முதல்லேயே சொல்லிடறேன் - இந்த மொக்கைக்கு க்ரெடிட் எனக்கு கிடையாது!
நான் எந்த வயசிலே தங்குதடையில்லாம படிக்க ஆரம்பிச்சேன்னு சரியா ஞாபகம் இல்லை.. எப்படியும் 12 - 13 வயசாவது இருக்கும்னு நினைக்கிறேன்.
ஆனா இன்னிக்கு பாடத்திட்டத்தில 5வயசில படிக்கச் சொல்றாங்க.. என் மகள்கள் ராத்திரியில் தூங்கறதுக்கு முன்னால என்கூடச் சேர்ந்து ஒவ்வொரு நாளும் 10-15 நிமிடமாவது படிக்காமல் தூங்குவதில்லை என்பது மகிழ்ச்சியைத் தந்தாலும்..
நிறைய ஃபேரி டேல்ஸை அடுத்தடுத்துப் படித்ததால் குழம்பியதாலோ, எழுத்தாளரின்(?!) மகளாக இருந்து கொண்டு பழைய கதையைச் சொல்வது தகுதிக் குறைவு என்று நினைத்ததாலோ..
இப்படி ஒரு கலந்துகட்டி கதையைச் சொல்லியிருக்கிறாள். இதில் கதாபாத்திரங்கள் யாவர், கதையின் நீதி ஆகியவற்றை பின் நவீனத்துவமாகவும் சொல்லி என் சிந்தனையைக் கிளறிவிட்டாள்!
கதையை இங்கே க்ளிக்கிக் கேளுங்கள்!
இந்தக்கதையின் நீதி புரிந்தவர்கள் எனக்குத் தனி அஞ்சலிலும், மற்ற சாதா மக்கள் பின்னூட்டத்திலும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Jan 16, 2008
மொக்கை - பின்நவீனத்துவ பாட்காஸ்ட்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை உப்புமா, சுயதம்பட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
30 பின்னூட்டங்கள்:
test message
saadhaa makkalil mudhalvan
//மற்ற சாதா மக்கள் பின்னூட்டத்திலும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்//
இப்படி அநியாயமா categorize பண்ணிட்டீங்களே என்னை? :(
//என் மகள்கள் ராத்திரியில் தூங்கறதுக்கு முன்னால என்கூடச் சேர்ந்து ஒவ்வொரு நாளும் 10-15 நிமிடமாவது படிக்காமல் தூங்குவதில்லை//
இதுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தினமும் உங்கள் குழந்தைக்கு (அல்லது குழந்தையுடன்) 10 நிமிடமாவது படியுங்கள் அப்படின்னு வலியுறுத்தறாங்க. அதைக் கடைப்பிடிப்பதற்கு வாழ்த்துக்கள்.
வருங்கால பெனாத்தலனி,
அப்பனை மிஞ்சுற பிள்ளையா இருக்காக...
இந்த வயசுலேயே இப்படி உப்புமா கிண்டுற தெறமையா.. தமிழ் வலையுலகததோட எதிர்காலம் உப்புமாவும் ரவாதோசையுமா ஜே ஜேனு இருக்கப்போவுதுங்கறது கன்பர்ம் ஆயிடுத்து.
ஒண்னூமே புரில - இருப்பினும் 3 தடவை கேட்டுட்டேன் கதய.
டக், ஃபாக்ஸ், லயன் - கதாபாத்திரங்கள்
கதையின் நீதி - டக் வாட்டரில் டைய்லி ஸ்விம்முவதில்லை. அவ்ளோ தான்
உப்புமா பதிவுல மாரல் ஆப் தி ஸ்டோரி வேறயா?
இருந்தாலும் மாரல் சூப்பரு...
அப்படியே டிஸ்கி போடறது எப்படின்னும் கத்துகொடுத்துட்டீங்கன்னா, அடுத்து ப்ளாக் அரங்கேற்றம் செஞ்சுட வேண்டியதுதான்..
சீனா சார்,
//ஒண்னூமே புரில - இருப்பினும் 3 தடவை கேட்டுட்டேன் கதய.//
:))))))
உப்புமான்னா என்னன்னு கொஞ்சம் ரிசர்ச் பண்ணிட்டு கேட்டுப்பாருங்க.... எல்லாமே வெளங்கிரும்... :)))
Moral of the story : The duck is not swimming in the water everyday.
Hidden message for Mom and dad from the narrator: "I don't want to take bath everyday".
ரைமிங்கா கத சொல்ற அழகு சூப்பர்ங்க..
போலி குழந்தைப் பதிவர்கள் தொல்ல தாங்கல் சீக்கிரம் உங்க மகளை பிலாக்க சொல்லுங்க :)
//ஆனா இன்னிக்கு பாடத்திட்டத்தில 5வயசில படிக்கச் சொல்றாங்க..//
ரேவதி சங்கரன் மாதிரியான counsellors எல்லாம் கர்ப்ப காலத்திலேயே நம்மள படிச்சு சொல்ல காட்ட சொல்றாங்க. நம்ப மாட்டீங்க நீங்க.. 1 வயசுக்கும் குறைவான ஒரு குழந்தை ஒரு ஆங்கில புத்தகத்தை தடையில்லாமல் படித்து கொண்டு வந்ததை ஜெயா டிவியில் எப்பொழுதோ பார்த்த நினைவு :-))
டாக்டர் சொல்ற மாதிரி ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிட வேண்டிதான...
கதையின் நீதி... "உங்களுக்குதான் கதை சொல்ல தெரியும்னு (இதுல 'எழுத்தாளர்னு' வேற போட்டுக்கறீங்க) ரெண்டு, மூணு கதையையே சொல்லி ஒப்பேத்தாதீங்க. புதுசா எதுனா தெரியுமா?" அப்படின்னு உங்களை கேக்கற மாதிரி தோணுது.
குழல் இனிது...யாழ் இனிது...
கதையை விட சொல்றது சூப்பர்...
வாழ்த்துக்கள சொல்லுங்க தலைவா
நானும் ராத்திரி 10மணி 11மணி 12 மணின்னு திரும்ப திரும்ப கேட்டு பாத்தேன் திரும்ப திரும்ப புள்ளை குடி மார்னிங் குட் மார்னிங்னே சொல்லுதே!!
ஒரு வேளை நாளைக்கு காலைல கேட்டா கரெக்டா இருக்குமோ!?!?!?
//திரும்ப திரும்ப புள்ளை குடி மார்னிங்!!//
சிவாண்ணே!
நைட்ல கேட்டா அப்படிதான் எல்லாம் 'குடி' மார்னிங்காத்தேண்ணே இருக்கும். மணிக்கொருதரம்தான் 'குடி'ச்சீங்களாக்கும்... ஐ மீன்... கேட்டீங்களாக்கும் :-))
பெனாத்தலாருக்கும் ஆசிப் அண்ணாச்சிக்கும் வித்தியாசம் என்னான்னா,
அவரு எப்பவும் மொக்கை போடுவாரு அப்பப்போ அப்பா சொன்னதைப் போட்டு நல்ல பதிவும் போடுவாரு.
இவரு எப்பவுமே நல்ல பதிவு போடுவாரு ஆனா பொண்ணு பேரைச் சொல்லி எப்பவாவது மொக்கை போடுவாரு
அப்படின்னு நீங்க சொல்லச் சொன்னதை சொல்லலாமுன்னு நினைச்சாலும் இப்படி அப்பட்டமா பொய் சொல்ல மனசு வரமாட்டேங்குதே!!
மேலே போட்ட பின்னூட்டம் நகைச்சுவை என்று நான் நினைத்துக் கொண்டு, சிவா அவர்கள் தவறாக எடுத்து கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் போட்டது :-).
பின்னூட்டத்திற்க்கே நாங்க டிஸ்கி எல்லாம் போடுவோமில்ல :-))
ஸ்ரீதர் நாராயணன் - அதெல்லாம் சிவா தப்பா நினைக்கமாட்டார் கண்டுக்காதீங்க ;-)
சிவா - காலைலயாவது புரிஞ்சுதான்னு வந்து சொல்லுங்க.. என்ன?
பரம்பரையாவே உப்புமா கிண்டுறீங்களா?
Onnume puriyalaithan. But listened to it again and again. Avvlo azhagu! Avvlo inimai!
- One of the sadha makkal
//
Sridhar Narayanan said...
மேலே போட்ட பின்னூட்டம் நகைச்சுவை என்று நான் நினைத்துக் கொண்டு, சிவா அவர்கள் தவறாக எடுத்து கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் போட்டது :-).
//
எண்ணங்கண்ணே இப்பிடியெல்லாம் சொல்லி சின்னபையனை வெக்கப்பட வைக்கிறீங்க!!
இதுக்கெல்லாம் யாராவது தப்பா எடுத்துப்பாங்களா? அப்பிடியெல்லாம் பாத்தா இன்நேரம் மங்களூர்க்கு எத்தினி ஆட்டோ வந்திருக்கும்!!
//
சேதுக்கரசி said...
சிவா - காலைலயாவது புரிஞ்சுதான்னு வந்து சொல்லுங்க.. என்ன?
//
பக்காவா தெளிவாயிட்டேன்
பாப்பா குட் மார்னிங், சொன்ன வரைக்கும் புரிஞ்சிடிச்சு!
மிச்சத்தை கேட்டுட்டு அப்புறம் வாரேன்
வர்ட்டா!!
சுப்பெரப்பு.. இவ்வளவு சின்ன வயசுலேயே இவ்வளவு அறிவா??
கமெண்டு போட்ட அத்தனை அங்கிள் ஆண்டிகளுக்கு தாங்க்ஸ் சொல்லிக்கொள்வது ரோஷ்ணி யூ கே ஜி!
சோதனை - வார்ப்புரு மாற்றியாச்சேய்!
//சோதனை - வார்ப்புரு மாற்றியாச்சேய்!//
உங்க பதிவோட அக்மார்க் லுக் போயிருச்சேய்!
ஆமாம் சேதுக்கரசி.. அதான் பழைய ஸ்டைலுக்கே (ஏறத்தாழ) மாறிட்டேன். நமக்கு ஜிகினா வேலை எல்லாம் ஒத்துவரதில்லை :-)
உப்புமா இவ்வளவு அருமையாகக் கிண்டி நான் பார்த்ததுமில்லை,கேட்டதுமில்லை,சுவைத்ததுமில்லை!!!! வாழ்த்துக்கள்...
அன்புடன் அருணா
appava kathai kekkanum.eluthlar(?) mathiri kekka koodathu.daily paddikirathu romba nalla habbit.namma vidoora kathya vida nalla iruku.
isthri potti
அஹா இப்பதான் கேட்டேன்..அப்பாக்கு தப்பாத பெண்ணுன்னு நிறுபணம் ஆயிருச்சே.....:)way to go Roshini!!
Ivlo chinna vayasula ivlo azhaga uppuma kindriye!Congrats, Roshini!
Post a Comment