புதுப்படம் வெளிவராத நேரத்தில் டப்பிங் படம் போட்டு தியேட்டரை நடத்துவதில்லையா?
அறுசுவை உணவே தினம் சாப்பிட்டவன் ஒரு மாறுதலுக்கு பத்திய சாப்பாடு சாப்பிடுவதில்லையா?
கடலை எண்ணெய் தயாரிக்கும் செக்கில் வேலை இல்லாதபோது வேப்பெண்ணெய் ஆட்டுவதில்லையா?
கனமான புத்தகம் படித்தவன் ஆசுவாசப் படுத்திக்கொள்ள கிசு கிசு படிப்பதில்லையா?
அதுபோலத்தான் - இந்த வார நட்சத்திரம் - பினாத்தல்கள்!
நிஜமான நட்சத்திரங்கள் தங்கிப்போன இந்த 'தமிழ்மண"ச் சத்திரம், இந்த வாரம் நட் - சத்திரமாக மலர்கிறது.
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பொழிகிறது..
தமிழ்மணத்துக்கு கிடைத்து வரும் உங்கள் (என்) ஏகோபித்த ஆதரவை இந்த ஒரு சிறு தவறுக்காக குலைத்துவிடவோ, குறைத்துவிடவோ செய்துவிடாதீர்கள்.
என்னுடைய வழக்கமான பதியும் வேகத்தில் (வாரம் ஒருமுறை) இந்த வாரம் செய்ய முடியாது. தினம் ஒரு பதிவாவது போட வேண்டும்.
ஒரு சிறு பிரச்சினை - மற்றவர்கள் நட்சத்திரமாக இருந்த காலங்களில் தமிழ்மணத்தை 20 நொடிக்கு ஒருமுறை F5 செய்தவண்ணம் வேலைப்பளுவோடுதான் இருப்பேன்..
ஆனால், அமீரக வாழ்க்கையில் முதல் முறையாக கொடுத்த சம்பளத்துக்கு வேலை செய்ய இந்த வாரம்தான் வாய்ப்பு! திங்கள் செவ்வாய் இரு நாளும் நூறு கிலோ மீட்டர் தள்ளி பாலைவன மத்தியில், 55 டிகிரி (செல்சியஸ்தான்!)கடுங்குளிரில் வேலை!
அவசரப்பட்டு மகிழ்ச்சி அடைந்து விடாதீர்கள்.. மதுரைக்கு வந்த இந்த சோதனை இரண்டே நாட்களில் விலகி விடும்.
என்ன செய்யலாம் இந்த வாரம்?
நெட்டைக் குடைந்து புதிது புதிதாக விவரங்களைக் கொடுக்கப் போவதில்லை - அதற்கான பொறுமை இல்லாததால்.
இருத்தலியல், போஸ்ட் - மாடெர்னிஸம், க்யூபிஸம் பற்றியெல்லாம் எதுவும் எழுதப்போவதில்லை - (ஸ்பெல்லிங்கே கஷ்டப்பட்டுத்தான் எழுதினேன்)
நகைச்சுவை - படித்து சிரிக்கத்தான் முடியும்!
சுயதம்பட்டம் - ஒரு அளவுக்கு மேல் எனக்கே போரடித்து விடும்..
எனவே, கொஞ்சம் வழக்கம் போல ஈகொ டிரிப் (உபயம்: பெருந்தலைவர் சுஜாதா), மேலே கொஞ்சம் ஃபிலிம் காட்டலாம் என உத்தேசம்.
ஆதரவு, பின்னூட்டங்கள் எல்லாம், கண்ணா, கேட்டு வரக்கூடாது, தானா வரணும், வரும்!
Aug 1, 2005
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி 01 Aug 05
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை அனுபவம், நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
8 பின்னூட்டங்கள்:
வாங்க வாங்க.. சுரேஷ்.. விதி யாரை விட்டது...
:-P
வாருங்கள்.
வாழ்த்துக்கள்.
போன வாரம் அனைவரையும் தூங்க போட்டு விட்டேனோ என்று பயமாக இருக்கின்றது.
கலகலப்பாக பதிய எனக்கும் விருப்பம், ஆனா அந்தளவுக்கு துணிவு இல்லை.
வாங்க!! வாங்க!!
நட் + சத்திரம் :o)
//வாங்க வாங்க.. சுரேஷ்.. விதி யாரை விட்டது... //
கோபி இது சுரேஷிற்கா அல்லது தமிழ்மணம் வாசகர்களுக்கா??
வாழ்த்துக்கள் சுரேஷ்...
நடக்கட்டும்...நடக்கட்டும்...
:-)
//வாங்க வாங்க.. சுரேஷ்.. விதி யாரை விட்டது...
கோபி இது சுரேஷிற்கா அல்லது தமிழ்மணம் வாசகர்களுக்கா??
//
என்ன கேள்வி இது, குழலி ???? அவ்வளவு டியூப்லைட்டா நீங்கள் ;-)
To compensate for above,
சுரேஷ் வாழ்க !!!
சுரேஷ் வாழ்க !!!
சுரேஷ் வாழ்க !!!
சுரேஷ் வாழ்க !!!
சுரேஷ் வாழ்க !!!
சுரேஷ் வாழ்க !!!
சுரேஷ் வாழ்க !!!
சுரேஷ் வாழ்க !!!
சுரேஷ் வாழ்க !!!
சுரேஷ் வாழ்க !!!
வரவேற்ற அனைவருக்கும் நன்றி.
விதியை ஏன் எதிர்மறையாக மட்டும் பார்க்கிறீர்கள் குழலி மற்றும் பாலாஜி? விதி வசத்தால் சில நல்லவையும் (உதாரணத்துக்கு இந்த வார நட்சத்திரம்) நடக்கலாம் இல்லையா:-))
Hi suresh. i am kathirfrom dubai. pls send to me the font . i did not read the message. i am also in UAE I am looking for the job.
i want to share my penathal. how to post my penathals pls explain me suresh.
by
umakathir
flashkathir@gmail.com
Post a Comment