Oct 2, 2010

எந்திரன் - DOT!

எந்திரன் படத்தை பாலாபிஷேகம் செய்யும் சுபயோக வேளையான ரிலீஸ் நாளின் காலை ஏழரை மணிக்கு பார்க்க நேர்ந்தது, டெக்னிகலி முதல் நாள் இல்லை. சன் பிக்சர்ஸின் வெறுப்பேற்றும் மார்க்கெட்டிங், ஒரே கதையை இந்தியன் முதல்வன் அந்நியன் என்று நடிகர்களை மட்டும் மாற்றி மாற்றி எடுத்த ஷங்கர், பில்டப்பில் கவிழ்ந்து நான் பார்க்குமுன்னே பயந்து ஓடிவிட்ட குசேலன் புகழ் ரஜினி, உலக அழகிக்கு பக்கத்தில் கேள்விக்குறி போடவைத்த ராவணன் ஐஸ்வர்யா - எதுவுமே சகுனமாக இல்லை - இருந்தாலும் எப்பவுமே பாஸிடிவை விட நெகடிவ் விமர்சனங்கள்தானே ஹிட் ஆகும், இதில் விடுவதை அதில் பிடித்துவிடலாம் என்றுதான் போனேன்.
 
எந்த பில்ட் அப்பும் இல்லாமல் நேரடியாக ரஜினியைக் காட்டியது, ஒரு விஷயமாகக் கூட வேறு எந்த ஊர் ரசிகனுக்கும் படாதுதான், ஆனால் தமிழ் சூழலில் பெரிய ஆச்சரியம்தான்.
 
வசனம் என்று சுஜாதா-ஷங்கர்-கார்க்கி பெயர்கள் போடப்பட்டாலும், சுஜாதா ரசிகனுக்கு எல்லா ரசிக்கவைக்கும் வசனங்களுமே சுஜாதாவாகத்தான் காட்சியளித்தன. முதல் பாதியின் காமெடி கலாட்டாவில் காட்சியும் வசனமும் போட்டி.
 
"உள்ளே உயிரோடதான் இருக்காரா?" "இல்லை Wire ஓட இருக்கார்"
 
வழுக்கைத்தலையனிடம் முடிவெட்டுபவர் "நகம் வெட்டறாப்பல பாத்து வெட்டிடறேன் சார்"
 
"தலையைத் திருப்பணுமா? கண்ணாடி பாக்கலாமில்ல?" "முன்னாடி சொல்லலாமில்ல?"
 
"உனக்கு பிடிச்சிருந்தா கன்னத்தில எச்சி பண்ணுவியா?"
 
"Who is that செல்லாத்தா? 30 DB over allowed Limit!"
 
கதை விட்டலாச்சார்யா ரேஞ்சுதான் என்றாலும் பேக்கேஜிங் நம்பும் விதமாக இருந்ததில், கழட்டிவைத்த மூளையை மாட்ட அவகாசமே கொடுக்காமல் ஓடியது திரைக்கதை.
 
கடைசி பத்து-பதினைந்து நிமிஷம் தவிர்த்து பெரும்பாலும் தெளிவாகவே செல்கிறது, பொதுமேடையில் ரோபோ அறிமுகம், AIRD அப்ரூவல், தீவிபத்து, டிவி கவரேஜ், பிரசவம் பார்ப்பது என்று காட்சிகள் கோர்வையாக, வேகமாகப் பறக்கும் முதல்பாதி, இரண்டாம் பாதியில் கொசு சீன் கொஞ்சம் கடி என்றாலும் கொசுவின் பெயருக்காகவே (ரங்குஸ்கி) ரசித்தேன்! ஆனால் அந்த க்ளைமாக்ஸ் நிச்சயம் ஓவர்தான். க்ராபிக்ஸும் கூர்மையாகப் பார்த்தால் குட்டிப்பிசாசு ரேஞ்சுதான்.
 
விஞ்ஞானி ரஜினியிடம் சொல்லிக்கொள்வது போல ஒன்றும் இல்லை. ஒரு அரிவாளுக்கு பயந்து மூச்சிரைக்க ஓடிவரும் தைரியசாலியாக ரஜினியைக் காட்டுவதும் தமிழ் சூழலுக்கு மட்டும் புதுமை.
 
ஆனால் சிட்டி! முதல் பாதியின் அப்பாவி நகைச்சுவை, இரண்டாம் பாதியின் வில்லத்தனம் - ரஜினியின் வில்லத்தனத்தை நான் இவ்வளவு ரசிப்பேன் என்று "ரோபோஓஓ" டயலாக்கின்போதுதான் அறிந்துகொண்டேன். "ஏபிநெகடிவ், பெட்ரோலுக்கு பதில் தண்ணீர், கரெண்டு கட்டு, வசீ, எங்கப்பா இருக்கே?" புத்திசாலியான வில்லன் இருக்கும்போது, டேனிடென்சொங்பாவைக் (நன்றாகவே நடித்தாலும்) கழ்ட்டிவிட்டதை நியாயப்படுத்துகிறது. தேவதர்ஷினியிடம் "பையனை ரோபாடிக்ஸ் படிக்க வை, நல்ல ஃப்யூச்சர்" என்று சொல்லிக்கொண்டே தலையைக் கழட்டும் இயல்பான நடிப்பு - இத்தனை வருடங்களுக்குப் பிறகு தேவையில்லை என்றாலும், ரஜினிக்கு ஒரு மைல்கல்தான் :-)
 
ரசித்தேன் - against all odds.ரசிப்பீர்கள்.
 
ஒரு ட்விட்டில் பார்த்தேன், @ramkij என்று நினைக்கிறேன் - சிவாஜி ரஜினிக்காக ஷங்கர் எடுத்த படம், எந்திரன் ஷங்கருக்காக ரஜினி நடித்த படம் என்று. உண்மை.
 
 

12 பின்னூட்டங்கள்:

ஆயில்யன் said...

//இரண்டாம் பாதியின் வில்லத்தனம் - ரஜினியின் வில்லத்தனத்தை நான் இவ்வளவு ரசிப்பேன் என்று "ரோபோஓஓ" டயலாக்கின்போதுதான் அறிந்துகொண்டேன்//
:))


அதே ! அந்த காட்சி செம அட்டகாசம் + கைதட்டல் வாங்கிய ஒரு காட்சியும் கூட !

dot இனி அதிகம் பயன்படுத்தப்படக்கூடும் .

சென்ஷி said...

அடுத்த வாரம்தான் பார்க்கணும்... அதுவரை ஓடுமா?

Anonymous said...

ரொம்ப நல்ல இருக்கு

Shankar.Neyveli said...

கடைசி 15 நிமிடங்கள் கூட, நாம் படம் முழுக்க ஒன்றிவிட்டதால் ஏற்படும் சலிப்புதான். தவிர, ஹாலிவுட் படங்கள் வாரம்தோறும் டிவியில் தமிழில் பேசிபேசி, 'பிரம்மாண்டம் -கிராபிக்ஸ்' எல்லாம் மக்களுக்கு சாதரணமாகிவிட்டது. 'இந்தியன்','முதல்வன்','அந்நியன்' பற்றி சொன்னீர்கள்.அரைத்தமாவையே அரைத்தாலும்,Treatment -screenplay தான் முக்கியம்.அவ்விதத்தில்,ஷங்கர் படம் என்றுமே Audience Movie தான். அவரின் Non-stop வெற்றிக்கும் அதுதான் காரணம்.

R.Gopi said...

பரவாயில்லை தலைவா...

ரொம்ப ஓட்டாம, படம் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு.....

ஆயிரம் குறை கண்டுபிடித்தாலும், அது என்னவோ ரஜினி மேஜிக் அனைத்தையும் அடித்து தூள் ஆக்கி விடுகிறது...

அடுத்த வாரம் வரை ஓடுமா என்று ரொம்ப அப்”பாவி”யா சென்ஷி கேக்கறாரே.... இங்கன தான் எங்காவது இருக்காரா, இல்ல செவ்வாய் கிரகத்துலயா?? யோவ்.. ஏன்யா உனக்கு இந்த கொலவெறி...

Anonymous said...

Indha padathayaa bramaandamnnu solraanga??????? Adapaveengalaa, Rajini rasigargal yaen ippadi irukkaanga???????

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

Anonymous said...

VADIVELU SOLVADHAI POLA, DIRECTOR SHANKAR and SUN TV, RAJINI VECHI COMEDY PANNITAANGA. INIMAEL RAJINI RASIKARGAL POLITICS PATHI NENAICHI KOODA PAARKA MUDIYADHU. "ENDHIRAN" MOVIE IS A "DISGRACE" TO RAJINI FANS. NOW ALL THE POLITICS DOORS ARE SHUT FOR RAJINI AND THE ONLY OPTION IS TO GO TO HIMALAYAS.

mrknaughty said...

நல்ல இருக்கு
thanks
mrknaughty

Vidhya Chandrasekaran said...

தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_07.html

Anonymous said...

yes, we have seen (are seeing ) so many " kadula Poo " movies from holly wood but it is comming from our industry, so we can hands up Shankar many times.

Thamira said...

:-))

 

blogger templates | Make Money Online