Jun 16, 2005

பாவம் குங்குமம் ஆசிரியர்

குங்குமம் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்- ஐ குறை கூறி பலர் எழுதி விட்டார்கள். (நான் கூட ஒரு பதிவு இட்டிருக்கிறேன்).

ஆனால் குங்குமம் ஆசிரியராக இருந்து பாருங்கள், அதன் கஷ்டம் புரியும்.

1. அரசின் குறைகளைக் கூறலாம் - ஆனால் மாநில அரசின் குறைகள் மட்டும்தான் கூற முடியும்.

2. அடுத்த கட்சிகளைப்பற்றிக் குறை கூறலாம் - ஆனால் எந்த நேரத்தில் அந்தக்கட்சி நம் கூட்டணியில் சேருமோ என்று தெரியாது.எனவே அ.தி.மு.க தவிர வேறு எந்தக் கட்சியையும் விமர்சிக்க முடியாது.

3. நல்ல சிறுகதை நாவல் எழுதுகிறவர்கள் குங்குமத்துக்கு அனுப்புவதில்லை. அப்படியே தவறி அனுப்பினாலும் நம்மால் அடையாளம் காண இயலாது.

4. ஜெயமோகன் முதல் ஜெயகாந்தன் வரை - ஒன்று அவர்கள் நம்மைப் பகைத்துக் கொண்டுவிட்டார்கள் அல்லது நாம் அவர்களை!

5. விஜயகாந் முதல் சிம்பு வரை எந்த நடிகரும் நாளை கட்சி ஆரம்பிக்கலாம், நம்முடன் கூட்டு சேரலாம், எனவெ அவர்கள் படத்துக்கு காட்டமாக விமர்சனம் எழுத முடியாது. சன் TV ரைட்ஸ் பிரச்சினை வேறு.

இந்த நிலையில், சினிமக் கிசுகிசு மட்டும்தான் எழுத முடியும், அப்புரம் கொள்கை விளக்கக் கேள்வி பதில்..



இத்தனையும் மீறி நம்பர் ஒண் ஆக வேண்டுமானால் --




அன்னபூர்ணா ஆட்டாவே துணை!

21 பின்னூட்டங்கள்:

மாயவரத்தான் said...

அதெல்லாம் பிரச்னையில்லை.. மக்கள் மாங்கா மடையர்கள் என்ற தங்கள் கட்சியின் கொள்கைப்படி புத்தகம் நடத்துகிறவர்கள் என்பதினால் இன்று ஒரு கருத்து, நாளை ஒரு கருத்து என்று மாற்றிக் கொள்வதில் ஒரு பிரச்னையும் கிடையாது.

Anonymous said...

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|பொருத்தமாக உங்கள் பதிவுக்குப் பினாத்தல்கள் என்று வைத்திருக்கின்றீர்கள். குங்குமம், கதிரவன் தொலைக்காட்சி, கருணாநிதி, இராமதாசு, அன்புமணி இவர்களைவிட்டால், உங்களைப்போன்றவர்களுக்கு வேறொன்றுமே எழுத விடயமில்லை என்று தோன்றுகிறது. மக்கள் மாங்கா மடையர்கள் என்பதை இரசினி இரசிகர்களின் சந்திரமுகியினை வரவேற்றது காட்டாததா?|

மாயவரத்தான் said...

அது என்ன கதிரவன் தொலைக்காட்சி..?! தமிழ்படுத்துவது என்றால் உங்களது ஆனியன் மாசு முதற்கொண்டு, 'ராமதாஸ்' வரை எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும். அரைகுறையாக கதிரவன் தொலைக்காட்சி என்று தமிழ்(ஐ) படுத்துகிறீர்களே?! சம்பந்தம் சம்பந்தமேயில்லாமல் ரஜினியை இழுக்கிறீர்கள். இவரது பதிவு பினாத்தல்களாகவே இருந்து விட்டு போகட்டும். நீங்கள் தான் தெளிவானவராயிற்றே.. ஒரு வலைபதிய ஆரம்பிக்க வேண்டியது தானே! ஊருக்கு தான் உபதேசம்?!

மைக் முனுசாமி said...

சரியாக சொன்னீர்கள் மாயவரத்தான்...

Anonymous said...

மாங்கா மடையர் மாயவரத்தான் புலம்பித் தீர்த்ததற்குப் பதிலாக AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
||பாப்பா அனோனிமாசு எப்போ தமிழ்ப்படுத்துவா, எதை தமிழ்ப்படுத்துவா எங்குறது பாப்பா இச்டம். அதை அந்த ஆண்டவனே வந்தாலும் அப்புடித்தான்னு ரூட்டு போட்டுச் சொல்லமுடியாது. பாப்பா அன்புக்குக் கட்டுப்படுவா, ஆனா, அடக்க நெனைச்சே பாயும்புலி, இரும்புக்கை. இரசினியை இழுத்தால் வேண்டாத இழுப்பு, குங்குமத்தினை இழுத்தால் வேண்டிய இழுப்பென்பதுதான் மாங்கா மக்கள் ஆட்சியின் உச்சக்கட்டமோ? அனோனிமாசு வலை இலேட்டா வந்தாலும் இலேட்டசா வாருவாள்னு மாங்கா மடையர்களுக்குச் சொல்லிக்கொள்கிறாள். ஆனால், மாங்கா மடையர்களான மக்கள் சொல்லிப் பதியமாட்டாள். பாப்பா அனோனிமாசு வழியே தனி. பாபாமாதிரி சட்டையைக் கிழிச்சுட்டு ஆண்டவன் பாத்துப்பான்ங்குற தானும் கீழ்ப்பாக்கம் தன் விசிறிகளும் கீழ்ப்பாக்கமுங்குற கலி முத்தின வழியில்லை பாப்பாவோடது||

வீ. எம் said...

onion mass ஏதோ திமுக , ராம்தாசுக்காக பேசியது போல் தெரியவில்லை... ரசினியை தாக்க வேண்டும்.. எங்கோ , ஏதோ பதிக்க வேண்டும் ..இங்கே அதை செய்துவிட்டார்.. !
ஆனியன் மாஸ் : ரஜினிக்கு ஆதரவாகவும் , எதிராகவும் பல பதிவுகள் , பல வலைப்பூவில் உள்ளது ..
அங்கே நீங்கள் கருத்து கூறலாமே... !

எனக்கென்னமோ ! இந்த "ஆனியன்மாஸ்" வி.கா அல்லது கே எஸ் ரவிக்குமாராக இருக்கும் என தோன்றுகிறது ! :)

Badri Seshadri said...

குங்குமத்தை அவ்வளவு இளப்பமாக எடை போட்டுவிடாதீர்கள். குமுதம் ஆசிரியர் வேலையை விட்டுத் தூக்கப்பட்டதும் குங்குமம் சென்றுள்ளார். குங்குமம் ஆசிரியர் குழு பற்றிய பெரிய செய்தி ஒன்று இந்த மாதத்தில் வெளிவரலாம்.

அரசியல் பற்றி அதிகமாகப் பேசாமலேயே ஒரு நல்ல வெகுஜன இதழை உருவாக்கலாம். அதற்கு சரியான ஆசிரியர் குழுவும், உழைக்கும் சிலரும் தேவை.

பார்த்துக்கொண்டே இருங்கள்...

ப்ரியன் said...
This comment has been removed by a blog administrator.
ப்ரியன் said...

பார்க்கிறது பாருங்க ஆனா விற்பனை டாப் 10 ல குங்குமம்தான் இருக்குங்க அது ஆட்டானால வந்துச்சா இல்ல அம்மிகல்லுனால வந்துசுங்குறது அடுத்த விடயம்
NRS 2005: India Today on top spot; Kungumum registers 600% growth

மாயவரத்தான் said...

//ஆனா விற்பனை டாப் 10 ல குங்குமம்தான் இருக்குங்க//

ப்ரியன்.... தவறான தகவல் அது. விற்பனைக்கும், இத்தனை வாசகர்கள் படிக்கிறார்கள் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. டீக்கடையில் பஜ்ஜி வைத்து தருவதற்கு வசதியாக பல பக்கங்களும், தாளின் தரமும் இருப்பதால் ஒரு நாளிதழ் தமிழகத்தின் அனைத்து டீக்கடைகளிலும் வாங்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் நிறைய பேரால் வாசிக்கப்படும் நாளிதழ் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. அது போல தான் இதுவும். விற்பனையை தணிக்கை செய்யும் நிறுவனத்தின் கூற்றுப்படி இப்போது தமிழகத்தின் நம்பர் 1 பத்திரிகை ஆனந்த விகடன் தான். குமுதம் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த லிஸ்ட்டில் (இலவசங்களை வாரித்தள்ளும்) குங்குமம் வரவேயில்லை.

பார்ப்போம்...
ஆனந்தவிகடனிலிருந்து குமுதத்திற்கு சென்று இப்போது குங்குமம் பக்கம் ஒருவர் போயிருப்பதாக மேலே பத்ரி கூறியிருக்கிறார்.

ஆனியன் மாஸ்.. மரியாதையா பேச கத்துக்கோம்மா.. நீ என்னத்த கிழிக்கப் போறன்னு வலைப்பூ பதிய ஆரம்பிச்சப்புறம் பார்க்கலாம். இப்பவே எதுக்கு பில்டப்பு?!

குழலி / Kuzhali said...

//டீக்கடையில் பஜ்ஜி வைத்து தருவதற்கு வசதியாக பல பக்கங்களும், தாளின் தரமும் இருப்பதால் ஒரு நாளிதழ் தமிழகத்தின் அனைத்து டீக்கடைகளிலும் வாங்கப்படுகிறது//

நீங்கள் எந்த பத்திரிக்கையை மறைமுகமாக சொல்கின்றீர் என அனைவருக்குக்ம் தெரியும்... பஜ்ஜி மடித்து கொடுக்க நாளிதழ் வாங்க வேண்டுமென்ற அவசியமில்ல... பழைய காகிதக்கடையில் அதே 3ரூ 30 பழைய நாளிதழ்கள் வாங்கலாம்....

படிக்கவே தெரியாத பலர் அந்த நாளிதழினால் தான் படிக்க கற்றுக்கொண்டனர், அதுவுமின்றி மிக எளிமையான தமிழில் பாமரனுக்கும் புரிகின்ற மாதிரி, கதை சொல்லும் பாங்கில் உள்ள எழுத்து நடையும் மிக முக்கியமாக நடுநிலைத்தன்மையும் எல்லாவற்றையும் விட அந்தந்த பகுதி செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதாலும் தான் தினத்தந்தி இன்றும் அதிகமானோரால் வாசிக்கப்படுவதால் முதலிடத்தில் உள்ளது....

வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஏதாவது கொளுத்தி போட்டுவிட்டு போகாதீர்கள்

தந்தியின் எளிமையான எழுத்துக்க

Anonymous said...

மந்தை மேயாவரத்தான் சொன்னதாவது:
||ஆனியன் மாஸ்.. மரியாதையா பேச கத்துக்கோம்மா.. நீ என்னத்த கிழிக்கப் போறன்னு வலைப்பூ பதிய ஆரம்பிச்சப்புறம் பார்க்கலாம். இப்பவே எதுக்கு பில்டப்பு?!||

அதற்கு AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|பிடிக்காத கட்சி அரசியல்வாதிகளை எல்லாம் மாங்கா மடையர்கள் என்ற எண்ணத்திலே அலட்சியமாக தூக்கியெறிந்து பேசும் மரியாதையாக மேயத் தெரியாத மந்தையெல்லாம் மரியாதையா மேயக் கத்துக்கச் சொல்லுங்க. பாப்பா அனோனிமாசு மரியாதையா பேசக் கத்துக்குவா. இரசனி மந்தை, பாப்பா அனோனிமாசு வலைப்பூ பதிய முன்னாடியே கிழிப்பேன்னு பில்டப்பு குடுத்தாவா? அப்படி குடுத்தான்னுகூட வெச்சுக்க. கிடக்கட்டும், நீயி வலைப்பூவை இத்தனை நாளா வெச்சுப் பதிஞ்சுதான் என்னத்த கிழிச்சே. பாபா இமயமலைக்குப் போயி சட்டைய கிழிச்சாலும் சாமியோவ்ன்னு கூவுறே. சந்திரமுகில சவாடால் விட்டாலும் சாமியோவ்ன்னு கூவுறே. இதுக்கு அப்பாலே இன்னாத்தை பண்ணிக் கிழிச்சே மேயாவரமே? பாப்பாக்கு தமிழ்ல்லே பதிய கத்துக்குடுக்க முன்னாடி, பாபாவுக்கு தமிழ்ல்லே பேசக் கத்துக்குடு. போய்யா போய்யா போ|

மாயவரத்தான் said...

ஆனியன் மாஸ்... முதலில் நீ ஒழுங்காக தமிழ் எழுத கற்றுக் கொள். அப்புறம் ஊருக்கு உபதேசம் செய்யலாம். போம்மா.. போ..!! பிடிக்காத கட்சியின் தலைவர்களை நான் எங்கே மாங்கா மடையர்கள் என்று சொன்னேன்?! தமிழ் எழுத தான் தெரியாது என்று நினைத்தேன். படிக்கவும் தெரியாதோ? கை நாட்டு கேசா?!

Anonymous said...

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|கசனி மந்தை பரட்டை ஒழுங்கா வாசி. பிடிக்காத கட்சியின் தலைவர்களை நீ எங்கே மாங்கா மடையர்கள் என்று சொன்னதாகச் சொல்லியிருக்கிறேன்? அப்படியாக எண்ணிக்கொண்டிருப்பதாகத்தானே சொல்லியிருக்கிறேன். கைநாட்டுக்கேஸ் டைப்படிக்குமா? கைநாட்டு அருணாசலமுன்னாலும் பால் விக்குதே அதுதான் முக்கியம் தம்பீ. கருணாநிதி, இராமதாசு, இரசனி இதுக்கு அப்பாலிக்கும் இருக்கு பாட்ஷா ஒலகம்|

மாயவரத்தான் said...

//பிடிக்காத கட்சி அரசியல்வாதிகளை எல்லாம் மாங்கா மடையர்கள் என்ற எண்ணத்திலே அலட்சியமாக தூக்கியெறிந்து பேசும் //

//பிடிக்காத கட்சியின் தலைவர்களை நீ எங்கே மாங்கா மடையர்கள் என்று சொன்னதாகச் சொல்லியிருக்கிறேன்? அப்படியாக எண்ணிக்கொண்டிருப்பதாகத்தானே சொல்லியிருக்கிறேன்//

த்தோடா... ஒரே பின்னோட்டத்திலே கவுத்துக்கிற கேசா நீ..?! உன் கிட்டே பேசி பிரயோசனமில்லே தான்.

Anonymous said...

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|மந்தைகிட்ட மேயச் சொன்னால் புரியும். புரியச்சொன்னால், அருணாசலம் மாடு மாதிரி மேயத்தான் செய்யும். த்தோடா பாப்பா அனோனிமாசு நீ தப்பான இடத்திலே மயிலே மயிலே இறகுபோடுன்னு பாடிக்கிட்டிருக்கேம்மா பாடிக்கிட்டிருக்கே. பாறையிலே நீரைத் தேடலாமா? பரட்டைகிட்டே வாசிக்கிறதை புரிஞ்சுக்க எதிர்பார்க்கலாமா?|

Anonymous said...

அட நிறுத்துங்கப்பு!., என்னாது இது சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு., குங்குமம்னு உலகத்தரம் வாய்ந்த பத்திரிக்கையப் பத்தி பேசறத உட்டுப்புட்டு சண்டை போட்டுட்டு இருக்கிங்க., குங்குமம் நல்ல இதழ்., வல்ல இதழ்., நாட்டுக்கு நன்மையச் சொல்ற இதழ்., ஆனந்த்தத்தையும், குமுதத்தையும் கடாசித் தள்ளிட்டு அல்லாரும் குங்குமம் படிங்க., பஜ்ஜி கட்ட உதவுனாலும் பரவாயில்ல உதவாக்கரைங்க பாராளுமன்றம் (எதுக, மொகனைக்கிய்யா) கட்ட உதவறது இல்ல குங்குமம். வர்ட்டா!!

பினாத்தல் சுரேஷ் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

வெங்காயப் பொருண்மை அவர்களே:

நான் இனிமேல் பதிவு போடுமுன், இந்தக் கருத்தைப்பற்றி எழுதலாமா, இப்படிக் கூறலாமா, உங்கள் விலக்கப்பட்ட கருத்துக்களில் இது உண்டா எனக் கேட்டுவிட்டே எழுதுகிறேன், அதற்கு உங்கள் முகவரி தேவை.

இரண்டு பதிவுகளைப் பார்த்துவிட்டு, நாலு டாபிக்கில் மட்டுமே எழுதுபவன் இவன் என்ற உங்கள் பொதுமைப்படுத்தும் அறிவாற்றல் என்னை வியக்க வைக்கிறது!

ரஜினி ரசிகர்கள் சந்திரமுகியை வரவேற்றதற்கும் என் பினாத்தல்களுக்கும் என்ன சம்பந்தம் என என் சிற்றறிவுக்கு இன்னும் எட்டவேயில்லை!

பத்ரி:

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. குங்குமம் நல்ல ஆசிரியர், எழுத்தாளர்களால் உள்ளடக்கத்திலும் சிறந்த பத்திரிக்கை ஆனால் மகிழ்ச்சியே. ஆனால், இன்றுவரை அவர்களின் மார்கெட்டிங் இலவசப் பொருள்களையும், சினிமாக் கிசுகிசுவையுமே முன்னிலைப்படுத்துகிறது. பத்திரிக்கை விற்க இப்படிப்பட்ட உத்தி, 'பக்கத்திலேயே ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன், சுடுகாடு இருக்கிறது' என ப்ளாட் விற்கும் ரியல் எஸ்டேட்டை நினைவுபடுத்துகிறது!

குழலி - தினத்தந்தி குறித்தான உங்கள் கருத்துடன் நான் முற்றிலும் ஒத்துப்போகிறேன். மத்திய, அடித்தட்டு மக்களில், வட இந்திய மக்களுக்கும், தமிழர்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் அன்றாட செய்தித்தாள் படிப்பது. அதை நிகழ்த்தியது தினத்தந்தி தான் என்பதில் துளியும் ஐயமில்லை.

மாயவரத்தான் - அவர்களுக்கு வெட்கம் மானம் இல்லை என்பது அறிந்ததுதான். எனினும், வேகமாக கட்சி, கூட்டணி நிலைமைகள் மாறக்கூடிய இன்றைய சூழலில் கொஞ்சம் கவனமாக இருப்பார்கள் என்பதே நான் கூற வந்த விஷயம்.

கருத்துக்கு நன்றி அப்படிப்போடு!

Anonymous said...

//மாயவரத்தான் - அவர்களுக்கு வெட்கம் மானம் இல்லை என்பது அறிந்ததுதான்.//

அட!
மாயவரத்தானையா அப்படிச் சொல்றீங்க. வன்மையாக் கண்டிக்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

அடப் பாவி அனானிமஸ்! வரிகளுக்குள்ளே படிச்சு குட்டைய கொழப்புறீங்களே!

மாயவரத்தான் said...

//மாயவரத்தான் - அவர்களுக்கு வெட்கம் மானம் இல்லை என்பது அறிந்ததுதான்.//

அடேங்ப்பா.. ஒரு நிமிஷம் எனக்கே இதைப் படிச்சிட்டு தூக்கி வாரி போட்டுடுச்சு! (அட.. நமக்கு பரிஞ்சு பேசக்கூட ஒரு அநாநிமசு இங்கே இருக்காரே.. வாழக!)

- மாயவரத்தான்...

 

blogger templates | Make Money Online