Sep 25, 2007

20-20 நுணுக்கமான கிரிக்கெட்டுக்கு சாவுமணியா?

ஆமாம்! சந்தேகமேயில்லை.
 
பேட்ஸ்மேனின் குறைகளை சில ஓவர்களில் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பீல்ட் செட் செய்து, உடலைவிட மூளையால் ஆடும் பவுலர்கள் இனி வர வாய்ப்பில்லை. 4 ஓவரில் என்னத்தை பேட்ஸ்மேனைக் கணிப்பது? பீல்ட் செட் செய்ய ஆயிரம் விதிகள், பவுன்ஸரும் பீமரும் கொலைக்குற்றங்கள், லெக் சைடில் அரை இஞ்ச் போனாலே வைட்,  பவுலர் வாழ்க்கை சிரமம்தான்.
 
பேட்ஸ்மேனுக்கு மட்டும்? ஒரு பந்தை லீவ் அலோன் செய்தால் அடுத்த ஆட்டத்துக்கு தன்னையே லீவ் அலோன் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் எந்த லைன் லெங்த்தில் பால் வந்தாலும் ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்புவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு, கவர் ட்ரைவ், லேட் கட் போன்ற சாஸ்திரோக்தமான ஷாட்களைக் கைவிட்டு, ரிவர்ஸ் ஸ்வீப்பிலும் ஹூக் புல்லிலுமே  திருப்தியடைய வேண்டும்! தடுத்தாடி, பவுலருடன் மூளைப்போரில் ஈடுபடுதல் எல்லாம் பழங்காலம்!
 
ஐந்து நாள் போட்டிகளின் நுணுக்கமான ஆட்டத்துக்கு ஒரு சாவுமணி அடித்தது ஒருநாள் போட்டிகள், ஒருநாள் போட்டிக்கே ஆப்பு வைக்கின்றன இந்த 20-20.
 
இப்படியெல்லாம் அடுக்குவாங்க, டெஸ்ட் போட்டி பாத்து பழக்கப்பட்ட பெரிசுங்க!
 
அதையெல்லாம் கண்டுக்காதீங்க!
 
கையில காசு வாயில தோசை மாதிரி 20 ஓவர்லே முடிஞ்ச வரைக்கும் அடிச்சுக் கிழிச்சோமா, அடுத்த டீமை எடுக்கவிடாம தடுத்தோமா.. 3 மணிநேரத்தில கப்பை வாங்கிகிட்டு ஊருக்கு வந்தோமான்னு அவசர கதியிலேயே ஓடுது பாருங்க! அதான் டாப்!
 
5 நாள் கொடுத்துட்டோம்பா, 10 விக்கட்.. மகனே உன் சமத்துன்னு சொன்னா, விக்கட்டை போற்றிப் பாதுகாக்கத்தானே தோணும்! அதே 50 ஓவருக்குதான் உன் 10 விக்கட் செல்லும்னா, ஒருத்தன் 5 ஓவர் ஆடினாலே போதும்னு விக்கட் மேலே ஆசை குறையுது, அதுவும் இந்த 2020லே மவனே நீ கவாஸ்கரா இருக்கலாம் ( ரெக்கார்டு 174 பந்தில் 36 ரன்), ஆனா கமெண்டரி பாக்ஸுக்குதான் லாயக்கு. 2 ஓவர்தான் தரமுடியும்.. அதுக்குள்ளே சிக்ஸர் அடிப்பயா? அப்ப உள்ளே வா! 7 ஸ்லிப் வைச்சு பொதுக்கூட்டம் நடத்தற பாஸ்ட் பவுலரா இருக்கலாம்.. மிஸ் பண்ணா கில்லியை பேர்ப்பயா? அப்பதான் உள்ள வர முடியும்!
 
4 ஓவர்தான் போடறான் பவுலர், மிஞ்சிப்போனா 20 ஓவர்தான் ஆடறான் பேட்ஸ்மேன்.. ஸ்டாமினா போயிடுச்சி, ஜல்ப் பிடிச்சுகிச்சு, சுண்டுவிரல் சுளுக்கிகிச்சுன்னு எந்தத் தொந்தரவும் இல்லை! புல் பவர்லே பவுலிங், புல் பவர்லே பேட்டிங்! மிட் ஆனுக்கு போனாலும் ரன்னு, காட்சு விட்டா ரெண்டு ரன்னு.. மாட்டிச்சுன்னா ஆறு சிக்ஸர், மாட்டலைன்னா மிடில் ஸ்டம்ப்பு.. போனால் போகட்டும் போடான்னு எல்லாருமே ஆடறாங்க பாருங்க! இப்பதான் கிரிக்கெட்காரங்க பாக்கறவங்க டைமையும் மதிக்க ஆரம்பிச்சுருக்காங்க!
 
இந்த டோர்னமெண்டுலே இந்தியா ஆடி, ஜெயிச்ச அத்தனை மேட்சையும், வேலைக்குத் தொந்தரவில்லாம எல்லா பாலையும் பாக்க முடிஞ்சது.
 
இந்த மாதிரி ஒரு போட்டியிலே, சாத்தியமே இல்லாத மெய்டன் விக்கட் எடுத்த பத்தான் பவுலிங் என்ன! அப்பாலே டை ஆகி, பெனால்டி மாதிரி பவுல் அவுட்டுன்னு ஒரு முடிவு கொடுத்த பார்மட்தான் என்ன!
 
 
பிட்ச் பழைய ஞாபகத்துல கொஞ்சம் பவுலிங்குக்கு உதவி செஞ்சாலும் கவலைப்படாம 50 அடிச்ச புதுப்பையன் ரோஹித் ஷர்மாவோட பொறுமை என்ன? நீ அடிச்சா நான் காலி, நான் அடிச்சா நீ காலின்னு இருந்தாலும் ஒழுங்கா பவுலிங் போட்ட ஆர் பி சிங்கோட லைன் லெங்த் என்ன!
 
ஆஸ்திரேலியா சேம்பியனா? அது போன மாசம்.. வாங்கடா இந்த மாசத்துக்குன்னு மறுபடி ஒரு காட்டு காட்டிய யுவ்ராஜ், ஆடாத மாதிரியே இருந்தாலும் 200 ஸ்ட்ரைக் ரேட் வச்ச தலை தோனிதான் என்ன? கில்லிக்கு கில்லி எகிறவச்ச கோபக்கார மச்சான் ஸ்ரீசாந்த்தான் என்ன? (பாவம், ஒவ்வொரு மேட்சிலேயும் யாரையாவது முறைச்சுகிட்டு மேட்ச் பீஸை அபராதமாக்கட்டி தர்மத்துக்கே ஆடிட்டுப்போவுது இந்தப்புள்ள.. கோபத்தைக் குறைப்பா!)
 
நானும் சூப்பர்8 வரலே, நீயும் வரலே.. அதனாலே என்ன, இப்ப வரயா ஒண்டிக்கு ஒண்டின்னு போட்டாங்க பாருங்க ஒரு பைனல்!
 
ப்ளோ ஹாட் ப்ளோ கோல்டுன்ற மாதிரி, 40 ஓவரிலும் ஒரு ஓவர் பாகிஸ்தான் கையும், ஒரு ஓவர் இந்தியா கையும் மாறி மாறி ஓங்கி (உதாரணம் - முதல் ஓவர் 4-1. ரெண்டாவது ஓவர் 21 ரன்!, 18ஆவது ஓவர் 15 ரன், 19ஆவது ஓவர் 7-1) நாடி நரம்பையெல்லாம் முறுக்கி தளர்த்தி.. எப்பா! இப்பக்கூட படபடக்குது.. மிஸ்பாவோட  டைமிங் அந்த பாலுக்கு ஒத்து வந்திருந்தாலோ, ஸ்ரீசாந்த் கேட்சை விட்டிருந்தாலோ, ஏன், இன்னும் ஒரு விக்கட் கையிலே இருந்திருந்தாலோ குதிச்சிருக்கப்போறது பாகிஸ்தான் ரசிகர்கள்!
 
ஆனா, தோனி சொன்னா மாதிரி, அந்தக்கடைசி ஓவர்லே தோத்திருந்தாலும், நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆட்டம்னா இதான்யா ஆட்டம்!
 
சந்தேகமே இல்லை - இதான் கிரிக்கெட்டோட ப்யூச்சர்! 3 மணிநேரம்னாலும் நெறைய ஸ்பான்ஸர் கிடைப்பாங்க, குறைந்தபட்சம் 100 அட்வர்டைஸ்மெண்ட் ஸ்லாட் இருக்கும். பாக்கறவங்க அதிகமா ஆவாங்க..
 
வாழ்க 20-20, வளர்க 20-20 என்று கூறி, என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.
 
பி கு: ஷோயப் மாலிக் சொன்ன வார்த்தைகள் " First of all I want to say something over here. I want to thank you back home Pakistan and where the Muslim lives all over the world. " எனக்கும் pinching ஆகத்தான் இருந்தது. கொத்ஸ் என் கருத்தோட ஒத்துப்போயி பதிவாவே போட்டதால, இங்க அதைப்பத்தி பேசலே!
 
 
 
 

21 பின்னூட்டங்கள்:

நந்தா said...

// (பாவம், ஒவ்வொரு மேட்சிலேயும் யாரையாவது முறைச்சுகிட்டு மேட்ச் பீஸை அபராதமாக்கட்டி தர்மத்துக்கே ஆடிட்டுப்போவுது இந்தப்புள்ள.. கோபத்தைக் குறைப்பா!)//

அல்டிமேட் இது. கரெக்டா சொன்னீங்க.

ஷோயப் மாலிக் சொன்னதை கேட்டு எனக்கு நேத்து வந்த கோபத்துக்கு அளவே இல்லை. நீ எல்லாம் தோத்ததுல தப்பே இல்லைன்னுதான் சொல்லத் தோணுச்சு.

வடுவூர் குமார் said...

வயசாகிட்டு வருது, இனிமேல் இந்த மாதிரி விளையாட்டை பார்க்க தடை போடப்போறாங்க வீட்டில.
பார்க்கிறவர்கள் பல்ஸ் ஏறுகிற மாதிரியா விளையாடுகிறது. :-))

மதுரையம்பதி said...

//சந்தேகமே இல்லை - இதான் கிரிக்கெட்டோட ப்யூச்சர்!
வாழ்க 20-20, வளர்க 20-20 //

ரீப்பீட்டே....

இலவசக்கொத்தனார் said...

அதெல்லாம் சரி. ஆனா டெஸ்ட் மேட்ச் ஆடும் பொழுதும் நான் உக்கார்ந்து பார்ப்பேன்.. ஹிஹி...


அப்புறம் நம்ம பதிவுக்கு விளம்பரம் தந்ததுக்கு நன்றி தல! :))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நந்தா..

ஷோயப் விவகாரத்தில் ஆசீப்பின் கருத்து இன்னும் அபாரம் :)

நன்றி வடுவூர் குமார்..

எனக்குமே ஆஸ்திரேலியா மேட்சிலும், இந்த மேட்சிலும் எமோஷனல் அசிடிட்டி ஏறுவது தெளிவாகத் தெரிந்தது :)

பினாத்தல் சுரேஷ் said...

ஆமாம் மதுரையம்பதி!

கொத்தண்ணா.. வேலை இல்லாம சும்மா உக்காந்துகிட்டிருக்கப்ப கென்யா B Vs ஹாங்காங் B டெஸ்ட் மேட்ச் கூடத்தான் பாப்போம்.. முனைஞ்சு, லைவா பாக்கணும்னு ஆவலைத்தூண்டனும்னா சின்னதா இருக்கணும்..

விளம்பரமா.. நமக்குள்ளே என்ன இதெல்லாம் :)

முரளி கண்ணன் said...

// (பாவம், ஒவ்வொரு மேட்சிலேயும் யாரையாவது முறைச்சுகிட்டு மேட்ச் பீஸை அபராதமாக்கட்டி தர்மத்துக்கே ஆடிட்டுப்போவுது இந்தப்புள்ள.. கோபத்தைக் குறைப்பா!)//

nice

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி முரளி கண்ணன்.

நாகை சிவா said...

//இப்பதான் கிரிக்கெட்காரங்க பாக்கறவங்க டைமையும் மதிக்க ஆரம்பிச்சுருக்காங்க! //

அதே சுரேஷ்.. இங்க நாம் இங்கிலாந்து கூட விளையாடும் போது சில நேரம் அமர்ந்து பாத்துவிட்டு என்ன ஆட்டமய்யா இதுனு முக்கால்வாசி பேர் எழுந்து போயிடுவாங்க... ஆனா இந்த 20/20 பாத்துட்டு சும்மா அரண்டு போயிட்டானுங்க... எப்படி இப்படி னு கேட்டு இங்க பாதி பேருக்கு கிரிக்கெட் சொல்லி கொடுத்துச்சா... அவனுங்க பேவரைட் நம்ம ஸ்ரீயும் யுவராஜ் தானும்...

venkat said...

enge en pinnutam

venkat said...

//இப்பதான் கிரிக்கெட்காரங்க பாக்கறவங்க டைமையும் மதிக்க ஆரம்பிச்சுருக்காங்க! //

good!!!

Anandha Loganathan said...

//ஐந்து நாள் போட்டிகளின் நுணுக்கமான ஆட்டத்துக்கு ஒரு சாவுமணி அடித்தது ஒருநாள் போட்டிகள், ஒருநாள் போட்டிக்கே ஆப்பு வைக்கின்றன இந்த 20-20.

இப்படியெல்லாம் அடுக்குவாங்க, டெஸ்ட் போட்டி பாத்து பழக்கப்பட்ட பெரிசுங்க!
//

ஆமாங்க, அதே. 20-20 ல இருக்கும் ஒரு pep டெஸ்ட் மேட்சில் கிடைக்காது. டெஸ்ட் மேட்சில் pep அப்பப்போ தான் வரும் ஆனால் ,இதுல முதல்ல இருந்து கடைசி பந்து வரைக்கும் இருக்குது.

Nakkiran said...

பேட்ஸ்மேனின் குறைகளை சில ஓவர்களில் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பீல்ட் செட் செய்து, உடலைவிட மூளையால் ஆடும் பவுலர்கள் இனி வர வாய்ப்பில்லை. 4 ஓவரில் என்னத்தை பேட்ஸ்மேனைக் கணிப்பது? பீல்ட் செட் செய்ய ஆயிரம் விதிகள், பவுன்ஸரும் பீமரும் கொலைக்குற்றங்கள், லெக் சைடில் அரை இஞ்ச் போனாலே வைட், பவுலர் வாழ்க்கை சிரமம்தான்.

பேட்ஸ்மேனுக்கு மட்டும்? ஒரு பந்தை லீவ் அலோன் செய்தால் அடுத்த ஆட்டத்துக்கு தன்னையே லீவ் அலோன் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் எந்த லைன் லெங்த்தில் பால் வந்தாலும் ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்புவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு, கவர் ட்ரைவ், லேட் கட் போன்ற சாஸ்திரோக்தமான ஷாட்களைக் கைவிட்டு, ரிவர்ஸ் ஸ்வீப்பிலும் ஹூக் புல்லிலுமே திருப்தியடைய வேண்டும்! தடுத்தாடி, பவுலருடன் மூளைப்போரில் ஈடுபடுதல் எல்லாம் பழங்காலம்!

ஐந்து நாள் போட்டிகளின் நுணுக்கமான ஆட்டத்துக்கு ஒரு சாவுமணி அடித்தது ஒருநாள் போட்டிகள், ஒருநாள் போட்டிக்கே ஆப்பு வைக்கின்றன இந்த 20-20.

முகமூடி said...

// இந்த டோர்னமெண்டுலே இந்தியா ஆடி, ஜெயிச்ச அத்தனை மேட்சையும், வேலைக்குத் தொந்தரவில்லாம //

என்னை பொருத்த வரை 20-20 என்பதே பொய்யாய் பழங்கதையாய் ஆகி ஆட்டக்காரர்கள் அனைவரும் வந்தனரா, தொடர்ந்து அம்பயர் அவரும் வந்தாரா, டாஸை போட்டாரா, ஜெயித்த அணியை அறிவித்தாரா என்று கிரிக்கெட் நிசமாலுமே அடுத்த நிலைக்கு செல்லும் நாள் என்று வருமோ அதுவே கிரிக்கெட்டுக்கு ஒரு பொன்னாள் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

அபி அப்பா said...

ங்கொய்யால! வந்து நச்சுன்னு உள் குத்தோட சொல்லிட்டு போன எங்க ஊர் ஆளுக்கு என் ரிப்பீட்டேய்::-)))

கிரிக்கெட்ன்னா லீவ் போட்டுட்டு ஃபுல்லா ஆகி அதை மட்டும் பார்க்காம ஜாலியா இருந்துட்டு அடுத்த நாள் லைட்ட அத பத்தி தெரிஞ்சுகிட்டு ஆபீஸ்ல விளையாடாத கங்குலி பத்தி களேபரமா விலாவாரியா பேசிகிட்டு.... அட போங்கப்பா இப்பல்லாம் 3 அவர்ஸ் பர்மிஷன் குடுத்துட்டு ஸ்கோர் போர்டை கேக்குறானுங்க கம்பனில...சுத்த மோசம்:-)))))

பினாத்தல் சுரேஷ் said...

ஆமாம் நாகை சிவா!

வெங்கட், உங்க பின்னூட்டம் இதானே? வேறெதும் இல்லையே!

ஆனந்த லோகநாதன் - அதே!!

என்ன நக்கீரன், கோட் பண்ணியிருக்கீங்க ஆனா உங்க கருத்து எதையும் சொல்லலே!

பினாத்தல் சுரேஷ் said...

என்ன தலை! இப்படி சொல்லிட்டீங்க.. டாஸ் போட ஏன் மைதானத்துக்கு வரணும்? பெவிலியன்லே இருந்தே முடிச்சுக்கலாமே!

அபி அப்பா, உங்க கம்பனிலே ஸ்கோரர் நீங்கதானா? ;)

மனதின் ஓசை said...

:-)

//பாவம், ஒவ்வொரு மேட்சிலேயும் யாரையாவது முறைச்சுகிட்டு மேட்ச் பீஸை அபராதமாக்கட்டி தர்மத்துக்கே ஆடிட்டுப்போவுது இந்தப்புள்ள.. கோபத்தைக் குறைப்பா//

:-))))))

Anonymous said...

//வேலை இல்லாம சும்மா உக்காந்துகிட்டிருக்கப்ப கென்யா B Vs ஹாங்காங் B டெஸ்ட் மேட்ச் கூடத்தான் பாப்போம்..//

அதானே!!!!

மதுரையம்பதி..

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மனதின் ஓசை.. ரொம்ப நாளாக் காணலை??

மதுரையம்பதி.. அதானே (ஏன் அனானி எண்ட்ரி?)

Nakkiran said...

//என்ன நக்கீரன், கோட் பண்ணியிருக்கீங்க ஆனா உங்க கருத்து எதையும் சொல்லலே!//

நீங்க சொல்லியிருக்கும் முதல் 3 பாரா தான் என் கருத்து.. நான் டெஸ்ட் மேட்ச் லவ்வர்.. வயசு 28 தான்... பெரிசில்ல :)

 

blogger templates | Make Money Online