முதலில் நன்றி.
போட்டியை அறிவித்து, நெறிப்படுத்தி, தகுதி பெறுகிறதா என்று படித்துப் பார்த்து, அதை PDF ஆக மாற்றி, பரிசுத் தொகையை விடவும் முகமூடி செய்த வேலைகள் அதிகம். தமிழுக்கு இன்னும் ஒரு சில நல்ல கதைகளைப் பெறுவதில் அவருடைய ஆர்வம் தெள்ளெனத் தெரிகிறது.
கதையைத் தேர்ந்தெடுப்பதோடு நிற்காமல், கதையின் அம்சங்களை நன்கு ஆராய்ந்து காரணங்களோடு விளக்கி இருந்த மாலனின் அணுகுமுறை, புதிதாக எழுதத் தொடங்குவோர்க்கு பல குறிப்புகளையும் வழங்கியது.
என் கதையை எழுதும்போது கருத்தில் கொண்ட அத்தனை விஷயங்களையும் கதையைப்படித்தே பட்டியலிட்டிருப்பதில் அவருடைய அனுபவம் தெரிகிறது,பத்தி பத்தியாகப் பாயாமல் வரிவரியாகப் படித்திருக்கிறார் என்பதிலேயே எனக்கு ஒரு பெருமை!
என் கதையை படித்து, பாராட்டி, ஆதரித்து ஊக்குவித்த நண்பர்களுக்கு நன்றி. சிலருக்கு நினைவிருக்கலாம் - கொஞ்ச நாள் முன்பு நான் எனக்கு எழுத வரவில்லை என்று வலைப்பதிவை மூட இருந்தேன். அப்போது பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவரையும் நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் - (இவங்க தான்ப்பா காரணம் - என்னை வுட்டுடுங்க!)
இப்போது கதையை பற்றி.
ஏற்கனவே இருமுறை சொல்லி இருந்தது போல, இது உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே, நான் செய்தது ஜன்னல் உடை அலங்காரம் (Window Dressing:-)) மட்டுமே. இத்ரீஸ், பஷீர் ராம்லால் ஆகியோரின் செய்கைகளுக்கு காரணம் என்ன, எந்த மாதிரியான உளவியல் இது எனப் புரியாமல் சில இரவுகள் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறேன்.
ராம்லாலுக்கு விபத்தில் அடிபடும் போது சக தொழிலாளி எனப் பார்க்க முடிந்த இத்ரீஸை கலவர சமயத்தில் மாற்று மதத்தான் என மட்டுமே பார்க்க முடிந்தததற்கு குழு மனப்பான்மை மட்டுமே காரணமா?
இத்ரீஸுக்கும் ராம்லாலுக்கும் இருந்த தொழில் ரீதியிலான (ஒரே வொர்க்-ஷாப், ஒரே நிலை - ஆனால் மேலதிகாரிகளிடம் இத்ரீஸுக்கு இருந்த நம்பிக்கை ராம்லால் மேல் இல்லை - இதை கதையிலும் கோடி காட்டி இருந்தேன்)போட்டி அந்த (மகனை வெட்டிய) நேரத்தில் வந்திருக்குமா இல்லை மதம் பிடித்த மூளைச்சலவை மட்டுமே காரணமா என்பதும் இன்னும் எனக்குப் புரியவில்லை.
யோசியுங்கள், யோசிக்கிறேன்!
5 பின்னூட்டங்கள்:
வாழ்த்துக்கள் சுரேஷ் !
முதலில் வாழ்த்துக்கள். முதல் பரிசு பெற எப்போதுமே ஒரு தகுதி வேண்டும்.. உங்கள் கதைக்கு அது இருக்கிறது.
//ராம்லாலுக்கு விபத்தில் அடிபடும் போது சக தொழிலாளி எனப் பார்க்க முடிந்த இத்ரீஸை கலவர சமயத்தில் மாற்று மதத்தான் என மட்டுமே பார்க்க முடிந்தததற்கு குழு மனப்பான்மை மட்டுமே காரணமா?//
குழு மனப்பான்மை மட்டுமல்ல, பயம் தான் முக்கிய காரணம். மிருக உணர்வு.. அடுத்தவருக்கு முன்னால் நாம் தாக்கி விட்டால் நாம் தப்பிக்கலாம் என்ற எண்ணம். இதே நிலையை நானும் சந்தித்திருக்கிறேன். என்னுடைய பதிவில் இது பற்றி எழுதியும் இருக்கிறேன்.
இதெல்லம் fear psychosisம் knee jerk reactionம் தான்.
அன்புடன் விச்சு
நன்றி வீ எம்.
நன்றி விச்சு. "அடுத்தவருக்கு முன்னால் நாம் தாக்கி விட்டால் நாம் தப்பிக்கலாம் என்ற எண்ணம்" - இதை நானும் உணர்ந்தேன்.
உங்கள் போபால் பற்றிய பதிவைப் படித்திருக்கிறேன், அதில் என் பீகார் கலவர அனுபவத்தைப் பற்றிய பின்னூட்டமும் இட்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.
பரிசு பெற்றதற்கு வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி.
மனமார்ந்த வாழ்த்துக்கள் சுரேஷ் !
நன்றி படித்துறை
Post a Comment