இருபது அடி உயரத்துக்கு நின்றுகொண்டிருந்த ராட்சத லாரியை முத்தமிட்டுக் கொண்டு நின்றது கிரேன். அதிலிருந்து தொங்கிக்கொன்டிருந்த வீலை "தம் லகாகே - ஜோர் லகாகே" என ஐலேசா பாடி உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள் நால்வர்.
வீலை மாட்டியாகிவிட்டது. டயரை ஏற்றி டார்க் அடித்துவிட்டால் இன்றே வண்டியை ப்ரொடக்-ஷனுக்கு அனுப்பி விடலாம். எப்படியும் இரண்டு அவர் ஓட்டி(OT) பார்த்து விடலாம்.
"இத்ரீஸ், வர்மா சாஹப் தும்கோ புலாரஹா ஹே" என்று கத்தினான் ஜக்கேஷ்வர்,
இப்போ ஏன் கூப்பிடுகிறார்? பன்னிரண்டு வண்டி கணக்கு ஆகிவிட்டிருக்குமே? வேறெதாவது எதிர்பாராத ப்ரேக் டௌனா?
ஆஃபீஸை விட்டு வெளியே வெயிலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் குளிர் காய்ந்துகொண்டிருந்தார் வர்மா.
"புலாயா க்யா சாப்?" என்றேன்.
"ஆமாம்பா, அக்கவுண்ட் டிபார்ட்மெண்டிலே இருந்து நோட்டீஸ் வந்திருக்கு, ஓடி கட் பண்ணி இருக்காங்களாம் - உனக்கு, ஜக்கேஷ்வருக்கு, எல்லா ஃபோர்மேனுக்கும் இனிமே ஓட்டி கிடையாதாம்"
(இனிமேல் மொழிபெயர்த்து விடுகிறேன்)
'இது என்ன அநியாயமா இருக்கு சார்? காலையிலே இருந்து மாடு மாதிரி வேலை செய்யறோம், எங்க சம்பளத்த வச்சு காலம் தள்ள முடியுமா? ஓட்டியிலேதான் சார் பொழைக்கிறோம்"
"என்னப்பா பண்ணறது, மேலிடத்து முடிவு, நான் என்ன செய்ய முடியும்?"
"சரி, முயற்சி பண்ணி பார்க்கிறேன், ஆனா கஷ்டம்தான்."
"அது கிடக்கட்டும், என்ன ஆச்சு உன் பையன் ரிஸல்ட்?"
கேக்க மாட்டாருன்னு நினைச்சேன். "3 சப்ஜெக்ட்டுல போயிருச்சி சார்"
"பாஸ் பண்ண 940* லே இழுத்து போட்டிருக்கலாமே இத்ரீஸ். கொஞ்சம் கஷ்டப்பட்டு படிக்க சொல்ல கூடாதா?, எந்நேரமும் மசூதி வாசல்லெயே நாலஞ்சு பசங்களோட கெடக்குறான் - நான் கோயிலுக்கு போகும்போது பார்ப்பேன் - சகவாசத்த சரி பண்ண சொல்லு மொதல்லே."
என் முகம் மாறுவதை அவர் கவனித்து விட்டிருக்க வேண்டும்.
"சரி, அந்த டம்ப் பாடியை ட்ரெயிலரில் இருந்து இறக்கறாங்க, கொஞ்சம் போயிப் பாரு. வீல் மாட்டியாச்சில்ல?"
"சரி சார்"
கேண்டீன் சந்து வழியாக, கீழே சிந்தி இருந்த ஆயில் தேங்கலைத் தவிர்த்து மெயின்டெனன்ஸ் கொட்டகையைத் தாண்டி எரெக்-ஷன் யார்டுக்கு வந்து பார்த்தால் குளறுபடி செய்து வைத்திருந்தான் ராம்லால்.
"யாருப்பா ஸ்லிங் போட்டது, 25 டன் பாடி, இந்த சின்ன ஸ்லிங் தாங்குமா? டபுளா போட்டிருக்க வேணாமா?"
"எறக்கி கீழேதான வைக்கணும், வண்டியிலே மாட்டப் போறதில்லேயே" என்று அலட்சியமாக ராம்லால் கூற, எனக்கு கோபம் வந்தது.
"கீழே வுட்டன் ப்ளாக் ஆவது ஒழுங்கா கொடுத்தீங்களா?" என்று குனிய, ஸ்லிங் அறுந்தது.
ஆறு அடி உயரத்திலிருந்து 25 டன் இரும்பு, மரக்கட்டையை சரி செய்துகொண்டிருந்த என் வலது கை மேல் விழ,
மயக்கம் அடையும் முன் கிரேனை உயர்த்தச் சொல்லி ராம்லால் பதட்டத்துடன் கத்துவது காதில் விழுந்தது.
******************************************************************************
தூக்கமும் விழிப்புமாக எத்தனை நாள் கடந்தது எனச் சரியாகத் தெரியாத நேரத்தில், கனவா நிஜமா எனத் தெரியாத குரல்கள்...
"தப்பிச்சான்டா - கொஞ்சம் உள்ள போயிருந்தா எலும்பு கூட கெடச்சிருக்காது"
" எவ்வளவு ரத்தம் போச்சு! நல்லவேளை டிரைவர் ரொம்ப ஃபாஸ்ட்டா ஜீப்பை ஓட்டிக்கிட்டு வந்தானோ பொழச்சான்"
"வொர்க் ஷாப்பிலே இருந்த அத்தனை பேருமேவா ரத்தம் கொடுத்தாங்க?"
"ஆமாம் - அவ்வளவு தேவை இல்லதான், ஆனாலும் அன்னிக்கு மட்டும் ஒரு நாப்பது யூனிட் ரத்தம் எடுத்தாங்க"
"ராம்லால் குரூப் மட்டும்தான் சேர்ந்ததாமே?"
"கையைக் கொண்டு வந்திருந்தா சேத்து இருக்கலாம்னு டாக்டர் சொன்னாராமே?"
அப்போதுதான் உணர்ந்தேன், வலது பக்கம் முழங்கைக்கு மேலே இருந்த பெரிய கட்டையும், முழங்கைக்கு கீழே ஒன்றும் இல்லாதது போன்ற ஒரு உணர்வையும்.
*************************************************************************
கை இல்லாதது பழகிப்போய் விட்டது. இன்னும் ஒரு மாதம்தான் லீவு பாக்கி இருக்கிறது.
வர்மா சாப் வந்தபோது சொன்னது வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
"உனக்கு வேலை போகாது. ஆனால் அண்டர்கிரௌண்ட் சுரங்கத்தில் ட்ரிப் மேனாகத்தான் போட முடியும் - அங்கேதான் உனக்கு கடினம் குறைவான வேலை."
"ஆனா சார், அங்கே வரும் மீத்தேனை சுவாசித்தால் எனக்கு ஆஸ்த்மா அதிகமாகி விடுமே"
"எல்லாம் பேசிப் பாத்தாச்சுப்பா, வேற வழி இல்லை - உன் பையன் டிகிரி முடிச்சிருந்தா சுலபமா உன் வேலைய அவனுக்கு கொடுத்திருக்கலாம் - என்ன பண்ணரது சொல்லு?"
****************************************************************************
ரேடியோவில் கேட்கும் செய்திகள் ஒன்றும் சரியாக இல்லை. நாடெங்கும் கலவரமாம் - இந்துக்கள் முஸ்லிம்களை வெட்டுகிறார்களாம், இவர்கள் பதிலடி கொடுக்கிறார்களாம்.
நேற்றுக்கூட பக்கத்து ஊரில் கலவரமாம், இந்து குடிசைகளை யாரோ எரித்து விட்டார்களாம். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறதாம்.
நள்ளிரவில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வேட்டுச்சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது,
என் மகன் வெளியே நண்பர்களுடன் அடித்தொண்டையில் பேசிக்கொண்டிருந்தான்.
"வெக்கணும்டா அவனுங்களுக்கு வேட்டு. நம்மளை என்ன சொங்கின்னு நெனச்சுட்டானுங்களா?"
"நேத்து ராஞ்சியிலே பூட்டி சௌக்கிலே ஒரு குடும்பத்தையே வெட்டிப் போட்டிருக்கானுங்க"
"கார்ட்டா டோலி பக்கம் நெருங்க முடியாதுல்லே அதுதான்"
"சும்மா விடக்கூடாதுடா இவனுங்களை - நம்ம ஆளுங்களை கூட்டிக்கிட்டு வாங்க, இன்னிக்கும் கெளம்பிடுவோம்"
எனக்கு என்னவோ புரிந்தது போல் இருந்தது.
"பஷீர் - இங்க வா" என்றதும் அதிர்ந்து
"வாப்பா, கேட்டுகிட்டா இருந்தீங்க?" என்றான்.
"நீங்கதானா அந்த குடிசைங்களை எரிச்சது?" என்றேன் கோபமாக.
"அது உங்களுக்குத் தேவை இல்லாத விஷயம் - பேசாம வீட்டுக்குள்ளெயெ கெடங்க"
"டேய் வேணாம்டா போகாதடா, பழி வாங்குறதுலே எந்த அர்த்தமும் இல்லயடா" என்பத்ற்குள் வெளியேறி விட்டார்கள்.
************************************************************************
இவ்வளவு நேரம் ரேடியோவிலும் வாய்மொழியாகவும் கேட்ட கலவரம் இப்போது என் நெஞ்சிற்குள்.
காதுகளை கதவு தட்டப்படும் சத்தத்திற்காக தீட்டி வைத்தது வலித்தது.
வெளியே போகவும் முடியாது, இந்த ஒற்றைக்கையை வைத்துக்கொண்டு வேகமாக ஓடவும் முடியாது.
காலை விடியத் தொடங்கிய நேரத்தில் மகனின் நண்பன் இஸ்மாயில் கதவைத் தட்டினான்.
"வாப்பா - மோசம் போயிட்டோம் வாப்பா"
"நாங்க வருவோம்னு தெரிஞ்சு அவங்க தயாரா இருந்தானுங்க - பஷீர் மொதல்ல வீட்டுக்குள்ள போயி மாட்டிக்கிட்டான் - கழுத்துலேயே போட்டுட்டானுங்க"
தவமிருந்து பெற்ற ஒற்றைப் பிள்ளை..
"யாருடா வெட்டினது" என்றேன் அனல் பறக்க.
"வொர்க்-ஷாப் ஃபோர்மென் ராம்லால்தான் மொதல்லெ வெட்டினான்"..
*********************************************************************************
பி.கு இது பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்ட உண்மைக்கதை. யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. அவ்வாறு நேர்ந்தால் அது தற்செயலே.
Aug 17, 2005
சிறுகதை - இரு சம்பவங்கள் 17 Aug 05
Subscribe to:
Post Comments (Atom)
28 பின்னூட்டங்கள்:
சுரேஷ்,
நல்ல கதை...வெற்றிபெற வாழ்த்துக்கள்!!
வீ எம்
வாழ்த்துக்கள் சுரேஷ். போட்டி முடிந்தது என் கருத்தை சொல்கிறேன்.
Suresh,
I liked your rustic way of presenting this story !!!
vAzththukkaL !
Did you see my short story(!) at http://balaji_ammu.blogspot.com/2005/08/short-story.html :)
நன்றி வீ.எம்.
நன்றி முகமூடி - நீங்கள் என்ன கருத்து சொல்லப் போகிறீர்கள் என்று ஒரு உள்ளுணர்வால் ஊகிக்க முடிகிறது. இருந்தாலும், போட்டியின் முடிவு வரை காத்திருக்கிறேன்.
நன்றி பாலா - அது என்ன "RUSTIC " திட்டறீங்களா, பாராட்டறீங்களான்னே என் அ என் குறைந்த ஆங்கில அறிவுக்கு புரிய மாட்டேங்குதே!
I meant an unsophisticated, direct and simple way of putting down things ..... as a COMPLIMENT only :)
hi Suresh!
இந்த மாதிரி சம்பவங்கள் தொடரக்கூடாது என் பிரார்த்திக்கிறேன்.
நன்றி பாலா - for your compliments.
நன்றி ஞானபீடம் - ஆனால் நீங்கள் எந்த சம்பவம் தொடரக்கூடாது எனப் பிரார்த்திக்கிறீர்கள்? கதையில் உள்ள சம்பவங்களா அல்லது கதை எழுதப்பட்ட சம்பவத்தையா?:?-))
நன்றி தென்றல்.
போலி டோண்டு,
திருந்தவே மாட்டீர்களா?
வாழ்த்துகள் சுரேஷ்.
வாழ்த்துகள் சுரேஷ்.
வாழ்த்துக்கள் சுரேஷ்
வெள்ளை பக்கத்தில் கருப்பு புள்ளியாய் போலியின் பின்னூட்டத்தை எதற்கு விட்டு வைத்திருக்கிறீர்கள்?
Done Sir!
சுரேஷ்,
சகலகலா வல்லவனா இருக்கீங்களே !!!! கவிதைப்போட்டியில் முதல் பரிசு, சிறுகதைப்போட்டியிலும் முதல் பரிசு.....
கலக்குறீங்க...
வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சுரேஷ்.
Congratulations !!!
கதை, கவிதை அனைத்திலும் முதல்.
கலக்குங்கள் சுரேஷ்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜ்குமார்
வாழ்த்துக்கள் சுரேஷ்
சுரேஷ், பரிசுகளா வாங்கி குவிக்கறீங்க.. இப்பவாவது 'பெனாத்தல்' அடைமொழியை மாத்துங்க!! :-)
வாழ்த்துக்கள்!!
Dear Suresh,
I am glad that I had already passed on my "COMPLIMENT" to your award winning effort :) You see, I too have a good judgement ;-)
Congrats, and keep it up !!!
பரிசு வென்றதற்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள் Suresh
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் சுரேஷ்.
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் சுரேஷ்.
வாழ்த்துக்கள் சுரேஷ்!
கே வி ஆர், எல் எல் தாஸு, சதீஷ் நடராஜன், சுரேஷ் செல்வா, ரமேஷ், ஹோல்ட் அட் 2000, ராஜ்குமார், கோ கணேஷ், ரம்யா, பாலா, மாலதி, வீ எம், சுதர்சன் கோபால், இளவஞ்சி - உங்கள் தொடர்ந்த ஊக்கத்துக்கு என் நன்றி!!!
பாலா - உங்கள் காம்ப்ளிமென்ட் இல்லாமல் என்றைக்கு நான் பதிவு போட்டிருக்கிறேன் - உங்களுக்கு என் தனிப்பட்ட நன்றி.
ரம்யா - பினாத்தலாகவே இருந்தால்தான் திடீரென்று வரும் கருத்துள்ள பதிவுகளுக்கு மதிப்பு. எப்போதாவது வரும் ஒன்றிரண்டு நல்ல பதிவுகளுக்காக எப்போதும் செய்யும் பினாத்தலை விட்டுவிட முடியுமா?;-)
சுரேஷ் செல்வா, ராஜ்குமார் - இந்த மாதிரி அதிருஷ்டத்தைப் பற்றி எங்க அப்பா சொல்வார் - குருட்டு நாய்க்கு கொழுக்கட்டை கிடைத்தது போல என்று:-)
suresh,
very good story..
Thanks muthu.
simple and stylistic..
vividly brings the scenes b4 our eyes .. well written
Post a Comment