Jun 26, 2005

பிரச்சினை டோண்டுவுக்கு மட்டுமா?

டோண்டுவின் எதிரி - ஒரு ப்ரோஃபைல்:

1. தமிழ் தெரிந்தவர் - அற்புதமாக டோண்டுவின் நடையை காப்பி அடிக்கிறார்.

2. டோண்டுவின் அத்தனை பதிவுகளும் படித்தவர்

3. தமிழ்மணத்தில் வரும் அத்தனை பதிவுகளையும் படித்து contexual-ஆக பின்னுட்டம் இடும் புத்திசாலி

4. தொழில்நுட்பத்தில் வல்லவர், எத்தனை லாக் வைத்தாலும் உடைக்கக் கூடிய அறிவாளி

5. கொண்ட காரியத்தில் வெற்றி கொள்ள எதையும் செய்யும் துணிந்த மனம் படைத்தவர் - பெரும்பாலும் வெற்றியும் அடைந்துள்ளார்.

6. ஆரம்ப காலத்தில் அவரது பின்னூட்டங்கள் போலி எனத் தெளிவாகத் தெரிந்தாலும், தற்போது அவரது திறமையான ஆள்மாறாட்ட வேலைகள் சுலபமாக அடையாளம் காண முடியாத வண்ணம் உள்ளன.


இவ்வளவு திறமையும், அறிவும், தனித்தன்மையும் கொண்டவர், அவர் பெயரிலே வலையோ மீனோ தொடங்காமல், அடுத்தவர் மீது சேற்றை வாரி வீசும் போதுதான், இது ஒரு இழிபிறவி என்பது உறுதி ஆகிறது!


ஏன் இப்படி டோண்டுவைக் குறிவைத்துத் தாக்குகிறார் இந்த இழிபிறவி என்பதிலும் அவர் யார் என்பதற்கான க்ளூ ஒழிந்திருக்கக்கூடும்.

இது யாருக்கும் வரக்கூடிய (வரக்கூடாத) பிரச்சினை, இதற்கு தொழில்னுட்பம் தெரிந்த யாரேனும் உடைக்கமுடியாத தீர்வைக் காண வேன்டியது அவசியம், அவசரம்.

எப்படியாவது இந்தப் பிரச்சினையை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வந்தால் நல்லது. என்னாலும் டோண்டு படும் மன உளைச்சலைப் புரிந்து கொள்ள முடிகிறது.

25 பின்னூட்டங்கள்:

குழலி / Kuzhali said...
This comment has been removed by a blog administrator.
பினாத்தல் சுரேஷ் said...

கோபத்தில் எழுதிவிட்டேன் குழலி, இப்போது திருத்திவிட்டேன், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. உங்கள் கருத்தை அழித்துவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

குழலி / Kuzhali said...

புரிதலுக்கு நன்றி சுரேஷ்,

முகமூடி said...

நீங்கள் கூறியதில் தவறேதும் இருப்பதாக படவில்லை சுரேஷ்... ஹிட்லர், போல்பாட், இடி அமீன் இவர்களெல்லாம் பிறக்காமலே இருந்திருக்கலாம் என்று நினைப்பதில் என்ன தவறு... அதுபோலத்தான் நீங்கள் சொன்னதும்...

Anonymous said...

முகமூடி இத்தோடு நம்ம பயல் பிரபாகரன்ன ஏன் விட்டுப்பூட்டீர்?சும்மா சேர்த்துக்கோய்யா புலிப் பயல்ல.கிட்லரு,முசோலினி,இடி அமீன்னு,புலிப் பிரபாகரன் கருவிலேயே புடுங்கியிருக்க வாணாமா?

குழலி / Kuzhali said...

முகமூடி உங்கள் கருத்திலிருந்து சற்று மாறுபடுகின்றேன், இதே வார்த்தைகள் உம்மிடமிருந்தோ உமது பதிவுகளில் வந்திருந்தாலோ நான் எதுவும் கருத்து சொல்லியிருக்க மாட்டேன், இத்தனைக்கும் சுரேஷ் ஒன்றும் கடுமையாகவோ, ஆபாசமாகவோ சொல்லவில்லை, அது சுட்டிக்காட்டக்கூடிய அளவிற்கு பெரிய தவறும் இல்லை, இன்றைய அளவிலும் ஆசிரியர்களுக்கு நம் சமுதாயம் மிகப்பெரிய ஒரு உயர்வான இடம் தந்துள்ளது, இந்த மாதிரி ஒரு இடம் வேறு எந்த தொழில் செய்பவருக்கும் தந்ததில்லை. ஆசிரியர்களின் பிள்ளைகளை கேட்டுப்பாருங்கள் அவர்களுடைய பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்பதற்காகவே எத்தனை மதிக்கப்பட்டார்கள் எனத்தெரியும்

முகமூடி said...

// அது சுட்டிக்காட்டக்கூடிய அளவிற்கு பெரிய தவறும் இல்லை // டோண்டு அவர்களிடம் கேட்டுப்பாருங்கள், அந்த தவறின் அளவுகோல் என்ன என்பதை பற்றி..

// இன்றைய அளவிலும் ஆசிரியர்களுக்கு நம் சமுதாயம் மிகப்பெரிய ஒரு உயர்வான இடம் தந்துள்ளது // அதற்காக ஆசிரியர்கள் தம் சொந்த கருத்தை பேசவே கூடாதா?? வலைப்பதிவு ஒன்றும் வகுப்பறை அல்ல குழலி, சுரேஷ் இங்கும் ஆசிரியராக இருக்க வேண்டும் என்பதில்லை... எங்குதான் அவர் சக மனிதனாக பேச முடியும்... அவரின் உபதொழிலை (பெனாத்துவது) இங்கு பார்க்கக்கூடாதா...

// ஆசிரியர்களின் பிள்ளைகளை கேட்டுப்பாருங்கள் // சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன் :)

dondu(#4800161) said...

"இது யாருக்கும் வரக்கூடிய (வரக்கூடாத) பிரச்சினை, இதற்கு தொழில்னுட்பம் தெரிந்த யாரேனும் உடைக்கமுடியாத தீர்வைக் காண வேன்டியது அவசியம், அவசரம்.
எப்படியாவது இந்தப் பிரச்சினையை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வந்தால் நல்லது."

நன்றி சுரேஷ் அவர்களே. நீங்கள் உடனே செய்யக்கூடியது மற்றும் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்கள் வலைப்பூவில் உள்ள அனானிப் பின்னூட்ட வசதியை செயலிழக்கச் செய்வதே ஆகும். இதை வைத்து கொண்டிருப்பதற்கு வலைப்பதிவர் கூறும் காரணம் அவர்கள் நண்பர்கள், ஆனால் வலைப்பதிவர் இல்லாதவர்கள் பின்னூட்டமிடவே இந்த வசதி என்பதாகும். ஆனால் இப்போது உங்கள் வலைப்பூவிலேயே அந்த போலி நபர் என் பெயரில் என்னுடைய ப்ளாக்கர் எண் மேட்ச் ஆகும்படி பின்னூட்டம் கொடுக்க முடியும். ஆகவே அந்த வசதியை செயலிழக்கச் செய்யவும் எனக் கேட்டு கொள்கிறேன்.

"இவ்வளவு திறமையும், அறிவும், தனித்தன்மையும் கொண்டவர், அவர் பெயரிலே வலையோ மீனோ தொடங்காமல், அடுத்தவர் மீது சேற்றை வாரி வீசும் போதுதான், இது ஒரு இழிபிறவி என்பது உறுதி ஆகிறது!"

நீங்கள் ரொம்ப சாது. அவர் பெயரில் வலைப்பூ இல்லை என்று யார் சொன்னது? இழி பிறவி என்பது எவ்வளவு உண்மையோ அதே போல வலைப்பதிவர் என்பதும் உண்மையே. அவர் யார் என்று எனக்கு தெரியும் என் நண்பர்களுக்கும் தெரியும்.

என்னுடைய இப்பின்னூட்டதின் நகல் என்னுடைய பிரத்தியேகப் பதிவிலும் இடப்படும். அதன் உரல்:

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)

dondu(#4800161) said...
This comment has been removed by a blog administrator.
Voice on Wings said...

Test comment. Posted using 'Other' identity option.

Voice on Wings said...

Test comment posted using my blogger username and password.

குழலி / Kuzhali said...

//// அது சுட்டிக்காட்டக்கூடிய அளவிற்கு பெரிய தவறும் இல்லை // டோண்டு அவர்களிடம் கேட்டுப்பாருங்கள், அந்த தவறின் அளவுகோல் என்ன என்பதை பற்றி..//

முகமூடி இதுவே நீர் எந்த அளவு புரிந்துகொள்கின்றீர் என்பது புரிகின்றது, நான் சுட்டிகாட்டிய அளவிற்கு பெரிய தவறு இல்லை என சொன்னது சுரேஷ் எழுதியது பற்றி, ம்.... ஆத்திரக்காரணக்கு புத்தி ....

Voice on Wings said...

Suresh, from the above two test comments of mine, it's obvious that anyone can post comments using my id. All they have to do is choose the 'Other' option (in the 'Choose an identity' radio button). This option asks for two inputs (1) Name - provide the user name of the person to be impersonated (2) Your Web page - provide the URL of the Blogger profile web page of the person whose image needs to be tarnished. Once done, it looks as good as the comment of the blogger who has been impersonated. Howzzat? :)

I do understand Mr.Raghavan's difficulty, but I'm not sure if I should turn off 'anonymous' comments in my blog. How do we get the feedback of non-Blogger users then? Maybe he should just ignore this phenomenon and go about blogging as he normally would. I think we are wise enough to make out if a comment has been posted by him or by his impersonator.

Voice on Wings said...

Suresh, I think I have a work-around for this issue. It involves switching on the images for comment pages (like you have done), and all bloggers adding some image as their photo in their blogger profile. Once done, all comments would be published along with the image, thereby differentiating them from any impersonating comments. I'll post this info in Dondu Raghavan's page too.

dondu(#4800161) said...

நண்பர்களே, வாய்ஸ் ஆன் விங்ஸின் யோசனை அருமை. என்னுடைய படத்தை என் ப்ரொஃபைலில் சேர்த்துக் கொண்டேன். என் ப்ளாக்கர் எண்ணும் என் டிஸ்ப்ளே பெயரில் வருமாறு செய்தேன். இப்போது போலி நபர் அதையெல்லாம் நகலெடுத்து புது பதிவு செய்தாலும் கீழே எலிக்குட்டி சரியான லிங்கைக் காட்டிவிடும் என நம்புகிறேன். ஆண்டவன் அருள் எல்லோருக்கும் கிட்டட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Dondu(#4800161) said...
This comment has been removed by a blog administrator.
பினாத்தல் சுரேஷ் said...

to the Duplicate Dondu, (Last comment) - I dont need technology to find you, you smell (stink) 100 kilometers!

Well, i wanted to check whether you read ALL posts and now it is confirmed!

now, Sir, Please, GO TO HELL!

ஈழநாதன்(Eelanathan) said...

சுரேஸ் இந்த திருகுதாளங்களைச் செய்வதற்கு பெரிய அறிவியல் ஞானமெல்லாம் தேவையில்லை Blogger இன் செயற்பாடுகளை ஓரளவு புரிந்துகொண்டாலே போதும் நீங்கள் குறிப்பிடும் எந்த லாக் வைத்தாலும் உடைக்கக்கூடியவர் அவர் என்பதெல்லாவற்றையும் தனக்கு மகுடமாக அவர் நினைக்கக்கூடும்.ஆனால் உண்மை Blogger இல் உள்ள ஓட்டைகளை வைத்துக்கொண்டு அவர் விளையாடுகிறார்.

டோண்டு ஒவ்வொரு வலைப்பதிவரும் தங்கள்Comment settings ஐ பின்னூட்டுபவரின் படத்துடன் தெரியக்கூடியமாதிரி மாற்றியமைத்தாலொழிய நீங்கள் படத்தையும் இணைப்பதில் பிரயோசனம் இல்லை.எல்லோரும் கூடி Ananymouse பின்னூட்ட வசதியை நீக்கிவிடுதலே சிறந்த வழியாகப் படுகிறது

dondu(#4800161) said...

"டோண்டு ஒவ்வொரு வலைப்பதிவரும் தங்கள் கமென்ட் செட்டிங்ஸை பின்னூட்டுபவரின் படத்துடன் தெரியக்கூடியமாதிரி மாற்றியமைத்தாலொழிய நீங்கள் படத்தையும் இணைப்பதில் பிரயோசனம் இல்லை."
இல்லை ஈழநாதன் அவர்களே. போட்டோ பின்னூட்டங்களைப் பதிவிடும் பக்கத்தில் தெரிகிறது. இதை நீங்களே சரிபார்த்து கொள்ளலாம். சுரேஷ் கூட இந்த பக்கத்தை சொடுக்கியிருந்தால் பார்த்திருக்கலாம். இப்போது பாருங்கள். ஆனால் ஒன்று, பதிவுக்குச் சென்றபின் பின்னூட்டத்தில் அது உடனே தெரியாது. பார்க்க வேண்டுமானால் பின்னூட்டமிட வேண்டிய பக்கத்தை சொடுக்க வேண்டும். நான் கூறுவது எனக்கே சற்று குழப்பமாக இருக்கிறது. உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். சுரேஷ் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அனானி பின்னூட்டத்தை எடுத்து விடுவதாகக் கூறினார். மிக்க மகிழ்ச்சி.

இப்பின்னூட்டத்தை என் தனிப்பதிவிலும் நகலிடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

temp said...
This comment has been removed by a blog administrator.
பினாத்தல் சுரேஷ் said...

டுண்டு,

நான் பாடம் நடத்தி மாணவர்கள் உருப்படுவார்களோ இல்லையோ, நீங்கள் எந்தக் காரணத்தையும் முன்னிட்டு உருப்படப் போவதற்கான அறிகுறி இல்லை. மேலும், என் தொழிலில் நான் சரியாக இருக்கிறேனா இல்லையா என்பதைப்பற்றி கவலைப்பட உங்களுக்கு எந்த அதிகாரமோ தகுதியோ கிடையாது.

நான் கொள்கை அளவில் டோண்டுவை ஆதரிக்கிறேனா அல்லது எதிர்க்கிறேனா என்பதும் என் தனிப்பட்ட உரிமை. அவர் நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்களைக் கூறி இருந்தால் அதைப்பற்றிய என் கருத்தை அவர் பதிவில், (சொல்ல விருப்பம் இருந்தால்) போடுவேன்.

சொந்தப் பெயரைக் கூட சொல்ல வக்கற்று, மற்றவர் பெயரில் புழுதி வாரித் தூற்றும் உங்களைப் போன்ற ஈனப்பிறவிகளுக்கு இதற்கு மேல் விடை அளிப்பதும் எனக்கு அசிங்கம்.

temp said...
This comment has been removed by a blog administrator.
காசி (Kasi) said...
This comment has been removed by a blog administrator.
பினாத்தல் சுரேஷ் said...

Comment posted at Kuzhali's blog, reposting since relevant:

இதே கருத்தை ஒட்டி நான் போட்ட பதிவுக்கு வந்த பின்னூட்டங்களால் நான் நடுங்கிக் கொண்டு இருக்கிறேன் - என்னை ஒட்டகம் மேய்ப்பவன் என்று ஒருவர் கண்டுபிடித்துவிட்டார். இன்னொருவர், என் பதிவை அழிப்பதற்கு முன் கருணையுடன் ஒரு கடைசி சந்தர்ப்பம் அளித்து உள்ளார்!!

உங்கள் பதிவுடன் நான் ஒத்துப்போகிறேன் - கருத்தில் வேறுபாடோ, கோபமோ இருந்தாலும் அதைக் காட்டிய வழிமுறையால்தான் அந்த நபரை இழிபிறவி எனக் கூறுகிறோம் என்பதையே புரிந்துகொள்ளாமல் (அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல்) நீ அவருக்கு ஆதரவா, அவர் கட்சியா ஜாதியா எனக் கேட்பவருக்கு என்ன பதில் கூற முடியும்?

பினாத்தல் சுரேஷ் said...

test

 

blogger templates | Make Money Online