May 14, 2008
ஜெய்ப்பூரும் நானும்
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 32 பின்னூட்டங்கள்
வகை அரசியல், சமூகம், சுயதம்பட்டம்
May 7, 2008
அவியல் (அ) உள்ளேன் அய்யா (அ) ஆல் இன் ஆல் கருத்து சொல்வோமில்ல! (07 May 08)
ஐபிஎல்லுக்காக சொத்தை அடமானம் வைத்து கேபிள் கனெக்ஷன் வாங்கினேன். 6 கோடி விலைபோன அற்புத டோனியின் செண்டிமெண்ட் அல்வா தாங்க முடியவில்லை. ஹேடனோடு ரன் போம், ஹஸ்ஸியோடு பீல்டிங் போம், ஓரம் ஓடு பவுலிங் போம் என்று காலி பெருங்காய டப்பாவாக ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். 5 பவுலர் மட்டும் உபயோகப்படுத்துவது, எக்ஸ்பெரிமெண்ட் செய்யாமை, ஒரு மேட்ச் சுமாரா ஆடிய வித்யுத்தை காவுகொடுத்து ஸ்ரீகாந்தின் தவப்புதல்வனை உள்ளே நுழைத்தது, ஜோகிந்தர் ஷர்மா கடைசி ஓவர் செண்டிமெண்ட் என்று கேனத்தனமான கேப்டன்ஷிப். (ஜோகிந்தர் எந்த ஓவர் போட்டாலும் அதிலே பாக்கி இருக்கும் அத்தனை ரன்னையும் அடித்து ஆட்டத்தை முடித்துவிடுவதால் அந்த செண்டி வொர்க் அவுட் ஆகிறது).. நான் ராஜஸ்தானுக்கு மாறிட்டேன்!
இதுபோன்ற மோசடிகளில் பணம் எடுப்பவன், ஏமாற்றுகிறோம் என்று தெரிந்து செய்பவன் மட்டும்தான். மற்றவனுக்கு ஆசை ஏமாறும் வரை இருக்கிறது. வயாகராவிலிருந்து நைஜீரியாவரை ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மெயில் அனுப்பி எவனாச்சும் ஏமாறுவானா என்று பார்த்துக்கொண்டிருக்கும் கூட்டம் வேகமாக அதிகரிக்கிறது. பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்துவைக்கும் வல்னரபிள் மானிடரே கவனம்!
- யாரடி நீ மோகினி பார்த்தேன். டுபாக்கூர். கதை திரைக்கதை செல்வராகவனாம்! அடப்போங்கய்யா!
- பொம்மரில்லு படம் வசனம் புரியாமல் பார்த்தேன், வசனம் புரிந்திருந்தால் ரசித்திருப்பேனோ என நினைத்ததைப் பொய்யாக்கியது ப்ரேம்-பை-ப்ரேம் ரீமேக் சந்தோஷ் சுப்ரமணியம். ஹ ஹ ஹாசினி மாதிரி ஒரு கேனைக் காதலியை வைத்துக்கொண்டு சந்தோஷ் எப்படித்தான் குப்பை கொட்டப் போகிறானோ பாவம்!
- நேபாளி திரைக்கதை நன்றாக இருந்தது. பழைய கதையையும் சொல்லும் விதத்தில் சுவாரஸ்யப்படுத்தி இருந்தார்கள். பார்த்ததற்கு வருந்த வைக்கவில்லை.
- குருவி இனிமேல்தான் பார்க்கவேண்டும் (நான் ஒரு மசாக்கிஸ்ட்). ஆனால் விமர்சனம் போக்கிரிக்கு எழுதியதே பொருந்தும் எனத்தோன்றுகிறது பா ராகவன் விமர்சனத்தைப் பார்த்தால்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 43 பின்னூட்டங்கள்
Apr 26, 2008
இரண்டும் ஒன்றும்
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 13 பின்னூட்டங்கள்
Apr 22, 2008
இதென்ன கலாட்டா?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 24 பின்னூட்டங்கள்
Apr 13, 2008
புத்தாண்டு வாழ்த்துக்கள் - கலைஞரின் ராஜதந்திரம்!
இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?
=>தமிழ் நாட்டில், பொங்கல் ஆண்டு முதல் நாளாக அறிவிப்பதற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்?
பொங்கல் இந்துக்களின் திருநாள் என்றால் உலக இந்துக்கள் அனைவரும் "பொங்கல்" கொண்டாடவேண்டும். இது தமிழர் திருநாள், தமிழர் அறுவடைத் திருநாள்,தமிழர் நன்றித் திருநாள்.
பல மதத்தினர் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களின் மத ஆண்டாக எதை வேண்டுமானலும் கொள்ளலாம் அதற்காக சமஸ்கிருத ஆண்டுதான் தமிழ் ஆண்டாக இருக்க வேண்டும் என்று சொல்வது எப்படி? நாளை இஸ்லாமும்,கிறித்துவமும் அவர்கள் ஆண்டை தமிழ் ஆண்டாக வைக்க வலியுருத்தினால் ?
நிச்சயம் "இந்து மதம் அல்லது சனாதன சமஸ்கிருத ஆண்டாக" ஒரு பொதுவான ஒரு தேதியை இந்தியா முழுக்க பயன்படும் வண்ணம் யராவது அறிவிக்கலாம்.
"இந்து" தமிழ் நாட்டில் மட்டும் இல்லை அல்லவா?
அப்படி அகில உலக "இந்து மதம் அல்லது சனாதன சமஸ்கிருத ஆண்டாக" ஒன்று அனைவராலும் ஏற்கப்படும்போது தமிழ்நாட்டில், அந்த மத மக்களுக்காக அதை விடுமுறையாக அறிவிக்கலாம்.
மதம் என்பது தனிப்பட்ட உரிமை. தனிமனித விருப்பம். புத்தாடை உடுத்துவது, கோவில்களுக்கு செல்வது என்பதை தவிர சித்திரைப் புத்தாண்டில் என்னவிதமான சடங்குகள் கொண்டாடப்படுகின்றன என்பதை சொன்னால் அறிந்து கொள்வேன். தை முதல் நாளை புத்தாண்டாக அறிவித்ததால் அவையெல்லாம் தடைபடும் என்று சொன்னால் அவர்களின் மத நம்பிக்கை என்பதை போலித்தனமானது என்றே சொல்வேன்.
புத்தாண்டை இடம் மாற்றுவதால் உங்களுக்கு என்ன நட்டம் ? உங்களை யாரும் சித்திரையை தவிர்க்கச் சொல்லவில்லையே. அப்படி சொன்னாலும் நீங்கள் கேட்கப்போவதில்லை, பிறகு ஏன் தேவை இல்லாது கவலைப்படுகிறீர்கள் ?
1. இனி சித்திரை முதல் நாள் விடுமுறை கிடையாதா? மத ரீதியான சடங்குகள் செய்ய விருப்பமுள்ளோர் தங்கள் சொந்த விடுப்பில் அவற்றைச் செய்யவேண்டுமா?
சித்திரை முதல் நாளுக்கும் விடுமுறை இருக்கும் - இந்து என்போருக்கான சிறப்பு நாளாக அது இருப்பதில் ஆட்சேபணை இல்லை - ஆனால் தமிழ்ப் புத்தாண்டு எனக் கூறப்படக்கூடாது.8. இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?
அரசாங்கம் யாரையும் தடுக்கவில்லை, பெயரை மட்டும்தான் மாற்றி இருக்கிறது..
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 33 பின்னூட்டங்கள்
