ஞாநி குமுதத்தில் எழுதுவது எந்த விதத்தில் தவறு எனத் தெரியவில்லை. குமுதம், உரிமை பிரசுரிப்பாளருக்கே என்று சொன்னபோது எழுதிய வார்த்தைகள் இப்போதும் செல்லுபடியாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை.
குமுதத்தில் பிரசுரமான சுஜாதா கதைகள் புத்தகமாக வந்தபோது உரிமை எழுத்தாளருக்கே என்று பார்த்திருக்கிறேன்.
குமுதம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதா? - ஆம் எனில் ஞாநி குமுதத்தில் எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை, தன் குத்திக்காட்டுதல் வெற்றி கொண்டதாகவே கொள்ளலாம் அவர். ஒருவேளை குமுதம் சுஜாதா ஞாநி போன்ற அறியப்பட்ட எழுத்தாளர்களுக்கு ஒரு கொள்கை, அறியப்படாத எழுத்தாளர்களுக்கு வேறு கொள்கை என்றிருந்தால் ஞாநி குமுதத்தில் எழுதுவது தவறே! யாரேனும் விஷயம் தெரிந்தவர்கள் விளக்க முடியுமா?
*******
ராஜ் தாக்கரே வாட்டாள் நாகராஜின் மராட்டி பதிப்பு போல இருக்கிறது. உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் இது போன்ற ஆட்களுக்கு எந்த தயவுதாட்சண்யமும் கூடாது. அமிதாப்பை ராஜ் தாக்கரே தாக்கியதன் பின்புலத்தில் அபிஷேக்-ஐஸ்வர்யாவின் திருமணத்துக்கு ராஜ் தாக்கரே அழைக்கப்படாததுதான் காரணம் என்று எங்கோ படித்தேன். (Investigative Journalism) அமிதாப்பும் ராஜ் தாக்கரேவும் நாளை கூடிக் குலாவிக்கொள்ளலாம்.. ஆனால் வேலையையும் வீட்டையும் விட்டு வெளியே துரத்தப்பட்ட பீஹாரிகள் - உபிக்காரர்கள்?
கலவரத்தைக் கிளப்புவது பெங்களூருவில்தான் மிகச்சுலபம் என்று நினைத்தேன். மொழி, மதம், வருமானம் என உணர்ச்சிகளை உசுப்பேத்தி விடுவது, சமச்சீரற்ற எந்த ஊரிலுமே சுலபம்தான் என்று நிரூபித்திருக்கிறது மஹாராஷ்ட்ரா. ராஜ் தாக்கரே போன்றவர்களுக்கு சிறை தண்டனை மட்டும் போதாது - அரசியல் அனாதைகளாக்கப்பட வேண்டும். மஹாராஷ்டிரத்தின் மற்ற அரசியல் கட்சிகள் ராஜ் தாக்கரேவின் கட்சியோடு எந்த நாளும் கூட்டு வைக்கமாட்டோம் என அறிவிக்கவேண்டும். கலவரம் எவ்வளவு பெரியதோ அதைக் கிளப்பினவன் அவ்வளவு பெரிய ஆள் என்று நினைக்கும் நம் நாட்டில் சாத்தியப்படாத கனவுகள்!
******
ராஜ் தாக்கரே செய்ததற்கும் விகடன் செய்து கொண்டிருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை - என்ன, விகடன் கொஞ்சம் நாசூக்காகச் செய்கிறது!
ஜெயமோகன் தன் வலைப்பக்கத்தில் கிண்டலாக சிவாஜி எம்ஜிஆர் பற்றி எழுதியிருப்பது தனிநபர் தாக்குதலா, அங்கதமா என்ற பிரச்சினையே வேண்டாம். தன் வலைப்பூவில் எதையும் வெளியிட அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் விகடன் அதை ஸ்ட்ராடஜிக் காபி பேஸ்ட் செய்து, கவர் ஸ்டோரியாக வெளியிட்டிருப்பது நிச்சயமாக உள்நோக்கம் கொண்ட செயலே. விகடனையே சிலர் எரித்தார்கள் என்பது, அவர்கள் நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு அட்வாண்டேஜ்காக ஜெயமோகனை பலியாடாக்கி இருப்பது நிச்சயம் கண்டிக்கவேண்டிய செயல்.
******
பொல்லாதவன் படம் ரொம்ப லேட்டாக பார்த்தேன். பாட்டுக்கள் (எங்கேயும் எப்போதும் தவிர்த்து) படத்தில் ஒட்டவில்லை, தனுஷ் 10 பேரைப் பந்தாடுவது நம்பமுடியவில்லை போன்ற சில்லறைக் குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் மிக நல்ல படம் என்றே சொல்வேன். சுர்ரென்று பத்திக்கொள்ளும் திரைக்கதை, நாயகன் / வில்லன் பார்வையில் மாறி மாறிச் சொன்னாலும் குழப்பாத காட்சிகள், குறிப்பாக டேனியல் பாலாஜியின் நடிப்பு, மிக இயல்பான சென்னைத் தமிழ் வசனங்கள் - நல்ல படம்.
*******
எங்களூர் நாராயணி பீடத்துக்குச் சென்று எதோ உதவி வாங்கி வந்திருக்கிறாராம் கலைஞர். அதில் ஒன்றும் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஆன்மீகம், அறிவியல் இரட்டைக் குழந்தைகள் என்றெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. நாத்திக இயக்கத்தின் அடிநாதத்தையே சமரசம் செய்கிறதே இந்தப்பேச்சு - அவருக்கு ஆதரவாக இருப்பவர்களை தர்மசங்கடப்படுத்துவதைத் தவிர இந்த மாதிரி பேச்சினால் வேறு உபயோகம் இருப்பதாகத் தெரியவில்லை.
*******
ரங்கமணி முன்னேற்றக் கழகத்தில் இன்று ஒரு புதிய ஆள் சேர்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பேருவகை கொள்கிறோம்.
*****
Feb 18, 2008
அவியல் - 18 Feb 08
Subscribe to:
Post Comments (Atom)
23 பின்னூட்டங்கள்:
//ராஜ் தாக்கரே போன்றவர்களுக்கு சிறை தண்டனை மட்டும் போதாது -//
அதெல்லாம் வெற்று நாடகம்தானே!
இந்த மாதிரி கட்சிகள் முதலில் தடைசெய்யப்படவேண்டும். உள்ளிருந்து புரையோடி கெடுக்கும் வியாதிகள் -அறுவை சிகிச்சைதான் சரி.
-
//கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு அட்வாண்டேஜ்காக ஜெயமோகனை பலியாடாக்கி இருப்பது நிச்சயம் கண்டிக்கவேண்டிய செயல்.//
ஆமாமா. ஒண்ணுந் தெரியாத பாப்பா, போட்டுக்கிச்சாம் ஒம்போது தாப்பா (ஆ.வி, ஜெயமோகன் ரெண்டுக்குந்தான்).
//குமுதம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதா?//
ஆமாம் பெனாத்தல்.. ஞாநியின் பல வருட கோரிக்கைக்கு இன்றைய பத்திரிகை அரசியலுக்கேற்றாற் போல் தானும் நடந்து கொள்ள வேண்டுமே என்பதற்காக தலையாட்டிவிட்டதாம். மற்ற சிறு எழுத்தாளர்களுக்கு என்ன என்று தெரியவில்லை. ஆனால் பாமரனுக்கும் இந்தச் சுதந்திரம் உண்டு.
புது ரங்கமணிக்கு வாழ்த்து(க்)கள்.
சீக்கிரம் தலைக்கு ஒரு விக்கோ, தொப்பியோ போட்டுக்கச் சொல்லணும்.:-)
பூரிக்கட்டைதான் பரிசளிப்பா யாரோ கொடுக்கப்போறாங்கன்னு பட்சி சொல்லுது.
அவியலில் எல்லாம் பக்குவமாகச் சேர்த்து, சரியான பதத்தில் சமைத்து கொடுத்திருக்கிறீர்கள்.
ஸ்ஸ்ஸ்ஸ். ம்ம்ம் நல்லா இருக்கு.
உண்மைதான் தருமி.. ஆனா நானே சொல்லிட்டேனே //நம் நாட்டில் சாத்தியப்படாத கனவுகள்!//னு :-((
அப்பால என்ன சிம்பிளா - னு ஒரு பின்னூட்டம்? எதாச்சும் சொல்ல வரீங்களா?
அனானி, ஆ வி ஜெயமோகன் - யாருமே ஒண்ணும் தெரியாத பாப்பா கிடையாதுதான். ஆனா ஆவிக்கு என்ன ரீச்சு?
அப்படியா உண்மைத்தமிழன், நன்றி உங்கள் தகவலுக்கு.
ஆனால், இப்போதும் சிறு எழுத்தாளர்களிடம் என்ன நிலைப்பாடு வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லையே? ஞாநி தார்மீகமாகச் சரியாகத்தான் முடிவெடுத்தாரா என்பதற்கு அத்தகவலும் வேண்டுமே.
யெக்கா,
//பூரிக்கட்டைதான் பரிசளிப்பா யாரோ கொடுக்கப்போறாங்கன்னு பட்சி சொல்லுது.//
நாங்க ரங்கமணியை வரவேற்கிற நேரத்துல நீங்க தங்கமணிக்கு ட்ரெயினிங் கொடுக்க கிளம்பிட்டீங்களா? கொஞ்ச நாளாச்சும் போகட்டுமேக்கா :-(
நன்றி புதுகைத் தென்றல். (எப்பவும் சமையல் ஞாபகம்தானா?)
இது லொள்ளுதானே!
நீங்க மாத்திரம் பொங்கல், அவியல்னு தலைப்பு வெச்சுக்கலாம்.
நாங்க பின்னுட்டம் போட்டா மாத்திரம்
சமையல் ஞாபகம்னு கேள்வியா?
அவியல் செம டேஸ்ட்..
அப்புறம் தேவா நிழச்சிக்கு போய் பல்பு வாங்கியதை சொல்லவே இல்லை!!!:)))
குசும்பன்,
இளையராஜா நிகழ்ச்சிக்குப் போனதை பெருமையா போஸ்டு போட்டு சொல்லிக்கலாம், ரெண்டு மாசம் கழிச்சும் விசிலடிக்கறதைப்பத்தி எதுவுமே சொல்லாத நிகழ்ச்சியில அண்ணாச்சி மாதிரி ஞாபகம் வரும். பாட்டை நிறுத்தனாங்கன்னு திட்டலாம்!
சன் டிவி புண்ணியத்துல அதே அசத்தப்போவது பிளேடுகளோட, தேவாவை கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்தி, நாலு பேரு மிமிக்ரி பண்ணி, நமீதாவை ஒரே டான்ஸுக்கு கூப்பிட்டு, வடிவேலை 3 சீன் ரம்பம் போடவுட்டு கால்பங்குகூட ரொம்பாத ஸ்டேடியத்தை விட்டு வெளியே வந்த 3 நிமிஷத்தில மறந்து போனதைப்பத்தி என்னப்பா எழுத!!!! ஓசி டிக்கட்ன்ற ஒரே ஆறுதல் மட்டும்தான்.
//ராஜ் தாக்கரே வாட்டாள் நாகராஜின் மராட்டி பதிப்பு போல இருக்கிறது//
வட்டாள் நாகராஜே பால் தாக்கரேயின் பதிப்புதானே?!
படிச்சுட்டேன். கமெண்ட இப்ப ஸ்டாக் இல்ல. நாளைக்கு போட்றேன்.
பா ந இளவரசன்,
ரொம்பச் சரியாச் சொன்னீங்க.. பால் தாக்கரே அடிக்காத கூத்தா? எனக்கு சமீபத்திய ஞாபகம் வாட்டாள் நாகராஜ் இதே கேம் ஆடியது ஞாபகம் வந்ததால அதைப்போட்டேன்!
சிவா.. ஸ்டாக்சிவா கிட்டயே ஸ்டாக் இல்லையா? அப்ப நாங்க எல்லாம் எங்கே போவோம்?
//எழுத்தாளர்களுக்கு ஒரு கொள்கை, அறியப்படாத எழுத்தாளர்களுக்கு வேறு கொள்கை என்றிருந்தால்//
குமுதம் என்றைக்குமே அப்படித்தான். எழுபது/எண்பது களில் சுப்ரமணிய ராசு (எத்தனை பேருக்கு நினைவிருக்கிறதோ?), பாலகுமாரன் போன்ற அன்றைய வளரும் எழுத்தாளர்கள் தினம் விவாதித்த விவகாரம் தான். சுஜாதா கூட அன்றைக்கு விட்டுக் கொடுத்து பிறகு பிடித்தவர் தான் என்று கேள்வி (பிரபலத்தின் வருங்கால மதிப்பு -கொள்கையின் தற்கால விலை: இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்ட சமர்த்தர். அதனால் தானே அவர் எழுதிய வண்ணான் கணக்கு கூட வரிந்து கட்டிக் கொண்டு பிரசுரித்தார்கள்?)
// ஆனால் விகடன் அதை ஸ்ட்ராடஜிக் காபி பேஸ்ட் செய்து, கவர் ஸ்டோரியாக வெளியிட்டிருப்பது நிச்சயமாக உள்நோக்கம் கொண்ட செயலே //
Sorry i type in English, coz my Murasu suddenly went wonky
This issue is really about violation of copyright. Vikatan has no right to publish matter from JeyMo's site without his permission. He should sue Vikatan for this. We too need to support JeyMo on this count-regardless of if we agree with his views on MGR/Sivaji.
If JeyMo has no problem with his writing being reproduced elsewhere, then he should really be happy that Vikatan made his article reach much more readers. Why should he be upset at all goes above my head :-)
அவியல் ஜோர்...
இன்னும் புளிக்கலை... நல்லா இருக்கு!
அரசன்,
வாங்க, //பிரபலத்தின் வருங்கால மதிப்பு -கொள்கையின் தற்கால விலை: // நல்லாச் சொன்னீங்க.. ஆனா அதுதான் பாதைன்னு தேர்ந்தெடுக்கறது ஒண்ணும் பெரிய தப்பில்லைன்றது என் கருத்து. ஞாநிக்கு மட்டும் அது அப்ளை ஆகாது, ஏன்னா, அந்த பிரபலத்தின் ஒரு பங்கு இந்த கொள்கையினாலும் என்பதால்!
அனானி,
காபிரைட் பத்தி நீங்க சொல்லி இருப்பதை ஏற்கிறேன். அதே நேரத்தில் எங்கே எப்படி எந்த நிலையில் பப்ளிஷ் ஆனாலும் மகிழ்ச்சி அடைவாரா ஜெமோ - அல்லது வேறு யாரும்கூட?
<==
பினாத்தல் சுரேஷ் said...
பா ந இளவரசன்,
சிவா.. ஸ்டாக்சிவா கிட்டயே ஸ்டாக் இல்லையா?
அப்ப நாங்க எல்லாம் எங்கே போவோம்?
==>
அதுதான் கிட்டதட்ட எல்லாத்தையும் வித்துட்டேனே! நீங்க வாங்கிக்கலையா? =)) இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா தேத்திட்டு இருக்கேன்.
அண்ணே சுரேஷ் அண்ணே..பட்டாசா வெடிக்கிறார்னு சொல்ல கேள்விபட்டிருக்கேன். நீங்க என்னடானா அணுகுண்டா இல்ல வெடிச்சிருக்கிங்க..
( ஓய் யாருப்பா அது.. டேய் அடங்குடானு சொல்றது?..):P
ஸ்டாக் சிவா,
கொஞ்ச லேட்டாதான் நீங்க ஸ்டாக்கெல்லாம் வித்தது பத்தி கேள்விப்பட்டேன். நல்ல நம்பர் கேம் போல :-)
வாங்க சஞ்சய்.. உங்க ஊர்லே ஒத்தைவெடியத்தான் அணுகுண்டுன்னு சொல்லுவாங்களா?
//ஆனால், இப்போதும் சிறு எழுத்தாளர்களிடம் என்ன நிலைப்பாடு வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லையே? ஞாநி தார்மீகமாகச் சரியாகத்தான் முடிவெடுத்தாரா என்பதற்கு அத்தகவலும் வேண்டுமே.//
ஞாநி மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட்டாரா என்பது தெரியவில்லை.
ஞாநி முன்பே தனது பத்திரிகையில் குறிப்பிட்டிருந்ததைப் போல அப்படியொரு விதிமுறைகள் இருந்ததா என்பதே தெரியவில்லை.
காரணம் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே குமுதத்தில் இதுவரையில் சாண்டில்யன் எழுதிய கடல்புறா மூன்று அல்லது நான்கு முறை தொடர்கதையாக வெளியிடப்பட்டது. ஆனால் கடல்புறாவின் பதிப்பக உரிமை வானதி பதிப்பகத்திடம் உள்ளது. மேலும் சாண்டில்யனின் மற்ற சில கதைகளையும் தொடர்கதையாக குமுதம் வெளியிட்டது.
பாமரன் குமுதத்தில் முன்பு எழுதியவற்றைத் தொகுத்து புத்தகமாக அவரே வெளியிட்டுவிட்டார்.
எனக்குத் தெரிந்த நண்பர்கள் சிலரும் குமுதத்தில் அவர்கள் எழுதி வெளிவந்தவற்றை தொகுத்து புத்தகமாகவே போட்டார்கள்.
குமுதம் ரிப்போர்ட்டரில் 'டாலர் தேசம்' முதற்கொண்டு பா.ராகவன் எழுதுபவை அனைத்துமே கிழக்கு பதிப்பக வெளியீடாகத்தான் வந்து கொண்டிருக்கின்றன.
பின்பு ஏன் ஞாநி கடந்த 30 வருடங்களாக குமுதத்தின் மீது இப்படியொரு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு வந்தார் என்பது எனக்குப் புரியவில்லை.
குமுதத்தில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் குமுதத்திற்கே உரிமை என்று அவர்கள் இதழிலேயே அச்சிட்டுஇருப்பார்கள். ஆனால் என்ன அளவுகோல் என்று தெரியவில்லை.
ராஜ் தாக்கரே போன்றவர்களுக்கு சிறை தண்டனை மட்டும் போதாது - அரசியல் அனாதைகளாக்கப்பட வேண்டும். இது நடக்குமா?
ஆனந்த விகடனில் இப்படி ஒரு கட்டுரை வராமல் இருந்திருக்கலாம்.
சில்லறைக் குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் மிக நல்ல படம் என்றே சொல்வேன். உண்மைதான்.
Post a Comment