Oct 17, 2007

பினாத்துறதும் ஒரு பொழப்பா - சாத்தான்குளத்தார் சாடல்! (17 Oct 07)

சாத்தான் குளத்தாரே தொடரட்டும்:

 
"கடை விரித்தேன் ..கொள்வாரில்லை என்று கூற முடியாது.
என் வலைப்பதிவையும் சிலரேனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர் என்பதற்கு சில பின்னூட்டங்கள் சாட்சி. இருப்பினும், பதிவது அலுத்துப் போய் விட்டது.

எழுத வரவில்லை என்பது முக்கிய காரணம்.

தீவிர எழுத்து ஒரு தவம் போல. அப்படி எழுத ஒருமுகப்பட்ட சிந்தனை, இடைவிடாத படிப்பு, கொள்கை உறுதி போன்ற பல குணங்கள் தேவைப்படுகின்றன. என் நுனிப்புல் மேய்விற்கு இது சரிப்படாது" எழுத ஆரம்பித்த சில பதிவுகளிலேயே இப்படி அலுத்துக்கொண்ட பெனாத்தலாருக்கு,

எலே மக்கா,
என்னலே புதுக்கத சொல்லுதே? எழுதுதவன் எல்லாம் வெவரமாத்தான் எழுதணும்னு எவம்லே சொன்னது? அப்படில்லாம் பாத்தா நானெல்லாம் எழுதியிருப்பனாலே? பெனாத்துறதை நிறுத்துற மாதிரி ஒரு பெனாத்தல் உலகத்துலேயே கெடயாது மக்கா" அப்படின்னு ஆறுதல் சொல்லி அழைச்சுட்டு வந்த பாவம்தான் இன்னைக்கு பெருமரமாய் வளர்ந்து நிக்குது.:-)) என்னாலயும் சில நல்லதெல்லாம் நடந்திருக்குதுன்னு நான் அப்பப்ப நம்புறது இந்த மாதிரி விசயங்களை வச்சுத்தான்

கார் கதவை ஒரு மனுசன் மெதுவா தொறந்து விடுறான்னா ஒன்னு கார் புதுசா இருக்கணும் அல்லது காருக்குள்ல இருக்குற பொண்டாட்டியோ / சின்ன வீடோ/ காதலியோ புதுசா இருக்கணும்கறதுதான் நியதி. புதுசா இருக்குற வரைக்கும் எல்லாம் பிரம்மாதம்தான்.- சோடா பாட்டில் பொங்குற மாதிரி.ஆனா, தொடர்ந்து எழுதவும் எழுதுனதைப் படிக்க ஆட்களைத் தக்க வச்சுக்கறதும் பெரிய பாடு - அதுவும் நாளுக்கு நாலு பதிவுகள் வரத்துவங்கியிருக்கும் கால கட்டத்தில். பெனாத்தலைப் பொறுத்தவரைக்கும் அந்தப் பிரச்னைக்கு இடமில்லை. அவர் எழுதினால் வாசிப்பதற்கென்று மக்கள் இருக்கவே செய்கிறார்கள். ஏனென்றால் எழுதினால் வாசிக்கும்படியாக இருக்குமென்ற நம்பிக்கையை இந்த மூன்றாண்டுகளில் அவர் வளர்த்தெடுத்திருக்கிறார். இன்றைய சூழலில் இப்படி ஒரு நம்பிக்கையைப் பெறுவதென்பதே பெரிய விசயம்தானே?

கிரிக்கெட்டில் நன்றாக செட்டில் ஆகி விட்ட பேட்ஸ்மேனுக்கு கிரிகெட் பந்து ஃபுட்பால் அளவுக்குப் பெருசாகத் தெரியுமாம். பெனாத்தல் இப்போது அம்மாதிரி தமிழ்வலைப்பூவுலக வீச்சுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொண்டார் என்றே தோன்றுகிறது.

மோட்டுவளையை வெறித்துக் கொண்டு நவீனத்தை படுத்துபவ்ர்கள், கவிதையை வேட்டியை உருவி விடும்வரை விட்டுவிடக் கூடாது என்ற கொள்கை வைராக்கியத்தோடு வலம் வரும் கவிஞர்கள்,  கழுத்து வலிக்க வலிக்கத் திரும்பிப் பார்க்கும் மலரும் நினைவுகள், திரும்பத் திரும்ப மொக்கைகள் என்று ஒரே மாதிரியாகவே எழுதுபர்களுக்கு மத்தியில் சுரேஷின் எழுத்து எல்லாம் கலந்த கதம்பமாக இருக்கிறது

சிறுகதை, கவிதை, அரசியல், சமூக அக்கறை, திரைப் பார்வை, இலக்கியம் குறித்த அலசல்கள், ஃப்ளாஷ் தொழிநுட்ப உதவியுடன் கலாய்த்தல்கள் என்று பன்முகம் கொண்ட பதிவுகளாக அவை விரவிக் கிடக்கின்றன. எல்லாவற்றிலுமே வாசிப்பவர்களை ஈர்க்கும் விதம் மெல்லிய நகைச்சுவை பரவிக் கிடக்கிறது. அடிப்படையில் தனது எழுத்து எந்த சார்புநிலைக்குள்ளும் புகுந்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கை மனப்பான்மையோடு எழுதுவதே இதற்குக் காரணம்.

"பிம்பங்கள் இல்லாத நேரத்தில், பக்கச்சார்புகள் இல்லாமல் சிந்திக்கவும் அதீதக்கோபமோ, அதீதப்பாசமோ இல்லாமல் விமர்சிக்க முடிகிறது . எந்த அரசியல்வாதியினாலும் தனிப்பட்ட ஆதாயமோ, பாதிப்போ அடையாததால், பிம்பங்கள் ஏதும் இன்றி, நிகழ்வுகளின் அடிப்படையில் கருத்துக்களை அமைத்துக்கொள்ள முடிகிறது." என்று சுயவிமர்சனம் செய்து கொள்ள முடிவதுதான் சுரேஷின் இன்னொரு முக்கிய பலம் .

விக்கி பசங்களில் பங்களித்தாலும் சரி, வருத்தப்படாத வாலிபராக வலம் வந்தாலும் சரி; கில்லிக்கு வாசிப்புரை எழுதினாலும் சரி; இன்னமும் அவரை ஓரம்கட்டி முத்திரை குத்தி யாரும் சாத்திவிடாமல் தப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார் என்பதே கூட மூன்றாண்டு கால சாதனையை விட மிக உயர்ந்த சாதனைதான்.

பற்றியெரியும் சேது சமுத்திரத் திட்டமானாலும் சரி, உபி தேர்தலில் பாஜக வெளியிட்ட விசிடி பற்றிய பார்வையாக இருந்தாலும் சரி, அமீரகத்தில் இந்துக்களுக்கு எதிரான நிலை இருப்பதாகப் புரளி பரவியபோது அதனை மறுத்து எழுதிய போதும் சரி - தனது நிலையை மிகத் தெளிவாகச் சொல்லும் நேர்மை அவருக்கு வாய்த்திருப்பது பாராட்டுக்குரியது.

கவிமடத்தின் தலைமைச் சீடனாக இருந்தும் கூட கவுஜை எழுதி ஆட்களைத் தாளிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் எப்போதேனும் மட்டும் கவிதையை எழுதுவதும், அந்தக் கவிதை கவிதையாகவே இருப்பதும் அதனாலேயே அவர் அதிகம் கவிதை எழுதாமலிருப்பதும் அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. அதற்காகக் கவிமடத்தின் பெருமையைக் காப்பாற்றவும் அவர் தவறியதில்லை. அவர் எழுதிய காப்பி கசக்கும் கவிதை ஒரு உதாரணம்

தேன்கூடு சிறுகதைப் போட்டியில் வெற்றி, சிறந்த தமிழ் பதிவர் , அவள் விகடனே அங்கீகாரம் தந்த அவன் விகடன் எனப் பல சிறப்புகள் இருந்தபோதும் அது பற்றிய அலட்டல் அதிகம் இல்லாமல் நல்ல பதிவுகளைக் கண்டால் ஓடிச்சென்று வாழ்த்துவதும், குறையென்று கண்டால் விவாதிப்பதும் கூட சுரேஷின் சிறப்புகளில் முக்கியமானதெனக் கருதுகிறேன்

விக்கி பசங்களுக்காக தனது துறை சார்ந்த பதிவில் மிகச் சிறப்பான தமிழில் எளிய விளக்கங்கள் அளிக்க் முடிந்த அவரால் சில பதிவுகளில் தமிங்கலத்தைத் தவிர்க்க முடியாமல் இருப்பது என்னைப் பொறுத்தவரை குறைதான்.

வித்தியாசமாக யோசிப்பது, நக்கைச்சுவை மிளிர எழுதுவது இவை இரண்டும்தான் பெனாத்தலின் மிகப் பெரிய பலம். போக்கிரி படத்தில் விஜயின் முகபாவங்களை அவர் சொல்லியிருந்த விதம் நினைத்தாலே இன்னமும் சிரிப்பை வரவழைக்கிறது. 'அம்மு'வை எல்லாரும் 'ஆஹா ஓஹோ' என்று சொல்லும்போது கூட்டத்தில் கோவிந்தா போடாமல் 'அடப் போங்கய்யா! இதெல்லாம் ஒரு படமா?' என்று கேட்கும் துணிச்சலும் சுரேசுக்கு நிறையவே இருக்கிறது

நகைச்சுவை என்பதற்காகக் கோமாளித்தனமோ வலிந்த திணிப்புகளோ இல்லாமல் இயல்பு நடையிலேயே எழுத முடிவதும் அப்படி எழுத முடியுமளவுக்கு நிறைய கற்பனை வளம் இருப்பதும் டப்பாவில் இன்னமும் பெருங்காயம் இருக்கத்தான் செய்கிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கிறது.
 
மணிரத்னம் இயக்கும் குருசாமி நாயகன் (பெரியார்) Full Screenplay

ஆனால் தீவிரமான கட்டுரைகளையும் கூட அவ்வப்போது எழுதித்தான் வந்திருக்கிறார். பிஹார் பற்றிய கட்டுரையும் ஆளாளுக்கு எட்டு போட்டு அலைக்கழித்த/கழிந்த நேரத்தில் சீரியஸாய் போட்ட எட்டும் முக்கியமானவை

ஒளிரத்தான் செய்கிறது சூரியன் -
ஊழி வந்து பிரட்டிப்போட்ட கடற்கரையிலும்.
பொழியத்தான் செய்கிறது மேகம் -
நடுங்கி அடங்கிய நிலத்தினிலும்.
புணரத்தான் செய்கிறார்கள் பெற்றோர் -
தீ வந்து மகவு தின்ற வீட்டிலும்..
நம்பத்தான் வேண்டும் நாமும் -
நாளையேனும் நற்பொழுதாய் விடியுமென.

இந்தக் கவிதையைப் போலத்தான் தமிழ்மணத்தின் இன்றைய சூழலும். எப்போதும் இல்லாவிட்டாலும் அவ்வப்போதேனும் நல்ல பதிவுகள் வருமென்ற நம்பிக்கை எல்லாருக்கும் இருக்கிறது. அத்தகைய நம்பிக்கை ஏற்படுவதற்கு சுரேஷ் போன்ற பதிவர்களும் ஒரு காரணமென்று உறுதியாகச் சொல்லலாம்.
---------------------
ஆசிப்புக்கு நன்றி. இந்த மூன்று ஆண்டுகளாய் என்னைப் பொறுத்துவந்தது மட்டுமின்றி அமோக ஆதரவும் அளித்துவரும் அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி கூறி, நாலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.
 
 

45 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

//இன்னமும் அவரை ஓரம்கட்டி முத்திரை குத்தி யாரும் சாத்திவிடாமல் தப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார் என்பதே கூட மூன்றாண்டு கால சாதனையை விட மிக உயர்ந்த சாதனைதான்.//

இப்படி எல்லாம் வேற பொய் சொல்லிக்கிட்டு திரியறீரா? இருக்கட்டும்.

அப்புறம் கட்சி பத்தி ஒரு வார்த்தை கூட இல்லை. ஏற்கனவே ஒரு முறை மாப்பு கேட்ட ஆள்தானே நீரு!!

நாலாவது வருஷமா!! நல்லா இரும்வேன்னு சொல்லறதைத் தவிர வேற என்ன செய்ய!! நல்லா இரும்வே!!

VSK said...

வாழ்த்துக்கள்!

ramachandranusha(உஷா) said...

அன்பின் அண்ணாச்சி,
தங்கள் (பழைய ) தலைமை சீடிக்கு இப்படி ஒரு வாழ்த்துமடல் அனுப்பியிருந்தா நானும் தன்னடகத்துடன், பணிவாய், நன்றியுடன் என் பதிவில் ஏற்றிக் கொண்டிருப்பேன் இல்லியா? அவுங்க எல்லாம் என் ஆர் ஐங்க,எனக்கு ஏதோ ஏழைக்கு தகுந்த எள்ளுரண்டையா, பேமண்டு
கொஞ்சம் பார்த்து சொன்ன செளகரியமா படும். வரிக்கு எவ்வளவு? இவ்வளவு விவரமாய் இல்லாமல், நாலு பாராக்களில் கவிதைக் குறித்த என் ஆழ்ந்த தேடல், ஆங்கில படைப்புலகிற்கு இணையான நகைச்சுவை, என் அமரகாவிய கதைகள் பற்றிய ஒரு திற்னாய்வு, அரசியலிலும் தொட்டு செல்லும் மாண்புன்னு நானே எளுதி அனுப்பட்டா? நீங்க கையெழுத்துப் போட்டா ம்ட்டும் போதும்.லிங்க் எல்லாம் தேட நீங்க சிரமப்பட வேண்டாம் பாருங்க!
இப்படிக்கு,
பழைய சீடி

ramachandranusha(உஷா) said...

பி.கு பினாத்தலாரே! நம் கடன் எழுதி தீர்ப்பதே என்று கடமையை செய்யுங்க. வாழ்த்துக்கள், வாழ்க, வளர்க!

வெட்டிப்பயல் said...

ஆஹா.. மூணு வருஷமா தொடர்ந்து எழுதறீங்களா?

வாழ்த்துக்கள்... இதே மாதிரி தொடர்ந்து அடிச்சி ஆடவும்.

Radha Sriram said...

ஹப்பா நாலாவது வருஷமா......??வாழ்த்துக்கள் சுரேஷ்......

//நாலு பாராக்களில் கவிதைக் குறித்த என் ஆழ்ந்த தேடல், ஆங்கில படைப்புலகிற்கு இணையான நகைச்சுவை, என் அமரகாவிய கதைகள் பற்றிய ஒரு திற்னாய்வு, அரசியலிலும் தொட்டு செல்லும் மாண்புன்னு நானே எளுதி அனுப்பட்டா?//

ரொம்பதான் குறும்பு உஷா உங்களுக்கு, எங்க போனாலும் இப்படி stage steal பண்ணினா எப்படி??!!:):)

Radha Sriram said...

ஹப்பா நாலாவது வருஷமா......??வாழ்த்துக்கள் சுரேஷ்......

//நாலு பாராக்களில் கவிதைக் குறித்த என் ஆழ்ந்த தேடல், ஆங்கில படைப்புலகிற்கு இணையான நகைச்சுவை, என் அமரகாவிய கதைகள் பற்றிய ஒரு திற்னாய்வு, அரசியலிலும் தொட்டு செல்லும் மாண்புன்னு நானே எளுதி அனுப்பட்டா?//

ரொம்பதான் குறும்பு உஷா உங்களுக்கு, எங்க போனாலும் இப்படி stage steal பண்ணினா எப்படி??!!:):)

குசும்பன் said...

வாழ்த்துக்கள் பினாத்தலாரே!!! அப்புறம் டீரிட்டுக்கு ஏல்லாரையும் வெள்ளிகிழமை கராமா வர சொல்லிடுறேன்!!! உங்களுக்கு வேலை இருந்து சரியான நேரத்து வர முடியவில்லை என்றாலும் பரவாயில்லை நீங்க பில் செட்டில் செய்ய வந்தால் மட்டும் போதும்!!!

SurveySan said...

kewl. congrats & best wishes!

நாகை சிவா said...

4 ஆண்டா... வாழ்த்துக்கள் சுரேஷ்...

செந்தழல் ரவி said...

தமிழ்மணத்தை கட் அண்ட் பேஸ்ட் செய்து எல்லாத்தையும் மாத்தி போட்டீங்களே !!!!!!

அது மாதிரி மறுபடி பண்ணுங்க ப்ளீஸ்

Sridhar Venkat said...

வாழ்த்துக்கள் அண்ணா... வழக்கம் போல் சூப்பர் உப்புமா போட்டு கலக்குங்கண்ணாவ். (அட! இது நிஜமாவே பாராட்டுதாங்கண்ணா)

//அப்புறம் கட்சி பத்தி ஒரு வார்த்தை//

இப்படி எல்லாம் சொல்லிதான் கட்சி பத்தி ஞாபகப்படுத்திக்கனும். ஹ்ம்ம்..!

அய்யனார் said...

வாழ்த்துக்கள் சுரேஷ்...

இங்க குசும்பன வழிமொழியுறேன்

இராமநாதன் said...

//நாலு பாராக்களில் கவிதைக் குறித்த என் ஆழ்ந்த தேடல், ஆங்கில படைப்புலகிற்கு இணையான நகைச்சுவை, என் அமரகாவிய கதைகள் பற்றிய ஒரு திற்னாய்வு, அரசியலிலும் தொட்டு செல்லும் மாண்புன்னு நானே எளுதி அனுப்பட்டா? நீங்க கையெழுத்துப் போட்டா ம்ட்டும் போதும்//

உஷா என் அஞ்சா நெஞ்சத்துள் கையவிட்டு நான் எளுத நினச்ச அல்லாத்தையும் ஸிற்றிலக்கிய பின்னூட்டமா இங்கேயே எளுதிட்டதால அதையே வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிஞ்சு பின் நவீனத்துவம் பிழிஞ்சுக்குறேன்.

இராமநாதன் said...

நாலாவது வருஷத்துக்கு வாழ்த்து!

இராமநாதன் said...

பெனாத்தலார தெரியாதவனெல்லாம் ஒரு தமிழ் வலைப்பதிவனானு நான் வேணா ஒரு பாட்காஸ்ட் போடவா?

cgs said...

my whole family enjoyed your m.sc wifelogy.
vijay's facial expression was marvelous..
i too believe you are able to be unbiased.
penathal , you have lot of originality.
keep it up.

Tharuthalai said...

//பெனாத்தலார தெரியாதவனெல்லாம் ஒரு தமிழ் வலைப்பதிவனானு நான் வேணா ஒரு பாட்காஸ்ட் போடவா?//


யாரு அந்த பெனாத்தல்? எனக்கு தமிழ்ல வலைப்பூ இல்ல. அதனாலதான் கேட்கிறேன்?

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

ஜெஸிலா said...

வாழ்த்துகள். 3 வருடத்தில் எத்தனை பதிவுகள்?

ILA(a)இளா said...

வாழ்த்துக்கள் பெனாத்தலாரே! பெனாத்துறது ஒரு பொழப்பா இல்லைன்னா நாம் எப்படி சந்திச்சு இருக்கிறதாம்

இராம்/Raam said...

வாழ்த்துக்கள் சுரேஷ்.... :)

உங்களின் இந்த பதிவு யாராலும் நினைத்து பார்க்காமல் இருக்கமுடியாது... :))

அதுவும் அதில் நட்சத்திரத்துகாக நீங்க வைத்த பன்ச்'ஐ இப்போ நினைச்சாலும் சிரிப்பு வந்திரும்... :))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கொத்தனார்.

ஆசீப் அண்ணாச்சிகிட்ட கட்சி பத்தி எல்லாமா கேட்டு வாங்க முடியும்?

நன்றி விஎஸ்கே

யெக்கோவ்.. ஏகாம்பரி கோஸ்ட் ரைட்டர்னு சொன்ன கோபம்தானே? வாழ்த்துஸ்க்கு நன்றி, உள்குத்துக்கு க்ர்ர்ர்ர்.

நன்றி வெட்டிப்பயல்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ராதா ஸ்ரீராம்.

குசும்பன், ட்ரீட்டுக்கெல்லாம் நான் பணம் கொடுத்தா அபி அப்பா கோவிச்சுக்குவார்.

நன்றி சர்வேசன்.

நன்றி புலி.

பினாத்தல் சுரேஷ் said...

செந்தழல் ரவி.. என் மனசுக்குள்ள பூந்து பாத்தீங்களோ.. விரைவில் வருது!

நன்றி ஸ்ரீதர் வெங்கட். பாராட்டாத்தான் எடுத்துக்குவேன்:-)

நன்றி அய்யனார் - குசும்பனையெல்லாம் வழிமொழிய ஆரம்பிச்சுட்டீங்க :)

ராம்ஸு - நீயும் உள்குத்தா? இடிதாங்கும் உள்ளமிது பொடி தாங்குமா?

நீ பாட்டுக்கு என்னவோ சொல்லப்போக, கீழே தறுதலை என்ன கேட்டிருக்காரு பாரு! நீங்க விளையாட நாந்தானா கிடைச்சேன்??

நன்றி cgs.

பினாத்தல் சுரேஷ் said...

தறுதலை - நாந்தாங்க அது.. என் நிலைமை இவ்வளவு மோசமாயிடுச்சே!:-(

ஜெஸிலா, நன்றி.. அதிகமில்லை - ஒரு 280தான் இருக்கும்.

இளா நன்றி. அதானே!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ராம்.. அதேபோல ஒண்ணு வருது.

Anonymous said...

நல்லா இருங்க ;)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அனானி..

இதைச் சொல்ல ஏன் அனானி?

அபி அப்பா said...

வாங்க வாங்க குருசாமி! இப்பல்லாம் 18 வருஷம் போக தேவையே இல்லை! மூணு வருஷம் போனாலே குருசாமிதான் எங்க ஊர்ல!! நாங்கல்லாம் கன்னி சாமிங்க கொஞ்ச ம் வேகமா நடப்போம்(கன்னி சாமியா இருக்கும் வரை....அதுவும் நான் இப்போதான் அழுதமலை ஏற்றத்தில் இருக்கிறேன்! எப்போ பம்பை(100) வருமோன்னு இருக்கிறேன்!) ஆனா 3 வருஷம் முடிஞ்ச பின்னும் இத்தன வேகம் கூடாது சாமீ! நீங்க கக்கூஸ் போனா உச்சா வருது, வேட்டிய கீழே போட்ட்டு உச்சா போனா வேட்டி நனையுது, ஒரு குழந்தைகளா இருந்து சொல்றோம் உங்களுக்கு ஓய்வு தேவை!!!!:-))))))

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!

அபி அப்பா said...

இந்த ஐப்பசி கார்த்திகை ன்னாவே எனக்கு "அவர்" தான் ஞாபகம் வருது! அடுத்து தமிழ்மனம் வேர படிக்கிறனா அதான் போன பின்னூட்டம்...ஹி ஹி....

பினாத்தல் சுரேஷ் said...

அபி அப்பா..

உங்க பின்னூட்டத்தைப் பார்த்ததும் உங்க பதிவுக்குள் நெளியும் GIF எல்லாம் தெரிய ஆரம்பிச்சிடுச்சி :)

நன்றி.

கோபிநாத் said...

தொடர்ந்து கலக்குங்க..வாழ்த்துக்கள் :)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபிநாத்..

Boston Bala said...

வாழ்த்துகள் சுரேஷ்

பொறுமையாக மீள்வாசித்து, அழகாகத் தொகுத்த ஆசிப்புக்கு பாராட்டு கலந்த நன்றி

துளசி கோபால் said...

சாடல் னு பார்த்தவுடன்
சண்டை ஒத்து நைனா....
சமாதானங்காப் போதே நல்லதுன்னு கொஞ்சம் அசந்துட்டென்.

மூணு வயசு முடிஞ்சு நாலாவது ஆரம்பமா?

வாழ்த்து(க்)கள்.நல்லா இருங்க. இந்த அக்காவைப் போல:-))))

Tharuthalai said...

எனக்கு வாழ்த்த வயதில்லை. அதனால்தான் வாழ்த்துச் சொல்லவில்லை.
நல்லா இருங்கடே!
-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

குசும்பன் said...

நன்றி அய்யனார் - குசும்பனையெல்லாம் வழிமொழிய ஆரம்பிச்சுட்டீங்க :)/////////////

:((((((((((((((((((

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பாபா.

யெக்கோவ்.. நான் என்ன வம்பு தும்புக்குப் போகிற ஆளா? அதுவும் சாத்தான்குளத்தார் என்னை ஏன் சாடப்போறாரு.. யோசிக்கவாணாம்??

தறுதலை, மூணு வயசுக்கு மேல இருந்தா வாழ்த்தலாமே..

குசும்பன்.. என்ன அவ்வளவு சோகம்? சொன்னது தப்பா என்ன :))

பத்மா அர்விந்த் said...

வாழ்த்துக்கள் சுரேஷ். அருமையான் தொகுப்பு ஆசீப். எனக்கு பிடித்தது உங்கள் பிளாஷ் பதிவுகளும் சிறுகதைகளும். உங்கள் அறிவியல் கட்டுரைகள் இன்னும் விரிவாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கப்பி பய said...

vaazhthukkal thala!!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பத்மா..

அறிவிYஅல் கட்டுரை.. இன்னும் விரிவாவா? சட்டியில இருந்தா ஆப்பையில வரும் :)

கொங்கு ராசா / Raasa said...

வாழ்த்துக்கள் :)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கப்பி பய!

நன்றி கொங்கு ராசா!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

சுட்டியுடன் தாங்கள் அனுப்பிய மெயில் வழியே தான் வந்தேன். நாலாம் ஆண்டா.....? அசத்துறீங்க.. வலை உலகம் இன்னும் போரடிக்காம இருக்குறதே ஆச்சரியம் தான்.

வாழ்த்துக்கள்.

ஆசிப் சரியான தொகுப்பாளன்னு மீண்டும் நிறுபிச்சு இருக்கார். :)

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துக்கள் சுரேஷ்.

நாலு ஆண்டுகள், வலையில் நற்பெயரோடு இருப்பது பெரிய விஷயம்தான்.

இன்னும் பல நூறு பதிவுகள் போட ஆசிகள்.:))

 

blogger templates | Make Money Online