என் கண்ணாலம் நடந்த கதைய கேக்குறீங்களா?
அப்ப நான் வேல வெட்டி இல்லாம இருக்கேன்.. கையிலே காலணா இல்லே
அன்னிக்கு ஒரு நா காத்தாலேர்ந்தே ஒரே பசி. மூணு நாளா சரியான சாப்பாடு கெடயாது.
வயக்கம் போலவே எதிர்த் தெரு மாட்டுக்காரன் கொட்டாய்லே பூந்து கொஞ்சம் பால திருடிக் குடிக்கறத தவிர வேற வழி இல்லை.
ஆனாக்க அதிலேயும் ஒரு சிக்கல்.. அந்த மாட்டுக்காரன் பொண்ணு ஒருக்கா என்னய பாத்துட்டா. இன்னோரு தபா பாத்தா அப்பங்காரன் கிட்டே போட்டுக் கொடுத்துடுவா..
சே.. என்ன பொழப்புடா இது. தரித்தரம் புடிச்ச பொழப்பு.
ஒருக்கா போயிப் பாக்கலாம்.. அவ இல்லேன்னா உள்ள பூந்துக்கலாம்..
வாசல்லியே நின்னிகினு இருந்தா அவ..
"இன்னாய்யா பால் திருடி குடிக்க வந்தியா?"
" இல்லேம்மே! நாலு நாளா பசி! கைலே காலணா இல்லே- அதான்.. உங்க அப்பன் கிட்டே சொல்லிடாதே!"
"இரு நானே பால் கொண்டாறேன்"னு உள்ளாற போயி ஒரு சொம்புலே பால் கொணார்றா.
குடிச்சு முடிச்சுட்டு," இன்னாம்மே, திருடனுக்கே பால் தரியே, உன் அப்பன் ஆத்தாக்கு தெரிஞ்சா இன்னா ஆவும்?"
"தெரிஞ்சா தெரிஞ்சுட்டுப் போவுது.. நீன்னா எனக்கு அவ்வளோ இஸ்டம்"
"புத்தியோடதான் பேஸ்ரியா? நானே ஒரு பஞ்சப் பரதேசி"
"அதெல்லாம் எனக்குத் தெரியாது - உன்னிய ரொம்ப நாளா பாத்துகினு கீறேன் - உன்னியதான் கண்ணாலம் கட்டுவேன்"
திருப்பி பாத்தா அவ அப்பன் கோவமா என்னிய பாத்துகினு நிக்கிறான்..
"டேய் பன்னாட.. என் பொண்ணு மேலேயா கை வக்கிற?"ன்னு அடிக்க வரான்.
கூட்டம் கூடிடிச்சு.
மேலத்தெரு பரமு எனக்குக் கட்டம் கட்டிப் பேஸ்றான்
"பால்கார் - நம்ம பாலு பாவம் வாழ்ந்து கெட்ட குடும்பம்- நல்ல பையன் - நீ மட்டும் உன் பொண்ண அவனுக்கு கட்டிக் கொடு- அப்புறம் அவன் பெரிய ஆளாயிடுவான்"
"சரிதான்யா - காலனா கைலே இல்லாத தரித்திரம் புடிச்சவனுக்கு எப்படி பொண்ணைத் தர்றது"
"அவன் கையிலே மட்டும் பணம் இருந்தா"
"தாராளமா என் பொண்ண கட்டித் தர்றேன்"
பரமு என்னைத் தனியா தள்ளிக்கினு போனான் - "சேட்டுகிட்டே நான் வட்டிக்கு பணம் வாங்கித் தர்றென், கன்னாலம் கட்டிக்கோ - அப்பால மிச்சத்த பாத்துக்கலாம்"ன்னான்
பால் திருடப் போனவனுக்கு கண்ணாலமே கட்டி வெச்சுட்டானுங்க!
இப்ப சேட்டு வட்டி கேட்டு நெருக்கறான்..
நீங்க எதாச்சும் உதவி செய்ய முடியுமா?
உங்களால முடிஞ்ச தொகய "Balaji, Tirumalai-Tirupati Dewastanam, Tirupati - AP "ன்ற அட்ர்ஸுக்கு நேராவோ இல்ல போஸ்ட்டுலயோ அனுப்பிடறீங்களா?
நான் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வேன்..
Comments please!
Jul 21, 2005
என் முதல் சிறுகதை!
Subscribe to:
Post Comments (Atom)
8 பின்னூட்டங்கள்:
பாலாஜி-அலமு கல்யாணம்...!!!
வாத்யாரே...ம்ம்ம்
பக்தி ரசம் ஷொட்டுது!
இப்பவும் பாலாஜி அதே பாலத்தான் குடிக்கறாரா ;-)
- ஞானபீடம்
:-)))))))))
ஹா! ஹா!
சூப்பர் கதை.. ஆனா இன்னும் கடன் அடைஞ்ச பாடு இல்ல. அதனால இது தொடர்கதை - சிறுகதையில்ல
நன்றி
ஞானபீடம், துளசி அக்கா, பாசிடிவ்ராம மற்றும் கோபி..
மேலும் பலரையும் வரவேற்கிறேன்.
நன்றி
ஞானபீடம், துளசி அக்கா, பாசிடிவ்ராம மற்றும் கோபி..
மேலும் பலரையும் வரவேற்கிறேன்
Really, a REMARKABLE story, keep it up :)
You can NO MORE be called 'பினாத்தல்கள்' Suresh, I think ;-)
Thanks Bala.
//You can NO MORE be called 'பினாத்தல்கள்' Suresh, I think ;-) //
Athu irukkattum, oru kavasam maathiri!
Post a Comment