Feb 18, 2007

பினாத்தல் ரீமேக் திரைப்படங்கள் (2) - திருவிளையாடல் (20 Feb 07)

பினாத்தல் புரடக்ஷன்ஸ் பெருமையுடன் வழங்கும்

வலைப்பூ ரீமேக் கிரியேஷன்ஸாரின்

திருவிளையாடல்


தண்டோரா:

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி, நல்ல வலைப்பூ எழுதுவோர்க்கு நல்ல
வாய்ப்பு. தமிழ் வலைப்பூக்களில் உப்புமா பதிவு எழுதி, மக்களின்
சந்தேகத்தைத் தீர்க்கும் பிளாக்கருக்கு ஆயிரம் ஹிட் பரிசு.

புதுப்பதிவர் - தண்டோரா, பரிசுத்தொகை எவ்வளவு?

தண்டோரா - ஆயிரம் ஹிட்

புது: ஐயோ ஐயோ, ஒண்ணா ரெண்டா, ஆயிரம் ஹிட்டாச்சே! மூணுநாளாச்சு பதிவு போட்டு இன்னும் 30 பேர் கூட பாக்கலியே.. ஆயிரம் ஹிட்டாச்சே!

விக்கிப்பசங்க: பதிவரே

புது: யாரு

வி: அழைத்தது நான் தான்.

பு: யாருங்க நீங்க, ஏன் அழைச்சீங்க?

வி: அறிவியல், உப்புமா அனைத்தும் கூட்டி, சுந்தரத் தமிழிலே பதிவெழுதி,
விக்கிப்பசங்களில் கூட்டாளியான பதிவர் நான்.

பு: அய்யோ தண்டோரா போட்டதை நீங்களும் கேட்டாச்சா? என் வயத்துலே
அடிக்கறதுக்குன்னே வந்திருக்கீங்க அப்போ!

வி: மக்களின் சந்தேகத்தைத் தீர்க்கும் பதிவுனக்கு கிடைத்துவிட்டால்,
ஆயிரம் ஹிட் உனக்குதானே!

பு: ஆமா, ஆயிரம் ஹிட்டாச்சே.. முதல்லே என் பிரண்டுங்களை பாக்கவைக்கணூம்.

வி: கவலைப்படாதே, அந்தப்பதிவை நானுனக்குத் தருகிறேன்.

பு: என்னது? நான் பாக்கறதுக்குக் கொஞ்சம் சுமாரா எழுதறவன் மாதிரிதான்
இருப்பேன், என் திறமையப்பத்தி உனக்கு தெரியாது.

வி: என் திறமை மேல் உனக்குச் சந்தேகம் இருந்தால், என்னைப் பரீட்சித்துப்
பாரேன் - உனக்குத் திறமை இருந்தால்?

பு: என்னது, என்கிட்டே என்கிட்டேயே மோதப்பாக்கறியா? நான் எழுதவந்ததுதான் புதுசு. ஆனா ரொம்பநாளா படிச்சுகிட்டிருக்கேன்..

வி: கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?

பு: நானே கேட்கிறேன், எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும்.

பு: பிரிக்க முடியாதது என்னவோ?
வி: வலைப்பூவும் அரசியலும்

பு: பிரியக்கூடாதது?
வி: வலைப்பூவும் பொழுதுபோக்கும்

பு: சேர்ந்தே இருப்பது?
வி:கொத்தனாரும் பின்னூட்டமும்

பு: சேராதிருப்பது?
வி: கருப்பும் சிகப்பும்

பு: சொல்லக்கூடாதது?
வி: எத்தனை பெயரில் எழுதுகிறோம் என்று

பு: சொல்லக்கூடியது
வி: எதிராளி ஐ பி

பு: பார்க்கக் கூடாதது?
வி: சாகரன் மாதிரி இழப்புகள்

பு: பார்க்கக்கூடியது?
வி: படம் காட்டும் பதிவுகள்

பு: பதிவில் சிறந்தது?
வி: நகைச்சுவைப் பதிவுகள்

பு: நகைச்சுவை என்பது?
வி: தனிநபர் தாக்குதல் இல்லாதது

பு: தாக்குதல் என்பது?
வி: போலி செய்வது.

பு:போலிக்கு?
வி:டோண்டு

பு:வேலைக்கு
வி:ரவி

பு: காமெடிக்கு?
வி: வ வா ச

பு: கலாய்க்க?
வி: நாமக்கல்

பு: கலாய்க்கப்பட?
வி: பாலபாரதி

பு; உப்புமாவுக்கு?
வி: பினாத்தல்

பு: ஆனைக்கு?
வி: பொன்ஸ்

பு: பூனைக்கு?
வி: துளசி அக்கா

பு: அய்யா.. ஆளை விடு.. நீர் பதிவர்!

ஆதரவு தொடர்ந்தால் இன்னும் ரெண்டு ஐடியா இருக்கு.. தயாரிப்பாளர்களே வாருங்கள், ஆதரவை அள்ளித் தாருங்கள்!

------

இண்டிப்ளாக்கீஸில் எனக்கு வோட்டளித்துவிட்டீர்களா?
பதில் தெரியாத கேள்விகளுக்கு no answer என்று தெரிவு செய்யலாம். நன்றி
Please Click on the Link below to start the voting process.

http://poll.indibloggies.org/index.php?sid=1

52 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ஓட்டளித்துவிட்டேன்.

செந்தழல் ரவி said...

சூப்பர்...:))) இண்ணும் ரெண்டு கேள்வி பதில் சேர்த்திருக்கலாமே :)))

SurveySan said...

ஹ்ம். கேள்வி பதில்ல என் பேர் வரல.. சோ, ஆதரவு தரணுமான்னு யோசிக்க வைத்த பதிவு.

ஆனா, நான் வோட்டு நேத்தே போட்டுட்டேனே :)

சிறில் அலெக்ஸ் said...

பின்னிப் பெடலெடுக்கிறீங்க.
எலக்சன் நேரத்துல நம்ம தலிவர்களும் தொண்டர்களும் சும்மா சுறு சுறுன்னு சொழல்றமாதிரி சொழலுறீங்க.

தொடர்ந்து கலக்குங்க.

:)))

லொடுக்கு said...

அப்போ ஒரு முடிவோடதான் இறங்கியிருக்கீங்க! நல்லாருங்க சார்!!

SP.VR.சுப்பையா said...

///பு: ஆனைக்கு?
வி: பொன்ஸ்

பு: பூனைக்கு?
வி: துளசி அக்கா////

ithuthaan muththaayppu!:-))))

தேவ் | Dev said...

பினாத்தல் ரீ மேக் படங்களின் வினியோக உரிமை எனக்கே எனக்கு கிடைக்க என்னங்கப் பண்ணனும்.. நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் படமெல்லாம் ரீ மேக் பண்ண மாட்டீங்களா...?

துளசி கோபால் said...

'கேன்வசிங்' எப்படியெல்லாம் நடக்குதுன்னு பார்த்து வாயடைச்சுப் போயிருக்கேன்:-))))

அபி அப்பா said...

பின்னி பெடலெடுக்கறதுன்னு முடிவெடுத்துட்டீங்க.. ஒன்னியும் செய்ய முடியாது. வந்து குமிய போவுதுபாருங்க. கும்மி குரூப் நேத்திக்கு நைட் ட்யூட்டி "தம்பி"கிட்ட பாத்துட்டு தூங்கிகிட்டு இருக்கு.(தம்பி குவாட்டரும் கோழி பிரியானியும், கைல 50 திர்காமும் கொடுத்ததா ஒரு செவிவழி சேதி) இப்ப கிளம்பிடும் எல்லாம். நேரா உங்க கிட்டதான் வரும்னு நெனக்கிறேன்!!!

கோபி(Gopi) said...

//பு: காமெடிக்கு?
வி: வ வா ச//

:-)

//பு: பார்க்கக் கூடாதது?
வி: சாகரன் மாதிரி இழப்புகள்//

:-(

இப்படி ஒவ்வொரு கேள்வி பதிலுக்கும் உணர்ச்சி காட்டினா பின்னூட்டம் நீளமாயிடும்.

உங்க கிட்ட சிரிப்பு மட்டும் எதிர்பார்த்து வந்தா நவரசமும் வசனமா தெறிக்குது... கலக்குங்க...

பொன்ஸ்~~Poorna said...

:)))

Hariharan # 26491540 said...

லட்டுக்குள்ள தங்க மோதிரம், குடம், திர்ஹாம்ஸ், ரூபாய் நோட்டுக்கட்டு இப்படி கிப்ட் எதும் தரலைன்னாலும் பினாத்தாலாருக்கு நம்ம ஓட்டு போட்டாச்சுங்க.

:-)) :-))இது பதிவுக்கு

துளசி கோபால் said...

லட்டுக்குள்ளெ குடம்..?
எப்படிப்பா....... எப்படி? :-)

Anonymous said...

அருமையோ அருமை !!!!!

Sundar -

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஓட்டளித்த அனானிமஸ்

பினாத்தல் சுரேஷ் said...

செந்தழல்,

நீங்களே பின்னூட்டத்திலே எழுதலாமே..

பினாத்தல் சுரேஷ் said...

சர்வேசன்,

நேற்றைய ஓட்டுக்கு நன்றி.

இதுக்கு இன்னிக்கு ஒரு ஓட்டு போட முடியுமா பாருங்க ;-)

தேர்தலுக்கு -
சர்வேசன்!

சுரேஷ் (penathal Suresh) said...

சிறில் - மறு வாக்குப்பதிவுன்னாலே மந்தமா உக்கார முடியாத காலமுங்க இது :-)

ஒரிஜினலுக்கு சும்மா உக்காந்துர முடியுமா சொல்லுங்க

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி லொடுக்கு. கார் டேமேஜுக்கு போலீஸ் சர்டிபிகேட் வாங்கிட்டீங்களா? எவ்வளவு நேரம் ஆச்சு போலீஸ் வர? (எனக்கு ஒரு முறை 7 மணிநேரம் ஆச்சு:-()

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி sp.vr. சுப்பையா.

பினாத்தல் சுரேஷ் said...

தேவ்.. சூப்பர் ஐடியா கொடுத்தீங்க, அடுத்த பத்து நிமிஷத்துலேயே தலைவர் பட ரீமேக் போஸ்ட் தயார் பண்ணிட்டமில்ல!

பினாத்தல் சுரேஷ் said...

துளசி அக்கா.. எனக்கெல்லாம் கேன்வாஸிங் இல்லாம ஓட்டு விழும்னு நெனைக்கறீங்க?

காலத்தின் கட்டாயம் அக்கா@!

பினாத்தல் சுரேஷ் said...

அபி அப்பா,

நல்ல வார்த்தை சொன்னீங்க.. ஆனா யாரையும் காணோமே:-(

பினாத்தல் சுரேஷ் said...

கோபி,

நன்றி. பார்க்கக் கூடாத ஒன்றை இப்போதுதான் பார்த்ததாலேயோ என்னவோ நகைச்சுவை புல் ப்ளோவில் வருவதில்லை:-(

பினாத்தல் சுரேஷ் said...

என்ன பொன்ஸ் அக்கா, சிம்பிள் ஸ்மைல்?

பினாத்தல் சுரேஷ் said...

ஹரிஹரன், ஓட்டுக்கு நன்றி.

வேற எதுவும் எதிர்பார்த்துட்டாலும்....

இங்கே எதுவும் பேறாது.

பினாத்தல் சுரேஷ் said...

துளசி அக்கா.. லட்டுக்குள்ளே பூந்தியே வைக்க வழியில்ல, மோதிரமாம், குடமாம்.. இந்த வாக்காளர்களுக்கு ஆசையப் பாத்தீங்களா?

நன்றி சுந்தர்.

Anonymous said...

தலை

கலக்கிட்டீங்க...
இதை அப்படியே ப்ளாஷ் பாக்குல ஓட்டிப்பாருங்க....
(வலையுலக )தருமி ஐயாவுக்கு பதிவு எழுதிக்குடுத்தது அப்படியே பொருந்துது :)

சும்மா டமாஸுக்கு கலாய்ச்சேன் :) நீங்களும் ப்ரொபஸர் ஐயாவும் கோவிக்கக் கூடாது :)

அதே 4 ஓட்டு அனானி

பினாத்தல் சுரேஷ் said...

நாலு ஓட்டு அனானி..

எங்கே இது ரெண்டும் பொருந்துதுன்னு சொல்ல வரீங்க? தருமிக்கு நான் கொடுத்தது மக்கள் சந்தேகத்தைத் தீர்க்கும் பதிவா என்ன?

நாலு ஓட்டு அனானி said...

சந்தேகத்தை தீத்துச்சோ இல்லியோ...தருமிக்கு மண்டபத்துல(ஆயிரம் ஹிட்) பதிவு குடுத்தீங்களா இல்லியா :)

இலவசக்கொத்தனார் said...

ஆமாம். மேட்டர் சாதாரண உப்புமாப் பதிவு மாதிரித் தெரியலையே. ஏகப்பட்ட உள்குத்து இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்க் வருதே. இன்னும் ரெண்டு முறை படித்துவிட்டு வருகிறேன். :))

பினாத்தல் சுரேஷ் said...

ஆயிரம் ஹிட் எப்படியும் வந்திருக்கும் சாமி! என்னால குறையாம இருந்தா சரி:-)

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம்.. காலையிலே இருந்து காணாமப் போனவர் வர நேரத்திலே குண்டோட வாரீரே..

என்ன உள்குத்து? கண்டுபிடிப்பவர்களுக்கு 100 ஹிட் இனாம்.

இலவசக்கொத்தனார் said...

100 ஹிட் இனாமுன்னு சொன்ன பின்னாடியுமா ஆட்கள் யாரும் வரலை? கொஞ்சம் ஜாஸ்தி பண்ணுங்க பெனாத்தலாரே. அப்ப வராங்களான்னு பார்ப்போம்.

G.Ragavan said...

அவையில ஒங்க பதிவக் குற்றம்னு சொல்லீட்டாங்க. :-)

மனதின் ஓசை said...

:-)
என்னாத்துக்கு ஓட்டுன்னு தெரியாட்டியும் இந்த பதிவுக்காகவே போடலாம்னு போனா இப்படி வருது.. என்ன பன்ன?
:-(
This survey is no longer available.

Please contact Debashish (Do not reply) (contact@indibloggies.org) for further assistance

தருமி said...

//தலைவர் பட ரீமேக் // எப்போ?
எப்போ..? சீக்கிரமுங்க...

ஓட்டு யாருக்குமே போட முடியலைங்களே..?

தம்பி said...

கலக்கல் கேள்வி பதில் பெனாத்தலாரே!

எங்களின் ஆதரவு கண்டிப்பா உண்டு.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க விஜய டி.ராஜேந்தர் டைப்புல ஒரு பதிவு போடுங்க.

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்,

அவசரப்பட்டு அதிகப்படுத்தறதா இல்லை. வெயிட் பண்ணிப் பாக்கலாம்

பினாத்தல் சுரேஷ் said...

ராகவன்..

எவன் அவன் என் பாட்டில் குறை கண்டவன்? கூறும் கூறும் கூறிப்பாரும்.

பினாத்தல் சுரேஷ் said...

மனதின் ஓசை, ஒரு நாள் லேட்டு:-(((((((

பினாத்தல் சுரேஷ் said...

தருமி,

அதான் இதோடவே பாட்சா ரீமேக் கொடுத்துட்டேனே..

தலைவர்னு நீங்க எம் ஜி ஆரைச் சொல்லலியே:-)

நீங்களும் ஒரு நாள் லேட்டு.

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி,

டி ஆர் தானே,

போட்டா போச்சு.

தம்பி said...

//ஆதரவு தொடர்ந்தால் இன்னும் ரெண்டு ஐடியா இருக்கு.. தயாரிப்பாளர்களே வாருங்கள், ஆதரவை அள்ளித் தாருங்கள்//

தயாரிப்பாளர் நீங்கதான். நாங்க எல்லாம் ஆடியன்ஸ்.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க ஆடியன்ஸ்..

நல்லா இருக்கீங்களா ஆடியன்ஸ் (இந்தியன் கவுண்டமணி ஸ்டைல்லே படியுங்க:-))

குமரன் (Kumaran) said...

இந்த இடுகைக்குப் பின்னூட்டம் போட வேண்டாம்ன்னு பாத்தேன். பின்னே... தமிழ்மணத்தைக் கனவுல பாத்ததை சொன்ன இடுகையில தான் என்னை மறந்துட்டீங்கன்னா இந்த இடுகையிலுமா? சரி போகட்டும் நம்ம பெனாத்தலாரு சும்மா பெனாத்திக்கிட்டே இருக்கார். பின்னூட்டமும் போட்டுறலாம்ன்னு தான் இப்ப போடறேன்.

கவனிக்கவும்: பின்னூட்டமும். உறுதியளித்ததை அனுப்பி வைக்கவும். ஆட்டோ அல்ல.

இலவசக்கொத்தனார் said...

அப்படி என்னய்யா உமக்கும் குமரனுக்கும் சண்டை? அவரை ஒரு பதிவுல கூட கண்டுக்க மாட்டேன்னு அடம் புடிக்கிறயே?!

இலவசக்கொத்தனார் said...

அதான் ஓட்டெடுப்பு முடிஞ்சு போச்சே இன்னும் என்ன இந்த பதிவை உயிரோட வெச்சுக்கிட்டு?

இலவசக்கொத்தனார் said...

//கவனிக்கவும்: பின்னூட்டமும். உறுதியளித்ததை அனுப்பி வைக்கவும். ஆட்டோ அல்ல.//

குமரன் எதுக்கும் இவரு கிட்ட ஜாக்கிரதையாவே இருந்துக்குங்க. ஆளு ஆட்டோ அனுப்பற லெவல் இல்லை. ரோடு ரோலரே அனுப்புவாரு! :)

இலவசக்கொத்தனார் said...

50 வந்திருச்சா? வாழ்த்துக்கள் வாத்தியாரே!

பினாத்தல் சுரேஷ் said...

குமரன்,

மறுபடியும் மன்னாப்பு கேட்டுகிறேன் வாத்தியார்! சொல்லுக்கு..ன்னு கேக்காம சொல்-ஒரு-சொல்லுக்குன்னு ஒரு கேள்வி கூட்டியிருந்திருக்கலாம்.. எல்லாம் எனக்கு லேட் பிக்கப்
:-(

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்..

நாலு நன்றி சொல்லலாம்னு பாத்தா டேமேஜிங்கா இல்ல எழுதி இருக்கீங்க? ரோடு ரோலர் அனுப்பற ஆளா நான்? இந்தப் பாசக்காரனைப் போய் மோசக்காரன்னு:-((((

 

blogger templates | Make Money Online