கலாசாரத் தேடலின் நடுவே ஒரு சிறிய இடைவெளி விடவேண்டியதாகிவிட்டது. மாபெரும் ட்விட்டர், ப்ளாக்கர் மற்றும் ஆம் ஆத்மிகளின் சந்திப்பில் அவ்வப்போது சிற்றுரை பேருரை Bore உரை எல்லாம் ஆற்ற வேண்டிய நிர்ப்பந்தங்களினால்.
பத்துமணிக்கு அழைத்து போடப்பட்ட போஸ்டர்களின் விளைவால் பதினோரு மணிக்கு எழுந்து தயாராகச் சென்றேன். இலவசனார் காலை உண்டி கொடுத்தபின் தான் தயாராவேன் என்ற என் பிடிவாதத்துக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டி இருந்தது.
நீண்ட காலத்துக்கு முன் நான் ப்ளாக்கில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தபோது தீவிரமாக கமெண்ட் போட்டதை இன்றும் எண்ணி வருந்தும் மணியன் @rsmanyan, நீங்க எழுத ஆரம்பித்த காலத்திலெல்லாம் நான் சின்னப்பையன் என்று என் வயதைக் குறிவைத்துக் கொலைவெறி காட்டிய @forvino, எவ்ளோதூரம்தான் போறானுங்க பார்க்கலாம் என்று அமைதியாக இருந்த @the_tweedy, வைஃபாலஜி மேலுள்ள கோபத்தை கனல் அடங்காமல் காத்துவரும் பத்மா அரவிந்த் @padmaa ஆகியோருடன் மொக்கை போட ஆரம்பிக்க தீவிர இலக்கியமும் உலக சினிமா தாகமும் அடங்காத ஒருபக்கம் @orupakkam, (அடங்காத மட்டும்தான் உண்மை, மற்ற அட்ஜெக்டிவ் எல்லாம் சும்மா பில்ட் அப்புக்கு :-) வயதான, போலி டைனோபாய் @dynobuoy, சேவல்பண்ணைக்கு குடும்பத்துடன் வந்துவிட்டிருந்த இளா @vivaji (நோயாளிகள் நேரம்தப்பாமல் மாத்திரை சாப்பிடுவது போல் வெளியே தனியாகச் சென்று அடிவாங்கிக்கொண்டு திரும்பினார்), வண்ண உடைகளை கவனமாக்த் தவிர்த்த வெட்டிப்பயல் பாலாஜி @vettipaiyal, எழுத்துக்குச் சம்மந்தமே இல்லாத இளமையோடு பிகேசிவகுமார் @ivansivan, இன்னும் என்னவெல்லாம் எழுதி சமுதாயத்தைக் கொடுமைப்படுத்தலாம் என சதித்திட்டம் தீட்டிக் கொடுத்த திண்ணை துக்காராம் @thukaram என்று மொக்கை களைகட்டியது.
வந்திருந்தவர்களின் அன்பான கேள்விகளின் வீச்சு: “நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளராமே? ஆமாம், என்ன எழுதறீங்க?” “நீங்க எழுதின எல்லா புக்கும் படிச்சிருக்கேன், ஆமாம், ப்ரேசில் சமையல் குறிப்புகள் நீங்கள் எழுதினதுதானே?” “உங்க ட்விட்லே எல்லாம் ஒரு ஸ்பார்க் தெரியும். ஆமா, உங்க ஹாண்டில் என்ன?” “ஒரு சக எழுத்தாளராக டேன் ப்ரவுன் பற்றி உங்கள் கருத்தென்ன?” “அடுத்த புக் எப்போது? தற்காப்பா இருக்கவேணாமா?” போன்ற கேள்விகளுக்கு புன்னகையை பதிலாக்கினேன். இளிச்சவாயனாக ஆக்கிவிட்டார்கள் என்பதன் இடக்கரடக்கல் என்பதறிக. (ஃபோட்டோக்கள் வேறு காமராவில், தனியாகச் சேர்க்கப்படும்)
மதியம் என்று ஆரம்பித்த பயணத்திட்டம் மாலையாக மாறி அப்போதும் மொக்கை தொடர, முன்னிரவிலேயே கிளம்ப முடிந்தது. வழியில் பயணத்தில் சேர்ந்த கண்ணபிரான் ரவிஷங்கர் @kryes எழுதும்போது ஸ்ரீவேணுகோபாலன், பேசும்போது புஷ்பா தங்கதுரை.
அட்லாண்டிக் சிட்டிக்கு எங்களுக்கு முன்பே வந்து காத்துக்கொண்டிருந்தார் சத்யராஜ்குமார் @ksrk. இதற்காகவா காத்திருந்தாய் சத்யராஜ்குமாரா? என்னும் அளவுக்கு அவரைப் படுத்தினோம். ஆட்டம் கொண்டாட்டம் சூதாட்டம் நிரம்பிய ஊரிலும் இசை நீர்வீழ்ச்சி போன்ற உபத்திரவமில்லாத வஸ்துக்களைத் தேடிக் கண்டுபிடித்துக் காட்டினார்.
பாஸ்டன் பாலா @snapjudge வந்தார்.அவருடைய செறிவான டாட்நெட் கட்டுரைகளைப் பற்றிய விவாதங்களைத் தொடங்க அவர் ரசிகர் கூட்டம் தயாராக இருந்தும் மற்றவர்களின் கொலைவெறிப்பார்வையால் வழக்கமான மொக்கையே போட்டு காஸினோவுக்குச் சென்று காசு இனி நோ என்று பதம் பிரித்துக் காட்டச் சூளுரைத்தோம்.
கலாசார நுகர்வு பூர்த்தியாகும் முன்னரே நேரம் கடக்க ஆரம்பித்தது. “அப்போ இன்னிக்கும் மேற்படி டான்ஸ் இல்லியா?” சோகத்தோடு கிளம்பும் நேரத்தில் குற்றாடை நங்கையர் சிலர் சூதாட்ட விடுதியில் ஆட ஆரம்பித்தார்கள். கலைக்கண்ணோடுதான் பார்க்கிறேன் என்று கேட்பதற்குமுன் பதில் சொல்லத் தயாரானேன். ஆனால் என்னை யார் பார்த்தார்கள்?
ஆனால் முழுமையான கலாச்சார நுகர்வும் பகிர்வும் இனிமேல்தான் என்று சூளுரைக்கிறார் கொத்தனார். எனவே, சிறிய இடைவேளைக்குப் பிறகு, கலாசாரப் பகிர்வைப் பொதுவுடமைப்படுத்துகிறேன்.
அட்லாண்டிக் சிடிக்கு வந்திருந்தவர்களில் ஒரு பகுதி:
Aug 1, 2010
அமெரிக்க பணயக் கட்டுரை - 2
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை அமெரிக்கா, சுயதம்பட்டம், பதிவர், பயணம், மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
18 பின்னூட்டங்கள்:
ஒரே யூத்’ஸ் போட்டோவா இருக்கே !
பெரியவங்க யாரையும் மீட் பண்ணமுடியலயா பாஸ்? #டவுட்
கண்ணபிரான் ரவிஷங்கர் @kryes எழுதும்போது ஸ்ரீவேணுகோபாலன், பேசும்போது புஷ்பா தங்கதுரை.//
அவர் ஒரு கண்ணபிரான் பாஸ் ;)
பயணக்கட்டுரை போட்டோ போல கலக்கல்ஸ் ;)
கடைசி படம் அந்த ஆரஞ்சு விளக்கு ஒளியில் கரைந்துவிட்டது,அதற்கு முந்தைய படத்தில் உங்களை தேடவேண்டிய அவசியமே இல்லை. :-)
ஒரே யூத்’ஸ் போட்டோவா இருக்கே !
பெரியவங்க யாரையும் மீட் பண்ணமுடியலயா பாஸ்? #டவுட்//
றிப்பீட்ட்டேஏஏஏஏ
என்ன முதல் முறை அமெரிக்க பயணமா? அப்படி தோணுது உங்கள் கட்டுரை.
அலண்டவுன், டி.சி., நியூ ஜெர்சி மக்களின் சங்கமம்!
போட்டோக்களில் பெயர் டேக்கிங் இல்லையா... யூத்ஸ்.
கொலை வெறி லாம் கொஞ்சம் அதிகம் பாஸ் எனக்கு :)
//(ஃபோட்டோக்கள் வேறு காமராவில், தனியாகச் சேர்க்கப்படும்)//
கண்டிப்பா சேர்க்க வேண்டும் ;)
பெனாத்தலு..
நீர்தானா இது..? அன்னிக்கு பார்த்த மாதிரியே இன்னிக்கும் யூத்தாவே இருக்கீரே..? எப்படிங்கய்யா..?
நம்ம பாஸ்டன் பாலா தாத்தாவாயிட்டாரே..! ஏனாம்..?
படங்கள் எல்லாம் நல்லா இருக்கு...;)))
/எழுத்துக்குச் சம்மந்தமே இல்லாத இளமையோடு பிகேசிவகுமார் @ivansivan, /
யப்பா...இப்படிப்பட்ட அறிமுக பட்டியலிலும் ’தனியாக’ தெரிவதற்கு பிகேஎஸ் நிறைய செலவு பண்ணியிருக்கனுமே...
எழுத்தாளர் சந்திப்பிற்காக இணையம் வழி வந்த பிரபலங்களைப் பற்றி குறிப்புகள் ஒன்றும் காணலையே.
அப்படியே கல்கி சிறுகதை போட்டியில் தேர்வானதற்கும் சேர்த்து வாழ்த்துகள். கலக்குங்க.
//நீண்ட காலத்துக்கு முன் நான் ப்ளாக்கில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தபோது தீவிரமாக கமெண்ட் போட்டதை இன்றும் எண்ணி வருந்தும் மணியன் //
ப்ளாக் மீள்வருகை..கமெண்ட் மீள்வருகை...என்றுமே தீவிரமில்லை ;) (ஏதோ தீவிரவாதிகள்ன்னு நினைச்சுடப்போறாங்க..)
விடுமுறைக்காக இங்கு வந்து வினையாக உங்களைக் கண்டதை என்னென்பது ?
உலகெங்குமிருந்து இணையம் வழியே திரண்ட உங்கள் இரசிகர்களைக் குறிப்பிட மறந்தீர்களே ?
பதிவும் படங்களும் கலக்கல்ஸ். ஆழ்ந்த சிந்தனையுடன் நீங்கள் தந்த உங்க எழுத்தாளர் படங்களுக்காக வெயிட்டிங்..
நானும் கொத்தனார் போட்டோவை பார்த்திடலாம்ன்னு பார்க்கிறேன். ஹூம் நடக்க மாட்டங்குது!
@ ஆயில், \\ஒரே யூத்’ஸ் போட்டோவா இருக்கே !
பெரியவங்க யாரையும் மீட் பண்ணமுடியலயா பாஸ்? #டவுட்\\
வர வர ரொம்ப மோசமா கிண்டல் பண்றேப்பா! இதிலே இருக்கும் எல்லாருமே ரிட்டையர்டு ஆத்மிஸ். இளா, வெட்டி எல்லாருக்கும் பேரன் பேத்தி எல்லாம் இருக்காங்க. பெனாத்தலார் கொள்ளு தாத்ஸ்.... என்னவோ போப்பா ஆயில்:-))
அட்லாண்டிக் நகருக்கு நல்ல கூட்டத்தோட தான் போயிருக்கீங்க! என்னை ரெண்டு நாள்ல நியூஜெர்சியில இருந்து தொரத்திவிட்ட கும்பல்ல பாதி பேரு உங்க பக்கத்துல நிக்கிறாய்ங்க! பாத்து நடந்துக்கோங்க!
எங்க ஊருக்கு ஒருத்தரு வந்தா நான் வழக்கமா ஊரை விட்டுத் தான் போவேன். நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சு நாட்டை விட்டே போயிட்டேன் பாருங்க.... :-)
//காலை உண்டி
இடக்கரடக்கல்
என்பதறிக
உபத்திரவமில்லாத வஸ்து
கலாசார நுகர்வு
குற்றாடை நங்கையர்
கலாசாரப் பகிர்வு பொதுவுடமைப்படுத்துகிறேன்//
சந்தேகமே இல்லை! நீங்க ஒரு எழு தாளர் தான்! ஒப்புக்கறோம்! :)
கல்கி, கலக்கி!
வாழ்த்துக்கள் பெனாத்தல்!
இந்தக் கொண்டாட்டத்துக்காக மீண்டும் ஒரு முறை அட்லாண்டிக் சிட்டி போய், இத்தாலியத் தோசை சாப்பிட்டு வருவோம்! :)
ஆயில்ஸ் மற்றும் அமீரகப் பொதுமக்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பு:
பெனாத்தலார் சூதாடித் திரும்பி வரும் வழியில்...
ஒரு "கனரகக் கன்னி"...
நம் எழுத் தாளரை நோக்கி ஏக்கமாக...
நெருப்புப் பெட்டி இருக்குமா? என்று வினவினாள்!
விரலைக் காட்டித் துழவினாள்!
ஆனால் எதற்கும் பத்திக் கொள்ளாத நம் பெனாத்தலார்...
அக்கன்னிக்கு அக்கினி தர மறுத்து விட்டார்!
முல்லைக்குத் தேர் தந்த பாரியின் நாட்டில்...
மயிலுக்கு ஆடை தந்து அரவணைத்த நாட்டில்...
பெனாத்தலார் மட்டும் தமிழ் மரபுக்கு மாறாக நடந்து கண்டு...
எழுத்துலகமே ஒரு கணம் ஏங்கிப் போனது! அந்தக் கன்னியும் தான்!
லைட்டர் மறுத்த ரைட்டர் என்ற பட்டமும் அங்கேயே பெனாத்தலாருக்கு வழங்கப்பட்டது!
இது குறித்த மேல் விசாரணையை, இந்தப் "பய"ணக் கட்டுரைகளில், பயமில்லாமல் தொடருமாறு அமீரகச் சிங்கங்களைக் கேட்டுக் கொள்கிறேன்!
ஆஹா சுடச்சுட பதிவு போட்டுட்டீங்களே பினாத்தலாரே :) அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் :)
/லைட்டர் மறுத்த ரைட்டர் என்ற பட்டமும் அங்கேயே பெனாத்தலாருக்கு வழங்கப்பட்டது!//
மைன்ட்ல வச்சுகிட்டோம்... அடுத்த அமீரக பதிவர் சந்திப்புல பட்டத்தை ஞாபகப்படுத்தி அழைச்சிடுறோம். :)
லைட்டர் மறுத்தாரா .... லைட்டா மறுத்துட்டு ...பின்ன கவுந்துட்டாரா, நம்ப ரைட்டர்
Post a Comment