தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் க்ரோர்பதி நிகழ்ச்சியில் எல்லாக்கேள்விக்கும் சரியான விடை சொன்னது எப்படி?
அ. அவன் அறிவாளி
ஆ. அவன் புத்திசாலி
இ. அவன் ஏமாற்றினான்
ஈ. எழுதிவைக்கப்பட்ட விதி.
போலீஸ் ஸ்டேஷன். லாடம் கட்டப்பட்ட நிலையில் சுடலைமுத்து..
"உனக்கு எப்படி எல்லா கேள்விக்கும் விடை தெரியும்?"
"எனக்குத் தெரியும்"
"பெரிய பெரிய ப்ரொபஸர்ங்க, ஐ ஏ எஸ் ஆபீஸருங்க எல்லாம் 4 கேள்வி தாண்டறதில்லை.. உனக்கு மட்டும் எப்படி தெரியும்?"
"தெரியும்"
"நீ யாரு? எந்த ஊர்லே இருந்து வந்தே?"
"மதுரைக்குப் பக்கத்துல திருமங்கலம்னு ஒரு கிராமம்.. அங்கேதான் நான் வளர்ந்தது.. டீக்கடை வச்சு பொழைச்சுக்கிட்டிருந்தேன்"
காட்சி மில்லியனேர் செட்டுக்கு மாறுகிறது.. நிகழ்ச்சி நடத்துபவர் ஆரம்பிக்கிறார்:
"வாருங்கள் நாம் மில்லியனர் நிகழ்ச்சி விளையாடலாம்... நம் எதிரே இருப்பது திருமங்கலத்தில் இருந்து வந்திருக்கும் சுடலைமுத்து.. சுடலைமுத்து என்ன செய்றீங்க?"
"டீக்கடை வச்சிருக்கேன்"............(தேவையான அளவு அவரைக் கிண்டல் செய்ததன் பின்)..
"இதோ உங்களுக்கான முதல் கேள்வி.. ஆயிரம் ரூபாய் நோட்டில் யார் படம் போட்டிருக்கும்?
அ. இந்திரா காந்தி
ஆ. நேரு
இ. ரஜினிகாந்த்
ஈ.காந்தி
ப்ளாஷ் பேக்:
நானும் எல்லா எலக்ஷனிலும் குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் தான் ஓட்டுப்போட்டு கிட்டிருந்தேன்.. திடீர்னு ஒரு நாள் டிவியில மட்டும் பாத்த பெரிய மனுஷங்க எல்லாம் ஊருக்கு வந்தாங்க..
வீட்டுக்குள்ள ஒழிச்சு வச்சிருந்த ரேஷன் கார்டு .. வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துகிட்டு ஓடிப்போனேன்.. கும்பலையெல்லாம் விலக்கிட்டு உள்ளே நுழைஞ்சேன்.. அப்ப அதைப்பாத்துட்ட்உ ஒரு பெரிய மனுசன் எனக்கு ரூபாய் நோட்டு ஒண்ணு தந்தாரு.. அதில..
போலீஸ் ஸ்டேஷன்..
கான்ஸ்டபிள் சொல்கிறார்: ஆமாம் சார்.. எனக்கு கூட அப்பதான் 1000 ரூபாய்க்கு நோட்டு இருக்குனே தெரியும்..
மில்லியனர் செட்..
"வாழ்த்துக்கள்.. திருமங்கலம் டீக்கடைக்காரருக்கு 1000 ரூபாய் பரிசு.."
"3000 ரூபாய்க்கான இரண்டாம் கேள்வி.. தயாரா?"
"தயார்"
"மின்சார விளக்கு எரிய முக்கியமான தேவை எது?
அ. நெருப்பு பெட்டி
ஆ. தீப்பந்தம்
இ. மேண்டில்
ஈ.மின்சாரம் "
ப்ளாஷ்பேக்:
"என்னாய்யா டீ போட்டிருக்கே.. ஒரே உப்பா கரிக்குது"
"மன்னிச்சுக்கங்க.. சக்கரையும் உப்பும் பக்கத்துல இருந்துச்சு.. உப்பைப் போட்டுட்டேன் போல.."
"ஒரு மெழுகுவத்தி கொளுத்திக்க வேண்டியதுதானே.."
"எல்லாம் தீந்து போச்சுங்க.. நேத்து வரிக்கும் கரண்டே கட் ஆவலையா? அதனால தேவைப்படல. எலக்ஷன் தான் முடிஞ்சு போச்சே.. இதோ போய் வாங்கி வரேன்"
கரவொலி சத்தம் மில்லியனர் அரங்கை நிறைக்கிறது.
"20000 ரூபாய்க்கான பரிசை வாங்கிச் செல்கிறார் திருமங்கலம் சுடலைமுத்து"
"இவ்வளவு பெரிய அமவுண்டை பார்த்திருக்கிறீர்களா சுடலைமுத்து?"
"எங்கேங்க? எங்க வீட்லே மொத்தம் 2 வோட்டுதான். பக்கத்து வீட்டு பரமர் 10 வோட்டு மொத்தமா வச்சிருந்தான்.. அள்ளிட்டான்"
"கவலைப்படாதீங்க.. நீங்க இங்கேயும் அள்ளலாம்"
"ஆறாவது கேள்வி.. தயாரா?"
"கேளுங்க"
"உளியின் ஓசை படத்தின் கதை வசனகர்த்தா யார்?
அ.கலைஞர்
ஆ.ராம நாராயணன்
இ. அகிரா குரசோவா
ஈ.மணிரத்னம்"
ப்ளாஷ்பேக்:
"மச்சான் என்னை சினிமாக்கு கூட்டிகிட்டு போறதா சொல்லி ஏமாத்திகிட்டே இருக்கே"
"இதோ.. இன்னிக்கு கூட்டிட்டு போறேன்.. வார்டு கவுன்சிலர் வந்தாரு.. எல்லாருக்கும் டிக்கட் தந்தாரு.."
"ப்ரீயாவா?"
"ஆமாம்.. எனக்கு மட்டுமே 10 டிக்கட் தந்தாரு.. முடிஞ்சா ப்ளாக்லே வித்துட்டு அதுலயும் கொஞ்சம் பணம் பாக்கலாம்"
படம் பார்க்கிறார்கள்.
"தோ பாரு.. உனக்கும் எனக்கும் இனிமே எந்த சங்காத்தமும் கிடையாது.. எங்கப்பன் ஊட்டுக்கு போறேன் நான்.. சினிமா கூட்டுட்டு போறானாம் சினிமா.. தியேட்டர்லே தனியா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? இனிமே என்னைப்பாக்க வராதே!"
மில்லியனேர் செட்
"சரியான விடை சுடலை.. நீங்கள் 40000 ரூபாய் ஜெயித்துவிட்டீர்கள்"..
போலீஸ் ஸ்டேஷன்:
"தில்லானா மோகனாம்பாள் யார் வசனம் சொல்லு பாக்கலாம்?"
"எனக்குத் தெரியாது"
"அதுவே தெரியாது.. இது எப்படி தெரியும்?'
"அவங்க அந்தக் கேள்வி கேக்கலையே!"
மில்லியனர் செட்
"1,60,000 ரூபாய்க்கான அடுத்த கேள்வி:
தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
அ.பாம்பே
ஆ.ஹாங்காங்
இ.டெல்லி
ஈ.சென்னை"
"இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது.. ஆடியன்ஸ் போல்"
போலீஸ் ஸ்டேஷன்..
"இந்தக் கேள்விக்கு உனக்கு விடை தெரியாதா? குழந்தை கூட சரியாகச் சொல்லுமே?"
"படித்த குழந்தை சரியாக்ச் சொல்லும்.. எனக்குத் தெரியாது"
மில்லியனர் செட்டில் கரவொலி.
"ஆஹா.. நம்ம டீக்கடைக்காரர் எல்லாக் கேள்விக்கும் சரியான விடை சொல்லி கலக்கிகிட்டிருக்கார்.. இன்னும் இரண்டு லைப் லைன் வேற வச்சிருக்கார். 320000 ரூபாய்க்கான ஒன்பதாவது கேள்வி.. தயாரா?"
"தயார்.."
"மதுரையில் டிவி பார்க்க எந்த கேபிள் கனெக்ஷன் வேண்டும்?
அ. அரசு கேபிள்
ஆ.சுமங்கலி கேபிள்
இ. ராயல்
ஈ. ஹாத்வே"
ப்ளாஷ்பேக் விரிகிறது..
"வெட்றா அந்தக் கம்பத்தை.."
"அண்ணே பாத்து வெட்டுங்கன்னே.. டீக்கடை ஓலைச் சாரம் அதோட ஒட்டி இருக்கு"
"இவன் எவண்டா.. அண்ணன் கேபிள்லே தெரியாத சானல் எங்கயும் தெரியக்கூடாதுன்னு பாடுபட்டுகிட்டிருக்கோம்.."
வெட்டிய கம்பம் கீழே விழுகிறது..டீ பாய்லரும் சேர்த்து.
போலீஸ் ஸ்டேஷன்.
"பத்து நாள் ஆச்சு எனக்கு சூடுபட்ட கொப்பளம் ஆற"
மில்லியனர் செட்
"சரியான விடை.. கலக்கறீங்க சுடலை.."
"10 ஆவது கேள்வி..
"லட்டு தயாரிக்க என்ன தேவை?
அ. கடலை மாவு, சர்க்கரை, எண்ணெய்
ஆ.மைதாமாவு சர்க்கரை எண்ணெய்
இ. அரிசிமாவு, சர்க்கரை, எண்ணெய்
"விடை தெரியுமா தெரியாதா?"
"கேள்வி ரொம்பக் கஷ்டமா இருக்குது"
"வழக்கம் போல ப்ளாஷ்பேக்குக்கு போக வேண்டியதுதானே?"
ஈ. இவற்றில் எதுவும் இல்லை"
"விடை தெரியுமா தெரியாதா?"
"கேள்வி ரொம்பக் கஷ்டமா இருக்குது"
"வழக்கம் போல ப்ளாஷ்பேக்குக்கு போக வேண்டியதுதானே?"
ப்ளாஷ்பேக்:
"சுடலை.. லட்டு கொடுக்கறாங்களாம்.. போய் வாங்கல?"
"அடப்போடா.. அவன் அவன் வாஷிங் மெஷினும் டிவியும் கொடுக்கறான்.. இவங்க போயும் போயும் லட்டுதான் தராங்களா?"
"அட.. இது சாதா லட்டு இல்லைடா..வாங்கிப் பிரிச்சுப் பாரு"
மில்லியனர் செட்
"விடை ஈ..இவற்றில் எதுவும் இல்லை"
"ஷ்யூர்? கான்பிடண்ட்?"
"ஆமாம்"
"எப்படி சொல்றீங்க?"
"தங்கத்தைப் பத்தி வேறெந்த விடையிலேயும் இல்லியே?"
"வாவ்.. சரியான விடை"
"13 ஆவது கேள்விக்கு வந்துட்டீங்க.. 50,00.000 ரூபாய் இந்தக்கேள்விக்கு சரியான விடை சொன்னா கிடைக்கும்"
"இவற்றுள் எது கலவரத்தை உடனடியாக உண்டாக்கும்?
அ. பங்காளிச் சண்டை
ஆ. கடன் பாக்கி
இ. ஆபாசமாகத் திட்டுதல்
ஈ. கருத்துக் கணிப்பு"
ப்ளாஷ் பேக்..
"எல்லாக் கடையையும் மூடச்சொல்லுங்கடா.. மேயர் அம்மா வராங்க.. "
"இவன் கடையை உடைச்சு போடுங்கடா"
"டே இருடா.. பத்திரிக்கை ஆபீஸுக்குதான் மொதல்ல போகணும்.. சூடா ஒரு டீ குடிச்சுட்டு போலாம்.. எங்களுக்கெலாம் டீ போடுறா சுடல.. க்ரிஷ்ணாயில் வச்சிருப்பியே? அந்த டின்னை எடுத்துக்கங்கடா கிளம்பலாம்"
போலீஸ் ஸ்டேஷன்..
"ஆச்சரியமா இருக்கு உன்னைப்பாத்தா.. கேள்விக்கு எப்படி பதில் சொல்லி ஏமாத்தினேன்ன்னு கேட்டா அதுல இருந்து தப்பிக்கறதுக்கு கலவரத்துக்கு க்ரிஷ்ணாயில் சப்ளை பண்ணேன்னு ஒத்துக்கற.. இதுக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?"
"என்ன ஒரு இருபதாயிரம் கிடைக்குமா?"
"ஷார்ப்பா இருக்காண்டா"
மில்லியனேர் செட்
"சுடலைமுத்து, நீங்க ரொம்ப கேர்புல்லா இருக்கணும். ஒரு கோடிக்கான கேள்வி இது. தயாரா?"
"தயார் சார்"
"இதோ உங்கள் கேள்வி"
"இவற்றுள் எது இலவசமாகக் கிடைக்காது?
அ. டிவி
ஆ. கேஸ் ஸ்டவ்
இ. மில்லி
ஈ. மல்லி"
"குழப்பமா இருக்கே சார்.. டிவி எங்க ஊருக்கு கிடைச்சிருச்சு.. மத்ததுல.."
"மில்லியா.. மல்லியா கேஸா?"
"குழப்பமா இருக்கு சார்.. 50/50 ஆப்ஷன் உபயோகப்படுத்தறேன்"
"சரி.. கம்ப்யூட்டர், ரெண்டு தவறான விடையை அழிச்சுடுங்க"
"இ. மில்லி, ஈ. மல்லி.. எது சரியான விடை?"
"இப்பவும் சரியாத் தெரியலையே சார்.. எலக்ஷன் டைம்ல மட்டுமா எல்லா டைம்லேயுமா சார்?"
"அது எனக்குத் தெரியாது.. விடை இ. மில்லியா ஈ. மல்லியா?"
"தெரியலையே சார்"
"அப்ப விடை இ. மில்லியாவும் இருக்கலாம், ஈ.மல்லியாவும் இருக்கலாம் இல்லையா?"
"ஓக்கே சார்.. சரியான விடை ஈ. மல்லி"
"ஷ்யூர்? இ.மில்லியாவும் இருக்கலாம் இல்லையா?"
"இருக்கலாம் சார். ஆனா என் விடை ஈ.மல்லிதான்"
"ஓக்கே கம்ப்யூட்டர் கப்யூட்டர் ஈ மல்லியாம். லாக் பண்ணித் தொலைங்க.. லாக் பண்ணித் தொலைங்க"
"ஆ! ஈ மல்லி சரியான விடை.. நீங்கள் இப்ப ஒரு கோடீஸ்வரர்.. அடுத்த கேள்வி,.."
பாங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
"ஆ! அடுத்த கேள்வி நாளை இதே நேர நிகழ்ச்சியில கேட்கப்படும்.. நன்றி"
செட்டை விட்டு வெளியே வந்த நடத்துநர் "போலீஸ் ஸ்டேஷன், சுடலை ஏமாத்துறான்.. அவனை அடிச்சு உண்மையைக் கண்டுபிடிங்க"
போலீஸ் ஸ்டேஷன்.. "எப்படிடா ஈ மல்லின்னு சரியா சொன்னே?"
"எலக்ஷன் டைம்லே நெறய மில்லி ப்ரீயா கிடைச்சுது சார்.. மல்லி எப்பவுமே கிடைச்சதில்ல.. அதான் சொன்னேன்.."
"சரி.. திருமங்கலத்துக்காரன் எல்லாரும் சொல்ற மாதிரிதான் கேள்விய செட் பண்ணி இருக்கானுங்க கேனப்பயலுங்க.. அவனுங்க கிட்ட பிரச்சினைய வச்சுகிட்டு உன்னை அடிக்கச் சொன்னான் பாரு.. அவனைத்தான் உதைக்கணும்.."
மறுநாள் செட்டில்:
"வாங்க சுடலைமுத்து.. உங்ககிட்ட கடைசிக் கேள்வி கேட்கணும்.. இதுக்கு சரியான விடை சொன்னா உங்களுக்கு ரெண்டு கோடி.. தப்பான விடை சொன்னா, அய்யா ஜாலி.. நாங்க எதுவுமே கொடுக்க வேணாம்"
"கேளுங்க சார் கேள்வி"
"இந்தியாவின் பிரதம மந்திரி யார்?
அ. கலைஞர் மு கருணாநிதி
ஆ.முலாயம் சிங் யாதவ்
இ. மன்மோகன் சிங்
ஈ.லாலு பிரசாத் யாதவ்."
"சுலபமான கேள்விதான்.... இல்ல?"
"எனக்கு இதுக்கு விடை தெரியாதே?"
"ஏமாத்தாதீங்க.. இதுக்கா விடை தெரியாது?"
"நெஜமாதான் சொல்றேன் சார்..போன் அ பிரண்ட் போடலாமா?"
"யாருக்கு?"
"இந்தக் கேள்விக்கு இப்ப சரியான விடை தெரிஞ்ச ஒரே ஆளுக்கு.."
"யாரது?"
"சோனியா காந்தி!"
***************************************************************************
தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் க்ரோர்பதி நிகழ்ச்சியில் எல்லாக்கேள்விக்கும் சரியான விடை சொன்னது எப்படி?
அ.
ஆ.
இ.
ஈ. எழுதிவைக்கப்பட்ட விதி.
இல்லை.. எல்லாம் நம் தலைவிதி!
71 பின்னூட்டங்கள்:
//தோ பாரு.. உனக்கும் எனக்கும் இனிமே எந்த சங்காத்தமும் கிடையாது.. எங்கப்பன் ஊட்டுக்கு போறேன் நான்.. சினிமா கூட்டுட்டு போறானாம் சினிமா.. தியேட்டர்லே தனியா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? இனிமே என்னைப்பாக்க வராதே!"///
:)))))))))))))))))))))))))
//இந்தக் கேள்விக்கு இப்ப சரியான விடை தெரிஞ்ச ஒரே ஆளுக்கு.." "யாரது?" "சோனியா காந்தி!" //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ
உண்மைதான்! :)
சான்ஸே இல்ல...பின்னி பெடலடுத்துட்டீங்க :)) என்ன இன்னைக்கும் எல்லா பதிவர்களும் ஃபுல் பார்ம்ல இருக்குறீங்க?
Small Suggestion:
படம் அடுத்த வாரம் தான் இங்கே ரீலீஸ்,இந்த பதிவை ஒரு மாதம் கழித்து வெளியிட்டிருந்தால் நிறைய பேருக்கும் புரிந்திருக்கும்.
அருமை.. ARR music போட வேண்டியதுதான் பாக்கி.. பின்னிட்டீங்க..
பினாத்தலாரே,
ஸ்ப்ப்ப்பாஆஆஆஆஆ... உள்குத்து ரொம்ப பலமா இருக்கு... பாத்துங்க... ஊர் பக்கம் வரும்போது மறுபடியும் காத்துல பறக்க வச்சிடப் போறாங்க...
:-)))))
One word to describe !!! Fantastic imagination.. Forward this to Lollusaba if Vijay TV have guts, let them make as an episode...
அபாரம்.
அன்புடன்
டோண்டு ராகவன்
ஹைய்யோ.. ஹைய்யோ..! ஏன் இந்த கொலைவெறி.. :) :)
இல்லை.. இல்லை... எல்லாம் எங்கள் தலைவிதி!
:)))))))))
இறுதியில் வயிற்றுவலி மருந்திற்கும் சுட்டி கொடுத்திருக்கலாம் :)))))))))))
வேறொன்றுமில்லை,சிரித்து சிரித்து வயிற்றுவலி வந்துவிட்டது :)
அங்கதத்திற்கு சுரேஷ்!
தலைவரே புல் பார்ம்ல வந்துருக்கீங்க. சேவாக் மாதிரி அடிங்க. ஆனா காம்பீர் மாதிரி கன்ஸிஸ்டன்சி மெயின்டைன் பண்ணுங்க.
auto coming.....ippo thaaney udambu sariyayirukku?
auto coming.....ippo thaaney udambu sariyayirukku?
Super!!!!!!!!!!!!!!!!!
SUPER.
பின்னிப்பெடலெடுத்து இருக்கீங்க.. ;-))
//இந்தக் கேள்விக்கு இப்ப சரியான விடை தெரிஞ்ச ஒரே ஆளுக்கு.."
"யாரது?"
"சோனியா காந்தி!"//
உள்குத்துலயும் செமகுத்து இதுதான்.................
முடியல
அருமையான கற்பனை. பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன் :-)
Superappu!!
கலக்கல் பினாத்தலாரே.. பின்னிட்டீங்க...
போட்டி முடிந்த பின் பேட்டி.
_________________________________
கே: சுடலைமுத்து சார் - இந்தப் பரிசுப் பணத்தை வெச்சு என்ன செய்யப் போறீங்க?
ப: ஒரு சின்ன லெவலில் 30-40 லட்ச ரூபாய் இன்வெஸ்ட் பண்ணி ஒரு வார்ட் கவுன்சிலர் ஆகலாமுன்னு பார்க்கறேன்.
அது சரியா வொர்க் அவுட் ஆச்சுன்னா 2015ல் நான் தான் முதல்வர். என்ன சொல்லறீங்க!
கே: கேள்விப் போராளி அண்ணன் கோ சுடலைமுத்தார் வருகிறார். பராக் பராக் பராக்!
__________________________________
(பின்னணி குரல் அப்போ இந்த ரெண்டு கோடி எல்லாம் ஜுஜுபி. அப்போ எடுக்க வேண்டியது திருமங்கலம் ட்ரில்லியனேர்)
அடப்பாவமே! எல்லாரையும் துவைச்சு தொங்க போட்டு கிளிப்பையும் மாட்டிவிட்டா என்ன அர்த்தம்:-)))
/அருமை.. ARR music போட வேண்டியதுதான் பாக்கி.. பின்னிட்டீங்க..//
--ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
இந்தியாவில் படம் ரிலீசாகும் முன்னாலே அவசர அவசரமாக ஸ்லம்டாக் மில்லியனர் பட விமர்சனம் போடும் போதே சென்ஸ் பண்ணாம விட்டுட்டனே..ஆட்டம் பாம் பின்னால வருதுன்னு.
//முடிஞ்சா ப்ளாக்லே வித்துட்டு அதுலயும் கொஞ்சம் பணம் பாக்கலாம்"///
இவ்வளவு நம்பிக்கையா வாங்கிட்டு போரவன் உடன்பிறப்பா / கட்சித் தொண்டனா மட்டும் தான்யா இருக்க முடியும் :)
கலக்கிட்டீங்க போங்க.துபாய்க்கு டாடா சுமோ அனுப்ப முடியாதுங்குற தைரியமா?( ஆட்டோவெல்லாம் ஓல்ட் ஃபாஷன்)
பினாத்தலாரே!!! போட்டு தாக்கிட்டீங்க... ரொம்பவே சூப்பர்... :-))))
என்னை மாதிரி அப்பாவிங்களுக்கும் எல்லா உ.கு.வும் புரியிற மாதிரி எழுதியிருக்கீங்க சுரேஷ். (பாத்தீங்களா. என்னமோ எல்லாமே புரிஞ்ச மாதிரி போற போக்குல சொல்லிட்டேன். தேர்வெல்லாம் வைக்காதீங்க. எனக்குத் தேர்வும் தெரியாது; தேர்தலும் தெரியாது). :-)
அப்புறம் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன். திருமங்கலம் கிராமம் கிடையாது. சென்னைக்குத் தாம்பரம் எப்படியோ அதே போலத் தான் மதுரைக்குத் திருமங்கலம். மதுரையே ஒரு பெரிய கிராமம் தான்னு சொல்றீங்களா? அப்ப ஒன்னும் சொல்றதுக்கில்லை. அப்பாலிக்கா பேசிக்கலாம்.
பினாத்தலார் பின்னி பெடல் எடுத்துவிட்டார்.ரொம்ப நாளுக்கு பிறகு சூப்பர் போஸ்ட். ஆனால் சிரிப்பை விட , நாட்டு நிலைமை இப்படி சிரிப்பாய் சிரிக்கிறதே என்று வருத்தமாகவும் இருக்கிறது.
அட்டகாசம் பெனத்தாலாரே...
செம ஃபார்ம் போல :)
சுபர்ப்!
படமும் பாத்துட்டேன். நன்றி சுரேஷ்!
சூப்பர். உங்களுக்கு ஒரு கொல்டன் ஈகிள் (பியர்) பரிசு வழங்கிடலாம். கொல்டன் குளோப் ஏற்கனவே வாங்கிட்டாங்க.
சூப்பர்!! பினாத்தல் சார் ஃபுல் ஃபார்ம்!! அடிச்சு ஆடுங்க.
படம் இனிமேல் தான் பாக்கணும்.
தமிழ்(மண) வழக்கப்படி ஒரு நெகடிவ் குத்து குத்திட்டேன்!
உளியின் ஓசை மேட்டர் மாஸ்டர் க்ளாஸ்!
தைரியலட்சுமியோட கூட்டணி போட்டாச்சா? ஒண்ணுமில்லை... சொந்தப்பேர்ல சொந்த ப்ளாக்லயே வந்திருக்கேனு ஒரு சந்தேகம் தான்!
தலைவா.. கலக்கிட்டீங்க..
:-))
பின்னிப்பெடலெடுக்கறதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. இந்த பதிவை படிச்சப்புறம்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
சிம்ப்ளி சூப்பர்ப்
ஓட்டு போடும் பாட்டாளியை பதிவு போட்டு கேலி செய்யும் உங்கள் ஆதிக்க போக்கினை இந்த நாடறியும் நாள் தூரத்தில் இல்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன். :-))
ஆனாலும் அநியாயத்துக்கு போட்டு தாக்கறீங்கப்பா :-) சூப்பரா இருக்குப் போங்க.
காட்சி மாற்றங்களுடன் காமெடிய கலந்து கட்டி எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
சுரேஷ் பாக் டு ஃபார்ம்.....!!!
இன்னும் படம் பாக்கல இருந்தாலும் ரெவ்யூசெல்லாம் படிச்சுட்டேன்.:):)
அரசியல் அறிவு இன்னும் கொஞ்சம் இருந்திருந்தா இன்னும் நல்லா ரசிச்சிருக்கலாம்னு தோணுச்சு.:):)
கலக்கல் நண்பரே!
நேற்று தான் படம் பார்த்தேன். இன்று உங்கள் பதிவு. பொருத்தி பார்க்கும் போது மிகுந்த கச்சிதம்.
பாவம் நம் தமிழக மக்கள்.
வாழ்த்துக்கள்!
//"இந்தக் கேள்விக்கு இப்ப சரியான விடை தெரிஞ்ச ஒரே ஆளுக்கு.."
"யாரது?"
"சோனியா காந்தி!"//
:))
ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க தலைவா!
சூப்பர்ப்! வெல்டன்!
Ghilli Post...Beyond humour I could see your amazing creativity and Brilliance in this post. Ana manasukku than romba kashtama erukku athu ennu theriyalai. Kalakki podu...
ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ..
எப்படிங்க????
எப்படி?
எப்படி?
எப்படி இதெல்லாம்:-))))))))))
One word: Fantastic!
ம் ம் ம். எத சொல்ல எத விட... அருமை, அற்புதம், அட்டகாசம்..
சில பேர் சொன்ன மாதிரி நாட்டு நிலமையை பார்த்தா கஷ்டமா தான் இருக்கு.. ஆனா முன்ன மாதிரி இல்லாம, சம்பாதித்த காசை மக்களுக்கும் கொஞ்சம் கொடுக்கிறாங்க எண்ணுகிறபோது கொஞ்சம் மகிழ்ச்சி...
-அரசு
தப்பு தான், ஆபிஸ் வந்ததும் முத வேலையா உம்ம பதிவ படிச்சது பெரிய்ய தப்பு தான். சிரிச்சு சிரிச்சு முடியல. :)))
உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
எல்லாம் சரி, அமீரகத்துல ஆட்டோ சர்வீஸ் கிடையாதோ? :p
சுரேஷ் அண்ணா,
இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு தில் ஆகாது. பாத்து செய்யுங்க ஆட்டோ வர போகுது. :)
"ஓக்கே கம்ப்யூட்டர் கப்யூட்டர் ஈ மல்லியாம். லாக் பண்ணித் தொலைங்க.. லாக் பண்ணித் தொலைங்க"
:)) :))
very funny post..
Superrrrrrrrrrrrr
எல்லாம் ஒக்கே. கொஞ்சம் சறுக்கல்..
க்ரிஷ்ணாயில் என்றால் தென் மாவட்ட மக்களுக்கு என்னன்னு தெரியாது..
குமரனுக்குக் கூட இந்த ஆப்வியஸ் தவறு தெரியலையே!
சான்ஸே இல்ல...பின்னி பெடலடுத்துட்டீங்க //
இதுக்கு ரிப்பீட்டு சொல்லிக்கறதை விட எனக்கு வேற வார்த்தை கிடைக்கல உங்களைப் பாராட்ட.
கோல்டன் க்லோபின் காமெடி அவார்ட் உங்களுக்குதான்.
அன்புடன், கி.பாலு
அய்யா சாமி பெனாத்தலாரே.. முடியல.. சீக்கிறமா வயிறு புண் சரியாக மருந்து வாங்கி அனுப்புங்க... எங்க ஊர்ல ஒன்னும் இடைத் தேர்தல் எல்லாம் இல்லை.. அதானல் என்கிட்ட காசும் இல்லை.. :)))
இது பாலோ அப்புக்கு.. :)
//முதல் முறையாக வலைப்பதிவுக்கு வந்துள்ளேன்.
எனக்கு எழுத வராது. ஆனாலும் எழுதுவேன்.
(ஒரு பழைய ஜோக்:
என் மாப்பிள்ளைக்கு சீட்டாட வராது, ரேஸ் ஆட வராது..
பரவாயில்லையே! நல்ல விஷயம் தானெ!
அவருக்கு ஆட வராதுன்னு தான் சொன்னேன். ஆட மாட்டாருன்னா சொன்னேன்?)
முயற்சி செய்கிறேன்.. நன்றாக கிறுக்குவதற்கு! //
கிகிகி.. சும்மா படிச்சி பார்த்தேன்.. :)
அமர்க்களம்,அட்டகாசம்,பிரமாதம்,பின்னிட்டீங்க,கொன்னுட்டீங்க---ஊஹூம்--இதுக்கும் மேல ஏதாவது வேணும், சொல்வதற்கு.
ellarukum puriyaramadiri eruku.
nattin nilamai kashtam
nandraga rasikumpadi eruku.
appakku padichi kattinen
good & humorpost. nalla erundadhu
ennaipondra arasiyal arivu kuraindavargalukum puriyara madiri erundadhu.
appakku padichi kattinen.
தயாநிதி: கலாநிதி அண்ணே! யார் யாரையோ வெச்சு படம் எடுக்கறீங்க! நம்ம சுரேஷை இயக்குனரா போட்டு ஒரு படம் எடுத்தீங்கன்னா வசூலை அள்ளிடலாம்!
கலக்கல்.... :))
நல்லா யோசிச்சு இருக்கீங்க.
பார்த்து அமிதாப் இதுக்கும் ஏதாவது சொல்லாப்போறாரு..
இந்தியப் பிரதமர்... :))
கணேஷ்
suupppppppppppppppppaaaaaaaaaaaaaaaaaaaaar
vidhya
சூப்பர்...:-)
கலக்கிட்டீங்க பினாத்தல் சார்.
:))
:)))))))))))))))
ஹி ஹி. இன்னும், மில்லீனர் ஜொரம் விட்டு போகலியோ?
தூள்!!
பி.கு: எதேச்சையா தியேட்டர்ல் போயி பாத்த படம் சூப்பர் ஹிட் ஆகரது, இது ரெண்டாம் தடவை.
முதல் முறை, சிக்ஸ்த் ஸென்ஸ் இப்படி ஆனது. ஆனா, அதுக்கு ஆஸ்கார் கிடைக்கல்ல.
:)
அற்புதம்.
காமெடியா - அரசியல் காமெடியெ சொல்லிட்டீங்க.
எனக்கும் சினிமா மேட்டரும், சோனியா மேட்டரும் ரொம்ப பிடிச்சிருந்தது.
பினாத்தலாரே, new meme, from me! Please join!
http://www.kuralvalai.com/2009/01/blog-post_22.html
:)))))))
Sema kalakkal! Dhool macchi!
Amarkkalam! Kilichu kuduthuteenga!
sooperu
-Srini
:-)))))))))))). போட்டுத் தாக்கிட்டீங்க.
sir.. whare are you?
Post a Comment