Feb 18, 2007

பினாத்தல் ரீமேக் திரைப்படங்கள் (1) - பராசக்தி (19 Feb 07)

பினாத்தல் புரடக்ஷன்ஸ் பெருமையுடன் வழங்கும்
வலைப்பூ ரீமேக் கிரியேஷன்ஸாரின்
பராசக்தி


நீதிபதி: உன்மேல் சாற்றப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நீ என்ன பதில் சொல்ல விரும்புகிறாய்?

குற்றம் சாட்டப்பட்டவர்:

நீதிமன்றம் பல விசித்திரம் நிறைந்த வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. பல புதுமையான மனிதர்களைச் சந்தித்திருக்கிறது, ஆனால் இவ்வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல, குற்றம் சாட்டப்பட்ட நானும் ஒன்றும் புதுமையானவனல்ல.

போலிப்பெயரில் பின்னூட்டம் போட்டேன், அதர் ஆப்ஷனை எதிர்த்தேன், செய்யத் தெரியாமல் கயமை செய்தேன் - குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன்
இப்படியெல்லாம்.

நீங்கள் நினைப்பீர்கள், இதையெல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை - நிச்சயமாக இல்லை.

கேளுங்கள் என் பழங்கதையை. வலைப்பூ பாதையிலே சர்வ சாதாரணமாக இருக்கும் ஏராளமான பதிவர்களில் ஒருவன் தான் நானும்.

பிழைக்க ஒரு தொழில், பொழுதுபோக்க ஒரு தொழில் - வலைப்பதிவர்
பெரும்பான்மைக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? மொழிபெயர்த்துக் கொண்டிருந்த நான், பூஜ்யவெளியிருக்கும் பிளாக்குக்கு ஓடோடி வந்தேன். பிளாக், என்னை தாத்தா என்றது. என் அனுபவத்தை தா, தா
என்று கேட்பதாக எண்ணி நானும் அள்ளி வழங்கினேன்.

ஆனால் வலைப்பூ மக்கள் என்னை எள்ளி நகையாடினர். என் வெளிப்படைப்பேச்சுக்களை வெளிப்படையாகக் கிண்டல் செய்தனர். எனக்கிருந்த ஓரிரு ஆதரவாளர்களையும் கொடுமைப்படுத்தியது.

போலிக்கள் என்னை ஆபாசம் செய்து துரத்தினார்கள் - ஓடினேன்.

மாற்றுக்கருத்தாளர்கள் என்னை தூஷணம் செய்தார்கள் - ஓடினேன்.

நடுநிலைவாதிகள் என்னைக் கிண்டல் செய்தே தீர்த்தார்கள் - ஓடினேன் ஓடினேன் - ஸைபர்வெளியின் எல்லைக்கே ஓடினேன். மூச்சு வாங்கியதால் திரும்ப வந்துவிட்டேன்.

அதர் ஆப்ஷன் வேண்டாமென்றேன் - ஏன் போலிகளே கூடாதென்றா? ஆபாசமாக எழுதி என்னை ஆதரித்த சிலரையும் ஓட ஓட விரட்டும் அசிங்கப்போலிகள் கூடாதென்றுதான் கூறினேன்.

வேறுபெயரில் பின்னூட்டமிட்டேன் - ஏன் எனக்குப் பெயர் இல்லாததாலா? என் பெயர் தெரிந்தால் ஏற்கனவே எனக்கு விழும் திட்டு இன்னும்
அதிகமாகிவிடுமே என்பதற்காக!

பின்னூட்டக்கயமை செய்தேன் - ஏன் 100 200 என்று சாதனை செய்வதற்காகவா? போலியின் பயமுறுத்தலால் பாதி, என் பதிவைப்பார்த்து ஓடியதால் பாதி எனக் காற்று வாங்கி என் பதிவுகள் காணாமல் போய்விடுவதைத் தவிர்ப்பதற்காக!

என் யுத்தத்தில் பங்கேற்றிருக்கவேண்டும், போலியைத் துரத்தியிருக்கவேண்டும், யோம் கிப்பூரின் போது கூட இருந்திருக்கவேண்டும், பின்னூட்டங்களாய்க்கொட்டி எனக்கு ஆதரவளித்திருக்கவேண்டும் - இன்று என்முன் சட்டத்தை நீட்டுவோர்.

செய்தார்களா? வாழ விட்டார்களா இந்தத் தாத்தாவை.. இதற்கொரு முடிவு கட்டவே நான் பல அவதாரம் எடுத்தேன்! தவறா? கூறுங்கள் நீதிமான்களே!

நாளை ரிலீஸ், அடுத்த ரீமேக்: திருவிளையாடல்!

--------
இண்டிப்ளாக்கீஸில் எனக்கு வோட்டளித்துவிட்டீர்களா?
பதில் தெரியாத கேள்விகளுக்கு no answer என்று தெரிவு செய்யலாம். நன்றி
Please Click on the Link below to start the voting process.

52 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

ஒரு விஷயம் கொஞ்சம் அமுங்கறா மாதிரி இருந்தா ஆகாதே! நடத்தும்! ஆனா ஒண்ணு, அருமையா எழுதறீரு. அதைச் சொல்லியே ஆகணும்!

SP.VR. SUBBIAH said...

////வாழ விட்டார்களா இந்தத் தாத்தாவை.. இதற்கொரு முடிவு கட்டவே நான் பல அவதாரம் எடுத்தேன்! தவறா? கூறுங்கள் நீதிமான்களே!///

பதிவுகளில் நடக்கும் ம்ற்ற கூத்துக்களைப் பார்க்கும்போது இது ஒன்றும் பெரிய தவறல்ல!

இருந்தாலும் பதிவர் நீதிச் சட்டங்களைப் புறம் தள்ள முடியாது.
ஆகவே தண்டனை உண்டு!
தொடர்ந்து 5 நகைச்சுவைப் பதிவுகளைப்
பத்து தினங்களுக்குள் போடும்படி இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது!

Anonymous said...

//செய்தார்களா? வாழ விட்டார்களா இந்தத் தாத்தாவை.. இதற்கொரு முடிவு கட்டவே நான் பல அவதாரம் எடுத்தேன்! தவறா? கூறுங்கள் நீதிமான்களே!//

இவ்வளவு இப்போது கூறும் நீங்கள் அப்போது வேடிக்கை பார்த்து காரியத்துக்காகாத புத்திமதிகளைத்தானே கூறியிருப்பீங்க?

மற்றப்படி தாத்தா வந்து யாரிடமும் தான் செய்தது தவறான்னு கேட்டதா தெரியல்லையே. தானே தகுந்த ஏற்பாடுகள் செய்து கொண்டதால் உங்க தயவு தேவையில்லைன்னுதானே சொன்னாப்புல இருக்கு?

அவர் சொன்ன வருத்தம் கூட அவருக்காக தைரியமாக பின்னூட்டமிட்டு போலியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவருக்குத்தானே தவிர வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு பேசினவங்களுக்காக இல்லங்கறதை கூடவா புரியாமல் இருக்கீங்க?

rv said...

இது நியாயமா பெனாத்தலார்..

நான் சரத்குமார கூப்பிட்டா நீங்க வலையுலக சுப்ரீம் ஸ்டாரையே கூப்பிட்டு கலக்குறீங்களே..

அக்மார்க் பெனாத்தல் டச்!

Unknown said...

முதல் டிக்கெட் நான் தான்....:)

லொடுக்கு said...

என்னடா இது அதுக்குள்ளே இந்த மேட்டர் அடங்கிருச்சேன்னு பாத்தேன். விட மாட்டீங்களே!

பெனாத்தல் ஐயா, வசனம் அருமை.

Anonymous said...

போட்டாச்சு!

கமிஷன் அனுப்பீரும்!

தருமி said...

simlply superb

Anonymous said...

இதைப் பற்றி நான் கருத்து ஏதும் கூற விரும்பாததால் என்னுடைய பின்னூட்டம் என்னவென்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்!

Leo Suresh said...

யோவ் பிணாத்தலரே,
முடிஞ்சு போன விசயத்தை ஏனய்யா கிளருறீரு, ஆனாலும் வசனம் அருமையாயிருந்தது, டோண்டு சார் கோவிச்சுக்க மாட்டாரே.
லியோ சுரேஷ்

SurveySan said...

பெனா.சுரே,

இந்தப் பிரச்சனையால் இருந்த எரிச்சலெல்லாம் உங்க பதிவ படிச்ச் உடனே, போயிடுச்சு.
டக்கரோ டக்கர்.

SurveySan said...

உங்களுக்கு ஓட்டும் போட்டாச்சு :)

Anonymous said...

ஐயா அருமை

- Sundar

தகடூர் கோபி(Gopi) said...

:-))))

காமெடியெல்லாம் நல்லாத்தான் இருக்கு.
ஆனா பழைய கதையை இப்ப ரீமேக் பண்ணா வசூலாகாது.

கதை மட்டும் முக்கியமில்லைங்க... படத்தை சரியான சமயத்துல ரிலீஸ் பண்ணனும்.

Anonymous said...

தாத்தாவை கிண்டல் பண்ற மாதிரி தாத்தாவுக்கு ஆதரவுக்குரல் கொடுத்திருக்கும் உமது உள்குத்தைப்[ புரிந்து கொள்ளாமல் இருக்கும் அளவுக்கு எம் வலைப்பதிவர்கள் ஒன்றும் வீராச்சாமிகள் அல்ல.

(ஏதோ நம்மால முடிஞ்ச சாம்பிராணி. புகையுறது புகையட்டுமே:-) நல்லா இருங்கடே!!)

சாத்தான்குளத்தான்

அபி அப்பா said...

முதலில் உங்களுக்கு 3 ஓட்டு போட்டதை சொல்லிக்கிறேன். இந்த பதிவு படிச்சப்புரம் இப்போது பக்கத்தில் உள்ளவர்கள் மெயில் ஐ.டி மூலமாக இன்னும் 3 போடலாம் என இருக்கிறேன்.

அருமையான காமெடி. நன்றி டோண்டு மாமாவுக்கு சொல்லுங்கள். காரணம் அவர் எல்லாத்துக்கும் பொருந்திவரார்.

ரொம்ப அருமை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Jazeela said...

திருட்டு DVD இலவசமாக கிடைத்தாலும் வாங்கிப் பார்த்திட மாட்டேன் ;-)

Anonymous said...

தலை,

டகால்டி பதிவுதான்னாலும் நல்லாதான் இருக்குது :))

நாலு ஓட்டு (உனக்குதான்) போட்டுக்கிறேன்..இதை மொகமூடி பதிவுலையும் சொன்ன அனானி :)

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்..
டாபிகலா எழுதினா உப்புமா போட்டான்னு சொல்ல வேண்டியது, லேட்டா போட்டா "அமுங்கற நேரத்துலே போட்டியா"ன்னு கேக்க வேண்டியது - உங்க கிட்டே நல்ல பேரு வாங்கவே முடியாதா? அருமையா எழுதறதாச் சொன்னதுக்கு மட்டும் நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க சுப்பையா சார்.
//தொடர்ந்து 5 நகைச்சுவைப் பதிவுகளைப்
பத்து தினங்களுக்குள் போடும்படி இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது! //

யார் தப்புக்கு யார் சார் தண்டனை அனுபவிக்கறது?;-)

பினாத்தல் சுரேஷ் said...

அனானி நம் 1:

தாத்தா பண்ண தப்பு ரைட்டெல்லாம் பத்தி நான் ஜோ பதிவிலே என் கருத்தை எழுதிட்டேன். இது ஒரு நகைச்சுவை முயற்சி மட்டுமே. அதே போல, எப்பவும் யாருக்கும் அட்வைஸ் குடுக்கற ஆள் நானில்லை - வேலைக்கு ஆவறதோ ஆவாததோ!

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க டாக்டர்.

பின்னே, சரத்குமார் ஆதரவாளர்களா இண்டிபிளாக்கீஸ்லே ஓட்டுப்போடப் போறாங்க? யோசிக்கவாணாம்?

பினாத்தல் சுரேஷ் said...

தேவ்,

இந்தப்பதிவுலே முதல் டிக்கட் கிடையாது, ஆனா ரிஸர்வேஷன் லிஸ்ட்லே முதல் பேரு உங்களோடதுதான்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி லொடுக்கு.. மேட்டர் அடங்கின பிறகுதான் நிதானமா ஆராய முடியும்.

பினாத்தல் சுரேஷ் said...

ஓட்டுப் போட்டவன்,

நன்றி. அவ்ளோதான் கமிஷன். (பொதுவுலேயா கேக்கறது?)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தருமி!

பினாத்தல் சுரேஷ் said...

கருத்துக் கூற விரும்பாதவன்,

உங்கள் கருத்து மிகவும் சீரிய கருத்து, அதை நான் ஊகித்து அறிந்துகொண்டேன்.

பினாத்தல் சுரேஷ் said...

லியோ,

அவர் கோபிச்சுக்க எல்லாம் மாட்டார். மேலும், இது அவர் வலைப்பதிவுகளை மட்டுமே கிண்டல் அடிப்பதால் தனிநபர் தாக்குதல் ஆகாது என்றே நினைக்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

சர்வேசா !

நன்றி

நன்றி

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சுந்தர்!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபி

//கதை மட்டும் முக்கியமில்லைங்க... படத்தை சரியான சமயத்துல ரிலீஸ் பண்ணனும்.
//

நூத்துலே ஒரு வார்த்தை!

கதிர் said...

நல்ல வேள வீ.பா கட்டபொம்மன் வசனம் சிக்கல, சிக்கிருந்தா இன்னும் காமெடியா இருந்திருக்கும். :))

நான் எதுவும் ஐடியா குடுக்கவில்லை.
சும்மா ஒரு காமெடிக்கு சொன்னேங்க.

வெயிட்டிங் பார் நாளைக்கு போட போற போஸ்ட்!

பினாத்தல் சுரேஷ் said...

கவி மடத்தலைவா,

உம்ம கொளுத்திப்போடல் பத்தவேயில்லையே! என் ரசிகர்களை ஏமாற்ற முடியாதுன்னு இப்பவாவது புரிஞ்சிகிறீங்களா

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அபி அப்பா.. ஓட்டுகளுக்கும்:-)

பினாத்தல் சுரேஷ் said...

ஜெஸிலா,

ஓஸியில உங்ககிட்ட யாரு தருவாங்க இந்த டிவிடிய? ஓட்டுப்போட்ட மட்டும்தான் ஓஸி.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அனானி (#2)

4 ஓட்டா? நிம்ப நன்றி.

குழலி / Kuzhali said...

ரீமேக் நல்லா இருக்கு....

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி..

வீ பா கட்டபொம்மன் ரீமேக் பண்ணனும்னு நேரடியாக் கேட்டா செய்ய மாட்டேனா என்ன?

சரி போன்லே யாரைக் கலாய்க்கலாம்னு ஐடியா கொடுங்க ;-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குழலி.

ரொம்ப நாளைக்கப்பறம் நம்ம பக்கம் எல்லாம் வரீங்க

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

:-))))

///
கதை மட்டும் முக்கியமில்லைங்க... படத்தை சரியான சமயத்துல ரிலீஸ் பண்ணனும்.
///

:-00000000000

ஜோ/Joe said...

//simlply superb//
ரிப்பீட்டே..

Anonymous said...

All is fair in love, war and
parody.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி செந்தில் குமரன், ரிலீஸ் நேரம் ரொம்ப முக்கியம்தான்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜோ.

நன்றி அனானி. ஆனால் நான் ALL is fair என்று எடுத்துக்கொள்வதில்லை. ஒரு லிமிட் வைத்திருக்கிறேன், அதற்குள் மட்டும்தான் விளையாடுவேன் :-)

ILA (a) இளா said...

கலக்கல் ரீமேக்.அப்படியே வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா, விஜயாகாந்த், வடிவேலுன்னு போட்டுத்தாக்குங்க சாரே

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி இளா..

போட்டுட்டா போகுது

குமரன் (Kumaran) said...

இந்த ரீமேக் நல்லா இருக்கு!

இலவசக்கொத்தனார் said...

பெனாத்தலு, இப்பமாவது புரிஞ்சுக்கிட்டீரா? மக்களுக்குப் பழக்கமான விஷயங்கள் பத்திப் பேசினா அவங்க தானா வந்து கருத்துச் சொல்லுவாங்க.

அதுக்காக வெறும் டோண்டு சார் மேட்டரை வெச்சே பதிவு போடுங்கன்னு சொல்ல வரலை!! :))

இலவசக்கொத்தனார் said...

அது சரி, நார்மலா இந்த மாதிரி தனித் தனியா பதில் சொல்ல மாட்டீரே? நம்ம வியாதி உமக்கும் தொத்திக்கிடுச்சா?

இலவசக்கொத்தனார் said...

ஆஹா!! இதுலையும் நான் தான் 50 அடிச்சேனா!! :))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குமரன்.

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார், என்ன சரியான மூட்லே இருக்கீரோ? டிப்பு எல்லாம் எடுத்து விடறீரு..

மக்களுக்கு தெரிஞ்சது, எனக்கும் தெரிஞ்சதுன்னு பாத்தா இந்த மாதிரி ரெண்டு மூணு மேட்டர்தானே தேறும்?

50க்கு நன்றி:-)

 

blogger templates | Make Money Online