Sep 23, 2007

எல்லாப்பக்கமும் நாறும் ராமர் பாலம்!

இயற்கையான மணல்திட்டுக்களோ, இறைவன் உருவாக்கிய பாலமோ.. இன்று எல்லாப்பக்கமும் நாறத்தான் செய்கிறது.
 
சேது சமுத்திரத்திட்டம், எல்லா அரசியல்வாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கு இணையாகவே கொள்கைகளும் கொள்கை மாற்றங்களும் கொண்ட வலைப்பதிவாளர்களுக்கும் பத்துநாளுக்கு மட்டும் சாஸ்வதம் கொண்ட நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது.
 
ராமர் இருந்தாரா, பாலம் கட்டினாரா, பொறியியல் படித்தாரா, பொறியல் தின்றாரா எனக் கேள்வி கேட்க, திமுக தலைவருக்குத் தகுதி இல்லைதான். டாவின்ஸி கோட் என்ற உப்புப் பெறாத திரைப்படத்தை "மத நம்பிக்கைகள் புண்படக்கூடாது" என்பதற்காகத் தடை செய்த கட்சித் தலைமை, வெளிப்படையாக, தன்னிச்சையாக மத நம்பிக்கைகள் புண்படுமாறு பேசுவது எந்த விதத்தில் நியாயம்?
 
ஆனால், அதே நேரத்தில், புழங்குவதில்லை, தொழுகை நடைபெறுவதில்லை, பல நூற்றாண்டுக்கு முன் கோயிலாக இருந்தது என்று காரணம் காட்டி பாபர் மசூதியை இடித்த மதவாதிகளுக்கும், இப்போது யாரும் புழங்காத, பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக சொல்லப்படும். எந்த பூஜையும் நடைபெறாத ராமர் பாலத்தைக் காக்கும் ஆர்வம் திடீரென வருவதென்ன நியாயம்?
 
ஒரு ப்ளான்கூட போடப்படாமலா வரைவுத்திட்டம் வாஜ்பாய் அரசால் முன்மொழியப்பட்டது? அப்போது தெரியாதா இது ராமர் பாலம் என்று?
 
காங்கிரஸுக்கோ புலிவால் பிடிக்க பயம். திமுக போன்ற தைரியம் அதற்கு இல்லை. எதை எதையோ சொல்லி, பிரச்சனை தங்கள் தலைமேல் விழாமல், ராமர்பாலம் இடித்த தோஷம் தங்கள் மேல் வராமல் இருந்தாலே போதும் என்று அம்பிகா சோனியை காவுகொடுக்கவும் தயாராகிவிட்டது. சும்மாவா? திமுக போல இந்துத்துவ எதிர்ப்பால் பாதிப்பு வராது என்ற நிலைமையா இருக்கிறது? கொஞ்சம் கேப் விட்டால் பாஜக புகுந்து புறப்பட்டு விடுமே..
 
நம் லோக்கல் அரசியல்வாதிகள் நிலைமை தமாஷாக இருக்கிறது.
 
சேது சமுத்திரத்திட்டத்தால் வோட்டு வரும்போல இருக்கிறதே.. ஆதரிப்போம்..
அட.. அது திமுகவுக்கு சாதகமாக ஆகும் போலிருக்கிறதே.. மீனவர்கள் நலம் நாசம் என கொடி பிடிப்போம்..
நாசா படம் வெளியிட்டிருக்கிறதே.. ஆமாம் ராமர்தான் கட்டினார் அதை.. மத உணர்ச்சிக்குத் தூபம் போடுவோம்..
 
இதுதான் அதிமுக நிலைமை! நேரில் மடக்கி.. இப்ப என்னதாங்க சொல்றீங்க, "சேது சமுத்திரம் வேணுமா வேணாமா" என்று கேட்டால் பதில் வராது!
 
ஆதரவு எதிர்ப்பு இரண்டும் இல்லாமல் ஒரு வழவழா கொழகொழா நிலையும் இருக்கிறது, அது புதுக்கட்சிக்காரர்களுக்கு.
 
மாற்றுப்பாதையில் ராமர்பாலத்தை இடிக்காமல் போடட்டுமே! அடப்பாவிகளா.. மாற்றுப்பாதை சுற்றுவழியாக இருக்கிறது என்பதால்தானே இந்த வழியே போடுகிறார்கள்!
 
ராமர் பாலத்தை மறுக்கும், அதே நேரத்தில் சேது சமுத்திரத்தையும் எதிர்க்கும் ஒரு கோஷ்டியும் நடுவில் உலாவுகிரது. இந்தக் குழு பரவாயில்லை, அடிக்கடி கொள்கையை மாற்றிக்கொள்வதில்லை, கொஞ்சம் நம்பலாம். சுற்றுச்சூழல், கனிமவளம் போன்ற காரணங்களால் எதிர்க்கிறது.
 
திமுக இப்போது தனித்துவிடப் பட்டிருக்கிறது. டெல்லி காங்கிரஸ் கைகழுவிவிட்டது.
 
ஆனால், இந்த அரசியல் நிலைப்பாடுகள் எல்லா விஷயத்துக்கும் பொது, எதுவும் புதிதில்லை, இந்த நாற்றம் மூக்குக்குப் பழகிவிட்டது!
 
பெரும் நாற்றம் அறிக்கைப்போரினால்!
 
வெளிப்படையாக ஒரு மத நம்பிக்கையைக் குறைபேசும் முதல்வர் பிரச்சனையை ஆரம்பித்துவைக்க,
 
அவர் தலைக்கு ஒரு விலை வைக்கும் மதவாதம்! எவ்வளவு கேவலம்! உங்கள் வீடியோவைப்பார்த்து எத்தனையோ பேர் உங்கள் தலைக்கு விலை வைக்கலாமே! நீங்கள் இடிக்காத மதநம்பிக்கைகளா?
 
ராமரின் சர்ட்டிபிகேட் கேட்கும் திமுக, திருவள்ளுவரின் சர்ட்டிபிகேட்டை பார்த்திருக்கிறார்களா என்று நியாயமான கேள்வி கேட்ட விஜயகாந்தின் பூர்வீகம் அவசர அவசரமாக ஆராயப்படுகிறது! அவர் தலைக்கு விலைவைக்கும் ஆவல் தெரிகிறது!
 
மொத்தத்தில், ஒரு சாதாரண பொருளாதார முன்னேற்ற திட்டம், படிப்படியாக உணர்ச்சிகளின் கூடாரமாக்கப்படுகிறது! இதற்குள் இதற்கு 300 கோடி ரூபாய் செலவும் ஆகிவிட்டிருக்கிறதாம். (ஜூவி செய்தி)!
 
என் கருத்தா? சேது சமுத்திரத்திட்டம் கனிமவளம், சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களைத் தவிர்த்து, வேறெந்தக் காரணங்களாலும் கைவிடப்படக்கூடாது. புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்பது அரசு தரப்பால் தெளிவாக்கப்பட்டபிறகே தொடரப்படவேண்டும், வெள்ளை யானையாக இருந்தாலும் ஈகோவுக்காக தொடரப்படக்கூடாது!
 
பெரிய ஆசைகள் -- இன்றைய நாற்றமெடுத்த சூழலில்! 

27 பின்னூட்டங்கள்:

ILA (a) இளா said...

முதலில் அரசியல்:
நான் தான் முதலில் சேது சமுத்திர திட்டத்துக்கு ஒப்புதல் பெற பாடுபட்டேன் - ஆரிய அம்மையார்

சேது சமுத்திர திட்டம் எங்களுடையதே - திராவிட பெரியவர்

இப்போ மீட்டரு.

ராமர் பொரியல் செய்தாலும், செய்யாட்டாலும், அணில்கள் ஒன்று சேர்ந்து பாலம் கட்டினாலும், என் 'தலை'யே போனாலும், மீனவர்களுக்கு இடைஞ்சல் வராமல் சேது வர வேண்டும்.

ramachandranusha(உஷா) said...

உயர்பீடத்தின் மீது அமர்ந்து ஆளுக்காளு வீடும் சவடால் பேச்சால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இப்பொழுதே இரண்டு உயிர்களை காவுக் கொடுத்தாச்சு. இன்னும் அப்பாவி பொதுஜனங்களுக்கு என்ன என்ன இழப்புகள் வரப் போகிறதோ
என்று நினைத்தால் நெஞ்சு பதறுகிறது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

மிகவும் சரி...
உண்மையில் அதன் பலன்கள்,குறைகள் பற்றி ஒரு வெள்ளை அறிக்கை அரசால் சம்ர்ப்பிக்கப்பட வேண்டும்.
இது சார்ந்த என் பதிவின் நோக்கமும் இதுதான்.
http://sangappalagai.blogspot.com/2007/09/blog-post_22.html

நாகை சிவா said...

பினாத்தல்

நல்ல கட்டுரை! என்று தான் கலைஞர் இது போன்ற நக்கல், நையாண்டி பேச்சுகளை நிறுத்த போகின்றாரோ... அவர் எந்த மதமும் இல்லை என்று நிலையில் இருந்து இது போன்ற கூறுவதாக இருந்தால் யாரும் கண்டுக் கொள்ள போவதில்லை. குறிப்பிட்ட ஒரு மதத்தை மற்றும் தொடர்ந்து சாடும் போது தான் வருத்தமாக இருக்கிறது.

இதன் மூலம் எஸ்.வி. சேகர் கேட்பது நியாயமாக தான் படுகின்றது. சாமியே இல்லனு சொல்லுறீங்கள.. அப்புறம் எதுக்கு இந்து அறநிலைத்துறை அதுக்கு ஒரு அமைச்சர்.. கோவில்களின் மூலம் வரும் வருமானம் எல்லாம் எதுக்கு... காசு மட்டும் வேணும் இவங்களுக்கு... நாய் வித்த காசு குரைக்கவா போது என்ற நிலையில் தான் இருக்கின்றார்கள்.

போற போக்க பார்த்த சேது வின் நிலையை பார்க்கும் நம் நிலைமை சீயான் சேதுவாக தான் போய் முடியும் போல இருக்கு....

என்னத்த சொல்ல...

வடுவூர் குமார் said...

எக்காரணத்தையும் கொண்டு ராமரின் பின்னால் ஒளிந்துந்துகொண்டு "வேண்டாம்" என்று சொல்வது நம் தலைமுறைக்கு நாம் கொடுக்கும் தண்டனையாக இருக்கும்.
நிச்சயம் இத்திட்டம் செயல்படுத்த வேண்டும். (சூழ்நிலைக்கு குந்தகம் இல்லாத பட்சத்தில்)

SurveySan said...

//சேது சமுத்திரத்திட்டம் கனிமவளம், சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களைத் தவிர்த்து, வேறெந்தக் காரணங்களாலும் கைவிடப்படக்கூடாது. புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்பது அரசு தரப்பால் தெளிவாக்கப்பட்டபிறகே தொடரப்படவேண்டும், வெள்ளை யானையாக இருந்தாலும் ஈகோவுக்காக தொடரப்படக்கூடாது!//

same thoughts, like mine.

Lets build the damn canal, if it is not going to cause a imbalance in nature and if it is going to give us all good benefits -- Jail the damn VHP leaders, if they stand in the way.

on the other hand, if this is some project to fulfill some egos of some leaders, jail the damn leaders.

Its insane to see these idiots play politics and triggering killings of innocents for selfish reasons.

Voice on Wings said...

//சேது சமுத்திரத்திட்டம் கனிமவளம், சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களைத் தவிர்த்து, வேறெந்தக் காரணங்களாலும் கைவிடப்படக்கூடாது. புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்பது அரசு தரப்பால் தெளிவாக்கப்பட்டபிறகே தொடரப்படவேண்டும், வெள்ளை யானையாக இருந்தாலும் ஈகோவுக்காக தொடரப்படக்கூடாது!//

அகழ்வுப் பணிகளால் இதுவரை அப்பகுதியில் ஐந்தாறு திமிங்கிலங்கள் மரணித்துள்ளன என்று நேற்று CNN IBN நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. பவளப்பாறைகளுக்கும் பேராபத்து என்ற கருத்து நிலவுகிறது. பொருளாதார அடிப்படையிலும் இத்திட்டம் பெரிய அளவில் பலன் தரபோவதில்லை என்ற தகவல்களே கிடைக்கின்றன.

இப்படியிருக்கையில் Ram factor ஒரு அருமையான சந்தர்ப்பம் நம் அதிகார வரக்கத்திற்கு. மூட நம்பிக்கை எதிர்ப்பு என்ற பெயரில் இத்திட்டத்திற்கான ஆதரவைத் திரட்டி, சில தனிநபர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய ஒரு திட்டத்தை அவசர கதியில் முன்னெடுத்துச் செல்கின்றனர் நம் ஆட்சியாளர்கள்.

குசும்பன் said...

"சேது சமுத்திரத்திட்டம் கனிமவளம், சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களைத் தவிர்த்து, வேறெந்தக் காரணங்களாலும் கைவிடப்படக்கூடாது."

ஒரு பெரிய ரிப்பீட்டேய்!!!!!

ச.சங்கர் said...

நல்லா சொன்னீங்க :)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க விவசாயி!

மீனவர்களுக்கு இடைஞ்சல் வராமல் சேது வர வேண்டும். -- அது!!

உஷா,

ரொம்பச்சுலபமா பத்த வச்சுடறாங்க, அணையறதுக்குள்ள சில உயிர்ங்க போயிடுது! மதுரை 3 பேருக்கே எந்த நியாயமும் இன்னும் காணலை.. வயிறு எரியுது!

வாஸ்தவம் அறிவன்.

பினாத்தல் சுரேஷ் said...

நாகை சிவா,

//சேது வின் நிலையை பார்க்கும் நம் நிலைமை சீயான் சேதுவாக தான் போய் முடியும் போல இருக்கு....//

சாதுக்களை சேதுக்களா ஆக்கறதே இவங்களுக்கு வேலையாப்போச்சு!

வடுவூர் குமார்,

//வேண்டாம்" என்று சொல்வது நம் தலைமுறைக்கு நாம் கொடுக்கும் தண்டனையாக இருக்கும்//

ஆமாம்!

சர்வேசன்,

//Its insane to see these idiots play politics and triggering killings of innocents for selfish reasons.//

இதுதான் வயித்தெரிச்சலை ரொம்பவே கிளப்புது!

பினாத்தல் சுரேஷ் said...

சிறகணிந்த குரல்,

//அகழ்வுப் பணிகளால் இதுவரை அப்பகுதியில் ஐந்தாறு திமிங்கிலங்கள் மரணித்துள்ளன என்று நேற்று CNN IBN நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. பவளப்பாறைகளுக்கும் பேராபத்து என்ற கருத்து நிலவுகிறது. பொருளாதார அடிப்படையிலும் இத்திட்டம் பெரிய அளவில் பலன் தரபோவதில்லை என்ற தகவல்களே கிடைக்கின்றன.//

இப்படிப்பட்ட குரல்களைவிட ராம் பேக்டருக்குதானே ரீச் இருக்கிறது :-(

பினாத்தல் சுரேஷ் said...

குசும்பன், ச சங்கர்..

உங்களுக்கும் ரிப்பீட்டேய்!

Anonymous said...

exactly penathal....so long as there is no environmental destruction we should ahev the seth samudram bridge. sadly, all our political parties are making milage out of this and innocent people are dying.
i wish someone will give us an honest technical opinion about this project.but do ordianry people like you and me really care?what happened to the nuclear deal????

பினாத்தல் சுரேஷ் said...

அனானி சார்,

//i wish someone will give us an honest technical opinion about this project.but do ordianry people like you and me really care?//

அங்கேதான் பாயிண்டு இருக்குன்னு நெனைக்கறேன். ஒரு வேளை, யாராச்சும் நியாய நேர்மையான ஒப்பினியன் கொடுத்தாலும், நாம கவனிக்கவா போறோம்? தப்பு நம்ம பேர்லேயும் இருக்கு!

இலவசக்கொத்தனார் said...

மத்திய அரசுக்கு வேண்டும் என்பதைப் போன்ற நிலை இல்லாது ஒரு உண்மையான சுற்றுசூழல் ஆய்வு நடந்திருக்கிறதா?

தற்பொழுது செய்ய நினைத்திருக்கும் ஆழத்தில் பெரிய கப்பல்கள் வர முடியாதென்பதும், அதனால் பொருளாதார ரீதியாக இத்திட்டம் வெற்றி பெறாதென்பது உண்மையா?

இந்த மாதிரி கேள்விகளுக்கான வெள்ளை அறிக்கை எதேனும் வெளியிடப்பட்டிருக்கிறதா?

இப்னு ஹம்துன் said...

நியாயமான கருத்து.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கவில்லையெனில் இத்திட்டம் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

பக்தியின் பெயராலும் அபக்தியின் பெயராலும் அரசியல் செய்யப்படுவதைப் புறக்கணிக்கும் நேரிய இயல்பும் வீரியமும் நடுவண் அரசுக்கு வேண்டும்.

நடுவில், நீதிமன்றங்கள் என்ற ஒன்று இருக்கிறதல்லவா, அதை நினைத்தால் தான்....

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்,

உங்க கேள்விகள் எல்லாம் நியாயமாக இருக்கின்றன. ஆனா, நாம இதைக் (தலையை)கேக்கறதவிட இதைக் (இதயத்தை) கேக்கறதத்தான் விரும்புவோமுன்னு, யாரும் இந்தக்கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டாங்க! ராமருக்கு அடுத்த கட்டமா கண்ணகி திருவள்ளுவர்னு ஆரம்பிச்சிருக்காங்க, பெரியார் பாப்பான்னு திரும்பிடுச்சின்னா புல் சர்க்கிள். அது போதாது?

இப்னு ஹம்துன்,

//பக்தியின் பெயராலும் அபக்தியின் பெயராலும் அரசியல் செய்யப்படுவதைப் புறக்கணிக்கும் நேரிய இயல்பும் வீரியமும் நடுவண் அரசுக்கு வேண்டும்.//

உண்மை!

Unknown said...

அரசியல் ஆதாயங்களுக்காகவும், ஆட்சியைப் கைப்பற்றவும் எந்த அளவு வேண்டுமானாலும் கீழ்த்தரமாகவும், கேவலமாகவும் நடக்க தயங்காதவர்கள் நம்முடைய அரசியல்வாதிகள் என்பதை மீண்டும் தெளிவாக உறுதிப்படுதும் கூத்துதான் இது. பொது மக்களாகிய நாம் இனியாவது விழித்துக்கொள்வோமாக.

நற்கீரன் said...

சரியான நிலைப்பாட்டை கலக்கலா சொல்லியிருக்கிறீங்க...

மீனவர்களுக்கும், சூழலுக்கும், ஈழத்தைப் பொறுத்த வரையிலும் இது நல்ல திட்டம் மாதிரி தெரிய இல்லை. ஒரு உள்ளுணர்வுதான். ஆனால், ஆய்வுகள் வேறு மாதிரி தெரிவித்து, தமிழ்நாடு பயன்பெற்றால், திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.

Voice on Wings said...

இலவசக்கொத்தனார்,

//மத்திய அரசுக்கு வேண்டும் என்பதைப் போன்ற நிலை இல்லாது ஒரு உண்மையான சுற்றுசூழல் ஆய்வு நடந்திருக்கிறதா?

தற்பொழுது செய்ய நினைத்திருக்கும் ஆழத்தில் பெரிய கப்பல்கள் வர முடியாதென்பதும், அதனால் பொருளாதார ரீதியாக இத்திட்டம் வெற்றி பெறாதென்பது உண்மையா?

இந்த மாதிரி கேள்விகளுக்கான வெள்ளை அறிக்கை எதேனும் வெளியிடப்பட்டிருக்கிறதா?//

அரசுத் தரப்பிலிருந்து இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் விடைகள் கிடைக்கமாட்டா என்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால், ஊடகங்களில் இத்திட்டம் குறித்த விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. (கூகிளாண்டவர் உதவியுடன்) உங்கள் வசதிக்காக சில சுட்டிகள்:

- ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரை

- DNA

- News Insight - 'Project Disaster' என்ற பெயரில் வந்த தொடர் கட்டுரை

- Gulf News

வெற்றி said...

சுரேஸ்,
கீழே உள்ள என் கருத்துக்கள் வெட்டிப்பயலின் பதிவில் சொன்னது.
இத் திட்டத்தால் தமிழகத்தின் மறுமுனையைச் சேர்ந்தவன்[ஈழம்] என்ற முறையில் என் அச்சத்தைச் சொல்லியிருந்தேன்.

---------------------------------
வெட்டி,

/* தமிழகத்திற்கு நடக்கவிருந்த ஒரு மிகப்பெரிய திட்டம் (பல வருட போராட்டத்திற்கு பிறகு) தடைப்பட்டு நிற்பது தான் மிச்சம்... */

தப்பாக எடுக்காதீர்கள். இச் சேதுக்கால்வாய் திட்டம் பற்றி ஈழத்தைச் சேர்ந்தவன் எனும் முறையில் என் தனிப்பட்ட கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

ஒரு ஈழத்தவன் எனும் வகையில் இத் திட்டம் தாமதமாக வேண்டும் என்பதுதான் என் தனிப்பட்ட விருப்பம்.

இத் திட்டத்தால் தமிழகத்தின் பொருளாதாரம் செழிப்புறவும், பல தமிழகத்தவர்களுக்கு வேலைவாய்பும் கிடைக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சியே. தமிழகம் வளர்ச்சி பெறுவதைப் பார்த்து ஒவ்வொரு ஈழத் தமிழரும் உவகை கொள்வர்.

ஆனால் இத் திட்டம் தாமதிக்கப்பட வேணும் என நான் ஏன் விரும்புகிறேன் என்றால், இத் திட்டத்தால் மறுமுனையில் இருக்கும் ஈழத் தமிழர்களின் பகுதிக்கு ஏதாவது இயற்கைச் சேதாரங்கள் வருமா எனும் அச்சமே. குறிப்பாக யாழ்ப்பாணம் கடலின் மட்டத்திலிருந்து சில அடிகளே உயர்வாக இருப்பதால் இது யாழ்ப்பாணத்திற்கும் மற்றைய தமிழ்ப் பகுதிகளுக்கும் ஏதாவது பாரிய விளைவுகளை ஏற்படுத்துமா என இன்னும் சரியான ஆய்வுகள் செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். அதுவரை இத் திட்டம் தாமதிக்கப்பட வேணும் என்பதே என் அவா.

சிங்கள அரசு இத் திட்டத்தை முழுமூச்சாக எதிர்க்கிறது. பாரதிய ஜனதாக் கட்சியின் எதிர்ப்பு ஊர்வலங்கள், பேச்சுக்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள/ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.
சிங்கள அரசு இத் திட்டத்தை எதிர்ப்பதற்குக் காரணம், சிங்களப் பகுதியின் பொருளாதாரம் இத் திட்டத்தால் பாதிக்கப்படும் என்பதாலேயே. சிங்கள அரசுகளுக்கு தமிழர்களின் நிலப்பரப்பைப் பற்றி எக் கவலையும் இல்லை. அதுபற்றி அது ஆய்வுகள் செய்ததாகவும் நான் அறியவில்லை.

ஆகவே, தமிழ் வல்லுனர்களால் ஈழத்தின் தமிழ்ப்பகுதிகளுக்கு இத் திட்டத்தால் வரும் சாதக/பாதகங்களை ஆய்வு செய்யும் வரை இத் திட்டம் தாமதமாக வேணும் என்பதுதான் என் தனிப்பட்ட விருப்பம்.

இந்திய/தமிழக வல்லுனர்கள் இத் திட்டத்தால் ஈழத்தின் தமிழ்ப்பகுதிகளுக்கு ஏற்படக்கூடிய சாதக/பாதகங்களை ஆராய்ந்த தகவல்கள் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?

துளசி கோபால் said...

// சேது சமுத்திரத்திட்டம் கனிமவளம், சுற்றுச்சூழல் //

மொதல்லே இதைத்தானெ ஆராய்ச்சி செஞ்சுருக்கணும்? இதுக்கே 300 கோடியை முழுங்கிட்டாங்களா?

பினாத்தல் சுரேஷ் said...

அன்புசிவம்,

//எந்த அளவு வேண்டுமானாலும் கீழ்த்தரமாகவும், கேவலமாகவும் நடக்க தயங்காதவர்கள் நம்முடைய அரசியல்வாதிகள்// வேதனையான உண்மை.

நற்கீரன்,

இந்த மேட்டர் ராமர் பக்கம் திரும்பினதுல, மத்த எல்லா ஆங்கிளும் மறைக்க ஆரம்பிச்சாச்சு!

வாய்ஸ்,

சுட்டிகளுக்கு நன்றி, பொறுமையாகப் படிக்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

வெற்றி,

//தமிழ் வல்லுனர்களால் ஈழத்தின் தமிழ்ப்பகுதிகளுக்கு இத் திட்டத்தால் வரும் சாதக/பாதகங்களை ஆய்வு செய்யும்// -- இதுவும் ஒரு வித்தியாசமான கோணம். யார் செய்யப்போகிறார்கள்? எப்போது? என்ற பல துணைக்கேள்விகளையும் கூடவே கிளப்புகிறது.

துளசி அக்கா,

//இதுக்கே 300 கோடியை முழுங்கிட்டாங்களா?//

நீங்க வேற.. எல்லாம் வேகமா நடந்திருந்தா இப்ப எவ்ளோ சேந்திருக்கும் தெரியுமா?

BalajiS said...

The Coastal Action Network, which boasts of eminent members like Justice V R Krishna Iyer, Justice Rajinder Sachar, lawyer Indira Jaisingh and activist Dr Vandana Shiva, has been fighting against the Sethu Samudram Project for several years. According to the CAN, the project will affect the livelihoods of fishermen living in the coastal areas and it will irreparably damage the unique biosphere of the region.

O Fernandes, the co-convenor of CAN and director of the Human Rights Advocacy and Research Foundation, tells rediff.com why the Sethu project is a complete wastage of tax payers' money

When I met you two years ago, the Sethu Samudram Canal Project had just been inaugurated and you were fighting to stop its implementation for the sake of the local fishing community. Dredging has been going on in the area for quite some time. How will you describe the last two years of the Coastal Action Network?
People living in the coastal area, from Chennai to Tuticorin, have organised themselves now. They have become aware of the implications of the project and they are totally against it.
The government claims that 40 per cent of the work on the canal has been done. We have repeatedly asked the government to show us the images of whatever has been done, or show them to the media. The government claims that the work has not affected the environment in any way, but it has failed to show us any photographic images.
We have asked the government, "Where is the mud you have taken out through dredging? Where have you dumped it? Give us longitudinal and latitudinal data so that we can check.
You mean they have not done any dredging?
They have done the work but it is in the sedimentation tank area. As they have not done sedimentation dynamics of the area, the sand closes up again. The sand is constantly moving and it is impossible to dig a canal in the Palk Straits.
In fact, a monitoring vessel which was following the dredging ship three hours later, sank after hitting sand shoals formed because of sedimentation. Of course, they said it was due to some engine problem but that's not the truth

'Nothing is going to come out of this project'
Why do you think the government has not shown you the sand dug up from there?
Because you cannot prove that there is a canal there. We are willing to be disproved. Our stand is that there is no canal they have dug.
Then what are they doing there?
They are dredging and moving. They are not saying where they threw the dredged sand. If they have thrown away so much sand, which is half of 80 million cubic metres of sand, where is it? They have to put it somewhere, and if they have, it should be there.
What is their reply to your queries?
Nothing. They can't answer because the sand they have dredged is not there. They are just dredging because they have the dredging ships and money and they keep moving. And the monitoring work is not being done according to oceanographic parameters.
There are no oceanographic, geological or sub surface geological experts in the team. They dont have a single expert in the team to understand soil sedimentation. So, the monitoring team cannot answer these questions. As far as we know, there are about 60 scientists in India who have written papers stating that this canal is not sustainable.
So, what will be the outcome of this dredging?
Nothing is going to come out of this project. It has already damaged the marine life. You have seen the number of whales that are washed ashore. The dredging noise affects the movement of fish. The project is damaging marine life and the lives of the local fishermen.

'The project is disastrous for lakhs of fishermen'
The Union minister for shipping says that the canal is the 135-year-old dream of the Tamils...
We ask: which Tamils? When the fishing people are opposed to it, you must listen to them. Forget the scientific experts; these fishermen are saying from their experience that when there is a particular volume of noise and a particular amount of sand churning, the movement of the fish gets affected.
If there is a canal, the fishing community will not be able to access the sea. So, we are asking, which Tamil are you listening to? Are you listening to the Tamil living on the coast?
The government should have undertaken some environmental studies before clearing the project. Because no studies were conducted, no foreign dredging vessel is willing to take part in the project. Now you are depending on the Dredging Corporation of India, which is very easy.
Rs 533 crore is being spent on the project. Where is all this money going? The project is not viable scientifically or economically. It is environmentally disastrous. It is disastrous for the livelihood of the lakhs of fishermen living along the coast.
Two years ago, you said you had the support of scientists, environmentalists and the local residents. But when the government went ahead with the dredging, you people couldn't stop it...
Thats because the dredging ship is protected by the Coast Guard and the Navy and they have been ordered to shoot at sight. So, the fishing people cannot go anywhere near the dredging site. Otherwise, we would have gone and sat on the vessels. Once in Nagapattinam, 500 boats were ready.
You told me then that fishermen would go out in their catamarans and stop the dredging?
But there were shoot at sight orders, and if they went within 3 to 5 kms of the deredging ship, they would be shot at.
Are the fishermen aware of the implications of the canal on there lives? Are they united?
You can visit any part of the coast and see for yourself. Earlier, people living in Rameswaram thought that the canal will not have any effect on them but now they know the consequences.
Nearly 2,000 species of fish are endemic to the area. Because of the dredging work, the sand is moving and it has affected the movement of shrimps. This is affecting the livelihood of the fishing people. It took us some time to make them understand the implications of the issue. It was a difficult struggle then. Today, they are much more aware; they are coming forward and opposing the project.

'International shippers have said they will never come through this stretch'

How are they protesting the project?
There are numerous protests. If there was no Coast guard or Navy protection, hundreds of fishing boats would surround the dredging vessel. If the Coast Guard and the Navy are removed from the area, the dredging will stop tomorrow.
We are saying no to the Sethu Samudram Canal. They should stop dredging immediately.
You said the structure (Rama Sethu) was formed because of millions of years of sand movement. Should it be declared a heritage site?
Yes, it should be declared a heritage site. The world acknowledges it as one of the best marine biospheres, but our governments do not acknowledge it.
In fact, Dr M S Swaminathan, who worked in that area, should have said, "Don't touch the Gulf of Mannar because it's one of the most pristine areas'. Unfortunately, an eminent person like him has not said anything. We would really like him to stand up and say this.
Will you agree to an alternate alignment of the project, which is a land based canal?
It is still a disaster. Realignment is absolutely unscientific and it will not solve the problem. The BJP and the parties opposing the project should take a stand about the canal being a disaster for peoples livelihoods and environment.
The canal should be completely stopped. All the international shippers have said that they would never come through this stretch as it will be much costlier for them. Moreover, the canal has to be monitored and dredged every hour if comes up at all. Why do we need this?
Do the people living in the area believe that the Rama Sethu was made by Lord Ram?
In Rameswaram, there is some belief in this theory. But the fishermen believe that it is a natural formation. But I can tell you that the Gulf of Mannar biosphere exists only because of this formation. From the point of view of livelihood, economics, environment, and science, the canal should be stopped.
Now that the BJP has raked it up as a religious issue, do you feel they will be able to stall the project?
It is very funny. We expected support more from parties that believe in science - I mean the Communist parties - but the support has come from the BJP for political reasons. It overshadows the main debate today.

'It is no more a Tamil Nadu issue; it's become a national issue'

But the Sethu Samudram project has become a national issue, which it was not till now...
Yes, that is a positive development. It has taken the discussion to a national level but it has also lowered the level of discourse.
Dont you feel that once it becomes a national issue, even if it is because of religious reasons, it can lead to debates on environmental, geological and archaeological aspects of the project too?
I think so, but people are taking time to realise that. Yes, it has almost reached the stature of the Narmada Dam issue.
Are you happy about this development because till now, you could not take the issue to this level?
Yes, we are happy about it. We could not take the struggle to the national level. This will also make people realise that the push for mega projects must be based on scientific, rational and environmental issues. Here, you are not talking about the loss the fishermen will incur. You are only talking about the development of the south.
That is exactly what the DMK is saying. They are saying that you are opposing a development project.
We say mega projects like this ruin development. You are destroying years of development of the fishing community, you are destroying the coast. The entire coast will be taken over gradually as all along the coast you need to have stop-over points. And the fishing people will eventually be evicted.
Do you feel people who live in other parts of India, even those who live in Tamil Nadu, are not aware of the various issues involved in the project?
In Tamil Nadu, the print media and some television channels have been largely supportive. But the English print media, I am sorry to say, never focussed on the matter till it became a Ram issue. We learnt a lot of lessons from Narmada and now there are a lot of lessons to be learnt from Sethu Samudram Canal. Now, a lot of environmentalists from the north have also joined us. It is no more a Tamil Nadu issue; it has become a national issue.
How will you describe your struggle so far as an activist?
There is a lot of science involved in this project, so the fishermen communtiy took some time to understand it. But by their own traditional wisdom, they now say that the project is a disaster. They can see its impact in Vedaranyam. So, it has become very easy for us to link science and traditional wisdom. Now, we can unite fishermen from Chennai to Rameswaram on this issue, in spite of their political differences. Even millions of non-fishing people, who live on fish and fisheries, have started offering their support.
How optimistic are you about the future course of your struggle?
This canal will never be built because of all the reasons I stated earlier. It is a wastage of tax payer's money.

blogger templates | Make Money Online