Jun 13, 2005

துளசி மேடம் மன்னிக்கவும்!

அடுத்தவர் விவகாரங்களைக் கவனித்து வம்பு பேசுபவனுக்கு என்ன தண்டனை கிடைக்க வேண்டுமோ..

அடுத்தவர் ஈ-மெயிலை படிப்பவன் என்ன கதி அடைவானோ..

அடுத்தவர் கடிதங்களைப்படிப்பவன் என்ன நிலை காண்பானோ..

அந்தக் கதி எனக்கும் நேரட்டும் - ஏனெனில் நான் ஒரு பாவி.

துளசி மேடமுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த இரண்டு திரைப்படங்களை நான் பார்த்துவிட்டேன்.

கற்க கசடற, 6'2"

படங்களைப்ப் பார்த்ததே தண்டனை எனினும், துளசி மேடம் உரிமை மீறல் பிரச்சினை எழுப்பாமல் இருக்க வேண்டும் என பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்.

நான் ஒரு மஸாக்கிஸ்ட் - கையில் முள்ளும் மலரும் கேஸட் வைத்துக் கொண்டு இதை யெல்லாம் பார்க்கிறேன்!

8 பின்னூட்டங்கள்:

Vijayakumar said...

//துளசி மேடமுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த இரண்டு திரைப்படங்களை நான் பார்த்துவிட்டேன்.

கற்க கசடற, 6'2"//

ஹி ஹி ஹி :-)))))

அன்பு said...

6'2"
அதான் அவங்களும் பாத்து விமர்சனமும் போட்டாச்சே:)
இருந்தாலும் அக்காட்ட கேட்டுட்டு பாத்திருக்கலாம் நீங்க.

கற்க கசடற...
திரும்பவும் மன்னிப்பு கேட்கறமாதிரி வச்சுக்காதீங்க.

மாயவரத்தான் said...

போனது போகட்டும்... அமுதே, செந்தாழம்பூவே போன்ற படங்களையும் பார்த்துவிட்டு மன்னிப்பு கேட்டிருக்கலாமே!

ப்ரியன் said...

\\போனது போகட்டும்... அமுதே, செந்தாழம்பூவே போன்ற படங்களையும் பார்த்துவிட்டு மன்னிப்பு கேட்டிருக்கலாமே! //
ஏனுங்க "காதல்செய்ய விரும்பு" "பதவி படுத்தும் பாடு" இதை விட்டுடீங்அ

துளசி கோபால் said...

ஆஹா, பினாத்திக்கிட்டு இருக்குற சுரேஷ்'ம், பாய்ஞ்சு பாய்ஞ்சு பின்னூட்டமிட்ட விஜய்,உஷா, அன்பு, மாயவரத்தான் & ப்ரியன்

உங்களுக்கெல்லாம் வர வர கவனக்குறைவு அதிகமாப் போச்சு:-)))))

தினத்தந்தி, மங்கையர் மலர் இதுகளிலே வர்ற விளம்பரத்தைப் பார்த்து,
ஞாபகசக்தி பில்ஸ் வாங்கி சாப்புடுங்க! ஆமாம்!!!

'கற்க கசடற' இன்னும் எனக்கு வரலையே!!! அதுக்குள்ளே உங்களுக்குக் கிடைச்சதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

அதெப்படி? ' ஃப்ர்ஸ்ட் காப்பி, ஃபர்ஸ்ட் பிரிண்ட் எனக்குமட்டும்தான்' என்ற ஒப்பந்தத்தை மீறின தயாரிப்பாளரைச்
சும்மா விடமாட்டேன். ரெண்டிலே ஒண்ணு பாத்துடணும்:-)))))

துளசி கோபால் said...

ஒப்பந்தம் இப்படி டேஷ் டேஷாயிடுச்சே:-)
'முதல் காப்பி, முதல் ப்ரிண்ட்'ன்னு படிச்சுக்குங்க ப்ளீஸ்!!!

துளசி கோபால் said...

நாந்தான் மறுபடியும்.

அதென்ன என் பேரே ஒரு கேள்விக்குறி ஆயிருச்சு!!!!

???????? இது துளசிதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறேன்!!!!

பினாத்தல் சுரேஷ் said...

ஹி ஹி ஹி பண்ணிய விஜயுக்கும்,

நீளமாச் சிரிச்ச உஷாவுக்கும்

எச்சரிக்கை விடுத்த அன்புக்கும்

இன்னும் தப்பு பண்ணச் சொன்ன மாயவரத்தானுக்கும், பிரியனுக்கும்

கேள்விக்குறி, டேஷ் டேஷ் பற்றிக்கவலைப்பட்ட துளசி மேடமுக்கும்

வந்தனம். வந்தனம். வந்தனம்!!!!!!

 

blogger templates | Make Money Online