Sep 17, 2008

ஒரு சோறு பதம்? தெரியலையே - உதவி வேணும். (17 Sep 2008)

என் கணினி க்ராஷ் ஆகிவிட்டது. பல டேப்களில் தமிழ்ப்பதிவுகள் பார்த்துக்கொண்டிருந்தபோது க்ராஷ் ஆனதால், சில பதிவுகளில் இருந்து ஒரு ஒரு வரி மட்டும் ஒரே ஒரு டெக்ஸ்ட் பைல் ஆகி அதை மட்டும்தான் மீட்க முடிந்தது. இந்த வரிகள் யாருக்குச் சொந்தம் என்று கண்டுபிடித்துத் தாருங்களேன் - முழுப்பதிவையும் படித்து உய்வேன்!

உங்கள் வசதிக்காக வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். பதில்களை உடனுக்குடன் மட்டுறுத்த இயலாது.

1. இரட்டை டம்ளர் முறைக்கு நான் இங்கே தீர்வு கொடுத்துள்ளேன்
2. ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் முதலெழுத்துதான் வித்தியாசம்
3. ஜோதியில் சைவப்படம் போட்டால் சீட்டு கிழியும், தாவூ தீரும்
4. இவ 110,131 மேகீ 43 சரி, மத்ததெல்லாம் தப்பு. முயற்சி பண்ணுங்க.. உங்களால முடியும்.

5. இது இந்தப்பதிவுக்கு மட்டுமல்ல, தங்கமணிக்கும் எதிர்பதிவல்ல
6. என் டி ஷர்ட் டை திருடினாலும் பரவாயில்லை, டி ஷர்ட் வாசகத்தைத் திருடிவிட்டார்கள்.
7. வாரம் 30$ வைக்கலாமா 70$ வைக்கலாமா என்றுதான் குழப்பம்
8. இப்போதெல்லாம் 30 விநாடியில் நேரிசை வெண்பா எழுத முடிகிறது
9. கிளி ஜோக் தவிர வேறெதுவும் கம்பன் விழாவில் சொல்லக்கூடாது
10. காற்றை வஞ்சித்துத்தான் பறக்கவேண்டும் என்றால், எனக்கு வேண்டாம் அந்த பட்டம்
11. கும்மிடிப்பூண்டியில் வயதான ஓட்டுநராக இருந்தாலும் காலை அழுத்தினால் வண்டி நிற்கிறது.
12. சென்னை மாநகராட்சி போர்ட் - என் கைவிரல் சென்னை மாநகராட்சியில் இருக்கிறது, கால் வெளியே.

22 பின்னூட்டங்கள்:

Radha Sriram said...

1)டோண்டு

3) லக்கிலுக்

4) கொத்ஸ்

5) வெட்டி

8) ஜீவ்ஸ்

Radha Sriram said...

7) charu

Radha Sriram said...

8) ஜெயமோஹன்

கோவி.கண்ணன் said...

எப்படி இப்படியெல்லாம் தோணுது ?

:)

Sridhar V said...

சுரேஷ்,

நிறைய பானைகள்ல பதம் பாத்திருக்கீங்க. நமக்கு அந்தளவு வாசிப்பறிவு இல்லைங்க. 3-4 தெரியுது.

1. டோண்டு ராகவன்
2. கோவி கண்ணன்
3. லக்கிலுக்
4. இலவச கொத்தனார். அது என்ன 110. 131....... அம்மாம் பெரிய குறுக்கெழுத்தா....
5. டுபுக்கு?
6. பரிசல்காரன்?
7. சாருநிவேதிதா
8. பா ராகவன்?
9. தெரியல
10. டிபிசிடி
11. தெரியல
12. செந்தழல் ரவி

சென்ஷி said...

உள்ளேன் அய்யா :)

enRenRum-anbudan.BALA said...

I know the answers for 1 and 3, I mean the bloggers :)
1. The one and only Dondu Raghavan
2. His nemesis(!) Luckylook ;-)

enRenRum-anbudan.BALA said...

I know the answers for 1 and 3, I mean the bloggers :)
1. The one and only Dondu Raghavan
2. His nemesis(!) Luckylook ;-)

Unknown said...

6 -அதிஷா

முரளிகண்ணன் said...

:-))))))))))))))))))

பினாத்தல் சுரேஷ் said...

ராதா ஸ்ரீராம், 1,3,4 சரி.. 5 - 8 தப்பு.

7 சரி.,. 8 மறுபடி தப்பு

ஸ்ரீதர்.. 1,2 3,4, 7, 10, 12 - சரி
5, 6 8 9 11 - தப்பு.. ரீட்ரை :-)

எ அ பாலா: ட்ரை பண்ண ரெண்டும் சரிதான்.

சுல்தான் - 6 - சரி. என்ன ஒண்ணே ஒண்ணை முயற்சித்திருக்கீங்க?

பினாத்தல் சுரேஷ் said...

கோவி கண்ணன் - ஏன் ட்ரை பண்ணலை?

சென்ஷி.. உள்ளேன் அய்யாவுக்காகவா போடறோம் குவிஸ்ஸு?

முரளிகண்ணன் - நீங்களும் வெறுமனே சிரிச்சிட்டு போயிட்டீங்க?

கோபிநாத் said...

\\சென்ஷி said...
உள்ளேன் அய்யா :)
\\

உள்ளேன் அய்யாவுக்கு ரீப்பிட்டே போட்டா!!! ;)

பினாத்தல் சுரேஷ் said...

கோபிநாத்..

இதெல்லாம் உங்களுக்கே நியாயமாத் தெரிஞ்சா சரி :-)

யோசிப்பவர் said...

3) லக்கிலுக்
4) கொத்ஸ்
7) சாரு
10) டிபிசிடி

பினாத்தல் சுரேஷ் said...

யோசிப்பவர்,

3-4-7-10, முயற்சித்ததெல்லாம் சரி.

jeevagv said...

//பல டேப்களில் தமிழ்ப்பதிவுகள் //
இதை, 'டேப்-களில்' அல்லது 'டேப் களில்' என்றோ எழுதினால் நலம். மண்டையை பிய்த்துக் கொள்வதில் இருந்து சற்றே தப்பிக்கலாம்!

யோசிப்பவர் said...

6. கடுகு?!

ச.சங்கர் said...

3.கழகக் கண்மணி
4.ஃப்ரி மேசன்

மீதியெல்லாம் தெரியும் ஆனா தெரியாது.

பினாத்தல் சுரேஷ் said...

ஜீவா,

ஆங்கில தமிழ் மாற்றங்களில் இப்படி எழுதுவதா அப்படி எழுதுவதா என்னும் குழப்பம் ஆம்னிப்ரஸண்ட் :-) அப்படி எழுதுவதையே தவிர்ப்பதுதான் குழப்பத்தைக் குறைக்கும், முயற்சிக்கிறேன்.

யோசிப்பவர், கடுகு இல்லீங்க.. கிட்டக்கிட்ட வந்துட்டீங்க :-)

ச சங்கர் - 2 சரி.. மத்ததெல்லாமும் சரி ஆனா தெரியல்ல :-0

பினாத்தல் சுரேஷ் said...

போட்டி என்று தலைப்பில் சொல்லாததாலா, இல்லை ரொம்பப் பெரிய ஏரியாவை எடுத்துக்கொண்டதாலா தெரியவில்லை, ரெஸ்பான்ஸும் சரியாக இல்லை, முயற்சித்தவர்களும் முழுமையாக செய்யவில்லை.

எனவே போட்டியை முறித்துக் கொள்கிறேன்.

விடையா? எலிக்குட்டிச் சோதனையில் தெரியும்.

இப்னு ஹம்துன் said...

1. டோண்டு ராகவன்
2. கோவி.கண்ணன்
3. லக்கிலுக்
4. இ.கொத்தனார்
5. சின்னப்பையன்
6. அதிஷா
7. சாரு
8. அகரம் அமுதா
9. ரத்னேஷ்
10. TBCD

 

blogger templates | Make Money Online