மு கு: இந்தப் பதிவிற்கும், வலைப்பதிவுகளில் இன்று காலையில் இருந்து நடைபெற்றுவரும் பின்னூட்டப் போருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இந்தியன் - படத்தில் தாத்தா கொலை செய்கிறார் என்று பார்வையாளர்களுக்குத் தெரியும் - ஆனால் கதையில் வரும் போலீஸுக்குத் தெரியாது - முதல் பாதியில். பின்னால் போலீஸ் துப்பறிந்த பிறகு, தாத்தா வெளிப்படையாக டிவியில் ஒளியும் ஒலியும் காட்டி எல்லோருக்கும் தன்னை அறிவித்துக் கொள்வார்.
ஆளவந்தான் - படத்தில் நந்து எங்கே இருக்கிறான் என்று விஜய்க்குத் தெரியாது - முதல் பாதியில். பின்னால் விஜய் துப்பறிந்த பிறகு, நந்து வெளிப்படையாக நடு ரோட்டில் வெறி ஆட்டம் போடுவான்.
அந்நியன் - படத்தில், அம்பியும் அந்நியனும் வேறு ஆட்கள் என்பது போல முதல் பாதி காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பின்னால் இருவரும் ஒருவரே எனத்தெரிந்தவுடன் அடுத்தடுத்த நொடியிலேயே அம்பி அந்நியானக மாறுவான்.
இந்தத் திரைக்கதை அமைப்புகளில் இருந்து என்ன தெரிகிறது?
மக்களுக்குத் தெரியாமல் இருக்கும் வரை இரட்டை வேடம் போடுபவர்கள், தெரிய ஆரம்பித்த பிறகு தங்கள் வெறி ஆட்டத்தை அதிகப்படுத்துகிறார்கள்.
Jul 12, 2005
தமிழ் சினிமா சஸ்பென்ஸ் திரைக்கதைகள் - ஒரு பார்வை:-)
Subscribe to:
Post Comments (Atom)
10 பின்னூட்டங்கள்:
சுரேஷ்.. அருமையா விளங்கி வெச்சிருக்கீங்க..(சினிமாவை சொன்னேன்).. இருங்க இருங்க.. உங்களுக்கு(ம்) நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்.
பினாத்தல் சுரேஷ் அவர்களே,
நீங்கள் அருமையாக எங்களுக்கு ஆதரவாக எழுதுகிறீர்கள். இதேபோலவே அவர்களை எதிர்த்து பதிவுகள் எழுதவும். எங்கள் பார்ப்பன இனம் செழிக்க பாடுபடவும். சென்னை வரும்போது உங்களுக்கு எங்கள் சங்க உறுப்பினர் கார்டு தருகிறேன்.
இது பினாத்தல் மாதிரி தெரியலையே
தமிழ் திரைப்படங்களின் வெற்றியின் ரகசியம் பற்றி அறிய
http://vettippechu.blogspot.com/2005/06/blog-post.html பார்வையிடவும்.
அய்யா.. பெனாத்துரவகளே...
நாங்க ஒங்க லின்க்-க ஹைஜாக் பண்ணிட்டோம்ல
இப்பபோயி எங்க blog-ல ஒங்க விளம்பர link-அ click பண்ணுங்க பாப்போம், அது எங்க போவுதுன்னு அப்ப தெரியும்!
- ஞானபீடம்.
கருத்துக்களுக்கு நன்றி அனைவருக்கும்.
போலி - ஒழிந்து போ. இன்னுமா ஆட்டம் போடுகிறாய்?
சம்பந்தம் இல்லைன்னு சொன்னாலே ஏம்பா எல்லாம் வில்லங்கமா நினைக்கிறாங்க... ப.ம.க தம்பி சினிமா அனலிஸ்டு சுரேஷ¤வுக்கு அடுத்த மந்திரிசபை அமையும் போது (தலைவர் மச்சானுக்கு வேறு முக்கிய இலாகா கிடைத்தால்) சினிமாத்துறை ஒதுக்கப்படும் என்று ப.ம.க உறுதி கூறுகிறது...
முகமூடி - சுய விளம்பரம் தேவைப்படாத பதிவு
முகமூடி - ஹைஜாக் தேவைப்படாத பதிவு
Suresh,
Your observation and analytical skills are unparalleled ;-)
You really MUST be a good teacher :)
Thanks Mugamoodi, Bala!
Bala - intha pugazchi konjam toooooooooo much maathiri theriyale?
Post a Comment