Mar 13, 2005

தமிழில் Game Show நிகழ்ச்சிகள் -- எப்போ வருமோ?

ஸோனி டிவியில் ஒரு நிகழ்ச்சி - இந்தியன் ஐடல் - சிலர் பார்த்திருக்கலாம்.
சுருக்கமாகச் சொன்னால், இது சன் டிவியின் சப்த ஸ்வரங்கள் போலத்தான்.

ஆனால், நிகழ்ச்சியின் வடிவமைப்பு, அரங்கங்கள், நடுவர்கள், பார்வையாளரின் பங்களிப்பு ஆகியவற்றில் இந்த நிகழ்ச்சி காட்டிய பிரம்மாண்டம், தவறிப்போய் சேனலைத்திருப்பியவர்கள் கூட தொடர்ந்த பார்வையாளர்களாய் மாற்றக்கூடிய திறன் படைத்தது.

வெறுமனே பாடும் திறத்தை மட்டும் மதிப்பிடாமல், குரலின் தனித்தன்மை, வழங்கும் முறை ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்து, பார்வையாளர்களின் குறுஞ்செய்தி வாக்குகளின் படி வாரம் ஒருவரை கழித்துக்கட்டி, கடைசியாக அதிக வாக்குகள் பெற்றவரை இந்தியன் ஐடல் ஆக தெரிமானம் செய்தார்கள்.

கடைசி நிகழ்ச்சிக்கு வந்த வாக்குகள் மொத்தம் 3.1 கோடி (உத்தரப்பிரதேச சட்ட சபைத்தேர்தலில் பதிவான வாக்குகளை விட அதிகம்)

ஸ்டார் டிவியின் கோன் பனேகா க்ரோர்பதியின் வெற்றியும் உலகப்பிரசித்தம்.

இந்த நிகழ்ச்சிகளோடு போட்டி போடும் வகையில் தமிழில் ஒரு நிகழ்ச்சி கூட இல்லாதது ஏன்?
இப்போது இருக்கும் சில நிகழ்ச்சிகளும் பங்குபெறுவோர் மற்றும் பார்வையாளர்களை ஒருசேர அவமானப்படுத்துவதாகவே உள்ளன.

உதாரணம் "கமலஹாஸன் நடித்த விருமாண்டி படத்தின் கதாநாயகன் யார்?" போன்ற அறிவு பூர்வமான கேள்விகள்!

ஜாக்பாட் -(ஜெயா டிவி) - மக்களிடம் எடுக்கப்ப்பட்ட(?) ஒரு சாம்பிள் சர்வே முடிவு:

போலிஸ்காரரிடம் லைசென்ஸ் இல்லாமல் மாட்டிக்கொண்டால் என்ன செய்வீர்கள்? - நிறுத்தாமல் சென்று விடுவேன் (45%), லஞ்சம் கொடுப்பேன் (35%)

இதில் அறிவுபூர்வமாகக் கேள்விகள் கேட்கப்படும் ஒரு சுற்றில், பதில் அளித்து முன்னேறுபவர்களை விட, அடுத்தவர் பதில் அளிக்கமாட்டார் என சவால் விட்டு ஜெயித்து முன்னேறுபவர்களே அதிகம். இத்தனைக்கும் கேள்விகள் பத்தாம் வகுப்பு தரம்தான்!

(இந்த லட்சணத்தில் இது பெண்களுக்கு மட்டுமான நிகழ்ச்சியாம்! பென்களை அவமானப்படுத்துவதற்கு வேறு வழி தெரியவில்லையா?)

சில காலம் முன்னால் வரை கூட, தமிழ்த் தொலைக்காட்சிகளில் பல நல்ல கேம் ஷொக்கள் இருந்து வந்தது - சொல் இல்லை செல், வார்த்தை விளையாட்டு, வினாடி வினா, கோடீஸ்வரன் (ரி), லட்சாதிபதி.. கொஞ்சம் கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளையும் துரத்திவிட்டு கண்ணீர்த்தொடர்களே இன்று ஆக்கிரமிக்கின்றன.

எனக்கு விடை தெரியாத கேள்வி என்னவென்றால், தமிழர்களுக்கு கேம் ஷோ நிகழ்ச்சிகள் பிடிப்பதில்லையா அல்லது தயாரிப்பு - ஆராய்ச்சி செலவுகளினால் கட்டுப்படி ஆவதில்லையா?
பதில் இரண்டாவதாகத்தான் இருக்கும் என நம்ப விரும்புகிறேன்.

சினிமாவையும், தொடர்களையும் விட்டு வெளியே வந்து தரமான வினாடி வினா, மூளைக்கு வேலை நிகழ்ச்சிகள் தமிழுக்கு, தமிழர்களுக்கு தேவை.

எப்போ வருமோ?

4 பின்னூட்டங்கள்:

Navan said...

கண்ணீர் தொடர்களுக்கு இருக்கும் அளவுக்கு இதற்கு பார்வையாளர்கள் இல்லை. கேள்வி பதிலில் கொஞ்சம் பார்வையாளாருக்கும் விடைகள் தெரிந்தால் தான் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். கண்ணீர் தொடர் பார்க்கும் பெரும்பாலானவர் செய்தித்தாள் எங்கே படிக்கின்றனர்.


நவன்

பினாத்தல் சுரேஷ் said...

//பார்வையாளாருக்கும் விடைகள் தெரிந்தால் தான் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்
//

நீங்கள் கூறுவது உண்மைதான் நவன். இருப்பினும், கொஞ்சம் சுலபமான மற்றும் கொஞ்சம் கஷ்டமான கேள்விகளை தொகுத்து வழங்கினால், பார்வையாளருக்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக அமையக்கூடுமே?

ஆனால் இப்படி கேள்விகளை தொகுக்க, ஆராய்ச்சி தேவைப்படும். ஒரு ரிடயர்டு நடிகையும், மாமியாரும் இருந்தாலே கண்ணீர்தொடர் எடுத்து விடலாம்!

I feel Media is depriving the public.

Kangs(கங்கா) said...

n-iingkaL solluvathu sari.. muuLaikku veelaiyenRaal een thaan ippadi payappadukiRaarkaL enRu theriyavillai.

பேயோன் said...

இந்த பதிவை படித்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்டதா? நம்பவே முடியவில்லை.

 

blogger templates | Make Money Online