Jan 30, 2005

நன்றி..நன்றி..நன்றி..

கடந்த பதிவிற்கு வந்த பின்னூட்டங்களினால் மனம் நெகிழ்ந்து போய் இருக்கிறேன்.

மறுபடியும் என் எழுத்தின் குறைபாட்டினால், நான் சொல்ல வந்த விஷயம் சரியாக மக்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதனால் வருத்தமும் கூட.

நிச்சயமாக, நான் மனம் நொந்து போயோ, வெந்து போயொ அதைப் பதியவில்லை.

சுருக்கமாக விளக்க முயல்கிறேன் :-

எழுத்து என்பது, அச்சிடப்பட்டதோ அல்லது கணிணித் திரையில் காண்பதோ, நல்ல தரமானதாக இருக்க வேண்டும் என்பது என் ஆவல்.

அவ்வாறு தரம் இல்லாத அரைவேக்காட்டு எழுத்துக்களை, குறைப்பிரசவங்களை வாசகன் என்ற முறையில் நான் மதிப்பதில்லை, தனிப்பட்டு அவற்றை எவ்வளவோ விமர்சனம் செய்திருக்கிறேன், கிண்டல் அடித்திருக்கிறேன்.

நான் எழுதும்போதும் அந்த தரத்தை "ஒரு வாசகனாக" எதிர்பார்க்கின்றேன் - அந்த அளவிற்கு, தரத்திற்கு எழுத என்னால் முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

எனவே, என் எழுத்து பண்படும் வரையில், எனக்கே பிடிக்கும் வரையில், காகிதத்தில் எழுதி, செப்பனிட்டு, சீர்திருத்தி பிறகே மற்றவர் கண்பார்வைக்கு அதை அனுப்ப வேண்டும் என முடிவெடுத்து, எழுத்தாளர் சுரேஷிற்கு விடுமுறை அளித்து அனுப்பி உள்ளேன் அவ்வளவே!

வாசகன் எப்போதும் போல உலாவுவான், மற்றவர் எழுத்தில் குற்றம் கண்டுபிடிப்பான், பின்னூட்டம் இடுவான் - அவன் அதை தொடர்ந்து செய்வதற்கு, எழுத்தாளன் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதனாலேயெ இந்த கட்டாய விடுப்பு.

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு சக வலைப்பதிவனை உற்சாகப்படுத்தும் நல்லெண்ணம், பெருந்தன்மை, அனைவருக்குமே இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் உள்ளது.

மீண்டும் நன்றிகள்.

3 பின்னூட்டங்கள்:

மீனாக்ஸ் | Meenaks said...

உங்களால் முடிகிற போதெல்லாம், உங்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய உங்களது எழுத்துகளைத் தவறாமல் பகிர்ந்து கொண்டிருங்கள். அதுவே அனைவரும் எதிர்பார்ப்பது.

அல்வாசிட்டி.விஜய் said...

சுரேஷ் அரைவேக்காடு எழுத்து, நல்ல எழுத்து மிக எழுதாக தரம் பிரிக்கலாம். ஆனால் நல்ல எழுத்துக்களும் ஒரு காலத்தில் நமக்கு தெரியாமல் அரை வேக்காடாகயிருந்து தான் நல்ல எழுத்தாக செப்பனிடப்பட்டிருக்க முடியும்.

ப்ளாக்கர்கள் ஒரு புகழ் பெற்ற, இல்லையென்றால் நல்ல ஒரு எழுத்தாளனுக்காக மட்டுமே கண்டுபிடிக்கப் படவில்லை. அது நமக்கு அளிப்பது சுதந்திரம், உந்துதல், புதிய முயற்ச்சிகள், விமர்ச்சனங்கள். எவனொருவன் கடுமையான விமர்ச்சனங்களையும் நல்ல விதமாக எடுத்துக்கொண்டு ஆக்கத்திற்கு பயன்படுத்துகிறனோ அவனே பண்படுகிறான். முதலில் நீங்கள் எழுதுவது வாசகனாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கவேண்டும். அதற்காக வேண்டுமானால் பேப்பரில் எழுதி உங்களுக்கு நீங்களே நீதிபதியாக திகழலாம். ஆனால் உங்களுக்கு பிடித்து மக்களின் சுவையோட்டத்தை நாடி பிடித்துப் பார்க்க கட்டாயம் பொதுவுக்கு வரவேண்டும். சூழ்நிலையைக் கற்றுக் கொள்ளும் போது தானாகவே ஜனரசனை சூட்சுமம் பிடிபடும். எனினும் அது லேசு அல்ல. எனவே கட்டாயம் அரைவேக்காடோ, முழுவேக்காடோ அதற்கு கட்டாயம் பொதுப்பிரவேசம் தேவை, விமர்ச்சனங்களும் தேவை அப்போது தான் உங்களுக்கென்ற ஒரு ரைட்டிங் ஸ்டைல் கொண்டுவர முடியும் என்பது என் கருத்து.

Kangs(கங்கா) said...

முத்து அண்ணாச்சி நேற்று எனக்கு கொடுத்த ஐடியாவை இன்று உங்களுக்கு கொடுக்கிறேன்.

Use Either of the following sites to find out the visitors coming to your site.
http://www.nedstatbasic.net/s?tab=2&link=1
http://www.statcounter.com/
Many usually visit.. but they may not posted comments

 

blogger templates | Make Money Online