மக்களே!
புதுப்பொலிவுடன் உங்கள் அபிமான "பினாத்தல்கள்"
அன்னியன் விமர்சனம் ஆனாலும் பழி வாங்குது! நானும் விடறதா இல்லை. எனவே, கம்ப்யூட்டர் திரையில் மூன்றாவது முறையாக - அன்னியன் விமர்சனம் பை பினாத்தல்கள்!
என்னைப் பொறுத்தவரை அந்நியன் ரிலீஸ் தேதியை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் கணிப்பு எவ்வளவு தூரம் உண்மையானது என்று பார்ப்பதற்காக.
என்ன கணித்தேன் என்று கேட்கிறீர்களா? பாடல்கள் வெளிவந்து அவற்றைக் கேட்டவுடனே எந்தப் பாடல் எத்தனையாவது ரீலில் இடம்பெறும் என்று ஊகித்தேன் - பெரும்பாலும் சரி (கண்ணும் கண்ணும் நோக்கியா-வும், குமாரியும் இடம் மாறி இருந்தன). மற்றபடி ரீல் கணக்கு மிகச் சரியாகவே இருந்தது.
கதையை எல்லாரும் கிழித்து பஞ்சு பஞ்சாக்கிவிட்டார்கள். எனவே நேரடியாக எனக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்கள்:
பிடித்தவை - நொடிக்கு நொடி குணம் மாறும் அந்நியன் , ரெமோ, அம்பி (விக்ரம்), காதலுக்கு ஆயிரம் ஐடியா சொல்லும் விவேக், அகூந்பதம்-க்கு 720 காம்பினேஷன் சொல்லும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பு, சண்டைக் காட்சி அமைப்பு (பீட்டர் ஹெயின்), ரண்டக்க பெயின்ட் திருவிழா (சாபு சிரில்), ஆம்ஸ்டெர்டாம் அழகை அள்ளிக்கொட்டிய காமெரா (மணிகன்டன், ரவிவர்மன்) மற்றும், லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட் -பிரபல அஞ்சுபைசா வசனம் (தலைவர்)!!
பிடிக்காதவை - ஆயிரம் ஓட்டை லாஜிக் கொண்ட கதை, திரைக்கதை, அந்நியன் நல்லவனா கெட்டவனா என்று குழப்பும் பாத்திரப்படைப்பு, டெம்பிளேட் மாறாத ஷங்கரின் இயக்கம்.
இதற்கு நம் தமிழ்மணம் கூறும் நல்லுலக விமர்சனங்கள் சற்று அதிகப்படியாகவே எனக்குத் தோன்றியது.
தனது பழைய படங்கள் மூலம் தன்னைத் தெளிவாக அடையாளம் காட்டி இருப்பவர் ஷங்கர் - அவரிடம் பதேர் பாஞ்சாலியா எதிர்பார்க்க முடியும்? முனியான்டி விலாஸில் மோர்க்குழம்பா எதிர்பார்க்கமுடியும்?
அம்பி ஒரு ஐயங்காராக இருப்பது பார்ப்பனீயத்தின் குறியீடு என்பதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை - மென்மையான, ரூல்ஸ் பேசும் ஒரு வக்கீல் ஆவேசமாக மாறுகிறான் என்பதைக்காட்ட சமூகத்தால் மென்மையானவர்கள் எனப் பார்க்கப் படுகின்ற ஐயங்காரை எடுத்துக் கொண்டு கான்ட்ராஸ்ட் காட்ட முயற்சித்திருப்பதாகவே தோன்றுகிறது.
ஆனால் இந்தியனில் இருந்த கதைத் தெளிவு இதில் நிச்சயமாக இல்லை. லஞ்ச ஊழலை ஒரு முன்னாள் சுதந்திரப் போராட்டத் தியாகி எதிர்க்கும்போது தெரியும் நியாயம், காரை நிறுத்தாதவனைக் கொல்லும் போது தெரிவதில்லை - என்னதான் அஞ்சு பைசா அலட்சியம் என்று நியாயப் படுத்த முயன்றாலும் கூட.
நேரு அரங்கக் காட்சி அபத்தத்தின் உச்சகட்டம்! இந்தக்காட்சியையும், தொடரும் "நாடே திருந்திவிட்டது" ரகக்காட்சிகளையும் இரக்கமே இல்லாமல் வெட்டி இருந்தால் "ஸ்பிளிட் பர்சனாலிடி" பற்றி ஒரு பிரமாண்டப் படம் பார்த்த திருப்தி ஏற்பட்டிருக்கும்.
என் பார்வையில் இது ஒரு சாதாரணத் திரைப்படம்தான், சிறந்த தொழில்நுட்பவியலாளர்களின் உதவியோடு, நல்ல தரத்தில் தரப்பட்ட ஒரு சாதாரண மசாலா. ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.
Jun 27, 2005
புதுப்பொலிவுடன் உங்கள் அபிமான "பினாத்தல்கள்" - NEW LOOK
Subscribe to:
Post Comments (Atom)
6 பின்னூட்டங்கள்:
Test
உங்க பதிவோட தலைப்பை ஓரிரு வார்த்தையிலே சின்னதா வையுங்க. காணாமல் போகாது.
thanks rosa, I have added an English word to solve this problem - this works, too.
Simple and good analysis.
தாத்தா தாத்தா அன்னியன் அப்படின்னு ஒரு படம் வந்திருக்குன்னு சுரேசு பெனாத்துறாரே... அதுக்கு போலாம் தாத்தா...
எலே அது நான் டவுசர் போட்ட காலத்துல வந்த படம்லா... அத பத்தி இன்னும் எதுக்கு பெனாத்துராரோ தெரியல... நீ வேற வெவரம் புரியாம அத பாக்கணும்னு...
முகம் மூடிய தாத்தா,
நான் பெனாத்துனது ஜூன் மாசமே.. படம் வந்து பத்து நாளைக்குள்ள.. உங்க பேராண்டி இப்பத்தான் இந்த போஸ்ட்டை பாத்தா யான் என் செய்குவேன்?
Post a Comment