விமானத்தை விட்டு வெளியே வந்ததுமே அமெரிக்கா தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது. நீண்ட வரிசை. பிரிவினை பார்ப்பதில்லை எனத் தண்டோரா கொட்டும் ஏகாதிபத்தியவாதிகள் தன் குடிமையாளருக்குத் தனிவரிசை வைத்ததையும் சகித்துக் கொள்ளலாம், வந்தாரை வரவேற்க 33 சத ஒதுக்கீடு கூட இல்லாமல் 20க்கு மூன்றே வரிசைகளை வைத்திருந்தது துணுக்குறச் செய்தது. எதற்காக வந்தாய், என்ன காரியம், காரணம் என்று தேவையில்லாத ஆயிரம் கேள்விகளோடு அபசகுனத்தின் உச்சமாக எப்போது திரும்பப் போகிறாய் என்றும் கேள்விகள். அதைத் தாண்டி வந்தாலும் பெட்டியைக் குடையும் வகையில் கஷ்டம் கேள்விகள்.
அமெரிக்காவில் எல்லா மொழி இன மக்களும் இருக்கிறார்களாம். ஆனால் கலாச்சாரத்தைத் தெரிந்து கட்டுரைகள் எழுதிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு நண்பன் அழைத்துச் சென்ற அத்தனை கடைகளிலும் தமிழே வழக்குமொழியாக இருந்தன. பணம் கொடுக்கும்போது ஏன் ரூபாயாகக் கொடுக்கவில்லை என்ற சந்தேகம் மட்டும் இன்னும் அழியவில்லை.
விடாப்பிடியாக மைல்களிலும் பாரன்ஹீட்களிலும் மட்டுமே சம்பாஷிக்கிறார்கள். தெருவிலிருந்து ஸ்விட்ச் வரை எல்லாம் தலைகீழ். கீழே அழுத்தினால் லைட் எரிகிறது, மேலே இழுத்தால் தண்ணீர் கொட்டுகிறது, கதவைத் தள்ளி உள்ளே செல்கிறார்கள். இந்தியர்கள் பூமிப்பந்தின் மேல்பாகத்திலும் அமெரிக்கர்கள் கீழ்பாகத்திலும் இருப்பதால் எல்லாமே தலைகீழாக இருக்கலாமோ என்ற என் அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
தொலைக்காட்சியிலும் அமெரிக்கர்கள் வெள்ளி மதியம் சமையல்தான் செய்கிறார்கள், தாலி பாக்கியத்துக்காக பெண்கள் போராடுகிறார்கள், மிகச் சொற்ப விலைக்கு பிருஷ்டம் இளைக்கிறது, ப்ளாஸ்டிக் விந்தைகளை வாங்கினால் டார்ச்லைட்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. உண்மையான கலாச்சாரத்தை அறிவதற்கு இன்னும் கொஞ்சநாள் பொறுத்திருக்கவேண்டும் போல இருக்கிறது.
அறிந்ததும் தொடர்கிறேன்.
Jul 31, 2010
அமெரிக்க பணயக் கட்டுரை - 1
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை அமெரிக்கா, சமையல், சுயதம்பட்டம், பயணம், மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
9 பின்னூட்டங்கள்:
//பணம் கொடுக்கும்போது ஏன் ரூபாயாகக் கொடுக்கவில்லை என்ற சந்தேகம் மட்டும் இன்னும் அழியவில்லை//
ஆஹா பூரா பசங்களும் அங்கிட்டு வந்துட்டாய்ய்ங்களா???? ரைட்டு மீக்கு ஒரு ப்ளேஷ் இருக்கான்னு பாருங்க !
நானும் வந்துடறேன்! பத்தோட 11 அத்தோட நானுன்னு அங்கே கிடந்து மிச்ச காலத்தை ஓட்டிடலாம் :)
//"அமெரிக்க பணயக் கட்டுரை - 1"//
ஒ! அப்ப நீங்களும் கையில காசு கொண்டு போவலியா??? புடிச்சுட்டுத்தான் போயிருக்காங்களா?????
கட்டின கைலியோடதான் போயிருக்கீங்களா?
# ஒரு டைட்டில்க்கு எத்தனை ஆயிரம் $ கேள்விகள் மொளைக்குது
வருக வருக என்று அன்புடன் அமெரிக்க தமிழர்கள் சார்பில் வரவேற்க்கிறேன்.
// தெருவிலிருந்து ஸ்விட்ச் வரை எல்லாம் தலைகீழ்.//
ஹி ஹி.
உங்க பணயக் கட்டுரை கொஞ்சம் இது மாதிரியா இருக்கு. :-) கல்ப்புல ஏற்படாத கலாச்சார அதிர்ச்சியா உங்களுக்கு இதுல ஏற்பட்டுறப் போவுது?
நல்ல நேரம் பாத்து போயிருக்கேங்க போல, ஜி டி பி இரண்டு புள்ளி நாலு
ஆகா..ஆகா...கலக்கிட்டு வாங்க தல ;)
வாழ்த்துக்கள் ..... வுட்டு ஆட்டிட்டு வாங்க
அமரிக்க பணய கட்டுரை!!!!! நான் கூட அவசரத்துல பயன கட்டுரைன்னு படிச்சுட்டு என்னடா இது பெனாத்தலார் இப்படி நார்மலா தலைப்பு வச்சிருகாருன்னு பயந்து போயிட்டேன். பின்ன ஆயில் கமெண்டு பார்த்து தான் நார்மலுக்கு வந்தேன். நடத்துங்க. ஏன் சின்ன பதிவா இருக்கு. உண்மை தமிழன் கோவிச்சுக்க போறாரு:-)
IMHO it is a little unfair to mention negatively about separate lines for US citizens during immigration while Indian airports also have similar separate lines. And, similar questions are asked at the indian immigration counter in india!!!
Post a Comment