ஒரு வருஷம் ஓடிப்போச்சே, இந்த ஒரு வருஷத்துல, எழுதிக் கிழிச்சதுல, எது ரொம்பப் பிடிச்சதுன்னு சொல்லணும். அது ஏன்னும் சொல்லோணும். இதுதான் வெளையாட்டு.
- எழுதியதில் பிடித்தது - விளம்பர விளையாட்டு
இப்படி சர்வேசன் ஆரம்பித்த விளையாட்டு, பாஸ்டனார் மூலமாக என்னிடம் வந்திருக்கிறது.
2007 ல் 76 பதிவுகள் போட்டிருக்கிறேன் - எனக்குப் பிடிக்காத பதிவுகளை நான் வெளியிடவே மாட்டேன்.
பினாத்தல்களை டயரிக்குறிப்புகளாக மட்டும் நான் பார்க்கவில்லை. ஒவ்வொரு பதிவு எழுதும்போதும், சில சுயகட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டிருக்கிறேன்:
தப்பித் தவறி உள்ளே நுழையும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் குறையாமல் இருக்கவேண்டும், அதற்கு பலரகமாகவும் பதிவுகள் போடவேண்டும், ஒரு கட்டுக்குள் நுழைந்துகொண்டு - இதுதாண்டா இருக்கும் பினாத்தல்லே - என்ற முன் தீர்மானத்துக்கு யாரும் வந்துவிடக்கூடாது - கரடுமுரடான சொற்களை உபயோகித்து யாருக்கும் அன்னியம் ஆகிவிடக்கூடாது, ஒரு பக்கச் சார்பு சிந்தனையின் வீச்சை குறைத்துவிடும், நண்பர்களைவிட எதிரிகளையே அதிகம் உற்பத்திக்கும் - என் ஈகோ எஞ்சினாய் இருப்பதை விட வாசகர்களின் ஆர்வத்தை அதிகம் மதிக்கவேண்டும்-- வலைப்பதிவுகளில் இல்லாதோர் படித்தாலும் புரியக்கூடியவையாய், படித்தோமே என்று வருந்தவைக்காமல் இருக்கவேண்டும் -- அதே நேரத்தில், என் கருத்துக்களை சமரசம் செய்துகொள்ளவும் கூடாது..
விஷன் ஸ்டேட்மெண்ட் படிக்கிற மாதிரி இருக்கா.. முழுமையாக இவற்றைக் கடைப்பிடிக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், பெருமளவு முயற்சிக்கிறேன். ஆனால் சிலசமயங்களில் அவசரத்தில் உப்புமா போட்டுக்கொண்டிருந்தேன்.
ஆனால், இப்போதெல்லாம் எனக்கே பிடித்திருந்தாலும்கூட, சில நண்பர்களிடமாவது முன்கூட்டியே ஒரு சிறு குறிப்பாவது சொல்லாமல், அவர்கள் கருத்தறியாமல் வெளியிடுவதில்லை என்ற ஒரு சுயதீர்மானம் - மே மாதம் உப்புமாப்பதிவுகளால் நிரப்பிய நேரத்தில் ஒரு அனானி பின்னூட்டத்தால் தூண்டப்பட்டு எடுத்தேன். 7 மாசமா உப்புமா போடறதில்லை. (இதுக்கெல்லாம் யாரும் பாராட்டு விழா நடத்தமாட்டீங்களாப்பா?)
சரி முதுகு சொறிந்துகொண்டது போதும். நான் எழுதியதில் எனக்கே பிடித்த பதிவு என்று ஒரு வகையைத் தேர்ந்தெடுப்பது மற்ற வகைகளுக்குச் செய்யும் துரோகமாக நான் நினைக்கிறேன். எனவே, வகைக்கொன்றாக எனக்குப் பிடித்ததை தேர்வு செய்கிறேன், மொத்தத்தில் எது உங்களுக்குப் பிடித்தது என்பதை பின்னூட்டமாகப் போடுங்களேன்.
நகைச்சுவை வகையில் - டிவி நிகழ்ச்சிகளைக் கிண்டலடித்த பதிவு, Wifeology Series, சக பதிவர்களைக் கிண்டலடித்த தமிழ்மணம் முகப்பு எல்லாம் இருந்தாலும், என் முதல் தெரிவு கனவிலும் வரக்கூடாத தமிழ்மணம்தான்.
ப்ளாஷ் - எனக்கு செல்லம். கற்றுக்கொள்ளும் போதே, இதில் இப்படி ஒரு வசதி இருக்கிறதே, இதை வைத்து இப்படி நககச்சுவை செய்யலாமே, இண்டராக்டிவ் ஆக ஆக்கலாமே - என்ற சாத்தியக்கூறுகள் மனதில் வர வர உடனடியாகச் செய்துவிடுவதால் அதில் தொழில்நுட்பக்குறைகளும் நிறைய இருக்கும் - என்றாலும் தொழில் நேர்த்தி அதிகரிக்க பின்னூட்டங்கள் உதவி செய்வதால் எனக்கு ப்ளாஷ் செல்லம். ப்ளாஷ் செய்வது எப்படி என்று விக்கிப்பசங்களாய் வகுப்பெடுத்தது, பட்டறையில் தொடர்ந்த சோதனை இவற்றையெல்லாம் ப்ளாஷ் ஆக ஏற்க மாட்டேன்.
மற்றபடி இந்த ஆண்டில் நிறைய ப்ளாஷ் போடவே இல்லை. சற்றுபின் செய்திகள், இல்லறத்தியலில் வந்த சைட் அடிக்கும் விளையாட்டு இவற்றை விஞ்சி முதலிடம் பிடிப்பது சிவாஜிக்கு 1024 விமர்சனம் கொடுத்த ப்ளாஷ். பொதுவாக விமர்சனங்களையும், குறிப்பாக சிவாஜியையும், பத்திரிக்கை விமர்சனங்களின் க்ளிஷே வார்த்தைகள் எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்திருந்தேன்.
அரசியல் பற்றி நான் எழுதுவதை விட மற்றவர்களைப் படிப்பதில்தான் ஆர்வம் அதிகம் காட்டுகிறேன்.
அனுபவம் -இலும் பெரும்பாலும் சுயதம்பட்டங்களே இருப்பதால் அதிகம் கவரவில்லை.
சினிமா விமர்சனங்கள் - படங்களின் தரமே விமர்சனங்களின் தரத்தைத் தீர்மானிக்கின்றது - ஆண்டு இறுதியில் பார்த்து, மிக பாதிக்கப்பட்டு எழுதிய தாரே ஜமீன் பர் விமர்சனம் எனக்குப்பிடித்ததாக இருப்பதற்குக் காரணம் படத்தின் தரம்தான்!
புனைவு.. தேன்கூடு போட்டிகள் இருந்தவரை தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்த கதைகள் ஏறத்தாழ நின்றே போய்விட்டன - சர்வேசன் போட்டி வைக்கும்வரை. அந்தப்போட்டிக்காக எழுதிய மூன்று கதைகளுமே மூன்று வகையில் எனக்குப் பிடித்தவை - காமத்திற்கும் கண் உண்டு -- உரையாடல்களை ஒதுக்கி உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் முயற்சித்த முதல் கதை என்பதால், கடன் அட்டை - சம்பவங்களை மையமாக வைத்து ஓட்டியதால் (ஆனால் சிறுகதை என்பதே ஒரு சம்பவத்துக்குமேல் போகக்கூடாது என்ற ஆதாரவிதியை மீறிய கதைதான் - ஒருவேளை அதனால்தான் தோற்றதோ?), காட்டுவழி போற... புத்திசாலித்தனமான கதை என்பதால்..
ஆனால் இவை எல்லாமே கலந்து 10 நிமிடத்தில் எழுதப்பட்ட நம்பிக்கை சிறுகதை - மதுரை தினகரன் எரிப்புச் சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்டது - என் கணிப்பில் சிறந்தது, ஆமாம் என்ன ஆச்சு CBI விசாரணை? அநியாயம்! மக்கள் ஞாபகம் எவ்வளவு தேசல்?
10 பின்னூட்டங்கள்:
nice :)
i am recording it here... picked 'Kanavilum Varakkoodadha thamizmanam' ;)
http://surveysan.blogspot.com/2008/01/2007.html
ஒரு வருடம் உங்கள் பதிவை மிக ஆவலாக படித்தவர்களூள் நானும் ஒருத்தி.பத்தாகுறைக்கு என் உடன்பிறப்பையும் படிக்கச்சொல்லி இப்பொ ஒரே பாசக்கார குடும்பம் மாதிரி உங்க பதிவை படிக்கிறோம்...ரொம்ப புகழ்ந்திட்டேனோ???
எனக்கு உன்ங்கள் பதிவுகளில் பிடித்தது, ஒரு நடுனிலைமையும், அர்த்தமுள்ள பன்ச்சும் தான்...
அதிலும் காமத்திற்க்கும் கண்ணுண்டு கதை என்னை மிகவும் கவர்ண்தது....சரி குறை.. வேரென்னெ..கண்டுபிடிப்பது சுலபம்!!!!
wifeology...பெண்ணீய பித்தாளையான எனக்கு ...!!!!!
சூப்பர் பதிவுகள் தல ;)
//இராமநாதன் (டாக்டர் - உமக்கு 2007 கட்டுப்பாடு கிடையாது.. 2006, 2005 லே பல சூப்பர் பதிவு போட்டிருக்கே!)//
ஆக மொத்தம் அவரு 2007ல் எழுதினது எல்லாம் மொக்கைன்னு சொல்லிட்டீங்க! நல்லா இருங்கடே! :))
---விஷன் ஸ்டேட்மெண்ட் படிக்கிற மாதிரி இருக்கா..---
கலக்கல்.
தொகுப்பும் சரவெடி. நன்றி!
Happy Pongal! Yes, Seetha recommended your blog to me; since then, I have been reading all your articles quite regularly. Your writing is sensitive, sensible,and of course hilarious too. My best wishes to you!
Your writing is sensible, decent and you have a good sense of humour too...
'Kanavilum Varakkoodadha thamizmanam' , 'Wifeology series' and 'Taare Zameen Par review' are my favourites...
- Ramya.
வாழ்த்துக்கள், முழுமையாய் படிக்காவிட்டாலும், அவ்வப்போது விட்டகுறை தொட்டகுறையாய் படித்து வந்தாலும், இன்றைக்கும் பிடித்தது memeக்காக எழுதிய 8 விஷயங்கள், வாழ்க்கை சில சமயங்களில் சுரீர் என்று உரைக்கும் என்று சொல்வார்கள். :)
மத்தபடி தூதுவனில் நாம் பேசிய 2008-இன் முதல் சூப்பர் ஹிட் பதிவிற்கு ஒரு முன்பதிவு ஹி ஹி ஹி ;)
நன்றி சர்வேசன்.
நன்றி சீதா.. தான் பெற்ற இ(?)ன்பம் இவ்வையகமும் பெற ஆர்வம் காட்டுவதற்கு பெரும் நன்றி!
நன்றி கோபிநாத்.
கொத்தனார், இராமநாதன் பதிவில் இதற்கான கொள்கை விளக்கத்தை கொடுத்திருக்கிறேன்.
நன்றி பாபா.
நன்றி அனு.
நன்றி அனானி..
நன்றி நாராயணன். நீங்கள் குறிப்பிடும் பதிவிற்கான ப்ரிப்ரொடக்ஷன், போஸ்ட் ப்ரொடக்ஷன் ரெண்டும் ஒரே நேரத்துல நடக்கறதால, ப்ரொடக்ஷன் நிக்குது :-)
Post a Comment