பதிவுகளை வழங்க எதிர்பார்க்கின்றேன்.
ஆஹா அனானி, உங்களை எப்படியோ மிஸ் பண்ணிட்டேன்.. இப்ப கண்டுபிடிச்சிட்டேன், நன்றி. பேர் எழுதாட்டியும் wifeologyக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்த பெண் அனானி போல கையெழுத்துல தெரியுது :-)
நன்றி கானா பிரபா.
ஹலோ பெனாத்தல்..
பாடம் கிடைச்சதுன்னு சொன்னீங்க இல்லையா,பாடம் ஹெல்மெட் பத்தினதா இருந்தாலும்,இன்னோரு முக்கியமான பாடம்-
Be a Romen while you are in Rome-அதாவது இந்தியா வந்தா இந்தியனா இருக்கப் பழகுங்க..போக்குவரத்து விதிகளை எல்லாம் எல்லாரையும் போல மீறுனாத்தா பொழப்பீங்க !!!!!
:))))))
OK,Jokes apart-Get well soon..
அப்புறம் இரண்டு மாதம் பதிவெழுதலேன்னா கூட யாரும் கண்டுக்கலேன்னு வருத்தம் வேண்டாம்..another example is there in me !
அதனால,இன்னோரு நீதி-அப்பாலிக்கா பதிவு எழுதறத நிறுத்தனும்னு தோனினா,ஒரு பதிவு போட்டு நிறுத்துங்க(அதாவது நிறுத்தப் போறேன் அப்படின்னு),உடனே எல்லாரும் கூப்பிடுவாங்க..கொஞ்ச நாள் கழிச்சு வசதி போல வந்துக்கலாம் !!!!
:))))))))))))
அட ராமா..!! இதபத்தி தெரியலயே.......சீக்கிரமா குணமாக வாழ்த்துக்கள் சுரேஷ்...!!ரொம்ப அலட்டிக்காமா உடம்ப பாத்துக்கோங்க எழுத்து சேவைய நிதானமா கவனிக்கலாம்.:)
நலம்பெற வாழ்த்துக்கள்!!!
இப்ப உட்கார்ந்து எழுத முடிகிறதா? உ.த. அண்ணன் சொன்னது போல் பிஸியோதெரபி எல்லாம் பண்ணுங்க.
நீங்க விடுமுறைல் போயிருக்கீங்கன்னு தெரியுமாதலால் எல்லாரும் பேசாமல் இருந்திருந்தோம். இல்லைன்னா 'காணவில்லை'ன்னு விளம்பரம் கொடுத்திருப்போமே :-)
விரைவில் குணமாகி ஒரு ப்ளாஷ் பதிவு போடுங்க அண்ணாச்சி. காத்திட்டிருக்கோம். :-)
//இட்லிவடை க்ரூப்பு ஸ்பெஷல் மீட்டிங்?//
ஹே.... அப்படியா? இணையத்தில் இட்லிவடை-ன்னு ஒரு பிஹெடி ஆராய்ச்சி பண்ணலாம் போலிருக்கே. பெனாத்தலாருக்கு கண்டிப்பாக ஒரு அத்தியாயம் உண்டு அதுல.
//கழுத்துவலி இருப்பதால் 'மாட்டேன், வேணாம்'ன்னு//
ஹி...ஹி... அப்புறம் வலியே இருக்காது. கழுத்து இருந்தால்தானே :-))
//ஆனால் போலீஸ் காரன் என்னை திட்டினினான் "நான் உன்னை நிற்க சொன்னேனா?//
கொடுமை. தி நகர் துரைசாமி ப்ரிட்ஜில் முழு டராஃபிக்கில் 40-50 கிமி வேகத்தில் பைக்கில் போவேன். இண்டு இடுக்கெல்லாம் புகுந்து கொண்டு. அப்பொழுது ஒரு சைக்கிளில் இடித்த போது போலிஸ் என்னை திட்டவே இல்லை. சைக்கிள்காரனுக்கு பஞ்சாயத்து பண்ணி நூறு ரூபாய் வாங்கிகொடுத்துவிட்டு ஓடிவிட்டார். அவர் மூச்சுக்கூட விடமுடியாத ட்ராஃபிக் நெரிசல் அங்கே. :-((
//அதென்ன, politically correct-ஆ பேசறீங்க ?//
இதெல்லாம் இயல்பா வர்றதுதானே... :-) ஆனா இப்படியெல்லாம் எழுதினாப்புல நாங்க நம்பிருவோமாக்கும் உங்களை :-)
//முதுகெலும்பு இல்லாம இருந்தால் போதும் //
ரிப்பீட்டே!!! :-))))
விரைவில் குணமாக வாழ்த்துக்கள் சுரேஷ்.
நண்பர் சுரேஷ்,
விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகள்.
நானும் ஆகஸ்ட்டுக்கொருமுறை அக்டோபருக்கொருமுறை என்று எட்டிப்பார்ப்பதால் நீங்கள் பதிவுலகில் காணப்படாததை உன்னித்திருக்கவில்லை.
தல! இன்னாதிது. இஷ்ட்டானுங்களா?
அது நம்ம ஃபேவரிட் சிக்னலு.
அங்க ஓட்டும்போது கூடுமானவெரிக்கும் முன்னால பாக்றதவிட பின்னால பாத்துக்குனு ஓட்டவேண்டிய எடம். அங்க பழக்கந்தான் தல கைகுடுக்கும்.
வடபழனிலேர்ந்து கோயம்பேடு போனலும் சரி, கோயம்பேட்லேர்ந்து வடபழனி வந்தாலும் சரி, இந்த சிக்னலும் கோயம்பேடு பஸ்ஸாடாண்டு பக்கத்துல இருக்க ரெண்டு சிக்னலும் கண்டந்தான்.
எம்.எம்.டி.ஏ.யாண்ட யு டர்ன் எடுக்றதும், அம்பிகாவுக்கும் முன்னால யு டர்ன் எடுக்றதும் இந்த ரோட்டுல மெய்யாலுமே உயிரக் கைல புடிச்சுக்கினு ஓட்டவேண்டிய எடங்கதான்.
சும்மாவா வெச்சாங்க பேரு அதுக்கு நூறு அடி ரோடுன்னு...ஆயிரம் 'அடி' ரோடுன்னுகூட பேரு வெக்கலாம்.
ஒடம்பப் பாத்துக்கங்க, ஆண்டவன் இருக்கான்!
எல்லாம் நல்லபடியா நடக்கும்.
ஆன்லைன்ல பார்க்கும் பொழுதும் இன்னும் இந்தியால தான் இருக்கீங்க போலனு பிங் பண்ணாமலே இருந்துட்டேன் :(
We really miss you :(
நல்லா ஓய்வு எடுத்துக்கோங்க. விரைவில் குணமாக வாழ்த்துகள்!!!
அடடா இது தானா நீங்கள் எழுதாததற்குக் காரணம். கொத்ஸ் பதிவில் பின்னூட்டம் பார்த்த போது இவர் எழுதி ரொம்ப நாள் ஆச்சேன்னு நினைச்சேன். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனாலும் வலியும் வேதனையும் கொடுமையானவை என்பதால் வருத்தம் தருகின்றன. விரைவில் முழு நலமும் அடைய வேண்டிக் கொள்கிறேன் சுரேஷ்.
விரைவில் குணமடைய வாழ்த்துகள்!
நன்றி அறிவன்.
//இந்தியா வந்தா இந்தியனா இருக்கப் பழகுங்க..// இதை நிறைய பேர் சொல்லிட்டாங்க, ஆனா ஏத்துக்க மனசு வரலையே!!
நன்றி ராதா ஸ்ரீராம்.
நன்றி கல்ப் தமிழன்.
நன்றி ஸ்ரீதர்,
//இணையத்தில் இட்லிவடை-ன்னு ஒரு பிஹெடி ஆராய்ச்சி பண்ணலாம் போலிருக்கே. பெனாத்தலாருக்கு கண்டிப்பாக ஒரு அத்தியாயம் உண்டு அதுல.// கிசுகிசு மோகம் யாரையும் விடமாட்டேங்குதுப்பா!
//தி நகர் துரைசாமி ப்ரிட்ஜில் முழு டராஃபிக்கில் 40-50 கிமி வேகத்தில் பைக்கில் போவேன்.// இதான்யா சைன்ஸ் பிக்ஷன்! நகர முடியறதில்ல இப்பல்லாம்!
நன்றி வடகரை வேலன்.
நன்றி இப்னு ஹம்துன்.
அது நான் பொதுவாகச் சொன்ன மேட்டர் - வலையிலிருந்து காணாமல் போனால் கண்டுகொள்ள ஆள் இருக்காது - பெர்சனலாகச் சொல்லவில்லை.
இதுதான் யதார்த்தம் :-)
அனானி.. நன்றி.
//சும்மாவா வெச்சாங்க பேரு அதுக்கு நூறு அடி ரோடுன்னு...ஆயிரம் 'அடி' ரோடுன்னுகூட பேரு வெக்கலாம்.// கலக்கலாச் சொன்னீங்க :-)
நன்றி வெட்டிப்பயல்.
நன்றி குமரன்.. இந்த கேப்புல இன்னொரு முறை நட்சத்திரம் ஆயிட்டீங்க போல.. தேடிப்பிடிச்சு படிக்கறேன்!
நன்றி கப்பிப்பய.
உங்கள் சிரமத்திலையும் ஒரு பதிவெழுதி விட்டீர்கள் :-)
சுரேஷ் அறிவன் கூறியது போல இந்தியா வந்தால் இந்தியனாக இருங்கள்..இல்லை என்றால் இதை போல சிரமங்கள் தவிர்க்க முடியாதது.
//இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது பதிவெழுதி. யாரும் என்னை மிஸ் செய்ததாகத் தெரியவில்லை//
உங்கள் மீது அன்புள்ளவர்கள் என்றும் அவர்கள் நிலை மாற மாட்டார்கள்..மற்றவர்களை பற்றி நீங்கள் என் கவலை படுகிறீர்கள்?
உடல் நலம் பூரண குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்
//இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது பதிவெழுதி. யாரும் என்னை மிஸ் செய்ததாகத் தெரியவில்லை//
அட???? பதிவு ஏன் எழுதவில்லைன்னு கூட பதிவெழுதி...பதிவர்களை மிஸ் பண்ணினதைச் சொல்லி.....அடடா என்ன சொல்ல வந்தேன்னு மறந்து போச்சே.......ok ok.....
உடல் நலம் பூரண குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்
சீக்கிரம் உடம்பு சரியாக வாழ்த்துக்கள்.
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
get well soon!
நல்லபடியா அதிகம் காயமில்லாம தப்பிச்சவரைக்கும் நல்லது..
உடம்பு குணமாயிரும்.. அதுவரைக்கும் அலுங்காம, குலுங்காம பெட்ல இரெஸ்ட் எடுங்க..
அப்புறமா வந்து பதிவெல்லாம் படிச்சுக்கலாம்.. எழுதிக்கலாம்..
:))
விரைவில் குணமாக வாழ்த்துக்கள்..
புரியவில்லையா? அதாவது முதல் பாதி போல் எழுதியதால் பின் பாதி எழுதும் படி ஆகிவிட்டதா?
குறிப்பாக சிவாஜி ரசிகர்கள் ++++ இன்னும் பாதிக்கப்பட்ட பலரின் சதி இருக்குமோ!!!
பின் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்
//சங்கிலி போட்டு வச்சுருக்காங்க//
இதை கட்டு போட்டு கட்டி வெச்சு இருக்காங்க என்று மாற்றிடலாமே:)))
வந்துட்டாங்கையா...வந்துட்டாங்கையா.
பதிவெழுதுறதை நிறுத்த வைக்க கோயம்பேட்டுல ஆள் செட் பண்ணி ( ஒரு சேஞ்சுக்காக ஆட்டோவுக்கு பதிலா டெம்போ) அனுப்புனாலும் ..கட்டுப் போட்டுக்குட்டு திரும்பவும் வந்து அதைப் பத்தியே பதிவு போடுறாங்களே..இவங்களை என்னதான் செய்யுறது ?
:)))
////இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது பதிவெழுதி. யாரும் என்னை மிஸ் செய்ததாகத் தெரியவில்லை///
யார் சொன்னது ? ரொம்பப் பேரு நிம்மதியா இருந்திருப்பாங்க :))
//கழுத்தெலும்புக்கு இன்னும் 10 நாள் ஆகும் என்று சொல்கிறார்கள்///
கவனமா பாத்துக்குங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க. பதிவுலகம் எங்கயும் ஓடிப் போயிறாது. அது தமிழ் டி வி மெகா சீரியல் மாதிரி. எப்ப வந்தாலும் சேந்துக்கலாம்.தொடர்ச்சி விட்டுப் போகாது. ஏன்னா அதே அரைச்ச மாவைத்தான..திரும்பத் திரும்ப...:))
ஒவ்வொரு முறையும் சிகப்புக்காக சடாரென்று நிற்க வேண்டிவந்தால் உடனே பின்னேயும் பார்க்கிற அச்சம் எப்போதுமுண்டு. என்ன செய்றது? "கிறுக்குத்தனமா" சிகப்புக்கு நின்னா எவனாவது பின்னால இருந்து இடிப்பான்ற பயம் எப்போதுமே உண்டு?
"நல்லவனா இருக்கிறதே தப்பா?" - ம்காநதி. :(
விரைந்து நல்ல உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
சீக்கிரம் உடம்பு தேறி வாங்க. வந்து நச் பதிவுகளைத் தொடருங்க (வீட்டுக்கு ஆட்டோ, சுமோ வராத அளவில்)
சுரேஷ்,
கழுத்தெலும்புன்னு போட்டதும்,
பயங்கரமாப் போச்சு.
நாம் கவனமாக இருந்தாலும் எல்லாரும் அப்படியேன்னூசொல்ல முடியாது.
ஐகாரஸ் ப்ரகாஷ்,நாராயணனுக்க்கு ரொம்ப நன்றி சொல்லணும்.
நல்லபடியாக குணமாகப் பிரார்த்திக்கிறேன்.
ஒண்ணும் எழுதக் காணோமெனு நினைத்தேன்.
//நன்றி லக்கிலுக்.. உங்களையெல்லாம் சந்திக்க வைத்திருந்த வார இறுதியில்தான் அடி!//
ச்சே... அன்பே வா எம்.ஜி.ஆர் கெட்டப்பில் உங்களை இன்னொரு முறை பார்க்க இருந்த வாய்ப்பு தவறிவிட்டதே? :-)
சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள் சுரேஷ்.
-அரசு
யார் சொன்ன உங்கள மிஸ் பண்ணல்லைன்னு?சும்மா நொச்சுன்னு கொடைய வேண்டாம்னு நினைச்சேன்.
சுரேஷ் ரொம்ப பத்திரமா காப்பாத்தியிருக்காரு கடவுள்.
ஏன்னா முதுகுத்தண்டு உடைஞ்சு போனா ஒண்ணோ உயிர் போகும் இல்லையா கை கால் வராம ,ஆனா சிந்தனை தெளிவா இருக்கும்.ரொம்ப கடினமான நிலைமை அது.உங்களுக்கு எலும்போட போச்சு.வழக்கமா, குதிரை ஜாக்கிஸுக்கு அந்த விபத்து நேரும்.சூபெர்மேன் , நடிகர் ஒருவர் இருந்தாரு தெரியுமாஆவுருக்கு குதிரை ஓட்டத்துல விபத்து ஆயி பாவும் ரொம்ப கஷ்டப்பட்டார்.stem cell research மேல நம்பிக்கை வெச்சிருண்தாரு.ஆனா புஷ் தன்னோட மத ரீதியான கொள்கைகளால் விடலை.
எனக்கு இன்னும் படபடப்பா இருக்கு பெனாத்ஸ்.தங்கமணி பாவும்.
நினைக்கவே பயம்மா இருக்கு.அந்த ஓட்டுனரை கேஸ் பதியாம விட்டது தப்பு சுரேஷ்.நாளைக்கு இன்னோருத்தருக்கு நேரக்கூடாது இல்லையா?
பினாத்தலாரே,
விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
we pray for speedy recovery.
take care .
//பதிவெழுதுறதை நிறுத்த வைக்க கோயம்பேட்டுல ஆள் செட் பண்ணி ( ஒரு சேஞ்சுக்காக ஆட்டோவுக்கு பதிலா டெம்போ) அனுப்புனாலும் ..கட்டுப் போட்டுக்குட்டு திரும்பவும் வந்து அதைப் பத்தியே பதிவு போடுறாங்களே..இவங்களை என்னதான் செய்யுறது ?
:)))
//
ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திட்டாருப்பா. :-)
சுரேஷ், உணர்ச்சிவசப்பட்டு சங்கர் மேல் கேஸ் கொடுக்காதீங்க.
இன்னமும் ரெண்டு உப்புமா போட்டு பழி தீத்துக்கலாம் :-)) அத விட பெரிய தண்டனை தேவையா...
பெனாத்த்ஸ் ,டெல்லியின் bmw,வழக்குகளில் பணக்கார குடும்பத்தினர் ஒரே அடியாக அவர்கள் பணக்காரர்கள் அதனால் தான் இவ்வளவு தண்டனை ,என்று புலம்பியதை படித்த போது கோவமாக வந்தது.ஆனால் உங்கள் பதிவில் ,driver மேல் கேஸ் போடவில்லை என்றூ எழுதியதைப் படித்தவுடன் ஒருவேளை அது நிஜமோ என்று தோன்றியது.என் கண் முன்னால் சென்னையில் ஒரு குப்பை வண்டி ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்க்காமல் போனது. நான் என்னுடய வண்டியை நிறுத்தி உதவி வேண்டுமா என்றூ கேட்டதர்க்கு அந்தப்பெண் வேகமாக மறுத்து விட்டு ஓடிப்போய் விட்டார்.நானும் விடாமல் அந்த குப்பை வண்டியை தொடர்ந்தபோது, ஒரு கடையில் நிறுத்தினார்.driver நன்றாக குடித்திருந்தார்.என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
:((
விரைவில் குணமாக வாழ்த்துக்கள்...
நன்றி கிரி. பதிவு படிக்கறதுல உள்ள சிரமம் எழுதறதுல இல்லை :-)
நன்றி அருணா, //அடடா என்ன சொல்ல வந்தேன்னு மறந்து போச்சே// அதுதானே என் வெற்றி :-)
நன்றி விக்னேஸ்வரன்.
நன்றி ப்ரூனோ.
நன்றி சர்வேசன்.
விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்!
நன்றி சரவணகுமார்.
குசும்பன்.. சங்கர் பின்னூட்டம் எல்லாம் பாத்தா எனக்கும் அந்த டவுட் வருது.
சங்கர்.. வாங்க..
//பதிவெழுதுறதை நிறுத்த வைக்க கோயம்பேட்டுல ஆள் செட் பண்ணி ( ஒரு சேஞ்சுக்காக ஆட்டோவுக்கு பதிலா டெம்போ) அனுப்புனாலும் .//
நினைச்சேன்.. மறுநாளே வீட்டுக்கு வந்து பாத்தீங்க இல்ல்.. அப்பவே நினைச்சேன்.. நம்ம ஆளுங்க வேலைய சுத்தமா முடிச்சிருக்காங்களான்னு பாக்கத்தானே வந்தீங்க?
//யார் சொன்னது ? ரொம்பப் பேரு நிம்மதியா இருந்திருப்பாங்க :))// தனியொரு மனிதனை ரொம்பப்பேர்னு சொன்னா ஜகத்தினை (எழுதியே) அழித்திடுவோம்.
//ஏன்னா அதே அரைச்ச மாவைத்தான..திரும்பத் திரும்ப...:))// அதை மாற்றத்தானே நான் அவதரிக்கப்போகிறேன்!!
நன்றி தருமி.
//"நல்லவனா இருக்கிறதே தப்பா?" - ம்காநதி. :(// அதோட தொடர்ச்சி வசனம் - நம்மள்லே யாரும் 100% நல்லவன் இல்லைன்னு வரும்.. நான் எப்பவாச்சும் ரெட் சிக்னல் ஸ்கிப் பண்ணி இருப்பேன் :-)
நன்றி கேவிஆர்.
லக்கிலுக் - அந்தக்கண்ணாடி உடைஞ்சுபோச்சு.. இனி பயமில்லாம பாக்கலாம்.
நன்றி அரசு.
சீதா.. நன்றி.
கேஸ் பதியாமல் விட்டதற்கு முக்கிய காரணம் அந்த ஓட்டுநர். இடித்துவிட்ட நொடியில் இருந்து எக்ஸ்ரே எடுத்து கட்டுப்போடும்வரை கூடவே இருந்தபோது அவருடைய குற்றவுணர்வு - அவர் பொருளாதார நிலை - கேஸ் என்று போட்டால் அவர் எந்த அளவு அலைக்கழிக்கப்படுவார் (நானும்) - என்பதெல்லாம் புரிந்ததாலும், உயிருக்கு ஆபத்து என்றெல்லாம் இல்லாததாலும்தான்.
விபத்து நடந்தது மாலை 6 மணிக்கு, ஓட்டுநர் நிச்சயமாக எந்த போதையிலும் இல்லை.
நன்றி கோபி.
நன்றி கோமா.
ஆமாம் ஸ்ரீதர்.. இவரைப் பழி வாங்க.. வச்சிருக்கேன் ஐடியா!!
//விபத்து நடந்து 15 நாட்கள் ஆன நிலையில் கழுத்தெலும்புக்கு இன்னும் 10 நாள் ஆகும் என்று சொல்கிறார்கள், கை கூடிவிட்டது, இடுப்பு சரியாகிவிட்டது.
//
சுரேஷ், முதலில் மன்னிக்கவும். வழக்கமான நக்கல் நையாண்டி பதிவாக இருக்கும், பின்னூட்டல் லைன் கட்டியதும் படிக்கலாம் என்று இருந்தேன், ரத்னேஷ் பதிவில் குறிப்பிட்டு இருந்ததைப் பார்த்த பிறகு தான் நீங்கள் விபத்துக்குள்ளானதே தெரிந்தது.
படித்ததும் மிகவும் வருத்தமானது.
விரைவில் நலமடைய வாழ்த்துகள்.
//நீதி: எவ்வளவு கஷ்டமாய் இருந்தாலும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் போடுங்கள்.//
என்னோட விபத்து பதிவிலும் இதைப்படிக்கும் முன்பே இதே நீதியைத்தான் சொல்லி இருகிறேன்.
அன்புடன்
கோவி.கண்ணன்
Get well soon Suresh...
பினாத்தலாரே,
கிட்டத்தட்ட ஒரு வருடமாக உங்கள் பதிவை படித்து வருகிறேன்.இரண்டு மாதங்கள் பதிவு போடாதவுடன் ஏதோ ஏடாகூடம் என்று தோன்றியது.
எப்படியோ தலைக்கு (:)) வந்ததது தலைக்கவசத்தோடு போனதே.
இதிலும் ஒரு நல்ல விஷயம்,அந்த லாரி ஓட்டுனர் இனி சிகப்பு விளக்கில் நிற்பார் என்று தோன்றுகிறது.
விரைவில் முழுக்குணமடைய வாழ்த்துக்கள்.
விரைவில் முழுக்குணமடைய வாழ்த்துக்கள்
விரைவில் குணமாக வாழ்த்துக்கள் சுரேஷ்...
விரைவில் முழுதாக குணமடைய வாழ்த்துக்கள்
Wish you a very speedy recovery :-)
பெயரை தமிழ்மணத்துல கொஞ்ச நாளா பார்க்கமுடியலயேன்னு நினைச்சது உண்மை..
உடல்நலத்தைக்கவனித்துக்கொள்ளுங்கள்.
Oops. inga enga yaarukkume ungalukku accident aana matter theriyathu..
Take care, wishing you a speedy recovery...!
Signalla nikka intha yosainai..
Signal orangela irunthu, neengha suddena speeda koraikkanumna...right handa appadiye thookki, surrender aagittu, slow panni zebra kitte poi nikkanum..adutha tripla try pannungha..may be unga visitorsku usefula irukkum...
Rgds,
Bala
Post a Comment