Sep 30, 2007

திரைப்படங்கள் விமர்சனம், சிவாஜி உள்பட!

நிறைய சினிமா பாத்தாச்சு, நம்ம கருத்தை தமிழ்கூறும் நல்லுலகம் ஆவலோட எதிர்பார்த்துகிட்டு இருக்கிற இந்த நேரத்திலே, லேட்டா வந்து, அதிலும் லேட்டஸ்டா (Superlativeக்கெல்லாம் ஒரு பெருமை!) ஒவ்வொரு படமா விமர்சனம் எழுதினா பினாத்தல் சினிமா மாதம் கொண்டாட வேண்டி வரும் என்பதால, எல்லாப்படத்தையும் ஒரே பதிவுல போட்டு கும்மிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
 
முதல்ல நல்ல படங்கள் - பார்த்தே ஆகணும்னு நான் பரிந்துரைக்கும் படங்கள்.
 
இந்த கேட்டகிரியில நான் பாத்த படங்கள் ரெண்டு.
 
1. ஹோட்டல் ருவாண்டா: ருவாண்டா நாட்டில் இனக்கலவரம் நடக்கும் நேரத்தில் ஹோட்டல் மேனேஜராக இருக்கும் ஹீரோ, சாதாரணமான ஆள். பெரிய இடங்களோடு பரிச்சயம் இருப்பதால் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்திருப்பதால், தன் குடும்பத்தை (மட்டும்) பாதுகாத்துக்கொள்ள திட்டம் தீட்டிக்கொண்டிருப்பவர். ஆனால் இனக்கலவரங்களைத் தனி ஆள் முன்கூட்டி யூகிக்க முடியுமா என்ன? அதுவும் பல நாடுகள் சம்மந்தப்பட்ட விஷயம் வேறு.. விதி திடுதிப்பென ஹோட்டலில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவரைப் பொறுப்பாக்கி விடுகிறது.. தன் சுயநலம் தாண்டியும் சிந்திக்க வேண்டிய சூழலில் இயல்பாகத் தள்ளப்பட்டு ஹீரோவாகிறார்.
 
இரண்டு வரியில் கதை சொன்னால் இந்தப்படத்தைப் பற்றியெல்லாம் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. படத்தைப் பாருங்கள், அனுபவியுங்கள்.
 
பார்த்தே ஆகவேண்டிய படம்!
 
2. சென்னை 600028 - டென்னிஸ் பந்து கிரிக்கெட், ஆடும் இளைஞர்கள், ஒரு டோர்னமெண்ட் கனவு, அணிமாற்றங்கள், காதல்கள், தோல்விகள், துரோகங்கள் - எல்லாவற்றையும் ஒரு புத்தம்புது பார்மட்டில், இளமைத் துள்ளலோடு, அங்கங்கே எள்ளலோடும் எடுக்கப்பட்ட டைம்பாஸ்!
 
கிண்டல் சுலபமாக வருகிறது இந்த இயக்குநருக்கு.. காபி ஷாப் மேனேஜரை செண்டியாகப் பேசி கண்கலங்கவைக்கும் காட்சியில் பின்னணி இசையாக லாலலா! அவ்வப்போது வரும் என்ன கொடுமை சார்!  மார்வாடி வீட்டு விசேஷத்தில் இந்திப்பாட்டுப்பாடி கொடுமைப்படுத்தும் நேரத்தில் "ஏழுமலை" சொன்ன சரோஜா சாமான் நிக்காலோ"!  சின்னப்பசங்களோடு மேட்சில் தோற்று பேட்டுக்குப் பிரியாவிடை கொடுக்கையில் அபூர்வ சகோதரர்கள் தீம் ம்யூஸிக்! ஹீரோ எண்ட்ரியில் "வாராண்டா" என பஞ்ச் பாடல் (யுவன் இந்தப்பாட்டை வேறு படத்துக்காக சேமித்து வைத்திருக்கலாம் :-)) மண்வாசனை பாண்டியனை செமையாக நக்கலடிக்கும் கெட்டப்பில் பொத்திவச்ச மல்லிகை மொட்டு ரீமிக்ஸ்!!
 
நல்ல கலகலப்பான ரெண்டு மணிநேரம் உத்தரவாதம்.
 
அடுத்து நாம பாக்கப்போறது, சராசரிப்படங்கள். ஒரு முறை பாத்தா ஒண்ணும் பெரிய தப்பில்லை!
 
1. பள்ளிக்கூடம் - படித்த பள்ளிக்கூடத்தை புனர்நிர்மாணிக்க உதவும் பழைய மாணவர்கள் என்ற கான்சப்ட் நன்றாகவே இருந்தாலும் எக்ஸிக்யூஷனில் தோற்றுவிட்டது. அழகியை ஞாபகப்படுத்தும் நரேன் சினேகா காதல், ஏன்தான் டென்ஷனாகிறாரோ என்று தெரியாமல் எல்லா நேரமும் கோபமாகவே இருக்கும் (அதிலும் நடிக்கத்தெரியாத )ஹீரோ , நாணமோ பாடலை தேவையில்லாமல் முழுநீளம் ரீமிக்ஸ் செய்து வெறுப்பேற்றும் கானா உலகநாதன் (இது பல பாடல்களின் Medley ஆக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்), பள்ளிப்பருவத்தில் சைட்டடிக்க அலைந்த ஷ்ரேயா ரெட்டியை வயசானதும் தாய் மாதிரிப் பார்க்கும் ஓவர் செண்டி..சொதப்பல்கள் ஆயிரம்.
 
படத்தின் ஒரு உருப்படியான சீன் படம் முடிகையில் ஒழுங்காகப் படிக்காததை நினைத்து தங்கர் பச்சான் வருத்தப்படும் காட்சி. ஆனால் அதுவரை பார்க்க பொறுமை வேண்டுமே!
 
2. கிரீடம் - மலையாளத்தில் சூப்பர்ஹிட்டாம். மலையாளப்படங்களின் மசாலா விகிதம் சற்று மாறுபட்டதுதானே ஒழிய மசாலாவே இல்லாமல் இல்லை என்ற என் செல்லச் சித்தாந்தம் மீண்டும் உறுதிபெற்றது. போலீசில் சேரவிரும்பும் இளைஞனுக்குத்தான் எத்தனை தடைகளை உருவாகிவைத்திருக்கிரது இந்தச் சமுதாயம் (திரையுலகம் எனப்படிக்கவும்). நான் பார்த்த ஊரில் க்ளைமாக்ஸை மாற்றிவிட்டார்கள். (முன்னால் ஹிட், க்ளைமாக்ஸ் மாற்றிய பிறகு சூப்பர்ஹிட் என்று எகத்தாளமாக போஸ்டர் வேறு!).. இந்தக்கதையின் ப்ரொக்ரஷனுக்கு லாஜிக்கலாக ஒத்துவரக்கூடிய ஒரே முடிவு நாயகன் போலீஸ் ஆக முடியாமல் போவதுதான். அதையும் ரசிகர்களின் கூச்சலுக்கிணங்க மாற்றிவிட்டார்களாம்.. அடப்போங்கடா! கடைசிச் சண்டையில் வில்லனைக் கொன்றபிறகு அஜீத் காட்டும் முகபாவங்களையும் நடிக்கச்செய்யும் முயற்சிகளுக்கும் பிறகு எப்படியும் தியேட்டரில் யாரும் இருக்கப்போவதில்லை, க்ளைமாக்ஸ் எப்படி இருந்தால்தான் என்ன?
 
அடுத்து வரப்போற படங்கள், மோசம்! இந்தப்படங்கள் ஓடும் இடத்துக்குப் பக்கத்தில் வீடு இருந்தால், வீட்டை மாற்றவும்!
 
1. ஆர்யா - எத்தனையோ படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப்படத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று இன்னும் என்னை நொந்துகொண்டிருக்கிறேன். அகலத்தில் பெரிய நடிகராகிக்கொண்டிருக்கும் மாதவன், ப்ரின்ஸிபால் வேடத்துக்குத்தான் ஒத்துவருவார் - இதில் மாணவனாக! பால்மணம் மாறாத பாவனாவுக்கு வில்லத்தனமான வேடம், சொதப்பல் திரைக்கதையில் வாங்கிய காசுக்கு வேண்டா வெறுப்பாக பிரகாஷ்ராஜ், காலி பெருங்காய டப்பாவாக வடிவேலு - சொல்ல ஒன்றுமே இல்லாத மூன்று மணிநேர சொதப்பல்!
 
2. மாயக்குகையில் மந்திரமோகினி - ஏக்கத்தில் அவள் (படம் பேரு சத்தியமா இதாங்க) - காந்தி-மை பாதர், சக்தே இந்தியா என்ற படங்களுக்குப்போக முயற்சித்து எதற்கும் டிக்கட் கிடைக்காமல், அண்ணன் ஜாக்கிசானின் ரஷ் ஹவர்3 ஓடுகிறது என்று விளம்பரித்திருந்த கேகேநகர் விஜயாவில் டிக்கட் வாங்கி உள்ளே அமர்ந்தபிறகுதான் தெரிந்தது, இரவுக்காட்சிக்கு மட்டும் இந்தப்படம் என்று! (மீண்டும் படம் பேர் டைப்படிக்க முடியாது). 80களின் ஆரம்பத்தில் வந்த ஹிந்தி லோ பட்ஜட் திகில் படத்தின் மோசமான தமிழாக்கம். (வெளியே வந்து படம் பெயர் பார்த்து மனப்பாடம் செய்துகொண்டேன்) பிட்டு போடக்கூடிய படம் என்ற ஒரு ஆவலோடே பார்த்தாலும், தியேட்டருக்கு அழையா விருந்தாளிகளாக உள்ளே வந்துவிட்ட இரு காக்கிச்சட்டைகள் அந்த ஆவலிலும் மண்ணைப்போட்டன! பயங்கர திகில் - சட்டைக்குள் ஏறிவிட்ட மூட்டைப்பூச்சி என்ன செய்யுமோ என!
 
சிவாஜி விமர்சனமும் சேர்த்து எனச் சொல்லியிருந்தேன் இல்லையா? மாயக்குகையில் மந்திர மோகினி படம், சிவாஜியை விடத் தேவலாம்!

20 பின்னூட்டங்கள்:

அறிவன் /#11802717200764379909/ said...

//சிவாஜி விமர்சனமும் சேர்த்து எனச் சொல்லியிருந்தேன் இல்லையா? மாயக்குகையில் மந்திர மோகினி படம், சிவாஜியை விடத் தேவலாம்!
//
Repeatttu

Hariharan # 03985177737685368452 said...

//சிவாஜி விமர்சனமும் சேர்த்து எனச் சொல்லியிருந்தேன் இல்லையா? மாயக்குகையில் மந்திர மோகினி படம், சிவாஜியை விடத் தேவலாம்!//

பினாத்தலாரே.... பினாத்தலான தீர்ப்பை மாத்து!

மாயக்குகை மந்திரமோகினி படத்தை ஏன் இப்படி ஒப்பிட்டு அவமதிக்க வேண்டும்.. பாவமில்லையா?? !

நாகை சிவா said...

//சிவாஜி விமர்சனமும் சேர்த்து எனச் சொல்லியிருந்தேன் இல்லையா? மாயக்குகையில் மந்திர மோகினி படம், சிவாஜியை விடத் தேவலாம்!//

சிவாஜி படத்தை நானும் பார்த்தேன் என்று வரலாற்றில் பெயர் பெற்றதை விட வேறு என்ன வேணும் சொல்லுங்க.... சிவாஜி எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது....

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அறிவன்.

நன்றி ஹரிஹரன்.

நன்றி நாகை சிவா.

என்ன சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் ஒரே வரியைக் கோட் பண்ணியிருக்கீங்க?

நாகை சிவா.. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதுன்னுதான் நானும் சொல்லறேன்.. எந்தப்பக்கம் அப்பாற்பட்டதுன்றதலேதான் கருத்து வேறுபாடு :)

வித்யா கலைவாணி said...

//சிவாஜி விமர்சனமும் சேர்த்து எனச் சொல்லியிருந்தேன் இல்லையா? மாயக்குகையில் மந்திர மோகினி படம், சிவாஜியை விடத் தேவலாம்!
//
//Repeatttu//
மறுபடியும் repeatuu

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க வித்யா..

நீங்களும் அதே கோட்டா? ;))

இலவசக்கொத்தனார் said...

பதிவே எழுதி இருக்க வேண்டாம். வெறும் கடைசி வரி எழுதி இருந்தால் போதும் போல!! :)))

நானும் ரிப்பீட்டேய். :))

மங்களூர் சிவா said...

//
சிவாஜி விமர்சனமும் சேர்த்து எனச் சொல்லியிருந்தேன் இல்லையா? மாயக்குகையில் மந்திர மோகினி படம், சிவாஜியை விடத் தேவலாம்!
//
இதை நான் கண்ணா பின்னாவென கண்டிக்கிறேன்

முரளி கண்ணன் said...

thank you

மஞ்சூர் ராசா said...

கடைசி வரி இந்த பதிவை தூக்கி நிறுத்திவிட்டது நண்பரே.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கொத்ஸ், மங்களூர் சிவா, முரளி கண்ணன் & மஞ்சூர் ராசா!

மங்களூர் சிவா.. இந்தப்படத்துக்கு கொடுக்கப்பட்ட பில்ட் அப்பு, மாயக்குகைக்கு இல்லை - அதைத்தானே கண்டிக்கிறீங்க ;)

துளசி கோபால் said...

இது என்னாய்யா அநியாயமா இருக்கு! அந்த மாயமோகினி எனக்கு இதுவரை வரலை? :-)))))

பினாத்தல் சுரேஷ் said...

துளசி அக்கா..

இது மட்டமான படம் மட்டும் அல்ல, பிட்டுக்கு மண் சுமக்கும் டப்பிங் படம் கூட :) உங்களுக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை கிடையாது!

Anonymous said...

//சிவாஜி விமர்சனமும் சேர்த்து எனச் சொல்லியிருந்தேன் இல்லையா? மாயக்குகையில் மந்திர மோகினி படம், சிவாஜியை விடத் தேவலாம்!
//

cheap publicity for your blog :)

பினாத்தல் சுரேஷ் said...

அனானி,

சீப் பப்ளிசிட்டியா? அப்படின்னா?

ILA(a)இளா said...

இந்தக் கடைசி வரிய வெச்சுதானே பதிவ ஓட்டனும்னு நினைக்கிறீங்க. அதாங்க சிவாஜி சக்ஸஸ் ரகசியம். ஏன்.. படங்களின் விமர்சனம்னு வெச்சுட்டு போயிருக்கலாமே? அதை வெச்சு பொழப்பு ஓட்டனும்னு தெரிஞ்சு வெச்சி இருக்கீங்க

தேவ் | Dev said...

பதிவு டைட்டிலில் உள்ள ஒரு பெயருக்கும் கடைசி வரியில் உள்ள அதே பெயருக்கும் சேர்த்து கன்னாபின்னான்னு விசில் அடிச்சுக்குறேன் தலைவா.. ஆமா அது தவிர பதிவுல்ல உள்ள எதையும் சத்தியமா நான் படிக்கல்ல :))))

குசும்பன் said...

"ILA(a)இளா said...
இந்தக் கடைசி வரிய வெச்சுதானே பதிவ ஓட்டனும்னு நினைக்கிறீங்க. அதாங்க சிவாஜி சக்ஸஸ் ரகசியம். "

அது மேட்டர்!!! சூப்பரா சொன்னீங்க இளா!!!

ரஜினி ரசிகன் என்ற முறையில் என் கண்டனம்!!!:(

G.Ragavan said...

// ILA(a)இளா said...
இந்தக் கடைசி வரிய வெச்சுதானே பதிவ ஓட்டனும்னு நினைக்கிறீங்க. அதாங்க சிவாஜி சக்ஸஸ் ரகசியம். ஏன்.. படங்களின் விமர்சனம்னு வெச்சுட்டு போயிருக்கலாமே? அதை வெச்சு பொழப்பு ஓட்டனும்னு தெரிஞ்சு வெச்சி இருக்கீங்க //

என்ன இளா இப்பிடிச் சொல்லீட்டிங்க!பின்னே சிவாஜியோட சக்சஸ்னா சும்மாவா இருக்கு. பராசக்தீல தொடங்கி...எத்தனை சிவாஜி படம்..எத்தனை சிவாஜி படம். ஒன்னா ரெண்டா...சாமி வேசம்..ஆசாமி வேசம்...எத்தனை வேசங்களைப் போட்டு என்னமா நடிச்சிருக்காரு சிவாஜி. பரமசிவனே நேருல வந்து நின்னாப்புல இருக்குமே. கப்பலோட்டிய தமிழன் பாத்துட்டு..வ.உ.சியோட மகன்...தியேட்டர்ல அப்பா அப்பான்னு கதறி அழுதாராமே...என்ன நடிப்புய்யா அது.

அடடா...அப்படி இருக்குறப்போ...பெனாத்தலாரே சிவாஜி படம் சரியில்லைன்னு நீங்க சொல்லலாமா? என்னது...இது சிவாஜி நடிச்ச படமில்லையா. யாரு ரஜினிகாந்த் நடிச்ச(!) படமா? ஓ அப்படியா...அப்பச் சரி.

இந்த மாய மந்திரஜால மோகினிய எறக்குமதி செய்ய முடியுமான்னு சொல்லுங்க. எப்படியிருக்குன்னு பாக்குறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க இளா..

அதை வச்சு பொழப்பை ஓட்டறது என்னவோ வாஸ்தவம்தான். ஆனா சிவாஜி பற்றிய என் கருத்தை தெளிவாச் சொல்ல, பரப்பதானே இந்த டெக்னிக்கை யூஸ் பண்ணேன் :)

தேவ்.. நல்ல செலக்டிவ் ரீடர் போல நீங்க..

குசும்பன், வணக்கம்னா.. நன்றின்னா!

ஜி ராகவன், சிவாஜி படம்றதையே ரஜினி நடிச்சதா மாத்திட்டாங்களே.. என்ன கொடுமை சார் இது!
மந்திரமோகினிய டவுன்லோடு பண்ணி வேற பாக்கணுமா? சிவாஜி கிடைக்கும், பாத்துக்கங்க :-)

 

blogger templates | Make Money Online