சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்
ஜிரா எழுதிய நான்காவது ஆம்பல்
ஜி எழுதிய ஐந்தாவது ஆம்பல்
தம்பி எழுதிய ஆறாவது ஆம்பல்
கப்பி எழுதிய ஏழாவது ஆம்பல்
தேவ் எழுதிய எட்டாவாது ஆம்பல்
வெட்டி எழுதிய ஒன்பதாம் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்
ஜிரா எழுதிய நான்காவது ஆம்பல்
ஜி எழுதிய ஐந்தாவது ஆம்பல்
தம்பி எழுதிய ஆறாவது ஆம்பல்
கப்பி எழுதிய ஏழாவது ஆம்பல்
தேவ் எழுதிய எட்டாவாது ஆம்பல்
வெட்டி எழுதிய ஒன்பதாம் ஆம்பல்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 11
கார்த்திக்கின் புகைப்படம் அமெரிக்கா சுரேஷின் உள்ளத்துக்குள் ஆயிரம் நினைவலைகளைக் கொண்டு வந்தது.
"டேய் சின்னப்பையனாடா நீ?"
"இல்லீங்க.. இருந்தாலும் இதெல்லாம் வேணாம்னு.."
"தப்பா நெனைக்காதே.. இதெல்லாம் இங்கே சகஜம்"
"வேணாங்க.. பழக்கமில்லீங்க"
வற்புறுத்தல் என்று தெரியாமலேயே அவனை கொஞ்சம் கொஞ்சமாகக் குட்டிச்சுவர் ஆக்கியது ஞாபகம் வந்தது.
"என்ன ஆச்சு சார் கார்த்திக்குக்கு?" நடுக்கம் தெரியாமல் சமாளிக்க பெரும்பாடு பட்டுவிட்டான்!.
"யாருக்குத் தெரியும்? திடுதிப்புனு ஒரு நாள் ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டுத் தொங்கிட்டான் - என்னையும் அன்னிலே இருந்து நடைப்பிணமாக்கிட்டான்!" ப்ரொபஸரின் குரல் உடைந்து..
"லெட்டர்லே என்ன எழுதியிருந்தான்"
"சார் போலீஸ்லே நீங்க இன்பார்ம் பண்ணீங்களா?" ராகவன் காக்கிச்சட்டையை மறக்கவில்லை.
"போனவன் போயிட்டான். தற்கொலைன்னு தெளிவாத் தெரியுது.. எதுக்கு போஸ்ட் மார்ட்டம் அது இதுன்னு .. கமுக்கமா முடிச்சுட்டோம்.. எங்களுக்கும் அதிக உறவினர்கள் கிடையாது இல்லையா?"
"என்ன சார் படிச்சவரு- கதை எழுதறவரு-- மனோதத்துவ நிபுணர் -- நீங்களே இப்படிப்பண்ணா எப்படி சார்? இது கிரிமினல் அபென்ஸ் - உங்களுக்குத் தெரியாதா சார்?"
"வாஸ்தவம் தான் ராகவன்.. அப்புறம் அந்த டெசிஷனை பலமுறை யோசிச்சுப் பாத்தேன். நான் பண்ணது தப்புன்னு தெளிவாத் தெரியுது.. இப்ப வேணா ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துடட்டுமா?"
"சரி அதை அப்புறம் பாக்கலாம், லெட்டர்லே என்ன எழுதியிருந்தது?"
"அந்த லெட்டரே வச்சுருக்கேன்.. பாக்கறீங்களா?"
A5 சைஸுக்கு வெட்டப்பட்டு மக்கி யிருந்தது அந்தக்காகிதம்.
"சுரேஷின் இந்த முடிவுக்கு சுரேஷே காரணம். வேறு யாரைப் பொறுப்பாக்க முடியும்? - கார்த்திக் சுரேஷ்" இவ்வளவுதான் எழுதியிருந்தது.
ராகவன் போலிஸ்காரப்பார்வையுடன் தடயத்தைப் பார்த்தவண்ணம் கேட்டான். "இது அவன் கையெழுத்துதானா? உறுதியாத் தெரியுமா?"
"அதில சந்தேகமில்லை"
"வழக்கமா என் முடிவுக்குன்னு தானே எழுதுவாங்க.. இதென்ன பேரைப்போட்டு எழுதியிருக்கான்?"
"அதைக்கூட யோசிக்காம இருப்பேனா? அவன் என்கிட்டே சின்ன வயசிலிருந்தே பேசும்போது நான்னு சொல்லமாட்டான்.. சுரேஷ்னுதான் தன்னை சொல்லிக்குவான்"
"ஒரு நிமிஷம்.. வீட்டுல பென்சில் இருக்கா?" பென்சில் வந்தவுடன் அதன் கிராபைட்டை பொடியாக்கி அந்த லெட்டரின் பின்புறம் தூவினான். "வேற பேப்பர்லே எழுதும்போது இதைக் கீழே வச்சு எழுதியிருந்தான்னா அதிர்ஷ்டவசமா சில எழுத்துக்கள் தெரியலாம் - அட.. இதைப்பாருங்க!"
புதிதாக சில எழுத்துக்கள் தெரிய ஆரம்பித்தன..
ஆர்க்குட் வெப்ஸைட்.. யூஸர்: AAMBAL, pw: suresh.......................... கூடவே பெரிய கோபமான எழுத்துக்களில்..
KILL SURESH..............
*********************************
ஆம்பல்
மலர்ந்தது:24/2/2000
உதிர்ந்தது:3/1/2006
மலர்ந்தது:24/2/2000
உதிர்ந்தது:3/1/2006
புகைப்படத்தின் மீது கொஞ்சம் க்ளீனிங் லிக்விடைப் போட்டுத் துடைத்துக்கொண்டிருந்தான் அவன்.
"கவலைப்படாதேம்மா.. நம்ம ப்ளான் எல்லாம் கரெக்டா வொர்க் அவுட் ஆகுது.. ஒவ்வொருத்தனா வரானுங்க.. அவளுங்களும் வந்துட்டாளுங்கன்னா மொத்தமா போட்டுத் தள்ளிடலாம். எப்படியும் உன் பிறந்த நாளுக்குள்ள பழி தீத்துடுவேன்"
கிழிந்த உடை.. நீண்ட தாடி.. அடையாளமே தெரியாமல் இருந்தவனின் கண்களில் பனித்திருக்கும் நீர்த்துளிகளை ஒதுக்கிவிட்டுப்பாருங்கள் -- கார்த்திக் தெரிவான்!
***************************
பி கு: ஆளாளுக்கு கொத்துப் பரோட்டா போட்டுவிட்டு கதையை மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு சரியான முறையில் தண்டனை கொடுப்பது எப்படி? அவர்கள் ஆரம்பித்து எங்கெங்கோ வளர்ந்துவிட்ட கதையையும் கதாபாத்திரங்களையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து, "இந்தா டாமேஜையெல்லாம் சரி பண்ணு"ன்னு கொடுப்பதை விடச் சரியான தண்டனை இருக்கிறதா? எனவே, இப்போதுமுதல் இந்தக் கதை ரிவர்ஸ் கியரில் செல்லும். நான் வாங்கிய குத்துப்பாட்டையும் குமரன் பாட்டாகப் பார்க்கும் ஆன்மீகச் செம்மல் கண்ணபிரான் ரவிஷங்கரிடம் இந்த ஜோதியைத் திரும்பக்கொடுக்கிறேன், இனி அவர் பாடு. ஏற்கனவே இதை எழுதிய நண்பர்கள் உஷார்!
9 பின்னூட்டங்கள்:
தலைவா!
கதைல தான் சுரேஷ்-னு பேரு வச்சவங்க தான் கொலைகாரவுங்களா இருக்காக! நிஜத்துல சுரேஷ் நீங்க கூட இப்படி கொலைவெறி புடிச்சி அலையலாமா? இது அடுக்குமா? :-)
வண்டிய ரிவர்ஸ் எடுக்கவே எனக்குப் பயம்! இதுல கதைய ரிவர்ஸ் கியர்-ல போடச் சொன்னா? ஆகா!
//பென்சில் வந்தவுடன் அதன் கிராபைட்டை பொடியாக்கி அந்த லெட்டரின் பின்புறம் தூவினான்
வேற பேப்பர்லே எழுதும்போது இதைக் கீழே வச்சு எழுதியிருந்தான்னா அதிர்ஷ்டவசமா சில எழுத்துக்கள் தெரியலாம் - அட.. இதைப்பாருங்க//
பெனாத்தலாரே!
ஆம்பல் ஆம்பல் குருதிப் புனல் ரேஞ்சுக்கு போயிடுச்சிங்க! :-)
கலக்கிட்டீங்க!
////
பி கு: ஆளாளுக்கு கொத்துப் பரோட்டா போட்டுவிட்டு கதையை மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு சரியான முறையில் தண்டனை கொடுப்பது எப்படி? அவர்கள் ஆரம்பித்து எங்கெங்கோ வளர்ந்துவிட்ட கதையையும் கதாபாத்திரங்களையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து, "இந்தா டாமேஜையெல்லாம் சரி பண்ணு"ன்னு கொடுப்பதை விடச் சரியான தண்டனை இருக்கிறதா? ////
இது சூப்பர் ஐடியாவா இருக்கே!! :-D
ரவி,
கொலைவெறியா? ரத்தமே சிந்தாம ஒரு பகுதிய எழுதிமுடிச்சு, நீங்க சாகடிச்ச ஒரு ஆளுக்கு உயிர்கொடுத்து இருக்கேன்.. இதா கொலைவெறி?
குருதிப்புனலா? நோ லாஜிக் ஒன்லி விவேக்னு எத்தனை ராஜேஷ்குமார் கதை படிச்சிருக்கோம் :-)
ஆமாம் சிவிஆர். அடுத்தமுறை இப்படி ஒரு கதை எழுதறதுக்கு முன்னால யோசிக்கணும் - எவ்ளோ ட்விஸ்டுதான் வைக்கறதுன்னு!
யோவ் அனியாயம்!
கதைய திருப்பி விடுறதுன்னா இப்படியா?
:) நாந்தான் முடிச்சு வைக்ணுமா...
இத எதிர்பார்க்கல... ராஜேஷ்குமாரேஸ்வரர், பட்டூக்கோட்டை பிரபாகரேஸ்வரரை இப்போதே வேண்டிக்கொள்கிறேன்..
கதை எங்கிட்ட வரும்போது "பூம்பாவாய் 'அம்பேல்' ''அம்பேல்'" ஆகியிருக்கும்.
:)
// சிறில் அலெக்ஸ் said...
:) நாந்தான் முடிச்சு வைக்ணுமா...//
தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்! :-)
//இத எதிர்பார்க்கல... ராஜேஷ்குமாரேஸ்வரர், பட்டூக்கோட்டை பிரபாகரேஸ்வரரை இப்போதே வேண்டிக்கொள்கிறேன்..//
சிறில் அண்ணாச்சி!
பூம்பாவாய்-னு எந்த நேரத்துல பேரை வச்சீங்க தெரியலை! இலக்கியப் பூம்பாவாய் தெரியும் தானே!:-)
//கதை எங்கிட்ட வரும்போது "பூம்பாவாய் 'அம்பேல்' ''அம்பேல்'" ஆகியிருக்கும்//
சூப்பரு! லக்கியையும் உங்களையும் நினைச்சாப் பாவமா இருக்கு! :-)
ஆம்பல் - ரிட்டர்ன்ஸ் ;)
//இப்போதுமுதல் இந்தக் கதை ரிவர்ஸ் கியரில் செல்லும். //
கதைல வர்ற அத்தனை சுரேஷும் நல்லவங்க தான்..நீர் ஒருத்தர் தான் வில்லன் :)))
யோவ் சாமி ஒய்பாலஜி கிளாஸ் எடுத்த எபெக்ட் இன்னும் உமக்குத் தெளியல்லய்யா.. புரொபசர் கெட் அப்ல்ல இருந்து வெளியே வர மாட்டேன்னு அடம் பிடிச்சு இப்படி எங்களுக்கெல்லாம் பனீஸ்மென்ட்டா....
நான் வெட்டி ரவி கப்பி எல்லாம் கூட பரவாயில்ல... லக்கி...வினையூக்கி எல்லாம் நினைச்சா கண்ணு கட்டுதய்யா..அதிலும் சிறிலை நினைச்சா... பார்ட்னர்....ரொம்ப நல்லவர்ங்க நீங்க
Post a Comment