Oct 29, 2007

பாடம் ஒன்று: ஏன் திருமணம்? (M Sc Wifeology - 1)

இந்தக்கேள்விக்கு நேரடியான விடையே கிடையாது. கண்ணதாசன் சொன்ன மாதிரி, நான் மாட்டின காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் கேட்கிறாய்னுதான் கேட்கணும்.
 
"everybody should be married.. in fact, happiness is not everything" னு சொன்ன அறிஞரோட விடைதான் கொஞ்சம் கிட்டக்கிட்ட வருது.
 
ரொம்ப யோசிச்சா, இந்த மாதிரி சில காரணங்களைத் தேடிப் பிடிக்கலாம்.
 
1. நாளைக்கு வயசாயி உடம்பு சரியில்லாம போனா பாத்துக்க ஒரு ஆளு வேணாம்? (மனைவி வேணுமா நர்ஸ் வேணுமான்னு தெரியாத ஆளுங்க! - நாளைக்கு உனக்கு வயசாகும்போது அவங்களுக்கும் வயசாகாதா? வெளிய சொல்லிக்கறத நாம நம்பவா முடியும்??)
 
2. வம்சம் விளங்க வேணாமா? (பெரிய ராஜ ராஜ சோழன் வம்சம்!)
 
3. எத்தனை நாள்தான் இப்படி வாழ்க்கையில பிடிப்பே இல்லாம ஓட்ட முடியும்? (மவனே இருக்குடீ உனக்கு! வாயுப்பிடிப்பு., சதைப்பிடிப்பு, சம்பளப்பிடிப்பு எல்லாம் கிடைக்கும் கவலையே படாதே!)
 
4. வீட்டுக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு வேணுமே! (ஸ்விட்சுன்னு ஒண்ணு எதுக்கு கண்டுபிடிச்சிருக்காங்களாம்?)
 
5.சாப்பாட்டுக்கு கஷ்டப்பட வேணாம் இல்லையா? (இது கரெக்டு.. எப்படியும் சமைக்கக் கத்துக்கத்தான் போறே!)
 
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன அப்ப்டின்னு சொல்லும்போதே தெரிய வாணாம்? மவனே உனக்கு சாவுமணிதாண்டான்னு!
 
கல்யாணம் ஆனவங்களோட பொறாமை மற்றவர்களோட திருமணத்துக்குக் காரணமாகி விடுவது உளவியல் அறிஞர்கள் ஆராய வேண்டிய விஷயம்.  "என்னங்க, நம்ம சித்தப்பா பொண்ணுக்கு உங்க பிரண்டு சரவணனைக் கேக்கலாமா" என்ற கேள்விக்கு, சரி என்று சொல்லும் முன், "நான் மட்டும் என்ன முட்டாளா?" என்ற எண்ணமும் "எஞ்சாய் பண்றாண்டா" என்ற பொறாமையும் இருப்பது திண்ணம்.
 
பெரியோர் நிச்சயித்த கல்யாணத்துக்கும், காதல் திருமணத்துக்கும் கொலைக்கும் தற்கொலைக்கும் ஆன வித்தியாசம்தான் என்று சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.
 
ஆனால், மத்தவங்க என்ன சொன்னாலும், வேறு சில சிற்றின்பக் காரணங்களுக்காக, "கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நாலஞ்சு நாள் போகட்டும்" என்று சொல்லும் மாப்பிள்ளைதானே முதல் குற்றவாளி?
 
சிற்றின்பம்னு சொன்னதும் இந்தப்பதிவுக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துடாதீங்க! நான் சொல்ல வர சிற்றின்பம், பெரியோர் ஆசீர்வாதத்துடன் சைட்டடிப்பது, நாம என்னவோ ஆணழகன் மாதிரி எந்த போட்டோ வந்தாலும் "Forehead ஆ இது? Four Head மாதிரி இருக்கே!" "பொண்ணு கிளி மாதிரின்னு சொன்னாங்களே? மூக்கை மட்டும்தான் சொன்னாங்களா?" என்று வர்ஜ்யா வர்ஜ்யம் இல்லாமல் கமெண்ட் அடிப்பது, திடுதிப்பென்று கிடைக ்கும் எலுமிச்சை வெளிச்சம் போன்ற சிற்றின்பங்களைச் சொல்றேன்.
 
ஆனா ஒண்ணு.. கல்யாணம் பண்ணாம நிம்மதியா இருக்கறது 1 - 2% ஆளுங்கதான். ஆடை இல்லாத ஊரிலே கோவணம் கட்ட முடியாதவங்க எப்ப்டி கல்யாணத்துக்கு தயார் ஆவது எப்படின்னு அடுத்த திங்கள் சொல்றேன்.
 
வீட்டுப்பாடம்: இந்த யூ ட்யூப் வீடியோவைப் பார்க்கவும்: http://www.youtube.com/watch?v=pSWTVXh_Yns
 
ஒரு டிஸ்கிளெய்மர்:
 
பிரச்சினையில்லாத திருமண வாழ்வை இந்த வகுப்புகள் வழங்கும் என்ற உடோபியக்கனவுகளை நம்பவேண்டாம். அது ஒரு மாயை.  இதன் ஆசிரியர்களின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களின் மீள்பார்வையில் Retrospective  சிந்தனைகளின் விளைவே இந்த வகுப்புகள். இது ஒரு Exact Science உம் கிடையாது. மனைவிகள் என்னும் பிரகிருதிகளுடான உளவியலில் Scienceக்கும் எந்த இடமும் கிடையாது, Exact கும் எந்த இடமும் கிடையாது. இந்த வழிமுறைகளை முயற்சிப்பவர்கள் தத்தம் சொந்தப் பொறுப்பின் பெயரிலேயெ செயல் படுபவர்கள் ஆவார்கள். மீறி ஏற்படும் வீக்கங்களுக்கும் ரத்தகாயங்களுக்கும் கல்லூரி பொறுப்பேற்காது.

59 பின்னூட்டங்கள்:

நாகை சிவா said...

//"என்னங்க, நம்ம சித்தப்பா பொண்ணுக்கு உங்க பிரண்டு சரவணனைக் கேக்கலாமா" என்ற கேள்விக்கு, சரி என்று சொல்லும் முன், "நான் மட்டும் என்ன முட்டாளா?" என்ற எண்ணமும் "எஞ்சாய் பண்றாண்டா" என்ற பொறாமையும் இருப்பது திண்ணம். //

இது தாங்க உண்மையான காரணமா இருக்க முடியும்.

//"கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நாலஞ்சு நாள் போகட்டும்" என்று சொல்லும் மாப்பிள்ளைதானே முதல் குற்றவாளி?//

4, 5 வருசம் போகட்டும் என்று தான் சொல்லுறோம். அநியாயமாக முதல் குற்றவாளியாக ஆக்க வேண்டாம்..

ஆனா ஏது எப்படி தண்டனை அதிகமாக கிடைப்பது மாப்பிள்ளைக்கு தான் :)

நாகை சிவா said...

வீட்டு பாடத்த ஆபிஸ் ல செய்ய வுட மாட்டானுங்க.. வீட்டுல போய் பாக்குறேன்... :)

நாகை சிவா said...

Marriage is a man made prison

:)

புழல் ஜெயில் அளவுக்கு நல்ல வசதிகள் எல்லாம் செய்து கொடுத்து (ஏஸி) கைதி போல வச்சுப்பது போல... :)

முரளிகண்ணன் said...

முடிவா என்ன தான் சொல்ல வர்றீங்க? ஆணா பிறக்கரதே பாவமா?

வல்லிசிம்ஹன் said...

சொல்லுங்க சுரேஷ் சார்.

கேட்டுக்கறோம்.
நீங்க பிஹெச்டி செய்ய எங்களைக் கினிபிக்
ஆக்கிறீங்கனு நல்லாத் தெரியுது.
இப்படிக்கு,
டயமண்ட் ஜூபிளீத் திருமண சங்கம்:))))

Anonymous said...

Let me ask my wife "What to comment to here" !!!

Thanks

Unknown said...

தங்களுக்கு திருமணம் நடந்தேரிவிட்டதா?? இன்னும் இல்லை என்றால் ஓர் அன்பான வேண்டுகோள்...

தயவுசெய்து அந்த தவறை செய்து ஒரு பெண்ணின் வாழ்வை வீணடித்து விடாதீர்கள்...

அப்படி ஒரு வேளை திருமணம் நடந்திருந்தால் எனது அழ்ந்த அனுதாபங்கள் அந்த பெண்ணிற்காக... :P

கோபிநாத் said...

\\//"கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நாலஞ்சு நாள் போகட்டும்" என்று சொல்லும் மாப்பிள்ளைதானே முதல் குற்றவாளி?//

4, 5 வருசம் போகட்டும் என்று தான் சொல்லுறோம். அநியாயமாக முதல் குற்றவாளியாக ஆக்க வேண்டாம்..

ஆனா ஏது எப்படி தண்டனை அதிகமாக கிடைப்பது மாப்பிள்ளைக்கு தான் :)\\

இளைஞர்கள் சார்ப்பாக முதலில் வந்து பின்னூட்டம் இட்ட எங்கள் சிங்கத்துக்கு என் பாராட்டுகள்..

அவர் சொன்னதை வழிமொழிகிறேன்...;))

சேதுக்கரசி said...

இது ஆனாலும் ரொம்ப ஓவர் :(

rv said...

சிவா பின்னூட்டத்தில் கொடுக்கும் ஆதரவைப் பார்த்தால் ஏதேனும் insider info trading நடக்கிறது என்ற சந்தேகம் வருகிறது.

இதைப் பெனாத்தலார் தெளிவுறுத்த முடியுமா?

rv said...

சரி, போனா போவுது பண்ணிக்கலாம்னு நான் நினைச்சு வச்சிருந்த எல்லா காரணத்துக்கும் ஏதாவது ஒரு கருத்து சொல்லிருக்கீங்க.

இப்ப நான் என்னதான் செய்யணும்? இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் வாய்தா வாங்கிடவா?

Anonymous said...

pondatti oorukku poyittaangala? illai.....avanga ungal pathivai padikka maattangannu thayiriyama?wife number kudunga ....adutha pathivu waruthaannu test panni paarthidalam....;)

பினாத்தல் சுரேஷ் said...

முதலில் ஒரு தன்னிலை விளக்கம்:

இந்தப்பதிவு கொஞ்சம் சேம் சைட் கோல் போல தெரிந்தாலும், தன் பலவீனம் தெரிந்தவன் தான் சிறந்த வீரன் என்பதால் நம் பலவீனங்களைச் சுட்டிக்காட்ட எழுதப்பட்டது. சேம் சைட் கோல் என்று கொக்கரிக்கும் எதிரிகளுக்கு ஒரு எச்சரிக்கை, விரைவில் வருது போர் முறைகள்!

பினாத்தல் சுரேஷ் said...

நாகை சிவா,

முதல் குற்றவாளின்னு சொல்றது குறையா நினைச்சுக்காதீங்க! நம்ம மேலேயும் தப்பிருக்குன்னு சொல்றதுதான்.

//4, 5 வருசம் போகட்டும் என்று தான் சொல்லுறோம்.// நாலஞ்சு வருஷம் கழிச்சும் அதையே சொல்றீங்களா?

//புழல் ஜெயில் அளவுக்கு நல்ல வசதிகள் எல்லாம் செய்து கொடுத்து (ஏஸி) கைதி போல வச்சுப்பது போல... :)//

வெளிப்பார்வைக்கு சுகமாத்தான் இருக்கும் :(

பினாத்தல் சுரேஷ் said...

முரளி கண்ணன், நம்ம கையிலே இல்லாத விஷயத்துக்கு பாவ புண்ணியம் எல்லாம் என்ன பாக்கறது? இப்ப இருக்க நிலைமையிலே என்ன பண்ணலாம்னு யோசிப்போம்.

வல்லி சிம்ஹன், இந்த டயலாக் யாரு அடிக்கடி சொல்லுவாங்க?
" புதுசா சமைச்சிருக்கேன், நல்லா இருக்கா(கு)ன்னு சொல்லுங்க"
யாருங்க கினி பிக்?

உத்தரவு வந்ததும் விரிவா போடுங்க அனானி :)

பினாத்தல் சுரேஷ் said...

என் திருமணத்தைப் பத்தி கவலைப்படற அனானி, எல்லாம் ஆச்சு.. அதை ஏன் கேட்கறீங்க :(

டோனைப் பாத்தா பொம்பளை அனானி மாதிரி இருக்கே!

ரிப்பீட்டேய் கோபி, நாகை சிவாக்கு சொன்ன பதில் ரிப்பீட்டேய் :)

சேதுக்கரசி, எது ஓவர்? ஆறு பாலா?

பினாத்தல் சுரேஷ் said...

எல்லாவற்றையும் வெளிப்படையாக வைத்து, திறந்த புத்தகமாக வாழும் என்னைப்பார்த்தா தம்பி ராமநாதா இன்ஸைடர் இன்போ கொடுப்பவன் மாதிரித் தெரிகிறது? கொடுத்தாலும் பதிவிலேயே கொடுப்பேன், வாங்கினாலும் வீட்டுக்குள்ளேயே வாங்குவேன்!

//சரி, போனா போவுது பண்ணிக்கலாம்னு நான் நினைச்சு வச்சிருந்த எல்லா காரணத்துக்கும் ஏதாவது ஒரு கருத்து சொல்லிருக்கீங்க.//

அதெல்லாம் ஒண்ணும் இல்லை, தாராளமா பண்ணிக்க! (நாங்க மட்டும் முட்டாளுங்களா?)

பினாத்தல் சுரேஷ் said...

ஜெசிலா,

தாங்கள் கேட்கும் தகவல்கள் தரப்பட்டால் என் உயிருக்கு ஆபத்து நேரும் என்று பட்சி உரைப்பதால் தணிக்கை செய்துவிடுகிறேன்.

இலவசக்கொத்தனார் said...

//இது தாங்க உண்மையான காரணமா இருக்க முடியும். //

புலி அனுபவஸ்தன் பேச்சு மாதிரி இருக்கு!!

இலவசக்கொத்தனார் said...

//வீட்டு பாடத்த ஆபிஸ் ல செய்ய வுட மாட்டானுங்க.. வீட்டுல போய் பாக்குறேன்... :)//

புலி - இதில் தெரியுது பாருங்க உங்களுக்குப் பட்டறிவு இல்லைன்னு. இதுவே உமக்குக் கல்யாணம் ஆயிருந்தா வீட்டுப் பாடத்தை வீட்டில் பார்க்க முடியும் என்ற எண்ணம் வந்திருக்குமா?

உமக்குத்தான்யா இந்த பாடமெல்லாம். நல்லாப் படியும்.

இலவசக்கொத்தனார் said...

//Marriage is a man made prison

:)//

To some marriage is just a word but for the groom it is a sentence!

இது தெரியுமா உமக்கு?

இலவசக்கொத்தனார் said...

//முடிவா என்ன தான் சொல்ல வர்றீங்க? ஆணா பிறக்கரதே பாவமா?//

அட என்ன கேள்விங்க இது. தீயில் விரலை வைக்காதேன்னு சொன்னா கையோட பிறந்ததே பாவமான்னா கேட்பாங்க. பார்த்து பதவிசா இருந்துக்கோங்க. அம்புட்டுதான்.

இலவசக்கொத்தனார் said...

//நீங்க பிஹெச்டி செய்ய எங்களைக் கினிபிக்
ஆக்கிறீங்கனு நல்லாத் தெரியுது.//

ஏங்க இவராவது ஆராய்ச்சிக்காகததான் செய்யறாரு. சிங்கம் சிங்கமுன்னு சொல்லியே நீங்க ஒருத்தரை இம்புட்டு நாளா கினிபிக்காக்கி வெச்சு இருக்கீங்களே. அந்த கதையை எல்லாம் கேட்டா என்ன சொல்ல?

இலவசக்கொத்தனார் said...

//Let me ask my wife "What to comment to here" !!!//

அட கூறு கெட்ட ஜென்மமா இருக்கியே. இந்த மாதிரி பதிவெல்லாம் படிக்கிறன்னு வீட்டுக்குத் தெரிஞ்சா உள்ள சேர்ப்பாங்களாய்யா?

எதோ பசங்களோட வெளிய போனோம் ஒரு பீயரை அடிச்சோமுன்னு இருந்தா அப்படியே கம்முன்னு ஒரு பாக்கு பொட்டலத்தை வாயில் கவுத்தோமா நல்ல பிள்ளையா வீட்டுக்குப் போனோமா கம்முன்னு இருந்தோமான்னு இருக்கணும்.

அதை விட்டுட்டு இதை எல்லாம் நல்லவன் மாதிரிப் போயி சொன்னே.... நடக்குறதே வேற.

இலவசக்கொத்தனார் said...

//அப்படி ஒரு வேளை திருமணம் நடந்திருந்தால் எனது அழ்ந்த அனுதாபங்கள் அந்த பெண்ணிற்காக... :P//

இந்த பதிவு ஏன் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம். ஒரு திருமணம் நடந்த பின் அந்த பெண்ணிற்கு அனுதாபம் தெரிவிக்கும் அளவிற்கு இன்னொசெண்ட் ஆளுங்க இருக்காங்க பாருங்க. அவங்களை எல்லாம் உஷார் படுத்தத்தான் இந்த பாடமே!

பெனாத்தலாரே நீங்க நடத்துங்க. ஒண்ணு ரெண்டு தேறிச்சுன்னாக் கூட வெற்றிதான். :))

இலவசக்கொத்தனார் said...

//அவர் சொன்னதை வழிமொழிகிறேன்...;))//

புதுசாக் கல்யாணம் ஆகி இருக்கா என்ன சொன்னாலும் வழி மொழிகிறேன், விழி வழியறேன்னுக்கிட்டு.

இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அப்போ தெரியும் வாயை எல்லாம் மூடிக்கிட்டு கம்முன்னு இருக்கிறதுதான் நல்லதுன்னு.

இன்னும் படியும். அப்போ புரியும்.

இலவசக்கொத்தனார் said...

//இது ஆனாலும் ரொம்ப ஓவர் :(//

ஒரே ஒரு பால் தான் போட்டு இருக்காரு. அதுக்குள்ள ஓவர் எனச் சொல்லி தன் பெண் பித்தளையை இளிக்கச் செய்த சேது அக்காவிற்கு என் கண்டனங்கள்.

இலவசக்கொத்தனார் said...

//இதைப் பெனாத்தலார் தெளிவுறுத்த முடியுமா?//

டாக்குடரு, நீருமா? அந்தத் தம்பி மாதிரி ஆளுங்களுக்குத்தானே இந்த பாடமே. இப்போதானே ஆதாரம் எல்லாம் குடுத்துட்டு வரேன்.

குசும்பன் said...

""என்னங்க, நம்ம சித்தப்பா பொண்ணுக்கு உங்க பிரண்டு சரவணனைக் கேக்கலாமா" என்ற கேள்விக்கு, சரி என்று சொல்லும் முன், "

முதல் பாடத்திலேயே(நாளிளேயே) எனக்கு பெண் பார்க்கும் புரோபசஸ் வாழ்க, கோர்ஸ் முடிக்கும் முன்பு ஒரு Pre K.G அட்மிசன் போட வேண்டி இருக்கும், ஒரு அழகான் மிஸ் இருந்தாதான் அங்க அட்மிசன்.:)

இலவசக்கொத்தனார் said...

//இப்ப நான் என்னதான் செய்யணும்? இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் வாய்தா வாங்கிடவா?//

அதாவது வாய் தா எனக் கேட்கறீங்க. கல்யாணத்திற்கு அப்புறம் பேச முடியாது எனப் புரிந்து கொண்ட நீர் முதல் பாடத்தில் பாஸ்!

குசும்பன் said...

jaseela said...
pondatti oorukku poyittaangala? illai.....avanga ungal pathivai padikka maattangannu thayiriyama?wife number kudunga ....adutha pathivu waruthaannu test panni paarthidalam....;)//

இப்படியா சிஸ்டர் போன் நம்பர பப்ளிக்கா கேட்டு போட்டு கொடுக்கிறது, ரகசியமா யார் போட்டு கொடுத்தாங்கன்னே தெரியாம போட்டு கொடுத்துவிடனும், பிறகு ஒன்னும் தெரியாத அப்பாவி போல ஹார்லிக்ஸ், பழம் எல்லாம் வாங்கிட்டு போய், உங்களுக்கு இப்படி ஆகனுமா என்று பார்த்துவிட்டு ஓடிவந்திடனும்:)

(இனி யார் போட்டு கொடுத்தாலும் உங்க பேர்தான் மாட்டும் ஹைய்யா:)

குசும்பன் said...

சார் இந்த புலி பையன் பக்கத்துல உட்கார்ந்து பேசிக்கிட்டே இருக்கான் சார் பாடத்தை கவனிக்கவிட மாட்டேங்கிறான் சார்,

குசும்பன் said...

சார் நிறைய பேர் கிளாசிக்கு வராம மட்டம் போட்டுட்டாங்க சார், எல்லாம் பெரும் தலைங்க அவுங்களுக்கு பனிஸ்மெண்டா இன்னொரு கல்யாணம் செய்ய சொல்லுங்க சார்:)

குசும்பன் said...

பெனாத்தலாரே நீங்க நடத்துங்க. ஒண்ணு ரெண்டு தேறிச்சுன்னாக் கூட வெற்றிதான். :))//

தேற்றுவது எப்படி...ச்ச்சீ ச்சீ தேறுவது எப்படி ஏதேனும் குறுக்கு வழி இருக்கா?

வல்லிசிம்ஹன் said...

இங்க பாருங்க இ.கொ.
நாங்க சிங்கத்துக்கு புதுசு புதுசா சாப்பாடு போட்டு கினிபிக் ஆக்கினது உண்மைதான்.:))))

இப்ப அவர் தேறிட்டாரு.மெனு சொல்றது,காப்பி போடறதுலேருந்து எல்லாம் கத்துக் கொடுத்துட்டோம்ல. அவரால என்னை ஒரு மெகானிக் ஆக்க முடிஞ்சதா??:))))))

மங்களூர் சிவா said...

//
வல்லிசிம்ஹன் said...
இங்க பாருங்க இ.கொ.
நாங்க சிங்கத்துக்கு புதுசு புதுசா சாப்பாடு போட்டு கினிபிக் ஆக்கினது உண்மைதான்.:))))

இப்ப அவர் தேறிட்டாரு.மெனு சொல்றது,காப்பி போடறதுலேருந்து எல்லாம் கத்துக் கொடுத்துட்டோம்ல. அவரால என்னை ஒரு மெகானிக் ஆக்க முடிஞ்சதா??:))))))
//
ஆஹா
இப்டில்லாம் நடக்குதா???

இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் வாய்தா வாங்கிடவேண்டியதுதான்.

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்..

புல்லரிக்குது அய்யா உம்ம இன்வால்வ்மெண்டைப் பார்த்து.. பாத்து பாத்து எல்லாருக்கும் பதில் சொல்லியிருக்கீரே.. வாழ்க வளமுடன்..

பதிவைப்பத்தி கருத்தே சொல்லலியே?//

Pulliraja said...

மொதலில கண்ணாலம் கட்டிப்பாருங்க! அப்பத்தான் சின்ன வீட்டின் அருமை பெருமையெல்லாம் தெரியத் தொடங்குமப்பபா!!

நற்கீரன் said...

:-) ஒவ்வொரு முறையும் மிகவும் ரசிச்சு, சிரிச்சு படிகற பதிவாக போடுகிறீர்கள். நன்றி.

Sridhar Narayanan said...

வீட்டுப்பாடம் முடிச்சாச்சு.

முதல் வகுப்பே செம ஜூடா இருக்கே... இன்னிக்கு அடி பலமோ?

//இதன் ஆசிரியர்களின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களின் //

இந்த அனு'பாவ'ங்கள் case study-களாக வழங்கப்படுமா வகுப்பில்?

Sridhar Narayanan said...

//மெனு சொல்றது,காப்பி போடறதுலேருந்து எல்லாம் கத்துக் கொடுத்துட்டோம்ல. அவரால என்னை ஒரு மெகானிக் ஆக்க முடிஞ்சதா??:))))))
//

இன்னொரு அனு'பாவ'ம் இங்கே இருக்கு போல :-)

இதை போன்ற அடக்குமுறைகளுக்கு அடுத்த வகுப்பில் போர் முறைகள் கற்பிக்கபடுமா?

ப்ளீஸ்.... :-((((

இலவசக்கொத்தனார் said...

யோவ் ஸ்ரீதர்,

அனு பாவமா இல்லை அவளைக் கட்டிக்கிட்டவன் பாவமா?

என்ன இது?

பினாத்தல் சுரேஷ் said...

குசும்பன்,

//முதல் பாடத்திலேயே(நாளிளேயே) எனக்கு பெண் பார்க்கும் புரோபசஸ் வாழ்க, //

எதேச்சையா அமைஞ்சதுதான் சரவணன்ற பேரு.. அதுக்கு வாழ்த்தற பாரு.. நீ பெயில்தான்!

//அப்பாவி போல ஹார்லிக்ஸ், பழம் எல்லாம் வாங்கிட்டு போய்,//

இதை ஒரு தொழிலாவே செய்யறியோ!

//அவுங்களுக்கு பனிஸ்மெண்டா இன்னொரு கல்யாணம் செய்ய சொல்லுங்க சார்:)//

தப்புக்கு தகுந்த தண்டனைதான் கொடுக்கணும்.. வகுப்புல தூங்குனவனுக்கு தூக்கு தண்டனையா தர முடியும்? சாடிஸ்ட்யா நீ! வருவாங்க வருவாங்க!

பினாத்தல் சுரேஷ் said...

வல்லி சிம்ஹன்,

//இப்ப அவர் தேறிட்டாரு.மெனு சொல்றது,காப்பி போடறதுலேருந்து எல்லாம் கத்துக் கொடுத்துட்டோம்ல. அவரால என்னை ஒரு மெகானிக் ஆக்க முடிஞ்சதா??:))))))//

அதைத்தானே சொல்லிகிட்டிருக்கோம்.. இப்படிப்பட்ட கஷ்டபுருஷர்களின் நிலையை உயர்த்தத்தானே பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்!

பினாத்தல் சுரேஷ் said...

மங்களூர் சிவா..

//இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் வாய்தா வாங்கிடவேண்டியதுதான்.//

அப்ப மட்டும்? உலகம் திரும்பியா சுத்தப்போவுது?

பினாத்தல் சுரேஷ் said...

புள்ளிராஜா,

//அப்பத்தான் சின்ன வீட்டின் அருமை பெருமையெல்லாம் தெரியத் தொடங்குமப்பபா!!//

அய்யய்யோ.. அந்த இல்லீகல் மேட்டர் எல்லாம் இங்க டிஸ்கஸ் பண்றதில்லீங்கோ (தனிமடல்லதான் :-)

நன்றி நற்கீரன்.

ஸ்ரீதர் வெங்கட்,

கேஸ் ஸ்டடியா? மர்டர் கேஸ் ஆகும், பரவாயில்லையா?

அனு"பாவம்" - ரொம்பச்சரியான ஸ்பெல்லிங் பிழை!

ஆமாம்.. பாடம் சொல்லித்தரத்தானே போறோம்!

இலவசக்கொத்தனார் said...

பெனாத்தல்,,

//பதிவைப்பத்தி கருத்தே சொல்லலியே?//

பதிவை கம்முன்னு சாய்ஸில் விட்டுட்டு பின்னூட்டத்துக்கு பதில் சொல்லும் போதே தெரிய வேண்டாம் எனக்கும் கல்யாணம் ஆகி நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு!!

இலவசக்கொத்தனார் said...

/இப்ப அவர் தேறிட்டாரு.மெனு சொல்றது,காப்பி போடறதுலேருந்து எல்லாம் கத்துக் கொடுத்துட்டோம்ல. அவரால என்னை ஒரு மெகானிக் ஆக்க முடிஞ்சதா?? )))))//

ஒருத்தரை அவரு இருக்கற மாதிரி ஏத்துக்கறது எங்க வழக்கம். அதான் உங்க சிங்கம் வல்லியை வல்லியாகவே வெச்சு இருக்காரு. நீங்கதான் மாத்தறேன் பேர்வழின்னு கினிபிக் ஆக்கறது எல்லாம்.

பசங்களா இதையும் கவனியுங்க. அதுக்காக என்ன செய்யணும்? கிளாசுக்கு வாங்க!

இலவசக்கொத்தனார் said...

//சார் இந்த புலி பையன் பக்கத்துல உட்கார்ந்து பேசிக்கிட்டே இருக்கான் சார் பாடத்தை கவனிக்கவிட மாட்டேங்கிறான் சார்,//

குசும்பன், அதெல்லாம் இப்போதான் முடியும். அதனால கண்டுக்காம விடுங்க.

தகடூர் கோபி(Gopi) said...

//இதுவே உமக்குக் கல்யாணம் ஆயிருந்தா வீட்டுப் பாடத்தை வீட்டில் பார்க்க முடியும் என்ற எண்ணம் வந்திருக்குமா? //

ரிப்பீட்டே...

//பதிவை கம்முன்னு சாய்ஸில் விட்டுட்டு பின்னூட்டத்துக்கு பதில் சொல்லும் போதே தெரிய வேண்டாம் எனக்கும் கல்யாணம் ஆகி நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு!!//

டபுள் ரிப்பீட்டே...

seethag said...

ஆமாம் பெனாத்தல், எங்கவீட்ட்ல ஒருத்தர் டோஸ்ட் மட்டும் போட்டு குடுத்திட்டு ஏதோ ஏகத்துக்கு சமையல் செய்தமாதிரி சொல்லுவாரு. சோறு பொங்க இலெக்ற்றிக் குக்கர்ல வெச்சிட்டு ,சமையல் தெரியுமான்னு வெள்ளைக்காரன் எவனாவது கேட்டா
yes i cook அப்படிங்ரது. நான் முறைச்சா வீட்லவந்து, சாதம் வைக்கிரேனே??!!!சாம்பர் வைன்னு சொன்னா எங்க அம்மவோட recipe இல்லய்ங்க வேண்டியது.அட போங்கய்ய உங்க அண்டப்புளுகுகளும் அதை கேக்ரவங்களும்.

gulf-tamilan said...

present sir!!!
வீட்டுல போய் படிக்குறேன்!!!

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்,

எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்றத ..
//அதெல்லாம் இப்போதான் முடியும். // ஒரு வரியில ப்ரூவ் பண்ணிட்டீங்க !!

கோபி.. நீங்களுமா ரிப்பீட்டு :)

பினாத்தல் சுரேஷ் said...

சீதா,

ஐ குக் னு வெள்ளைக்காரங்ககிட்ட சொல்றது என்ன தப்பு? ரெண்டு ப்ரெட்டுக்கு நடுவுல தழையச் சொருகறதையெல்லாம் ரெசிப்பின்னு சொல்றவனுங்க அவங்க!

மத்தபடி என்ன சொல்லவ்ரீங்கன்னு புரியலை! கீழே உள்ளதுல டிக் பண்ணுங்க பாக்கலாம் :)

சமையல் தெரிஞ்சதால பொம்பளைங்க சுப்பீரியர்.

சாதம் வைக்கறதையெல்லாம் சமையல்னு ஆம்பளைங்க சொல்லக்கூடாது..

குறிப்பா உண்மையை யாரும் தைரியமா பேசிடக்கூடாது..

சரியான விடையை paavappata_husbands, space A அல்லது B அல்லது C ன்னு டைப் செய்து உங்கள் கணவர் நம்பருக்கு எஸ் எம் எஸ் அனுப்பிடுங்க :)

வாங்க கல்ப்-தமிழன், ஏன் லேட்டு?

seethag said...

அய்யா பெனாத்தல், நான் ஏன் எஸ்.எம்.எஸ் அனுப்பரேன். இந்தியா போயி உக்காந்துகிட்டு,'அய்யோ நான் இல்லாம எப்பிடி சப்பிடரே,சமையல் யாரு செய்வா'ன்னு புளு விட்டுகிட்டு இருக்காரு.உங்க க்லாசைப்பத்தி மூச்சுகூட விடமாட்டேன்ல.

பினாத்தல் சுரேஷ் said...

சீதா,

பெண்களையும் க்ளாஸுக்கு அழைக்கும் எங்கள் மனப்பாங்கு எங்கே, கணவனுக்கு நல்ல விஷய்ங்கள் கண்ணில் படாமல் மறைத்துவிடும் நீங்கள் எங்கே!!

Unknown said...

பெனாத்தல் சார், படிச்சுட்டு நல்லா சிரிச்சேன். அதுக்கு ஏன்னு கேட்டா பயங்கர உள்குத்தாயிடும். விட்டுடுங்க!

ஊர்ல புரோக்கர் சங்கத்திலிருந்து ஆட்டோ ஏதாச்சும் வரப் போவுது. பெண்ணைப் பெற்ற அப்பாக்களின் பாவம் வேற.... என்னத்த சொல்ல!

ஏன் திருமணம்னு தலைப்பு வச்சதுக்கு எதுக்கு திருமணம்னு "பொருள்பட" வச்சுருக்கலாம்;-)

Dubukku said...

மூனாவது பதிவா இந்த சப்ஜெக்ட்ல....நிக்கிறீங்கண்ணெ...
ஆமா எப்படி பர்மிஷன் வாங்கீன்ரு?? :)))

Daddy chellam said...

புதுசா கல்யாணம் அணைவங்கள்ள இருந்து தாத்தா வரைக்கும் மனைவிய கிண்டல் பண்ணி சந்தோஷ படறிங்க.. ஆனா உண்மைல கல்யானத்த பாத்து பயபிட்றது என்னவோ பொண்ணுங்க தான்.. நாங்கல்லாம் சீரியஸ் ஆ நெனச்சு அழுகுற விஷயம் உங்களுக்கு எல்லாம் டைம் பாஸ் ?? அட போங்கப்பா..

 

blogger templates | Make Money Online