Feb 6, 2007

டோண்டுவுக்கு சில அறிவுரைகள் (06 Feb 2007)

வயது குறைவாயிற்றே என்று கொஞ்ச நேரம் யோசித்தேன். ஆனால், கால் நூற்றாண்டுக்கு முன்பே பிறந்த நான், சமீபத்தில் பிறந்த டோண்டுவுக்கு அறிவுரை சொல்வது தவறல்ல என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்னும் சொல்லப்போனால், இது டோண்டுவுக்கான அறிவுரை மட்டுமல்ல, பிரச்சினையில் சம்மந்தப்பட்ட, படாத அனைவருக்குமான திறந்த அறிவுரைகள். இந்த அறிவுரைகளைச் சொல்வதும் நானல்ல, நம் பாட்டி:-)

1.அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

ஊருக்குச் சென்றிருந்ததால் ஒரு சிறு இடைவெளி விழுந்துவிட்டு, மேட்டர் இல்லாமல் தலையைச் சொறிந்துகொண்டிருந்த நேரத்தில் இந்த உப்புமாவுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.

29 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

திரும்ப வந்தாச்சா? தனியாவா தங்கமணி சகிதமா? உப்புமா பதிவைப் பார்த்தா தனியா வந்த மாதிரிதான் தெரியுது!!

சிறில் அலெக்ஸ் said...

அப்படியே ஒரு விளக்கத்தையும் தந்திருக்கலாம்ல..

மனுசன் எவ்ளோ நல்லவரு இவ்வளவு அடியையும் தாங்கிக்கிறாரே.

சிறில் அலெக்ஸ் said...

//உப்புமா பதிவைப் பார்த்தா தனியா வந்த மாதிரிதான் தெரியுது!! //

நானும் தங்கமணியில்லாமத்தான் இருக்கேன்..

உப்புமா கிண்டிவைக்கவா?

ச.சங்கர் said...

இத்தோடா.....அவ்வையார் தாத்தா

மோகினிகள் கழகம் said...

வந்துட்டோம்!

ச்சே! இதென்ன பதிவு!

சும்மா கும்மியடிக்க எதுனா பதிவு போடு நைனா!

நாங்க அடிக்கடி விரும்ப வரும் இடங்களில் இதுவும் ஒண்ணு!

Anonymous said...

Plese teach Rhym to our DONDU MAMA.
He is very Nauty.

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம் அண்ணா, வந்துட்டோமில்ல!

உப்புமா சங்கம் எப்ப ஆரம்பிக்கலாம் சொல்லுங்க:-)

கொள்ளிவாய்ப் பிசாசு said...

சங்கத்துல நாங்களும் சேரலாமா?

பினாத்தல் சுரேஷ் said...

சிறில்,

விளக்கம் எதுக்கு? ஆத்திச்சூடிக்கா? நான் எதையாவது எழுதிவைக்க, வரிகளுக்கிடையில் படித்து யாராச்சும் உள்குத்து கண்டுபிடிச்சுட்டா?

//மனுசன் எவ்ளோ நல்லவரு இவ்வளவு அடியையும் தாங்கிக்கிறாரே.
//
அதானே!

இலவசம், சிறில்.. தங்கமணி வெரி மச் அரவுண்டு:-( சத்தமாப் பேசாதீங்க!

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க ச சங்கர். தாத்தான்னு சொன்னதுக்கு மகிழ்ச்சி அடையலாமா, மானநஷ்ட வழக்கு போடலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன்:-!

பினாத்தல் சுரேஷ் said...

மோகினிகள் கழகம் -- வாங்க!

//ச்சே! இதென்ன பதிவு!

சும்மா கும்மியடிக்க எதுனா பதிவு போடு நைனா! //

தோடா! என்னவோ பதிவைப் படிச்சு, அந்தக்கருத்துக்கு ஏத்தமாதிரி மட்டும்தான் கும்மியடிக்கறா மாதிரி என்னா பில்ட்-அப்பு!

பினாத்தல் சுரேஷ் said...

அனானி,

நாட்டின்னு இங்க்கிலீஷ்லே எழுதினீங்க, பப்ளிஷ் பண்ணினேன். தமிழ்லே எழுதி, நீ மட்டும் என்ன கம்மியா?ன்னு யாராவது கேட்டா உள்குத்து ஆயிடும் இல்ல?;-)

பினாத்தல் சுரேஷ் said...

கொள்ளிவாய்ப்பிசாசு.. எப்பயிருந்து இவ்ளோ பதவிசா ஆனீங்க?

கொள்ளிவாய்ப்பிசாசு said...

//கொள்ளிவாய்ப்பிசாசு.. எப்பயிருந்து இவ்ளோ பதவிசா ஆனீங்க?
//

இன்னைல இருந்துதான்!

மோகினிகள் கழகம் said...

//என்னவோ பதிவைப் படிச்சு, அந்தக்கருத்துக்கு ஏத்தமாதிரி மட்டும்தான் கும்மியடிக்கறா மாதிரி என்னா பில்ட்-அப்பு!
//

ஹிஹி

பினாத்தல் சுரேஷ் said...

மோகினீஸ்

ஹிஹிக்கு ஒரு ஹீ ஹீ

SP.VR.சுப்பையா said...

வெறும் உப்புமா மட்டும்தானா?
சட்னி கிடையாதா?

கோபி(Gopi) said...

ஐயா,

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்!

8. ஏற்பது இகழ்ச்சி. - இதை மதிச்சி யாருமே இன்னொருத்தர் குடுக்கறத வாங்கலைன்னா...

4. ஈவது விலக்கேல்.
9. ஐயம் இட்டு உண்.

இதையெல்லாம் எப்படி செய்ய முடியும்?

ரொம்ப நாளாவே எனக்கு ஆத்திச்சூடியில இந்த சந்தேகம் இருக்கு.

பினாத்தல் சுரேஷ் said...

sp.vr சுப்பையா.. பண்றதே ஒரு அவசர அடி வேலை. அப்ப உப்புமா மட்டும்தான் முடியும். சட்னி சாம்பார் எல்லாம் முடிஞ்சா பொறுமையா வேற எதாவது செய்ய மாட்டோமா?

பினாத்தல் சுரேஷ் said...

கோபி..

உங்கள் கேள்வி பொருள் நிறைந்தது, ஆக்கபூர்வமானது, அறிவாளிகளுக்கானது....

...எனவே....


இங்கே வேண்டாம் :-)

பெனாத்தாதவன் said...

//தாராளமாக இருங்கள். உங்கள் தயவெல்லாம் இனிமேல் தேவையில்லை.
அனானி ஆப்ஷன் திறந்தாயிற்று//
http://pithatralgal.blogspot.com/2007/02/187.html
இதுக்கு என்ன சொல்றீங்க? உங்கள் தயவெல்லாம் இனிமேல் தேவையில்லை ங்கரதுக்கு என்ன அர்த்தம்?
இதுக்கு மேல ஒரு அவமானம் தேவையா?நீங்க எல்லாம் போய் தூக்கு மாட்டிக்கலாம்.

பினாத்தல் சுரேஷ் said...

பெனாத்தாதவன்,

உண்மையைச் சொல்லப்போனா பிதற்றல்கள்லே நீங்க குறிப்பிட்டதைப் படிச்சதும் எனக்கும் கோபம்தான் வந்தது.(அதுக்காக நாந்தான் பெனாத்தாதவன்னு யாரும் சொல்லிடாதீங்க சாமிங்களா:-)) தயவு என்பது பின்னூட்டம் போடுவதா? அவருக்கு ஒரு பின்னூட்டத்தால் அவரின் நெருங்கிய நண்பன் தயவை எத்தனை முறை எல்லாரும் சம்பாதித்திருப்பார்கள்??????

ஆனால், இந்த சமாசாரம் ஏற்கனவே தவைக்கும் அதிகமாகப் பெரிதுபடுத்தப்பட்டதாக நான் கருதுவதால் எதிர்வினை ஆற்றாமல் விட்டுவிட்டேன்.

அபி அப்பா said...

என்ன பெனாத்தலாரே, ஆத்திசூடில்லாம் இன்னும் ஞாபகம் இருக்கா? டோண்டு மாமாவுக்காக படிச்சதா? என்னவோ போங்க இந்த வாரம் அவருக்காகன்னு ஆகிப்போச்சு.

பினாத்தல் சுரேஷ் said...

ஓரளவு ஞாபகம் இருந்தது.. எ-வுக்கு ஞாபகம் வரலை:-( நல்லவேளை, விக்கி புக்ஸ்லே இருந்தது:-)

உங்கள் நண்பன் said...

தங்களின் ஆத்திசூடி உப்புமா அருமை!


அன்புடன்...
சரவணன்.

தருமி said...

ஔவியம் பேசேல்... ????

அவ்வை சொன்னதை சொல்லிட்டா போதுமா..
அர்த்தம் சொல்லுங்க..

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சரவணன்.

நன்றி தருமி.. அர்த்தமா? அது நம்ம ஏரியா கிடையாதே:-(

சில அனானிகளின் கமெண்டுகளை நிராகரித்திருக்கிறேன். வழக்கமாகச் மொழிநடை மோசமாயிருந்தாலே ஒழிய, ரிஜக்ட் செய்யமாட்டேன், இந்தமுறை, பின்னூட்டங்கள் நாகரீகமாகவே இருந்தும், இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை இன்னும் அதிகப்படுத்திவிடுமோ என்ற பயத்தால் இப்படிச் செய்திருக்கிறேன், மேற்படி அனானிகள் மன்னிக்க!

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா. உங்கள் கேள்விக்குப் பதிலை இங்கே பாருங்கள்.

http://solorusol.blogspot.com/2006/07/blog-post.html

பினாத்தல் சுரேஷ் said...

குமரன்,

தாங்க்ஸ். இப்படி ஒரு ஆளைக் கூடவே வச்சுகிட்டாதான் ஆத்திச்சூடி கூட பேச முடியுது:-)

 

blogger templates | Make Money Online