களிமண்ணில் செய்த வினாயகர்தான் விசேஷமாம்..
துபாயில் எங்கே களிமண்ணைத் தேடுவது?
எனவே என் சொந்த மூளையை உபயோகித்தேன்!
குழந்தைகள் விளையாடும் வண்ணக் களிமண்ணை எடுத்தேன் - என் கைவண்ணத்தை அதில் காட்டினேன் -(இது என் முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது)
இதைப் பார்த்து வியந்த (இவன்கிட்டே இருந்து இப்படி எதிர்பார்க்கலையே!) மனைவி, தன் நண்பர்கள் குழாத்தில் செய்தியை பறக்கவிட..
மாஸ் ப்ரொடக்ஷன் செய்யவேண்டியதாகிவிட்டது!
அனைவருக்கும் வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
Sep 6, 2005
வினாயகர் சதுர்த்தி 07 Sep 2005
Subscribe to:
Post Comments (Atom)
10 பின்னூட்டங்கள்:
ஜோரா இருக்காரு வினாயகரு... கடல்ல கிடல்ல கரைச்சுபுடாதிங்க!
நன்றாக வந்திருக்கிறதே... ஏற்றுமது உண்டா ;;-)
//எங்கே களிமண்ணைத் தேடுவது?
எனவே என் சொந்த மூளையை உபயோகித்தேன்!//
ஆஹா ஆஹா ஆஹா...
ச்சும்மாச் சொல்லக்கூடாது. நல்லாவே செஞ்சிருக்கீங்க. கலர்ஃபுல்லா இருக்கார்.
இதுக்குத்தான் வீட்டுலே ச்சின்னப்புள்ளைங்க இருக்கணும்!
என்றும் அன்புடன்,
துளசி.
//எங்கே களிமண்ணைத் தேடுவது?
//எனவே என் சொந்த மூளையை உபயோகித்தேன்
அய்யா சுரேஷ¤,
படிக்க படிக்க வேற அர்த்தம் வருதேயா ...
நல்லாவே இருக்கார்!! :O)
nice job.
//துபாயில் எங்கே களிமண்ணைத் தேடுவது?
எனவே என் சொந்த மூளையை உபயோகித்தேன்!//
நல்ல சிலேடை...
அது என்ன ரங்கீலா பிள்ளையாரா? very colourful..
சூப்பர் சுரேஷ்..
கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றி!
இளவஞ்சி - பயோ டீக்ரேடபிள் களிமண்ணாம் - கடலில் கரைக்கலாம் தப்பில்லை.
பா.பா - ஏற்றுமது வா? ஏற்றுமதியா?
துளசி கோபால் - நாமே சின்னப்பிள்ளைகளாக இருந்தால் (மனத்தளவிலாவது) இன்னும் மகிழ்ச்சி!
ஆனந்த் - pun intended:-)
தென்றல் - உங்களுக்கு 50 - 50% எதற்கு? - உழைப்பவன் நான் - பூர்ஷ்வா மனப்பான்மையா?
ஷ்ரேயா, ரம்யா, சுரேஷ் செல்வா - நன்றி!
நல்லாருக்காரு பிள்ளையாரு.
இங்க பெங்களூரில் போன ஆண்டை விட இந்த ஆண்டு பெரியதாகக் கொண்டாடுகிறார்கள். பெரிய பெரிய வண்ண வண்ண போஸ்டர்கள். பணத்தை நிறைய செலவழித்து பெரிய பந்தல், பெரிய பிள்ளையார் என்று கொண்டாடுகிறார்கள்.
நல்லாவே இருகாருங்க !!
Post a Comment