Feb 20, 2007

ஒரு அவசர ரீமேக் படம் (20 Feb 07)

பினாத்தல் புரடக்ஷன்ஸ் பெருமையுடன் வழங்கும்

வலைப்பூ ரீமேக் கிரியேஷன்ஸாரின்

பாட்சா

பாடல்:

நான் பினாத்தல்காரன் பினாத்தல்காரன்
நாலும் தெரிஞ்ச பிஸிக்காரன்
தமிழ்மணத்துக் கூட்டுக்காரன்
Flash காட்டும் மூளைக்காரன்
கட் & பேஸ்ட் வேலைக்காரன்
சீனு காட்டும் சிரிப்புக்காரன்
உப்புமா போடும் உறவுக்காரன்
காமடிக்குச் சொந்தக்காரண்டா
நான் எப்பவுமே காமெடிக்குச் சொந்தக்காரண்டா..
நான் எப்பவுமே காமெடிக்குச் சொந்தக்காரண்டா..

ஆ ஹிட் என்னா ஹிட்டுதான்
திட்டு என்னா திட்டுதான்
ஆ ஹிட் என்னா ஹிட்டுதான்
திட்டு என்னா திட்டுதான்

அய்யா பிளாக்காரே.. ஜாலியா விடமாட்டேன்
கும்தலக்கடி கும்கா ஏ கும்தலக்கடி கும்கா
அய்யா பிளாக்காரே.. ஜாலியா விடமாட்டேன்
வேலையோ வெட்டிநிலையோ - பதிவு
போடாம விடமாட்டேன்..

மேட்டர் இல்லையின்னா உப்புமா
அதுவும் இல்லையின்னா மீள்பதிவு

நான் பீட்டாவுக்கு மாறிபுட்டேன் பாருங்க
என் போஸ்ட்டையெல்லாம் வகைபிரிச்சேன் பாருங்க!

இண்டிபிளாக்கீஸ் தேர்தல்
அட என்னைய நம்பி வருதாம்
நம்பி வந்து குத்து..
நல்ல போஸ்ட்டும் வரலாம்..

காமடிக்குச் சொந்தக்காரண்டா
நான் எப்பவுமே காமெடிக்குச் சொந்தக்காரண்டா..

ஊரு பெரிசாச்சு - பதிவரும் பெருத்தாச்சு
கும்தலக்கடி கும்கா ஏ கும்தலக்கடி கும்கா
ஊரு பெரிசாச்சு - பதிவரும் பெருத்தாச்சு

பின்னூட்டம் எதிர்பார்த்து பாதி வயசாச்சு..
மக்கள் பார்க்கவரும் வேளையிலே,
இருப்பேன் தமிழ்மணத்தின் மூலையிலே!

நான் ரீமேக்கெல்லாம் பண்ணியுனக்குத் தாரேம்பா
எனக்கு ஓட்டு ரெண்டு போட்டு நீயும் வாயேம்பா!

பொழைப்பில்லாத ஆளும் அட
பினாத்தல நம்பி வருவான்
ஒழுங்கான ஆளும்
உருப்படாம போவான்

காமடிக்குச் சொந்தக்காரண்டா
நான் எப்பவுமே காமெடிக்குச் சொந்தக்காரண்டா..

வசனம்:

டேய் டேய் டேய்... ஆண்டவன் கெட்டவங்களுக்கு பின்னூட்டமா அள்ளித் தருவான்.. ஆனா அத்தனையும் அனானியாவும் மொக்கையாவும் போவுண்டா

நல்லவங்களுக்கு.. ஆபீஸ்லே பிளாக்கரை பிளாக் பண்ணுவான்.. ஆனா பின்னூட்டமா கொட்டுண்டா!

ஐடியாவுக்கு நன்றி: சென்னைக்கச்சேரி தேவ்!


----

இண்டிப்ளாக்கீஸில் எனக்கு வோட்டளித்துவிட்டீர்களா?
பதில் தெரியாத கேள்விகளுக்கு no answer என்று தெரிவு செய்யலாம். நன்றி
Please Click on the Link below to start the voting process.

http://poll.indibloggies.org/index.php?sid=1

37 பின்னூட்டங்கள்:

அபி அப்பா said...

நா ஒன்னு போட்டா நூறு போட்ட மாதிரி!!!!!

கோபி(Gopi) said...

நான் ஒரு ஓட்டு போட்டா... நூறு ஓட்டு போட்ட மாதிரி!

:-)))))

Hariharan # 26491540 said...

//டேய் டேய் டேய்... ஆண்டவன் கெட்டவங்களுக்கு பின்னூட்டமா அள்ளித் தருவான்.. ஆனா அத்தனையும் அனானியாவும் மொக்கையாவும் போவுண்டா//

:-)) :-))
இந்த பஞ்ச் டயலாக் கேட்டு
பெஞ்சுல உக்கார்ந்திருக்கிற அனானிகள் நெஞ்சம் வெடிச்சு பஞ்சு பஞ்சா பறக்கப்போகிறது:-))

ஓட்டு போட்டாச்சுங்க.(உங்களுக்குத்தான்)

முத்துலெட்சுமி said...

\\டேய் டேய் டேய்... ஆண்டவன் கெட்டவங்களுக்கு பின்னூட்டமா அள்ளித் தருவான்.. ஆனா அத்தனையும் அனானியாவும் மொக்கையாவும் போவுண்டா

நல்லவங்களுக்கு.. ஆபீஸ்லே பிளாக்கரை பிளாக் பண்ணுவான்.. ஆனா பின்னூட்டமா கொட்டுண்டா!//

ஆஹா ,என்ன ஒரு பன்ச் வசனம்.

அபி அப்பா said...

சந்தடிசாக்குல ஏகப்பட்ட டா டா டட்டடா. ஐ ஜாலி இன்னக்கி பெனாத்தலரு பிஞ்சாரு..

சுரேஷ் (penathal Suresh) said...

அபி அப்பா,

கோபி!

ரெண்டு பேரும் தப்பா ஒரே டயலாக்கை உல்டா பண்ணி இருக்கீங்க ;-)

சரியான உல்டா - நீங்க நூறு ஓட்டு போட்டாதான் ஒரு ஓட்டா கணக்காகும்.

பினாத்தல் சுரேஷ் said...

ஹரிஹரன் நன்றி.

தெரியாத்தனமாச் சொல்றேன் - பெஞ்சுலே ஒக்காந்துருக்கற அனானிகள் யாரும் இருக்காங்களான்னு எனக்கு தெரியாது..

ரொம்ப கேர்புல்லா இருக்க வேண்டிய காலம் இது:-)

பினாத்தல் சுரேஷ் said...

முத்துலட்சுமி (லட்சுமி) (எதாவது ஒண்ணு போதாதா:-)), நன்றி. ஓட்டுப் போட்டுட்டீங்களா?

பினாத்தல் சுரேஷ் said...

அபி அப்பா,

இன்று நீர் எண்ணி வந்த காரியம் இனிதாக முடிந்ததல்லவா?

அந்த டா எல்லாம் அன்பு டா-ங்க!

Anonymous said...

னான் பதிவர் இல்லை .அனலும் படிப்பேன் என்னால் ஓட்டு பொடமுடியும?

பினாத்தல் சுரேஷ் said...

நர்மதா,

சுலபம்தான்.

மேலே உள்ள சுட்டியைக் கிளிக்குங்கள்
அங்கே பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுங்கள், (வலைப்பதிவு முகவரி கட்டாயமில்லை), மின்னஞ்சலைத் திறங்கள், தேபஷிஷ் என்ற முகவரியிலிருந்து ஒரு அஞ்சல் இருக்கும் (சில அஞ்சல் சேவைகளில் பல்க் / ஸ்பாம் போல்டரிலும போயிருக்கலாம்). அதில் உள்ள சுட்டியைத் தட்டினால் சர்வே ஆரம்பிக்கும், இரண்டாம் பக்கத்தில் தமிழ் இண்டிக் பிளாக் என்ற பிரிவில் பினாத்தல் இருக்கும்:-)

வெங்கட்ராமன் said...

Super Post,

/////////////////
நல்லவங்களுக்கு.. ஆபீஸ்லே பிளாக்கரை பிளாக் பண்ணுவான்.. ஆனா பின்னூட்டமா கொட்டுண்டா!
////////////////

Kotta maattenguthunga . . . . ?

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க வெங்கட்ராமன். நன்றீ.

எங்கே கொட்ட மாட்டேங்குதுன்னு சொல்லலியே.. எனக்கு ஸ்டாண்டர்டே இவ்வளவுதான். போதுமென்ற மனதோடு வாழ்பவன் நான்:-))

Anonymous said...

இது நம்ம "ரீமேக்" ரவி, அட அதாங்க நம்ம ஜெயம் ரவிக்கு தெரியுமா?

இலவசக்கொத்தனார் said...

உள்ளேன் ஐயா. நான் ஒண்ணு போட்டா 100 போட்டா மாதிரின்னு சொல்ல வந்தா அதை அபி அப்பா சொல்லிட்டாரு.

அதனால இந்த ஒண்ணோட நிறுத்தாம மீண்டும் வருவேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.

Anonymous said...

நான் ஓட்டு போட்டாச்சி. ஆனா விரலில் மை வைக்கவே இல்லை.அதனால் இது செல்லாத ஓட்டாயிடுமோன்னு பயமாயிருக்கு

பினாத்தல் சுரேஷ் said...

அனானி, அப்படியே ஒரு ஹீரோ பிடிச்சிட்டா கலக்கிடலாம்.. தேடுங்க. ஜெயம் ரவி வேணாம். இதெல்லாம் ஒரிஜினல் தமிழ்ப்படம்;-)

Anonymous said...

தல,

கலக்கல்தான் :)

ஆனா எப்பிடியிருந்த நீ இப்படி ஆயிட்டியே ?

ஒரிஜினிலா யோசிச்சு அவள் விகடன் வரைக்கும் படம் காட்டுன நீ இப்ப ரீமேக்கா அடிச்சு வுடுரியே...எதுனா பெரிய பட்ஜட் படம் பினான்சியலா ஊத்திக்கிச்சா
(அதாவது நல்ல பதிவுக்கு பின்னூட்டமே வரலையா)

நாலு ஓட்டு அனானி

பினாத்தல் சுரேஷ் said...

நர்மதா,

என் பதிவைப் படியுங்க.. அதான் மை:-)

பினாத்தல் சுரேஷ் said...

அனானி,

அவன் விகடன் ஒரிஜினலா? அதுவும் உல்டாதானே வாத்தியார்!

நம்ம ஸ்டைலே உல்டாதானே:-)

எந்த நல்ல பதிவு போட்டேன் - அது ஊத்திக்கொள்வதற்கு!

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்..

வாங்க வாங்க வந்துகிட்டே இருங்க

நாலு ஓட்டு அனானி said...

என் முழுப் பெயரையும்??? :) குறிப்பிடாமல் அனானி என்று மரியாதைக் குறைவாக விளித்த பினாத்தல் சுரேஷை வன்மையாக கண்டிக்கிறேன்...இதே கண்டனம் பெரிய பின்னூட்டமாக போய் விட்டதால் இதைத் தனிப் பதிவாகவும் போட முடிவு செய்துள்ளேன்.இதை ஒரிஜினல் நாலு ஓட்டு அனானிதான் போட்டானா என்று அந்தப் பதிவில் போய் தெரிந்து கொள்ளவும்.இப்படி பெயரை சுருக்கி அழைப்பது பற்றி அடுத்த வலைப்பதிவர் கூட்டத்திலும் விவாதிப்பதாக இருக்கிறேன்.எனக்கு தெரிந்த அனைத்து வலைப் பதிவர்களுக்கும் தனி மயில் அனுப்பியோ அல்லது ஒரு குருவி செய்தி அனுப்பியோ கண்டித்து ஒரு பின்னூட்டமும் அப்படியே எதிர் முகாமுக்கு ஒரு இண்டி ப்ளாகீஸ் ஓட்டும் போடச்சொல்லி வற்புறுத்துவேன் என்று இங்கு தெரியப்படுத்தக் கடமைப்பட்டவனாகிறேன்.இப்படி என்னை சிறு பேரழைத்த பெனாத்தல் சுரேஷின் ஐ பி அட்ரஸ்,ஒரிஜினல் அட்ரஸ் எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன்.அவர் இந்தியாவில் காலடி எடுத்து வைக்கும்போது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க வுத்தேசித்துள்ளேன்.இதற்கு பயந்து அவர் இந்தியாவிற்கு வரவில்லை என்றால் எஸ்ட்ராடீஷன் ட்ரீட்டி தயார் செய்யவும் தயங்க மாட்டேன்

இப்படிக்கு நாலு ஓட்டு அனானி

பினாத்தல் சுரேஷ் said...

ஏன் இவ்ளோ டென்சன் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நாலு ஓட்டாரே..

நான் என்னவோ அனானி உங்கள் செகண்ட் நேம் என்ரும் நாலு ஓட்டு பர்ஸ்ட் நேம் என்ரும் நினைத்ததால், மரியாதை நிமித்தம் செகண்ட் நேமில் அழைத்தேன்:-))

இதற்கு சட்ட நடவடிக்கை எல்லாம் தேவையா? நான் ரொம்ப பயந்தாங்கொள்ளி சார்!

இலவசக்கொத்தனார் said...

//பின்னூட்டம் எதிர்பார்த்து பாதி வயசாச்சு..
மக்கள் பார்க்கவரும் வேளையிலே,
இருப்பேன் தமிழ்மணத்தின் மூலையிலே!//

இதுதாங்க பெஸ்ட் வரிகள். உம்மை அந்த மாதிரி காக்கி ட்ரெஸில் ஆடுறா மாதிரி எண்ணிப் பார்த்தா சிரிப்பு தாங்கலை!! ஹாஹாஹா!!

Radha Sriram said...

Suresh,

என் வோட்டு உங்களுக்குதான்....சே....காமெடியா ஒரு பினூட்டம் போடகூட வரமாட்டேங்குதே....

சரி வழக்கம் போல suuuper !! ஓண்ணே ஓண்ணு கேக்கரேன் எனக்கு மட்டும் சொல்லுங்க office க்கு லீவ் போட்டு கர்ம சிரத்தையா இத செய்வீங்கதானே??

கோபி(Gopi) said...

//சரியான உல்டா - நீங்க நூறு ஓட்டு போட்டாதான் ஒரு ஓட்டா கணக்காகும்.//

சரி அப்ப எட்டு எட்டா பிரிச்சி போட்டுடலாமா? என்ன 100க்கு பதிலா 104 போடனும். (111 போடாத வரைக்கும் சரிதான்னு சொல்றீங்களா?)

ஆனா நாங்கல்லாம் கள்ள வோட்டு போடமாட்டமில்ல. (அட அப்படித்தான் வெளிய சொல்லிக்குவோம்)

மனதின் ஓசை said...

//பொழைப்பில்லாத ஆளும் அட
பினாத்தல நம்பி வருவான்//

உண்மைதான் :-)

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார், நன்றி.

உங்களாட்டம் முடியுமா.. மக்கள் பார்க்கவரும், வராத அத்தனை வேளையிலும் நடுவிலே இருக்க பார்ட்டியாச்சே நீர் :-)

பினாத்தல் சுரேஷ் said...

ராதா ஸ்ரீராம்,

இதுக்குப் போய் லீவெல்லாம் போட முடியுமா? லீவ் லெட்டர்லே "ப்ளாக் எழுத"ன்னு காரணம் போட முடியுமா சொல்லுங்க:-)

ஓட்டுக்கு நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

கோபி,

104தானே, ஆயிடுச்சா இல்லை மனதின் ஓசை மாதிரியா? தாங்க்ஸ்.

பினாத்தல் சுரேஷ் said...

மனதின் ஓசை..

இவ்ளோ நாளா ஆளைக்காணோம், இப்ப என்னடான்னா பொழைப்பில்லாத ஆள் பினாத்தல நம்பி வருவான்னு ஒத்துப்போறீங்க.. என்ன மேட்டரு?

கோபிநாத் said...

தல

பாட்டெல்லாம் போட்டு பின்னிட்டிங்க..

\\நல்லவங்களுக்கு.. ஆபீஸ்லே பிளாக்கரை பிளாக் பண்ணுவான்.. ஆனா பின்னூட்டமா கொட்டுண்டா!//\\

எங்களையும் நல்லவங்கன்னு சொன்னாதற்கு ரொம்ப நன்றி தல

தம்பி said...

அடடா உக்காந்து யோசிக்க ரொம்ப நேரம் இருக்கு போலருக்கு!

நல்ல உல்டா பாடல். :))

உப்புமாவு... உப்புமாவு...
நல்ல உப்புமாவு... உப்புமாவு...
எலவசமா பல உப்புமா
எங்களுக்கு கெடைக்குது போ போ

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க கோபிநாத்

நீங்களும் நல்லவரா? தெரியாதே எனக்கு?

ஒரு நாள் லஞ்ச் டைம்லே அப்படி வந்து போறது?

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க தம்பி..

//உப்புமாவு... உப்புமாவு...
நல்ல உப்புமாவு... உப்புமாவு...
எலவசமா பல உப்புமா
எங்களுக்கு கெடைக்குது போ போ//

அய் சபாஷ்! மணிரத்னத்துக்கும் நேரம் சரியில்ல போலிருக்கே:-)

கோபிநாத் said...

\\----

இண்டிப்ளாக்கீஸில் எனக்கு வோட்டளித்துவிட்டீர்களா?
பதில் தெரியாத கேள்விகளுக்கு no answer என்று தெரிவு செய்யலாம். நன்றி
Please Click on the Link below to start the voting process.

http://poll.indibloggies.org/index.php?sid=1\\

தலைவா...இங்க போனா அசிங்கமா திட்டுது...

This survey is no longer available.

Please contact Debashish (Do not reply) (contact@indibloggies.org) for further assistance

பினாத்தல் சுரேஷ் said...

கோபிநாத்..

இப்போ தெரியுது, எத்தனை ஆதரவாளர்கள் காலம் கடந்த ஆதரவளிக்கிறார்கள் என்று:-(

 

blogger templates | Make Money Online