பெரியார் படம் பல பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டிருக்கிறது! நான் ரொம்ப சிம்பிளா ஒரு தீர்வு சொல்வேன்.. ஞான ராஜசேகரனுக்கு பதிலா மணிரத்னத்தை இயக்கவிட்டிருந்தா ஆல் பிராப்ளம் சால்வ்ட்!
Preview பாக்கறீங்களா?
மணிரத்னம் - ஆனந்தவிகடன் பேட்டியிலிருந்து:
இந்தப்படம் பெரியார் வாழ்க்கைய பேஸ் பண்ணி எடுத்தது சொல்றாங்களே?
என்னுடைய எல்லாப்படங்களுமே யாருடைய வாழ்க்கையையோ பேஸ்பண்ணி எடுத்ததுதான்.
அப்ப இது பெரியார் கதைதானா?
அப்படி முழுசா சொல்லிட முடியாது. அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு கற்பனைக்கதை - அவ்வளவுதான்.
அப்ப பெரியாருக்கும் இந்தப்படத்துக்கும் சம்மந்தம் இல்லையா?
ஒரு நாவல் போல கற்பனைகளையும் கனவுகளையும் நிஜ வாழ்க்கையோடு சம்மந்தப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் இது. சவால்களைச் சந்தித்து பிரபலமான ஒருவரின் வாழ்க்கை, என் கற்பனையோடு சேர்த்து சொல்லியிருக்கேன்.
SCREENPLAY
காட்சி 1
சில்ஹவுட்டில் சிறுவன் குருவும் அவன் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
" எதுக்கு?"
".."
"எதுக்கு போகணும்? கோயிலுக்கு எதுக்கு போகணும்?"
"சாமி கும்பிடத்தான் ராசா"
"சாமி கும்பிடாட்டா தப்பாப்பா?"
"தப்பில்ல ராசா.. மனசுக்குள்ளேயே சாமி இருக்கு"
ஆஆஆஆஆஆ.. பேக் கிரவுண்ட் ம்யூசிக்குடன் பாட்டு ஆரம்பம்..
ஈரோட்டு மூலையிலே
ஈஸ்வரனே இல்லையென
பேயோட்டி வந்தவனே..
நாட்டைக் காப்பாத்து..
நாட்டைக் காப்பாத்து..
காட்சி 2
குருசாமி நாயகனும் அவர் மனைவியும்
கவித்துவமாக வார்த்தை வெளிப்படுகிறது, டாப் ஆங்கிள் ஷாட், காமெரா முதலில் மெதுவாக, பின் வேகமாக சுழல்கிறது.
"உன்னோடு நான் வதக்கிய ஒவ்வொரு வெங்காயமும் நாலுநாள் ஆனாலும் ஊசாது கண்மணியே"
காட்சி 3
ஒரு பெரிய கோயில் செட்டில் ஆயிரக்கணக்கான துணைநடிகர்களுடன் குருசாமி முன்னே செல்கிறார்..
"போறோம்.. கோயிலுக்கு உள்ளே போறோம்"
"போலீஸ்காரா எல்லாம் வாசல்லே இருக்கா"
"இருக்கட்டுமே.. நூறு பேர் இருக்கட்டுமே.. போறோம்.."
"இல்ல, அவா நம்மளை ரிமாண்டு பண்ணிடுவா"
"தப்பு.. உன் பாஷை தப்பு.. காட்டுமிராண்டித் தனமா பேசாதே..மாத்து.. இப்பவே மாத்து"
காட்சி 4
குருசாமிக்கு குழந்தை பிறந்திருக்கிறது - பாட்டு (ஜெர்மனி, செக்கோஸ்லாவாகியா வெளிப்புறக்காட்சிகள் பின்னால் வரும்)
"நீ நடக்கும் பாதை எங்கும் முட்கள் போனது.. திதக்குதாங்"
"நீ தொடங்கும் வேலை யாவும் முடிந்து போனது.. திதக்குதாங்"
"எழுத்துக்குள்ளே இருந்த கொம்பெல்லாம்.. எங்க போச்சு
அது காக்கா போச்சு"
"பொம்பளைக்கு போட்ட விலங்கெல்லாம்.. எங்க போச்சு
அது உடஞ்சுபோச்சு"
காட்சி 5
குருசாமி காதல் காட்சி
"ஏய்.. முட்டைகோஸ் கண்ணு"
"உங்க கண்ணும்தான் பெரிசு"
"எனக்கு உன்ன மாதிரி பெரிய கண்ணோட ஒரு பொண்ணு பெத்துக்குடு"
பாட்டு - பொட்டப்புள்ள பெத்துக்குடு.. போதும் என்ன விட்டுவிடு..
காட்சி 6
குருசாமி தெருவில் செல்லும்போது செருப்பு வீசப்படுகிறது. அவருடன் இருந்தவர்கள் ஆவேசமாகிறார்கள்.
"வேணாம்.. வுட்டுடுங்க.. அவனை விட்டுடுங்க"
"ஏன் அவனை வுடச் சொல்றீங்க குருவார்?"
"இன்னொரு செருப்ப அவன்கிட்ட வாங்கிப் போட்டுக்கலாம்"
காட்சி 7
குருசாமிக்கு உடம்பு சரியில்லை. பார்க்க அரசியல் எதிரி ராமாஜி வருகிறார்.
"எப்படி இருக்கீங்க?"
"பாக்கறீங்க இல்ல?"
"சரியாப் போயிடும். நான் பகவானை வேண்டிக்கறேன்"
"இல்லாத பகவானை எப்படி வேண்டிப்பீங்க?"
"இந்தக் குறும்பு மட்டும் குறையல!"
காட்சி 8:
குருசாமி மரணம். 10000 துணைநடிகர்களுடன் பிரமாண்ட ஊர்வலம். பின்னணியில் பாட்டு:
ஈரோட்டு மூலையிலே
ஈஸ்வரனே இல்லையென
பேயோட்டி வந்தவனே..
நாட்டைக் காப்பாத்து..
நாட்டைக் காப்பாத்து..
பிரச்சினைகளைத் தவிர்க்கும் முகமாக, படத்தில் எடுத்திருந்த மற்ற அத்தனை காட்சிகளும் வெட்டப்பட்டுவிட்டன!
Jan 18, 2007
மணிரத்னம் இயக்கும் குருசாமி நாயகன் (பெரியார்) Full Screenplay
Subscribe to:
Post Comments (Atom)
51 பின்னூட்டங்கள்:
//"உன்னோடு நான் வதக்கிய ஒவ்வொரு வெங்காயமும் நாலுநாள் ஆனாலும் ஊசாது கண்மணியே"//
கமல் ஸ்டைலில் சொல்லணும்னா
ஆ..ஆ..ஆஆ....
:)))))))))))))
2007 சிறந்த நகைச்சுவை பதிவு
சென்ஷி
//"உன்னோடு நான் வதக்கிய ஒவ்வொரு வெங்காயமும் நாலுநாள் ஆனாலும் ஊசாது கண்மணியே"//
சூப்பர்!
ம்ம்...ம்..
:)
:)
:))
பெனாத்தல் டச்!
யுரேகா! யூ.. ரேகா..நான் கண்டுபிடிச்சுட்டேன்... :-)))
இந்தப் பதிவு அப்படியே மக்கள் தளபதி நாயகன் இருவர் படம் மாதிரியே இருக்குங்க. :-))
பகுத்தறிவு வென்றது!
அறிவிக்கப்படாத குவிஸ் போட்டியில மொதல் பரிசு எனக்குத்தான் டிஸ்யூ பேப்பர் (கர்ச்சீப் / துண்டு இல்லை கைவசம்) போட்டு ரிசர்வ் பண்ணிட்டேன். :-))
//உன்னோடு நான் வதக்கிய ஒவ்வொரு வெங்காயமும் நாலுநாள் ஆனாலும் ஊசாது கண்மணியே"//
வெங்காயமே வெங்காயத்தை வதக்குமா? சாமீ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... விடுதலை செய்வீர்களா? :-)))
கண்மணி ..பொன்மணி அங்கங்கே போட்டுக் கவிதையாக்குறமாதிரி ஸ்மைலிகளை ஆங்காங்கே அள்ளித் தெளிச்சு இந்தப் பின்னூட்டம் வெறும் காமெடின்ற உண்மையை கன்பார்ம் பண்ணிட்டேன் பெனாத்தல் சார்:-))
:) :)
இருவர் நல்ல முயற்சி தானே
படத்தின் அறிமுக காட்சி ஈரோடு ரயில் நிலையத்தில் தானே....
சுரேஷ் ரத்னம்... ச்சே மணிரத்னத்துக்கு ரயிலும் ரயில் சார்ந்த இடங்களும் பிடிக்குமேன்னு சொல்ல வந்தேன்...
நன்றி சென்ஷி.
நன்றி ஜோ.
தருமி என்ன சொல்ல வறீங்க?
ம்ம்ம் - எதோ யோசனையிலே இருக்கீங்க,
:) அளவா சிரிச்சிருக்கீங்க, சரியா?
நன்றி ஹரி.
தம்பி.. பெனாத்தல் டச்சா.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான்...
ஹரிஹரன்.. பின்னூட்டத்தை மொதல்ல எழுதிட்டு அப்புறம் ஸ்மைலிய மொத்தக் கொள்முதல் பண்ணி தெளிச்சா மாதிரி தெரியுது:-))
விக்னேஸ்வரன் ஷண்முகம், முதல் வருகைக்கு நன்றி. இருவர் நல்ல காதல்கதை முயற்சிதான்:-))
தேவ்.. ரயிலை மட்டுமா விட்டேன், மழையையும்தான்:-((
இன்னொரு வெர்ஷன் போட்டுறலாமா சொல்லுங்க?
:-))))))
நன்றி நன்மனம்!
//இன்னொரு வெர்ஷன் போட்டுறலாமா சொல்லுங்க? //
கலக்குங்க
சென்ஷி
சென்ஷி.. போட்டுடலாம்.. ஆனா வேலை அதிகமான வீக்கெண்ட் ஆரம்பித்துவிட்டது. வெட்டியாஎ இருக்கும் வாரநாட்கள் ஆரம்பித்ததும் போட்டுறவேண்டியதுதான்:-))
சூப்பர் கற்பனை. நிஜமாவே இப்படி எடுக்கலாம் போல... கலக்குங்க...
மழை சீன் இரண்டு போடுங்க. அப்புறம், இரண்டு பப்ளிக் மீட்டிங் சீன். எல்லாரும் வேற ஏதோ பேச, நடுவுல ரெண்டு பேரு மட்டும் தனியா பேசனும்...
sentiment சீன் ரெண்டு...
அடிச்சு ஆடுங்க பெனாத்தலாரே... :-)))
ஸ்ரீதர்,
நல்ல அடிஷன்.
காட்சி 5.5
மழை சோவென்று பெய்துகொண்டிருக்கிறது.
"ஆகையால் நான் காங்கிரஸ் சர்க்காரை விண்ணப்பம் செய்து விக்ஞாபனம் செய்வது என்னவென்றால்".. ஒரு கதர்க்குல்லா பேசிக்கொண்டிருக்கிறார்.
சரக் சரக்கென்று மழைத்தண்ணீரை சிதறடித்துக்கொண்டு மூன்று கார்கள் .. அதிலிருந்து இறங்குகிறார் குருசாமி.
கூட்டம் கதர்க்குல்லாவிடமிருந்து இவர் பக்கம் திரும்புகிறது.
"இப்படியெல்லாம் கேட்டா அவன் எப்படித் தருவான்.. நான் சொல்ற யோசனையக்கேளுங்க" BGM கொஞ்சமாக அதிகரித்து என்ன பேசுகிறார் என்பதை பில்டர் செய்துவிடுகிறது. (பின்ன, காண்ட்ரவர்சி வந்தா நீங்களா உதவிக்கு வருவீங்க?)
அது சரி... பார்த்து ஆடனும். அப்புறம் சொ.செ.சூ தான் போங்க...
தமிழ்மண மேனியா-னு ஒரு புது வியாதி பரவுதாம். யாராவது 'எப்படி'னு மொக்கை போட்டா எல்லாரும் மொக்கை போடறது... யாராவது 'கதை' எழுதினா எல்லாரும் 'கதை' எழுதறது... தற்சமயம் இந்த பாடல்.
பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு இப்பவே!
ஸ்ரீதர் வெங்கட்,
//அது சரி... பார்த்து ஆடனும். // மணி அண்ணன் கிட்ட கத்துகிட்ட பாடம்தான்:-))
//தமிழ்மண மேனியா-னு ஒரு புது வியாதி பரவுதாம். // ரொம்ப மோசமான தொத்து வியாதிங்க அது!
சரிதான். தமிழ்மணத்துல எந்த டாபிக் ஓடிக்கிட்டு இருக்குன்னு கண்கொத்திப் பாம்பா பார்க்க வேண்டியது. அப்புறம் அந்த டாபிக்ல ஒரு உப்புமா பதிவு போட வேண்டியது. நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் இப்படித்தான்யா நீர் வண்டி ஓட்டிக்கிட்டே இருக்கீரு.
ஆனா சும்மா சொல்லக் கூடாது. நல்லாத்தான் இருக்கு இந்த டெக்னிக்கு. அது மட்டும் இல்லை. நல்ல சிரிப்பாகவே எழுதறீரு.
(நீர் சீரியஸுன்னு நினைச்சுதான் எழுதி இருப்பீரு, ஆனா கதை இப்படி போயிருச்சு இல்ல, அப்படியே மெயிண்டெயின் பண்ணிப்போம். என்ன)
கொத்தண்ணா,
நான் தமிழ்மணத்தை கண்கொத்திப் பாம்பா பாக்கறது இருக்கட்டும், நீங்க என்னையே பாத்துகிட்டு இருக்கீங்க போல?
சரி தொழில் நுணுக்கம் எல்லாம் கத்துகிட்டீங்க இல்ல? குருதட்சணை அனுப்பிடுங்க:-))
இதை சீரியஸாவா நெனைச்சிருப்பேன்?
இது என்னவே சின்ன புள்ள தனமா இருக்கு?
மல்லிகா ஷெராவத்து டான்ஸ் இல்லியா?
வெங்காயத்த கடிச்சு துப்பி எல்லாரும் டான்ஸ் ஆட்ராமாரி ஒண்ணு சொருகிடுங்க சொல்லிபுட்டேன்.
பேக்ரவுண்ட்ல லை லை லை லை போட்டா இன்னும் பிட்.
டைட்டில் சாங்க் ஒண்ணும் வேணும்:
(தென்பாண்டி சீமையிலே ராகம்; தாளம்: டன் ட டன் ட டன் ட டன்)
பிள்ளயாரு கோவிலிலே
நொண்டி நொண்டி வந்து நின்னு
தேங்கா ஒடச்சு வளந்தவனே
நீதான் தலைவனே நீதான் தலைவனே
அப்படியே, நம்ம காஞ்சி ஐயாவையும் பத்தி ஒரு படம் போட்டுடுங்க. இல்லன்னா கொல வெறி கும்பல் வந்து ப்ளேடு போட்டுடுவாங்க்ய. சாக்குரத.
:)
சர்வேசன்..
ஒழுங்க படிங்க சார். தென்பாண்டிச் சீமையிலே மெட்டுலேதான் ஈரோட்டு மூலையிலே பாட்டு போட்டிருக்கேன். 7 முறை ரிபீட் ஆவும்.
மல்லிகா ஷெராவத் ஓல்டு. இந்த படத்துக்கு கதைக்கு தேவை என்பதால ஜெஸிகா ஆல்பாவை ட்ரை பண்ணலாம்.
//ஒழுங்க படிங்க சார். தென்பாண்டிச் சீமையிலே மெட்டுலேதான் ஈரோட்டு மூலையிலே பாட்டு//
ஓஹோ.. பேர் போடராங்கனு சொல்லலியே நீங்க. டைட்டில்னு தெரில பாருங்க. :)
சர்வேசன்..
சரிதான்.. இது சும்மா Screenplayதான்.. எல்லாத்தையுமா எழுத முடியுமா?
suresh in full form......waiting for more!!!!!
"பெனாத்தல் டச்!"
ditto
ராதா ஸ்ரீராம்,
நன்றி. உங்க டிட்டோவின் மூலத்துக்கு நான் கொடுத்த பதில் "இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான்...." .. அதுவும் டிட்டோ:-))
:-)))))))
//பிரச்சினைகளைத் தவிர்க்கும் முகமாக, படத்தில் எடுத்திருந்த மற்ற அத்தனை காட்சிகளும் வெட்டப்பட்டுவிட்டன!//
இல்லைங்க... பிரச்சினைகளைத் தவிர்க்கும் முகமாக, படத்தில் மற்ற அத்தனை காட்சிகளும் எடுக்கப்படவேயில்லையாம்!
கோபி,
நீங்க சொல்றது உண்மை..
நான் சொல்றது வெளியிடப்போற அறிக்கை!
ரெண்டுக்கும் சம்மந்தம் இருக்கணுமா என்ன?
வணக்கம் பினாத்தல்..
கலக்குறிங்க...
:)
நன்றி கோபிநாத்:-)
நன்றி திரு
நன்றி ஷாஜி.
:-))
////"உன்னோடு நான் வதக்கிய ஒவ்வொரு வெங்காயமும் நாலுநாள் ஆனாலும் ஊசாது கண்மணியே"//
சூப்பர்...!!!!!!!!!!
ஆமா, நீங்க top-6ல வந்ததுக்காக ஒரு 'பதக்கம்' போட்டேனே. உங்க பதிவுல ஏத்தலியா அத?
அந்த பதக்கத்த ஏத்தினா, நன்ம வந்து சேரும்.. நன்ம வந்து சேரும்.. adsense டாலரு கொட்டு கொட்டுனு கொட்டும்.. டும் டும் டும் டும் (குடு குடுப்பை எபெக்ட்). :)
http://bp3.blogger.com/_ZEDdS10HD4g/RYxvLjQrLkI/AAAAAAAAAC0/evYIW7rDjoA/s200/surveysan_top6.jpg
ஐயா சுரேஷ்,
பாலா 'என் வலைப்பதிவுப் பக்கம் தல காட்றதில்லே' ன்னு நீங்க நினைக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த பின்னூட்டம் ;-)
சரி, வரட்டுமா ?
சாரி, சொல்ல மறந்துட்டேன் !
Simply fantastic, keep it up !
எ.அ.பாலா
நன்றி குமரன்..
நன்றேஇ செந்தழல் ரவி. வீராச்சாமி சூப்பர்:-)
சர்வேசன், போடக்கூடாதுன்னு பாலிசி எல்லாம் இல்லை. பிளாக்கர் ஒருவழியா பீட்டா ஆயிட்டா, வாங்கிய பட்டம் எல்லாம் போலீஸ்காரன் மெடல் மாதிரி வரிசையா குத்திக்கறேன்
:-)
நன்றி பாலா..
வருகைக்கும், (தமிழில்:-)) கருத்துக்கும்:-)
அனேகமாக நாயகன் மழையில் குறைந்த வெளிச்சத்தில் நனைந்து கொண்டுதான் ஆலயப் பிரவேசம் செய்வார்.
ம்ம்.. அபிஷேக் பச்சனை பெரியாராக பார்த்திருக்க வேண்டியது... குஷ்புவுக்கு பதில் ஐஸ்வர்யாராய் !!!!
:))))
very funny...
kalakkureenga ponga. :)
அது எப்படீங்க உங்களால மட்டும் இப்படி அசத்தலா பினாத்த முடியுது!! அசத்திட்டீங்க போங்க... எல்லாம் ரெண்டு நாள் லீவு கிடைக்குதேங்குற மகிழ்ச்சியின் விளைவால் வந்த பினாத்தலா???
வாங்க அரை பிளேடு..
மணிரத்னத்துக்கு இருக்க திறமைக்கு அவர் தனுஷைக்கூட பெரியாரா மாத்திடுவார்:-) ஆனா ஐஸ்வர்யா ராயை மாத்த மாடார்:-))))
நன்றி சீனிவாசன்.
முதல் வருகையோ?
நன்றி லொடுக்கு.
லீவுன்னாலும் நம்ம மூளைக்கு லீவு கிடையாதே:-))
ரோல்லேயே இல்லாததுக்கு எதுக்கு அட்டண்டன்ஸ்?
மணிரத்தினம் படங்களைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி முனைவர் பட்டம் பெற்று விடுவீர்கள் போலிருக்கிறது :-)
அன்புடன்,
மா சிவகுமார்
நன்றி சிவகுமார். முனைவர் பட்டமா? அதற்கு தலைப்பு பரிந்துரைக்க மட்டும்தான் என்னால் முடியும்..
"மணிரத்னம் திரைக்கதையில் மழையின் தாக்கம்"
"மணிரத்னம் திரைக்கதையும் பாதிக்கப்பட்ட பிரபலங்களும்"
இது போதுமா?
ஹிட்லரை ஹீரோ வாக்கிப் படம் ஏதும் வந்திருக்கிறதென்றால், அதனுடன் பெர்யார் படத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
ஹிட்லரின் ஆரிய இன வாதத்தின் இன வெறி இன்னும் ஐரோப்பாவில் அடங்கவில்லை. அதே போல் பெரியாரின் திராவிட இன வெறி இன்னும் அடங்கவில்லை, தமிழகத்தில்.!
இந்தப்பதிவில் UK, VK, SK எல்லாம் இல்லையா ?
(அட அது தாங்க, இந்த உள் குத்து, வெளிக் குத்து, சைடு குத்து!!)
வஜ்ரா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
UK, VK, SK எல்லாம்தான் உங்க பின்னூட்டத்திலேயே தேவையான அளவு இருக்கே:-)
Post a Comment