Aug 18, 2011

கல்யாணச்சாவு?

சந்தோஷம் என்பதை இருக்கும்போது உணர முடியாது என்று ஒரு வசனம்..

எவ்வளவு விஷயங்களை taken for granted ஆக எடுத்துக்கொண்டிருக்கிறேன்..

வெளியூரில் இருக்கையில் வெள்ளிக்கிழமை சம்பிரதாய ஃபோன் காலில் சக்கரை அளவு எண்களை மட்டும் கேட்டுக்கொண்டு " பார்த்துக்கோம்மா" வுடன் விட்ட நாட்கள்.

ஊரில் இருக்கையில், நண்பர்களைப் பார்க்க, அரட்டை அடிக்க, ஊர்சுற்ற என்ற நேரம் ஒதுக்கி சாய்வு நாற்காலியைப்பற்றிச் சிந்திக்காமல் விட்ட நாட்கள்..

7 மணிக்கு எழுந்தாலும் தூக்கம் வராமல் நாலரைக்கே எழுந்தாலும் சூடான காபிக்காக அவளை உருட்டிய நாட்கள்..

எனக்குப் பிடித்த கறிகாய் சமைத்து சாப்பிடும்போது முகத்தையே பார்க்கும்போது, எதிர்பார்ப்பது என்ன என்று தெரிந்தும் "சச்சின் அந்த ஷாட் ஆடியிருக்கக்கூடாது" என்று அவள் anxiety ஐ அதிகப்படுத்திய நாட்கள்..

தொடர்களின் ஆழத்தில் அமிழ்ந்துவிட்டவளைத் தொடரின் தரத்துக்காகக் கிண்டல் அடித்த நாட்கள்..

வெளியூரின் மழை குளிரிலும் மேடு பள்ளங்களிலும் எங்கள் மகிழ்ச்சிக்காக உடன் வந்தவளின் உபாதைகளைச் சிந்திக்காமல் கும்மாளம் போட்டு வேகமாக வரச் சொன்ன நாட்கள்..

சில்லறை ஆசைகளை அலட்சியப்படுத்தி உனக்கென்ன தெரியும் என் priorities என்று எடுத்தெரிந்து பேசிய நாட்கள்..

நினைவின் அடியாழத்து வறுமை நாட்களில் உணவுப்பங்கீட்டில் தன்னைத் துறந்தும் மற்றோர் சாப்பிடாததற்கு எரிந்து விழுந்த நாட்கள்..

எல்லா நாட்களும் மறந்து..

பால்கலசத்தை தலையிருந்த இடத்தில் அழுத்தி இடதுகையால் அஸ்தியை எடுத்துக் கரைத்த நாள் மட்டுமே நினைவில் தங்கியிருக்க..

பேரன் பேத்தி எல்லாம் பாத்துட்டுதானே போயிருக்கா.. கல்யாணச்சாவுதான் என்றவர்க்கு எப்படிச் சொல்வேன் இத்தனை விஷயங்களும்?

27 பின்னூட்டங்கள்:

ILA (a) இளா said...

இந்த மாதிரியான இழப்புகளுக்கு ஈடேயில்லை. இதனைத் தாங்கும் இதயத்தை ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும். அம்மாவின் ஆன்மா சாந்தியடைட்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பால்கலசத்தை தலையிருந்த இடத்தில் அழுத்தி இடதுகையால் அஸ்தியை எடுத்துக் கரைத்த நாள் மட்டுமே நினைவில் தங்கியிருக்க..//

முருகா!
பாலிலேயே குளிக்கும் நீயும், இந்தப் பால் கலசத்தையும் கண் பார்த்துக் கொள்!

அம்மாவின் இன்னுயிர் எம்பெருமானின் அடிக்கீழ் இளைப்பாறி இன்புற வேண்டுகிறேன்! - கோவிந்தா என்னுமோர் நாம நீழலில் - எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!

chinnapiyan said...

என்றும் மறக்க முடியாத நெகிழ்ச்சியான உணர்வுகள்.

பரத் said...

:(

Jayashree Govindarajan said...

தவிர்க்கவே முடியாமல் நடுவயதில் எல்லோரும் தாண்டிவரவேண்டிய கட்டம்- பெற்றோரை இழப்பது. இதில் மற்றவர்களுக்கு நிறைய செய்தி இருக்கிறது என்ற வகையில் முக்கியப் பதிவு.

அம்மாவின் ஆன்மா சாந்தியடையட்டும்.

Cheran said...

Good!!!

ஆயில்யன் said...

//எல்லா நாட்களும் மறந்து..
பால்கலசத்தை தலையிருந்த இடத்தில் அழுத்தி இடதுகையால் அஸ்தியை எடுத்துக் கரைத்த நாள் மட்டுமே நினைவில் தங்கியிருக்க.. //

:(((


அம்மாவின் ஆன்மா சாந்தியடையட்டும் ! :(

முரளிகண்ணன் said...

அம்மாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

தைரியத்தை இறைவன் அளிப்பாராக.

துளசி கோபால் said...

கண்ணீரை அடக்க முடியலை பினாத்தலாரே:(

இருக்கும்போது அருமை தெரியலை என்பது சத்தியமான உண்மை.

அம்மாவின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

அம்மாவின் மறைவுக்கு இரங்கல்கள்.

பதிவிற்கு - பகிர்விற்கு - நன்றி.
//எவ்வளவு விஷயங்களை taken for granted ஆக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.. //
நானும் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

காந்தி பனங்கூர் said...

//பேரன் பேத்தி எல்லாம் பாத்துட்டுதானே போயிருக்கா.. கல்யாணச்சாவுதான் என்றவர்க்கு எப்படிச் சொல்வேன் இத்தனை விஷயங்களும்? //

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் புரியும் என்பார்கள். நம் மன வேதனையை மற்றவர் புரிந்துக்கொள்ள இயலாது என்பதையும், தாயின் அருமையயும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

இது ஒரு கற்பனை பதிவு என்று நம்புகிறேன்.

www.panangoor.blogspot.com

குமரன் (Kumaran) said...

My deep condolences!

Asir said...

:((

Rathnavel Natarajan said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

enRenRum-anbudan.BALA said...

இழப்புகளைப் பார்த்தவன் என்ற வகையில் சொல்கிறேன், இது பேரிழப்பு :( As they say, time is the only healer! அம்மாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

enRenRum-anbudan.BALA said...

இழப்புகளைப் பார்த்தவன் என்ற வகையில் சொல்கிறேன், இது பேரிழப்பு :( As they say, time is the only healer! அம்மாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

SRK said...

ஆழ்ந்த வருத்தங்கள்.

ச.சங்கர் said...

ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

ரசிகன் said...

ஒரு நிமிடம் நின்று, என் வாழ்வில் நான் செய்துகொண்டிருப்பவைகளை எடை போட வைத்த,நெகிழ வைத்த பதிவு.நன்றிகள்.

உங்கள் நினைவுகளில் வாழ்ந்துக்கொண்டிருப்பவரை எப்படி இழப்பு என சொல்ல முடியும்?

கடவுள் அருள் உண்டாகட்டும்.

குறையொன்றுமில்லை. said...

இருக்கும் போதே அருமையை தெர்ஞ்சு
க்கலாம்.ஆனா இழப்புக்கு பின்புதானே புரிஞ்சுக்க முடியுது,

திவாண்ணா said...

மயான வைராக்யம்!

சிங். செயகுமார். said...

அம்மாவின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்.
RIP:-(

pudugaithendral said...

இந்த இழப்பிலிருந்து மீண்டு வரும் சக்தியை உங்களுக்கு ஆண்டவன் தரட்டும் அண்ணா,

அம்மாவுக்கு என் அஞ்சலிகள்

Vino said...

may her soul rest in peace.

Anonymous said...

இன்னும் அழுது கொண்டே இருக்கிறேன், நானும்

தகடூர் கோபி(Gopi) said...

:-(((((

Sh... said...

ஆழ்ந்த அனுதாபங்கள். God created mothers because he cannot be with us always, but why does he take them back?

இது உங்களுக்கு சிறிதேனும் ஆறுதல் தரும் என்று நினைக்கிறேன். (ஏதோ என்னால் முடிந்தது) - http://arvindsdad.blogspot.com/2008/06/amma_05.html

 

blogger templates | Make Money Online