Apr 7, 2008

நாடாட.. ஓட்டாட!

"ஹாய் வியூவர்ஸ்!  தமிழ் தொலைக்காட்சிகளிலேயே ஒரு புதுமையான நிகழ்ச்சி - நாடாட ஓட்டாட.. அற்புதமான நிகழ்ச்சின்னு நாமே சொல்லிக்கக் கூடாதுன்றதுக்காக, நம்ம நடுவர்களைச் சொல்ல வைக்கலாமா? வீ வெல்கம் அவர் நடுவர்ஸ் ஆன் த ஸ்டேஜ் ப்ளீஸ்"
 
நடுவர் 1: இது ஒரு எக்ஸலண்ட் ப்ரொக்ராம். இதைப் பார்த்த பிறகுதான் நான் எவ்வளோ நல்லா நொட்டை சொல்வேன் னு எனக்கே தெரிஞ்சுது.
 
நடுவர் 2: ஆமாம் நடுவரக்கா.. இந்த ப்ரொகிராம் பாக்கச் சொன்னவுடனே என் பசங்க எல்லாம் டிவிய ஆப் பண்ணிட்டு படிக்கப் போயிடறாங்க. இன்பார்மேட்டிவ் ப்ரொகிராம்.
 
நடுவர் 3: நடுவர் அக்கா சொல்லிச்சு, இன்னொரு நடுவர் அக்காவும் ஷொன்னாப்போல, சூப்பர் நிகல்ச்சி.
 
இன்னிக்கு நம்ம நிகழ்ச்சியிலே, மெட்லீ ரவுண்ட்.. ஒவ்வொரு காண்டெஸ்டண்டும் ரெண்டு மூணு பாட்டை ரீ மிக்ஸ் பண்ணி கலக்கப் போறாங்க.. முதலாவதா ஆட வராரு.. ஏமாந்த சோணகிரின்னு எதிர்பாத்தவங்களை எல்லாம் ஏமாத்தின எடியூரப்பா!
 
மேடை இருளடைகிறது.. பேத்தாஸ் ஒலியுடன் ஆரம்பிக்கிறது பாட்டு..
 
"தரைமேல் பிறக்கவைத்தான் - எங்களை
தண்ணீரை நிறுத்தவைத்தான்..
கரைமேல் பிறக்கவைத்தான் - உங்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்.."
 
படகோட்டி கெட்டப்பில் பாடியவண்ணம் நுழைகிறார் எடியூரப்பா.
 
டக்கென்று இசை மாறுகிறது.. பீட் அதிகரித்து குத்துப் பாட்டு பாட ஆரம்பிக்கிறார்..
 
புகையடிக்குது புகையடிக்குது
ஹோகெனக்கல் புகையடிக்குது..
எங்க ஜனம் பார்த்தடிக்குது..
எல்லா வோட்டும் சேத்தடிக்குது..
கூட்டு போட்டும் எலெக்ட் ஆவலாம்.. (தமிழனுக்கு)
வேட்டு வச்சும் எலெக்ட் ஆவலாம்..
 
இசை மறுபடி மாறுகிறது..
 
பரிசல ஓட்டி எல்லைக்கு ஓடு..
பஸ்ஸை நிறுத்தி எல்லைய மாத்து..........................
 
என் பேரு எடியப்பா..
தண்ணியெல்லாம் எனக்கப்பா..
எங்களுக்கு மிஞ்சிப்போனா
நீயும் கொஞ்சம் குடியப்பா.. குடியப்பா
 
நெஞ்சில் ஆறா வடுவப்பா..
குமாரசாமி ஆப்பப்பா..
அதிக சீட்டு வேணுமுன்னா
தண்ணி மேட்டர் எடுவப்பா..எடு அப்பா..
 
"வாவ்.. கலக்கிட்டீங்க எடியூரப்பா.. அந்தக்காலத்துல ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் எல்லாப்பாட்டையும் போட்டுக் கலக்கிட்டீங்க! ஜட்ஜஸ் என்ன சொல்றாங்கன்னு கேக்கலாமா?"
 
நடுவர் 1: கான்சப்ட் ரொம்பப் புதுமையா யோசிச்சிருக்காரு.. ஓட்டு வாங்கணும்னா எந்த எல்லைக்கும் போகத்தயார்ன்றத அழகா வெளிப்படுத்தினாரு.. ஆனா.. ஆட்டம் கொஞ்சம் - இல்லை, ரொம்பவே அதிகம்தான். தன்னோட ஸ்டேஜ்லே மட்டும் ஆடாம, அடுத்த ஸ்டேஜுக்கும் போயி ஆடினார் பாருங்க.. அது ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட்.. என் மார்க்ஸ் : 7
 
நடுவர் 2: ஆமாம். ஆட்டம் அதிகமாத்தான் போச்சு. கூட்டு போட்டும் எலக்ட் ஆவலாம்னு பாடணவரு அதை ஏன் செலக்ட் பண்ணல? என் மார்க்ஸ்: 6
 
நடுவர் 3: அவங்க சொன்னா மாதிரிதான்.
 
நம்ம நிகழ்ச்சியில அடுத்ததா வந்து கலக்கப் போறவங்க - நடிகர் சங்கம்!
 
எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பிக்கிறார் சத்யராஜ்.
 
ஆடுங்கடா என்னச்சுத்தி
நான் பெரியாரு வெட்டுக்கத்தி
பாடப்போறேன் மண்ணைப்பத்தி
கேளுங்கடா வாயப்பொத்தி..
 
தமிழ்ச்சாமிய கும்பிட்டா தமிழனோட சங்கமடா..
திருப்பதிய கும்பிட்டா கொல்டியோட சங்கமடா..
 
பொறாமை எரிச்சல் கெட்ட வார்த்தை சேர்த்துப் போட்டா நடிகர் சங்கம்..
அவனை இவனை திட்டிப்போட்டு தமிழைக் கொஞ்சம் கலந்து வச்சா நடிகர் சங்கம்!
 
ட்யூன் மாறித் தொடர்கிறார் ரஜினி..
 
வாட்டாளென்ன முட்டாளென்ன தண்ணியென்ன வெந்நியென்ன சொல்லடா சொல்லடா பதிலை..
எந்த ஊரு எந்தன் ஊரு எந்தப்பக்கம் எந்தன்பக்கம் சொல்லடா எனக்கு பதிலை..
 
நம்பிநம்பி எடுத்துவச்ச சினிமாவெல்லாம் நிறுத்திப்புட்டா சோறு எதுக்கு போடா.. 
இங்க விரதத்துக்கு எதுக்கு பீடா? 
 
நம்பிநம்பி எடுத்துவச்ச சினிமாவெல்லாம் நிறுத்திப்புட்டா சோறு எதுக்கு போடா.. 
இங்க விரதத்துக்கு எதுக்கு பீடா? 
 
உடனே ட்யூனெல்லாம் நிற்கிறது.. கமல் பேஸ் வாய்சில் கிருஷ்ணர் கெட்டப்பில் போகஸ் லைட் அடிக்க, தொடர்கிறார்.
 
"இன்று அருவி உன்னுடையது.. விட்டுவிட்டால் நாளை அவனுடையது.
 
எதை நீ குடித்து வைத்தாய்? அதை நீ வாந்தி எடுப்பதற்கு?
 
எது நடந்ததோ அது மோசமாகவே நடந்தது..
 
எது நடக்கிறதோ அது பசியோடே நடக்கிறது..
 
எது நடக்க இருக்கிறதோ அது கள்ள ஓட்டோடே நடக்கும்"
 
அபாரமான சைலன்ஸ் மட்டும்! குழப்பத்தோடு அரங்கம் ஒளிர்கிறது.
 
"வாவ்.. நடிகர்கள் எல்லாம் பின்னிட்டீங்க!.. ஜட்ஜஸ்?"
 
நடுவர் 1: இன்னும் நான் ஆச்சரியத்துல இருந்து விலகல.. ஆனா, இவங்களோட கான்சப்ட் என்னன்னுதான் புரியவே இல்ல. சினிமா போடணுமா, தண்ணி விடணுமா? அந்தக் குழப்பம் இருந்ததாலேயும், கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகாததாலேயும் என் மார்க் 6.
 
நடுவர் 2: டிஸ்ஸப்பாயிண்ட் பண்ணிட்டீங்க நடிகர்களே.. கெமிஸ்ட்ரியும் இல்லை.. அந்த ஜோஷ் உம் இல்லை.. ஆனா, சூப்பர் கான்சப்ட்.. எனக்கே பசி வந்துதுன்னா பாத்துக்கங்க.. உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. (விசிலடித்துவிட்டு).. என் மார்க் 8!
 
நடுவர் 3: (இப்படி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசி குழப்பிட்டீங்களே.. ஒரே மாதிரி பேசி இருந்தா காபி அடிச்சிருப்பேன்.. சரி.. )நல்லாவும் இருந்துது - சில இடங்கள்லே இன்னும் கொஞ்சம் பெப் போட ஜோஷ் கலந்து கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆயிருந்தா (எல்லா வார்த்தையும் சொல்லிட்டனா?) நல்லா இருக்கும்..
 
நேயர்களே.. இன்னும் கலைஞர், எஸ் எம் கிருஷ்ணா, டாக்டர் ராமதாஸ் எல்லாம் ஆட வராங்க.. அதுக்கு முன்னாலே ஒரு சின்ன ப்ரேக்!!!!!!!!!!!!!!

22 பின்னூட்டங்கள்:

திவா said...

back to form! தொடருங்க!

gulf-tamilan said...

சோ,இல கனேசன்,த.காங்கிரஸ் ஆட்டத்தில் உண்டா?

வால்பையன் said...

கலக்கல்!!

வெல்கம் பேக் எப்போது சொல்வீர்கள் காத்திருக்கிறேன்

வால்பையன்

கோபிநாத் said...

\\சின்ன ப்ரேக்!!!!!!!!!!!!!!\\

எம்புட்டு நேரம்...இல்ல தேர்தல் முடிகிற வரைக்குமா!!??

;)))

சரவணகுமார் said...

ஆப்பு ஆரம்பமா? கலக்குங்க

Seetha said...

சிரிப்பா வந்தாலும் நிலைமையை நினைச்சு வருத்தமா இருக்கு..
எதியூரப்பா..தனக்கு சூனியம் வச்சிருக்க்காஙன்னு சொன்னவரு..அவெரெல்லாம் மந்திரியானா?

alien_sl said...

:)))))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி திவா.

கல்ப் தமிழன், சோ வோட நிலைப்பாடு துக்ளக் வந்தா தான் தெரியும், அப்பவும் நான் வாங்கறதில்லைன்றதால எனக்குத் தெரியாது. இல கணேசன், த காங்கிரஸ் எல்லாம் தனியா மூணு பாட்டு எங்கே பாடப்போறாங்க? கும்பலோட கோவிந்தா தானே?

வால்பையன்.. போட்டுறலாம்.. ஒரு ரெண்டு நாள் கேப் விட்டுட்டு :)

பினாத்தல் சுரேஷ் said...

கோபிநாத்,

தேர்தல் முடியறவரைக்கும் ப்ரேக் விட நான் யாரோடவாச்சும் கூட்டணி வச்சிருக்கேனா என்ன?

நன்றி சரவணகுமார், சீதா, ஏலியன்_எஸ் எல்.

Radha Sriram said...

ரொம்ப நாள் கழிச்சு same old penathalar.:):) மெட்லி ரவுண்ட் சூப்பெர்..:):)ஷேவாக் மாதிரி அடிச்சு ஆடுங்க....

இராமநாதன் said...

உமக்கு மெல்ல அவல் கெடச்சுட்டதா? வாழ்க வளமுடன்..


அப்புறம் திட்டத்தை ஒத்திப்போட்டது அரசியல் சாணக்கியமய்யா...கடந்த நூற்றாண்டுல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கருநாடக அரசுடன் சுமுகமா பேசி காவிரி மேட்டர தீத்துவச்சது போல, இதுலயும் செஞ்சிடலாம்னு யோசிச்சுகிட்டிருக்காரு போல. உமக்கேன் எரியிது?

தஞ்சாவூரான் said...

//நடுவர் 1: கான்சப்ட் ரொம்பப் புதுமையா யோசிச்சிருக்காரு.. ஓட்டு வாங்கணும்னா எந்த எல்லைக்கும் போகத்தயார்ன்றத அழகா வெளிப்படுத்தினாரு.. ஆனா.. ஆட்டம் கொஞ்சம் - இல்லை, ரொம்பவே அதிகம்தான். தன்னோட ஸ்டேஜ்லே மட்டும் ஆடாம, அடுத்த ஸ்டேஜுக்கும் போயி ஆடினார் பாருங்க.. அது ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட்.. என் மார்க்ஸ் : 7//

:)

நான் இப்போ சைலன்ட் ஜட்ஜா இருக்கிறதாலே ரெண்டு மாச பிரேக் முடியுற வரைக்கும், மார்க் சொல்ல மாட்டேன் :)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ராதா ஸ்ரீராம். (same old penathalarன்றது வாழ்த்தா வசவா?)

டாக்டர், ராங் காபி பேஸ்ட்? இங்கே கலைஞரைப்பத்தியோ, அவர் டெசிஷனைப் பத்தியோ இதுவரை ஒண்ணும் இல்லையே ;-)

பினாத்தல் சுரேஷ் said...

தஞ்சாவூரான்,

5 நிமிஷ போட்டிக்கு முடிவு சொல்ல 2 மாசம் தள்ளி வைக்கிறீங்களா? நீர்தானய்யா சூப்பர் ஜட்ஜ்!

சரவணகுமார் said...

///ஷேவாக் மாதிரி அடிச்சு ஆடுங்க....///

எந்த மாட்ச்சுன்னு சேர்த்தே சொல்லிடுங்க.:) இல்லையின்னா அஹமதாபாத் டெஸ்ட் மாதிரி ஆடிறப் போறாரு.

Anonymous said...

லோஃபர் நன் மகனே! ஏனு ஷாட்டா தும்பா சேர்சித்தா? நம்ம எடியூரப்பா பக்கே தப்பாகி மாத்தாடுதாயிதியா? சும்னே திகா மூச்கோ கெல்சா மாடு! பெங்களூரு ஹத்ரா பந்த்ரே நின் தலே கீத்துபிடுத்தாயிதினி.

தருமி said...

கற்பனை சும்மா காவிரி ஆத்துத் தண்ணி மாதிரில பாய்ஞ்சு ஓடுது ...

பினாத்தல் சுரேஷ் said...

சரவணகுமார்,

//எந்த மாட்ச்சுன்னு சேர்த்தே சொல்லிடுங்க.:) இல்லையின்னா அஹமதாபாத் டெஸ்ட் மாதிரி ஆடிறப் போறாரு.//

:( வாழ்த்தா வசவான்னு டவுட்டா கேட்டேன். நீங்க டவுட்டே இல்லாம தெளிவா ஆக்கிட்டீங்க :(

அனானி..

அய் சபாஷ்.. பதிவு நல்லா இருக்குன்னு சொல்றீங்க இல்லியா? தாங்க்ஸ்!

தருமி..

ரொம்ப நாள் கழிச்சு... நன்றி வருகைக்கு.

ச்சின்னப் பையன் said...

சூப்பர்!!! அடுத்த பாகத்தை சீக்கிரம் போடுங்க!!!

தருமி said...

//ரொம்ப நாள் கழிச்சு//
அப்டியா? நெஜமாவா? அப்டின்னா தப்புத்தான். மன்னிச்சிக்கோங்க வாத்தியாரே!

கோபி(Gopi) said...

:-))))

//back to form! தொடருங்க!//
ரிப்பீட்டேஏஏஏஏ

//ரொம்ப நாள் கழிச்சு same old penathalar.:):) மெட்லி ரவுண்ட் சூப்பெர்..:):)ஷேவாக் மாதிரி அடிச்சு ஆடுங்க....//
டபுள் ரிப்பீட்டேஏஏஏ

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சின்னப்பையன். போட்டுட்ட்டோமில்ல!

ஆமாம் தருமி.. நானேகூட போஸ்ட் போட்டு நாளாச்சா.. பாதி ப்ரச்சினை எங்கிட்டதான் ;)

நன்றி கோபி..

 

blogger templates | Make Money Online