Oct 25, 2010

அல்வா!

தமிழ் பேப்பரில் ஒரு தொடர்கதை எழுதி வருகிறேன். திரில்லர் என்பது மட்டும்தான் ஆரம்பிக்கும்போது போட்டுக்கொண்ட விதிமுறை. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கேன்வாஸை விரிவுபடுத்தி ஃப்யூயல் செல் ஆராய்ச்சி, தொழில் ஒற்றறிதல் (industrial espionage-ங்க :-)) என்று எகிறி, இந்தியா, மத்தியகிழக்கு, கோஸ்டா டி ஸொல், பென்சில்வேனியா, நடுக்கடலில் ஆயில்ரிக் என்று எல்லா இடங்களுக்கும் பறக்கிறது கதை.ஓரளவுக்கு கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தியவுடன் போஸ்டர் ஒட்டலாம் என்று காத்திருந்தேன். இப்போது கதை கியர் ஷிஃப்ட் ஆகிவிட்டது, ரன்னிங்கில் ஏறுகிறவர்கள் வசதிக்காக:

1

2

3

4

கருத்துகளைச் சொன்னால் தன்யனாவேன்.

9 பின்னூட்டங்கள்:

Vino said...

நேனுதான் பஸ்ட் கமெண்ட்

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

எட்டாத உயரத்துக்குப் பறந்துட்டீங்க!!!!!

ஆயில்யன் said...

//ரன்னிங்கில் ஏறுகிறவர்கள் வசதிக்காக//

ஸோ...............!

லேட்டா வர்றவங்களுக்குத்தான் எப்பவுமே லேட்டஸ்ட்டு சேதி இருக்கும் அப்படிங்கற உண்மையை பொதுவில போட்டு உடைச்சுட்டீங்க ! ஒகே! :)

ஆயில்யன் said...

அரதப்பழசு போட்டோவ போட்டு விளம்பரப்படுத்தி எல்லாருக்கும் டைட்டில் கொடுத்துக்கிட்டிருக்கீங்க! :)

☀நான் ஆதவன்☀ said...

:) வாழ்த்துகள் தல

திவாண்ணா said...

என்னமோ ப்லாக் படிக்கிற மாதிரி நிறைவா இல்லை! ப்லாக் மாதிரி பின்னூட்டங்களோ அதுக்கு ஆதர் பதிலோ இல்லாம இருக்கறதா என்னன்னு தெரியலை!

Sridhar Narayanan said...

முதல் அத்தியாயம் வந்தவுடனேயேப் படிச்சேன். சடசடன்னு நிறைய சொன்னாப்புல இருந்தது. சரி பெரிய நாவல்னா அப்படித்தான் ஆரம்பிக்கும்னு அடுத்தடுத்து படிச்சிட்டிருக்கேன்.

//இரும்பு, இரும்பு ஆக்ஸைடாகுது. தண்ணீர்லே இருக்கற ஆக்சிஜன்னாலே. அதை ப்ராப்பரா கெமிக்கல்ஸை வச்சு பாஸிடிவ் ப்ளேட்லே இருந்து நெகடிவ் ப்ளேட்டுக்கு ஓடவிட்டா, கரெண்டும் ஓடும்.//

Fuel Cells பத்தில்லாம் கலக்கலா கொண்டு வந்திட்டீங்க. நல்லா போயிட்டு இருக்கு :)

காரெக்டரைசேஷன்லயும், அறிமுகபடுத்தறதிலேயும் இன்னும் கவனமா இருந்திருக்கலாம்னு தோணுச்சு.

// “திஸ் வில் பி ஹர் லாஸ்ட் ஆன் காமெரா” ஆக்ஸ்ஃபோர்டு கல்வி தெரிந்தது அவன் ஆங்கிலத்தில்.//

ஒரே வாக்கியத்தில் தெரிஞ்சிருமா? :))

இன்னும் ஆயில் ரிக்-லாம் வரப்போகுதுன்னு சொல்றீங்க. வீ த வெய்ட்டிங்.

அகில் பூங்குன்றன் said...

கதை சூப்பரா இருக்குங்க.தொடரவும்.

Anonymous said...

Sorry, Thodarkathai patikka poRumai illai. Moththamaa Naavalaa vanthathum sollungka..vaangip patissuruveen :)

sa.sankar

 

blogger templates | Make Money Online