அம்னீஷியாவில் இருந்து முழிச்ச மாதிரி இருக்கு வலைப்பதிவுகளைப் பாத்தா.. பட்டறை பட்டறைன்னு சூடு கிளம்பிகிட்டு இருந்த நேரத்துல கிளம்பி ஊருக்குப்போயி, 30 நாள் அப்ஸ்காண்டு ஆகி, திரும்பி வந்து பாத்தா... மாலன் சண்டை, போலி சண்டைன்னு ரொம்பவே அட்வான்ஸ்ட் ஆகி இருக்கு. ஆனா அம்னீஷியான்றதாலயோ என்னவோ தெரியல, எல்லாம் மறு ஒளிபரப்பு மாதிரி தெரியுது! எதைப்பத்தியும் எதுவும் சொல்ற மாதிரி இல்லை!
ஆகஸ்ட் 5 ஆம்தேதியே இதை எழுதிப்போட்டுடலாம்னு பாத்தா.. நெட்டைக்கண்டா கலப்பையைக்காணோம்.. நம்ம குகைக்கு வந்தாத்தான் எழுதவே ஒரு மூட் வருது.
பட்டறை ஏற்கனவே பலர் சொல்லிட்ட மாதிரி பிரமாதமா நடந்தது. நான் என் உறவு-நண்பருடன் சென்றிருந்தேன். தெரிந்த தெரியாத பல முகங்களைச் சந்தித்தேன். கொத்துக் கொத்தாக குழு அமைத்துப் பேசிக்கொண்டிருந்த எல்லாக்குழுவிலும் உள்ளே நுழைந்து என் உபதொழிலைச் செய்தேன். மூத்த வலைப்பதிவாளர்கள் கூட்டம் (பழைய வலைப்பதிவாளர்கள்னு சொல்லுங்க.. மூத்த - ன்னா கூச்சமா இருக்கு - ஐகாரஸ் பிரகாஷ்), மாடிக்கும் கீழுக்கும் ஓடிக்கொண்டிருந்த தன்னார்வலர்கள், தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பகாலத்தில் இருந்தே இத்துறைக்கு கணிசமான பங்காற்றி, பட்டறையில் பேச வந்த பதிவர்கள்-மென்பொருளாளர்கள், கேப் கிடைச்சா ஆள் மாற்றி அறிமுகம் செய்துகொள்ளும் சங்கத்து சிங்கங்கள், கொஞ்ச நேரம் வந்தாலும் வருகையைத் தீர்க்கமாகப் பதிவு செய்தவர்கள், ஒதுக்குப்புறமாக நின்று பொறுமையாக கவனித்துக் கொண்டு மட்டும் இருந்தவர்கள் - பல கொத்துக்கள் - ஒருவரை விடவில்லை.
மாடியில் இரண்டு அறைகளும், கீழே ஒரு மேடையோடு ஆடிட்டோரியமும் அமைத்து ஒரே நேரத்தில் மூன்று நிகழ்வுகள் நடந்ததில் யாரும் எல்லாவற்றிலும் இருந்திருக்க முடியாது. பட்டறையில் எனக்கு பெரிய வருத்தம் இதுவே. பதிய ஆர்வம் உள்ள புதியவர் எங்கே அமர்வது எனக் கஷ்டப்பட்டிருப்பார். தொழில்நுட்ப வகுப்புகள் நடக்கும் மாடியிலா, பதிவுசார்ந்த விவாதங்கள் நடந்த ஆடிட்டோரியத்திலா என.
மாலன் பேசியதைத் தொடர்ந்து பிரச்சினை பெரிதாகி பல பதிவுகள் தொடர்ந்தன என்பதைப் பின்னால் அறிந்தேன். அந்தப்பேச்சின்போது அங்கே இருந்தவன் என்ற முறையில் சில வார்த்தைகள். மாலன் அந்த பாஸ்போர்ட் விவகாரத்தை ஒரு உதாரணமாகத்தான் சொன்னார். பேசுபொருளாக அதைச் சொல்லவில்லை. எனவே, பட்டறைக்குழுவினருக்கு பேச்சின் வரைவு கிடைத்திருந்தாலும், அந்த வரைவில் பிரச்சினைக்குறிய விவாதப்பொருள் இருந்திருக்காது என்பது என் முடிபு. மேலும், மாலனுடைய கருத்து இப்படிப்பட்ட விஷயங்களில் என்ன என்பது ஏற்கனவே எல்லாருக்கும் தெரிந்துள்ள நிலையில், ஒரு Unconference-இல் அவரைப்பேசவிடாமல் தடுத்திருக்கமுடியுமா.. முடியுமா என்பதைவிட, வேண்டுமா என்பதையும் கேட்டுப்பார்த்துக் கொண்டிருந்தால் பதிவுச் சண்டைகளைத் தவிர்த்திருக்கலாம்.
இந்தச் சண்டையில் எனக்குப் பிடிக்காத ஒரு பதிவு, பட்டறைக் குழுவினரின் மன்னிப்பு. ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? அப்படிக் கேட்க வேண்டுமாயின், விவாதத்தின்போது எதிர்க்கருத்து சொன்ன அனைவரின் சார்பாகவும் மன்னிப்புக் கேட்கவேண்டுமே! பட்டறைக்குழுவுக்கு என ஒரு அஜெண்டா இருப்பதாகவோ, சில கருத்துக்கள் வெளிப்படுத்துவதே தவறு என்றோ தெளிவுபடுத்தப்படாத நிலையில், மாலன் கருத்தை அவர் ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டது பெரும் பாதகமாகச் சித்தரிக்கப்பட்டதை எண்ணி வருந்துகிறேன். அவர் கூறியதில் எனக்கு ஏற்பு இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். இர்ரெலவண்டாக அன்று பேசியது மாலன் மட்டும்தானா (உதாரணமாகக் கூறினார் என்பதால் அது இர்ரெலவண்டும் கிடையாது!), பிறகேன் மாலன் பேச்சுக்கு மட்டும் மன்னிப்பு கேட்கவேண்டும்?
சரி விடுங்கள்.. வேற மேட்டருக்குப் போவோம். தரைத்தளத்தில் நடந்த பல விவாதங்களை பதிவு வடிவிலேயே படித்துவிட்டதாலும், ராப்பூரா முழித்துக்கொண்டு விமானத்தில் வந்ததாலும் தூக்கம் கண்ணைச் சுழற்ற ஆரம்பித்தது. நாயர் சாப்தான் அவ்வப்போது டீ கொடுத்து விழிப்புணர்வு உண்டாக்கினார்.
மதியம் 3:45க்கு என்று திட்டமிடப்பட்டிருந்தது என் ப்ளாஷ் வகுப்பு. அதற்கு சற்றுமுன்னாவது ஏதேனும் ஒரு மடிக்கணினியில் கொண்டு வந்திருந்த மென்பொருளை ஏற்றிவிட கொஞ்சம் அலைந்தேன்.
"துன்றதுக்கு" என்று கொடுத்த டோக்கனைத் தொலைத்துவிட்டு, யாராச்சும் ரெக்கமண்டு பண்ணுவாங்களான்னு வெயிட் செய்து சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. ஆனால் தயிர்சாதம்! எனக்கு மட்டும் இருந்தால் பரவாயில்லை, என் வகுப்புக்கு வர இருப்பவர்களுக்கும்.. ஏற்கனவே மதியம் 3:45 ஒரு மோசமான நேரம். சாதாரணமாகவே எல்லாருக்கும் தூக்கம் வரும் நேரம். அதில் இந்த தயிர்சாத அனஸ்தீஷியாவும் சேர்ந்தால்!
இந்த வகுப்பு எடுப்பதில் இது மட்டுமில்லாமல், மேலும் பலவித சோதனைகளும் இருந்தன. பொதுவாக, 30 நிமிட வகுப்பில், ஆசிரியர் அறிமுகம் என்பது ஒரு நிமிடத்துக்கு மேல் போகக்கூடாது. ஆனால் இங்கேயோ, என்னைத் தெரியாதவர்கள் 98% மக்கள்! அது மட்டுமல்ல, இருக்கும் மாணவர்கள் (ஆமா, முன்னால உக்காந்துட்டா வைஸ் சான்சலர்கூட மாணவர்தான்) எத்தரப்பட்டவர்கள் என்பது தெரியாது. ஏபிசிடியில் ஆரம்பிப்பதா கோடிங்கில் ஆரம்பிப்பதா என்ற குழப்பம். 30 நிமிடம் திடீரென 60 நிமிடமாகிவிட, அவ்வளவு நேரம் எல்லாரின் கவனத்தையும் ஈர்த்துவைக்க முடியுமா என்ற கலக்கம்.. வேறு துறைகளில் இருக்கும் தமிழி, செந்தழல் ரவி, கோபி போன்றோர் கலக்கிக்கொண்டிருக்க, ஆசிரியர் என வலைப்பூவிலேயே பெருமையடித்துக்கொண்டிருக்கும் நான் சொதப்பிவிடக்கூடாது என்ற ஈகோ கலந்த பயம், இன்னும் விடாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் அவைநடுக்கம்!!
ஆனால், ஆரம்பித்த சில நொடிகளிலேயே எல்லாக் கலக்கங்களும் விடைபெற்றுக்கொண்டன. எனக்கும் ஒன்றும் தெரியாது என்று லெவல் செய்துகொண்டுதான் தொடங்கினேன். ஆனால் என் பழைய ப்ளாஷ்களைத் திறந்துகாட்டி பவர்பாங்க் அக்கவுண்டை அதிகப்படுத்திக்கொண்டு, எளிமையான ப்ளாஷ் செய்வது, ஆக்ஷன்ஸ்க்ரிப்ட் கோட் எழுதுவது, பப்ளிஷ் செய்வது, வலைப்பூவில் அதைக் கோப்பது என்று எல்லாவற்றையும் மேம்போக்காகத் தொட்டுவிட்டேன். 60பேர் இருந்த வகுப்பறையில் 10பேருக்காவது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இப்படிப்பட்ட அவையில் இது ஒரு நல்ல பர்சண்டேஜ்தான்.
மொத்தத்தில், பட்டறை ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் - பல புதிய பதிவர்களை உள்ளுக்குக் கொண்டுவந்திருக்கும். மிக நிறைவான ஒரு நிகழ்வு.
27 பின்னூட்டங்கள்:
பட்டறையில் உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. ரொம்ப பிஸியாக இருந்தீர்கள். எதுவும் பேசமுடியவில்லை :-((((
ஏன்! 3 நாட்களுக்கு முன்பு கூட ஒரு தடவை அந்த பிளாஸ்ஐ ஓட்டிப்பார்த்து ஏதாவது செய்யமுடியுமா என்று refresh செய்துகொண்டேன்.
படிச்சாச்சு.
இதுதான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர்றதா? :-))))
சரிதான், இங்க பதிவர் மீட்டிங் முடிஞ்சு அங்க போயிப் பாடமே எடுத்திட்டீங்களா:))
அட எனக்குத் தெரியாமல் போச்சே.
இனிமேல் ஃப்ளாஷ் பற்றிய பதிவுகளையும் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
நன்றி சுரேஷ்.
//பிறகேன் மாலன் பேச்சுக்கு மட்டும் மன்னிப்பு கேட்கவேண்டும்?//
எனக்குள் தோன்றிய கருத்தும் இதுதான். இதெல்லாம் வெளிய சொல்லக் கூடாதாமே. தெரியாம நானும் திருக்குறள் பத்தி எதோ கேட்கப் போக எனக்குக் கிடைத்த பட்டம் குஞ்சு! உங்களுக்கும் எதாவது கிடைக்கப் போகுது பாருங்க.
அப்புறமா அம்புட்டுக் குழுவிற்கு போயிருக்கீங்க, கொஞ்சம் சுவாரசியமா மசாலா நியூஸ் குடும்வே!
லக்கிலுக்.. யார் பிஸி.. நீங்களா? நானா?
நன்றி வடுவூராரே.. நீங்க ஒருத்தர்தான் விக்கியிலேயும் இதுக்கு ஒழுங்கா பின்னூட்டம் போட்டது..
அனானியாரே..
உங்க கமெண்டை ரிலீஸ் பண்ணிட்ட பிறகுதான் பாத்தேன்.. கொஞ்சம்கூட பதிவுக்கு சம்மந்தம் இல்லாம இருக்கறதை.. மன்னிச்சுக்கங்க
யெக்கோவ்.. லாங் டைம் நோ சீ.. வாங்க.. இன்னும் ஒரு ரெண்டு மூணு பதிவுக்காவது மேட்டர் இருக்கு.. ஆதரவு வேணும் :)
வல்லி அம்மா, உங்களுடன் பேசியது மிக்க மகிழ்ச்சி.. அதென்ன கணக்குப்போட்ட மாதிரி என்னைப்பாக்கக்கூடாதுன்னு ப்ளான் போட்டா மாதிரியே ஒரு ட்ரிப்.. இருக்கட்டும்..இருக்கட்டும்
கொத்தண்ணா..
கொஞ்ச நாள் நாந்தான் அவுட் ஆப் டச் ஆச்சே.. எது எழுதலாம் எது எழுதக்கூடாதுன்னு ஒரு கோனார் போடப்படாதா? (உங்களுக்கு ஒரு உப்புமா சான்ஸ்)
மசாலாவா? நம்ம ராசி.. நான் கிட்டே போனவுடனே எல்லாரும் நல்லபிள்ளைகளா மாறி காஸிப் பேசறதை நிறுத்திடறாங்க :(
கொஞ்சநேரம் முன்னால் என்னோடு கூகிளில் சாட் செய்துகொண்டிருந்தது நீங்களா?
லக்கிலுக்.. இல்லை.. உங்கள் ஜிசாட் ஐடி எனக்குத் தெரியவே தெரியாது..
இதென்ன சோதனை.. எனக்கும் போலியா? அதுவும் ஜிசாட்டிலா??
பெனாத்தலாருக்கு போளியா?
போளி உப்புமாவைவிட ஸ்வீட்டாக இருக்கிறதா காரமாக இருக்கிறதா?
என்னைய்யா நடக்குது இங்க?
பட்டறையில் பினாத்தலார் ப்ளாஷ் பண்ணினார்னோன நான் கொஞ்சம் ஆடிப்போனது உண்மைதான்..
ஆனா அது மாக்ரோமீடியா ப்ளாஷ்னு தெரிஞ்சப்புறம்தான் போன மூச்சு திரும்ப வந்துச்சு..
தம்பி ராம்ஸு..
//எதைப்பத்தியும் எதுவும் சொல்ற மாதிரி இல்லை!//
இப்படி ஏற்கனவே கொள்கை விளக்கம் கொடுத்திருக்கேனே.. அப்புறம் என்ன இங்க போளி ஸ்டால் போடறே?
ப்ளாஷ்னா என்ன பயம்? மேக்ரோமீடியான்னா என்ன நிம்மதி? சற்று விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!!
//ப்ளாஷ்னா என்ன பயம்? மேக்ரோமீடியான்னா என்ன நிம்மதி? சற்று விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!!//
ரெண்டாவது உமக்குத் தெரியும். முதல் மேட்டரை விளக்கினால் விளக்குமாறுதான்!!!
//மாலன் சண்டை, போலி சண்டைன்னு ரொம்பவே அட்வான்ஸ்ட் ஆகி இருக்கு.//
அதாவது வலையுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுவிட்டார்கள் அப்படின்னு சொல்லறீங்க. இல்லையா!! :)))
welcome back to pathivukal. what about sivaji vimarsanam
கொத்ஸூ..
//அதாவது வலையுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுவிட்டார்கள் அப்படின்னு சொல்லறீங்க. //
ஆஹா.. ஆஹா!! எப்ப்டிப்பட்ட புரிதல்! பாசிடிவ் சிந்தனைக்கு ஒரு சிகரமய்யா நீர்..
கொத்ஸ், சின்ன சந்தேகம்,அடுத்த கட்டம் இல்லை அடுத்த தளம் என்றுதானே வரும். பிறகு "நகர்த்தி சென்றுவிட்டார்களும்" சரியான்னு தெரியலை. ஏதோ பீரோவை நாலு பேர்கள் நகர்த்தர மாதிரி இருக்கு. அங்கு எதைப் போடுவது?
அம்மையார் கேள்வி கேட்கிறார். தற்பொழுதைய கலாச்சாரத்தின் தாக்கம் என்னுள்ளே இருந்தால் முன்பே இந்த கேள்வியை ஏன் கேட்கவில்லை என்றோ என் இனத்தின் காரணமாகத்தானே என்னை இப்படி பொதுவில் கேள்வி கேட்டு அவமானப்படுத்துகிறீர்கள் என்றோ பதில் கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். அத்தகைய நாகரீக உச்சத்தை நான் அடையவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆகவே அம்மையாரின் கேள்விக்கு தார்மீக அடிப்படையில் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
கேள்வி கேட்கிறாரே எனப் பதிலளிக்கத் தொடங்கினால் ஒரு கேள்வியினுள்ளே இரு கேள்விகள். இரட்டை நாக்குடையவர் என்றெல்லாம் நாம் சொல்லும் பொழுது நம்மைத் தூற்றியவர்கள் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்? இப்படி ஒரு கேள்வியினுள் இரு கேள்விகள் வைத்து தன் கயமைத்தனத்தை வெளிப்படுத்தும் அம்மையாரின் நிலைப்பாட்டை எப்படி நிலைநிறுத்தப் போகிறார்கள்? போகட்டும். நாம் பதிலளித்து நம் கடமையை நிறைவேற்றுவோம்.
இவர் கூறிய முதல் கேள்விக்குத்தான் நாம் முதலில் பதிலளிக்க வேண்டுமா? முன்பு வேண்டுமானால் கை கட்டி வாய் பொத்தி பதில் கூறிய காலம் இருந்திருக்கலாம். அக்காலம் மலையேறிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை பறைசாற்ற, நமக்கு முன்னோடியாகத் திகழந்த தலைவர்கள் செய்தது போல் மரபினை உடைத்து இரண்டாம் கேள்விக்கு முதலில் பதில் சொல்லி புரட்சி விதையை நம் வாசகர்களின் இதயத்தில் தூவ நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
அப்படி என்ன கேட்டுவிட்டார் இவர்? இவர் சொல்கிறார் "பிறகு "நகர்த்தி சென்றுவிட்டார்களும்" சரியான்னு தெரியலை. ஏதோ பீரோவை நாலு பேர்கள் நகர்த்தர மாதிரி இருக்கு." என்று. ஆனால் நடந்தது என்ன? வலையுலகமே ஸ்தம்பித்தது. வழமையான பதிவுகள் வெளிவர இயலாத நிலமை. மேற்கூறிய சில விடயங்களைத் தொட்டு பேசாமல் இருந்தால் பதிவிட முடியாதென்பது போன்ற காலச்சூழல். நினைத்துப் பாருங்கள் தோழர்களே, அப்படி பதிவுலகமே ஹைஜாக் செய்யப்பட்டது போல, கடத்திச் செல்லப்பட்டது போன்ற சூழல். ஆனால் வலுக்கட்டாயமாகவா அப்படி நடந்தது? இல்லை. தானே அனைத்து பதிவர்களும் முன் வந்து அல்லவோ அப்படிப்பட்ட பதிவுகளை இட்டார்கள்? அதனால் அதற்குண்டான வழிமுறைகளை வகுத்து, அதற்கான காலப் பரிமாணங்களை தோற்றுவித்து வலையுலகை நகர்த்திச் சென்றனர் எனச் சொல்ல வந்தால், அது புரியாமல் அம்மணியார் செய்கிறார் கேள்வியும் கிண்டலும். என்னவென்று சொல்கிறார்கள்? பீரோவை நான்கு பேர் நகர்த்துகிறார்களாம். இது என்ன பீரோ புல்லிங் திருட்டா? அப்படி யாரைத் திருடர்கள் எனச் சொல்கிறார் இந்த அம்மையார்? வெளிப்படையாக பேசாமல் இப்படி மறைமுகமாக மற்றவர்களைத் தாக்குவதா இவர்களுக்குப் பெருமை?
நான் சொல்கிறேன், ஒரு சதுரங்க விளையாட்டில் கை தேர்ந்த வீரன் ஒருவன் தன் ஆளுமைக்குட்பட்ட காய்களை அங்கும் இங்கும் நகர்த்துவது மற்றவர்களுக்கு ஏனோ தானோவெனத் தெரிந்தாலும், அவனுக்கு மட்டும்தான் தெரியும் அது ஒரு திட்டத்துடனே நகர்த்தப்படுகிறது என்று. இங்கும் நடப்பது நமக்கு வெளிப்படையாகப் புரியவில்லை என்றாலும் திட்டமொன்று இருப்பது மறுப்பதற்கு இல்லை அல்லவோ? எத்துணை 'கட்டப்'பட்டு நகர்த்துகிறார்கள்? அது புரியாமல் அல்லவா இவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.
சதுரங்க விளையாட்டென்று சொல்லிவிட்ட பிறகு கட்டம் ஏதென்ற இவர்கள் கேள்விக்கு வேறு பதில் சொல்லவும் வேண்டுமா? இல்லை இவர்கள் தளம் எனச் சொல்வது போல் வலையுலகின் லெவல்தான் மாறிவிட்டதா? அதே லெவலில்தானே இருக்கிறது? அதே மொக்கைகள், அதே ஜல்லிகள், அதே அடிதடி, அதே கவுஜ, அதே விடைபெறுகிறேன் நன்றி வணக்கம், அதே போகாதே போகாதே என் கணவா, அதே வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன். என்ன லெவல் சேஞ்சைக் கண்டு கொண்டு விட்டார் அம்மிணி? தளத்தைப் பற்றிப் பேச மேல்தளத்தை தவிர்த்து வேறு தளம் அறியாத இந்த மாடிவீட்டு சீமாட்டியா பேச வேண்டும்? அல்லது அப்படி இவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு நான் புரட்சியை கொண்டு வரும் நேரத்தைத்தான் தள்ளிப் போட வேண்டுமா? வேண்டாம் தோழா வேண்டாம். உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ. இந்த கேள்விகள் எல்லாம் சட்டை செய்யப்பட வேண்டிய கேள்விகளே அல்ல. இவற்றிற்கு பதிலும் சொல்லத் தேவை இல்லை.
(உஸ்ஸ் அப்பாடா. என்னமா கேள்வி கேட்கறாங்கப்பா. பதில் சொல்ல முடியலைன்னா எம்புட்டு பேச வேண்டி இருக்கு. நல்ல வேளை நம்மாளுங்க எல்லாம் பதில் சொல்ல முடியலைன்னா இப்படி விலாவாரியா அடுக்குத் தமிழ் பேசி தப்பிச்சுக்கலாமுன்னு கண்டுபிடிச்சாய்ங்களோ நாம தப்பிச்சோம். வாழ்க தமிழ்.)
இ.கொ மீண்டும் சில சந்தேகங்கள்.
இப்பதிவு தனிநபர் மீதான காழ்ப்புணர்ச்சி தாக்குதல் வரிசையில் வருமா அல்லது ஆணீய பார்வையில் பெண்களை இழிவுப்படுத்தும் முயற்சியா? சொல்லிட்டீங்கனா சண்டை ஆரம்பிக்க தோதுவாய் இருக்கும்.
( தனிநபரின் காழ்ப்புணர்ச்சினா யாரும் துணைக்கு வரமாட்டாங்க, பெண்ணீயத்தை இழிவுப்படுத்தும் பதிவுன்னா நாலு பேராவது தேற மாட்டாங்களா)
இப்படிக்கு,
நான் எட்டாவது மாடியில் குடியிருப்பது இந்தாளுக்கு எப்படி தெரியும் என்ற ஆச்சரியத்துடன்,
உஷா
//இ.கொ மீண்டும் சில சந்தேகங்கள்.//
பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்கள் தெரியும். அட, குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் பார்ட்டிங்களைக் கூடத் தெரியும். ஆனா இப்படி சந்தேகம் கேட்டே பேர் வாங்க நினைக்கிறது எல்லாம் ரொம்ப டூ மச்சா தெரியலை?
//இப்பதிவு தனிநபர் மீதான காழ்ப்புணர்ச்சி தாக்குதல் வரிசையில் வருமா அல்லது ஆணீய பார்வையில் பெண்களை இழிவுப்படுத்தும் முயற்சியா?//
சந்தேகமே இல்லாம தனிநபர் மீதான காழ்ப்புணர்ச்சி தாக்குதல் வரிசைதாங்க. (வேற சாய்ஸ் எதுவும் இல்லையா?) என்னதான் இருந்தாலும் அடுக்கு மொழி எல்லாம் பேசினா அப்புறம் தாய்க்குலத்தைப் பகைச்சுக்க முடியுமா? (பெண்களை இழிவு படுத்தற மாதிரி செயல்களைச் செய்யலாம். ஆனா பேச முடியுமோ? அப்படி பேசாம இருந்தாதானே செய்யும் செயல்களுக்கு எந்த விதமான எதிர்வினைகளும் இல்லாம ஈசியா ஓட்டு வாங்கலாம். அது மட்டும் இல்லை நீங்களே சொல்லிட்டீங்க அந்த அதர் ஆப்ஷனில் போட்டா கும்பலா வந்து உதைப்பீங்க. இதுன்னா ஒண்டிக்கு ஒண்டிதானே. அதான், தனிநபர் என்னமோ சொன்னீங்களே. அதே இருக்கட்டும்.)
//நான் எட்டாவது மாடியில் குடியிருப்பது இந்தாளுக்கு எப்படி தெரியும் //
அதான் உங்க மேல்தட்டு பூனைக்குட்டி வெளிய வந்திருச்சே. (அப்பாடா, இந்த பூனைக்குட்டி எல்லாம் வெளிய வந்து எவ்வளவு நாள் ஆச்சு!) அப்புறம் இரண்டாவது மாடியா இருந்தா என்ன, எட்டாவது மாடியா இருந்தா என்ன, பதினெட்டாம் மாடியா இருந்தா என்ன? மேல்தளம் மேல்தளமே!
நிற்க ஒரு இடமும். ஒரு கடப்பாரையும் கொடு, நான் உலகையே நகர்த்திக் காட்டுகிறேன் எனச் சொன்னவர்கள் வழி வந்தவர்கள் நாம். நாம் நகர்த்துவதைக் கண்டு எள்ளல் செய்யும், துபாயில் இருந்து சூரத் வந்து எட்டாம் மாடியில் ஏறி இருக்கும் வந்தேறிகளை நாம் என்ன செய்ய வேண்டும் என ஆணையிடு தலைவா. காத்திருக்கிறோம் கடப்பாரைளோடு.
அடபாவி, எட்டாவது மாடியில் நாலில் ஒரு பங்கு சதுர வாடகை குடியிருப்பு. என்னமோ எட்டு மாடி மாளிகைக்கு சொந்தகாரி போல கதையை மாற்றுவது நல்லா இல்லே :-(
க. காத்திருப்பவர் ஐயா! மாப்பு ஐயா மாப்பு.அடுத்த தளமா? மொத்தம் பதினோறு தளம்) இப்பவே பாதி நேரம் கரண்டு இருப்பதில்லை.
துள்சி, என்னமோ பூனைக்குட்டிங்க வெளிய வந்துடுச்சாம். உங்குள்தான்னு பாருங்க.
இப்பவே கண்ண கட்டுதே... உஷா இன்னும் சந்தேகம் கேட்பதை நிறுத்தலையே....
கொத்ஸு..
புல் பார்மிலே இருக்கீங்க.. படிக்கறதுக்குள்ளேயே தாவு தீருது..
(மத்தவங்களுக்கு.. இவர் என்னா எழுதனாருன்னு படிக்காமலேயே மாடரேட்டிட்டேன், அவர் உள்குத்துகளுக்கு நான் பொறுப்பில்லைன்னு இதுக்கு அர்த்தம்)
உஷாக்கா,
எதாச்சும் புரிஞ்சுதா?
நாகை சிவா..
இப்படி ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டா பாக்க ஜாலியாத்தான் இருக்கு இல்லையா?
Post a Comment