Aug 27, 2005

பெனாத்தல் சுரேஷ்- ஒரு தியாகி 27 Aug 05

நாலு பேர் நன்றாக இருப்பதற்காக ஒருவர் கஷ்டம் அனுபவித்தால் தப்பில்லை - என்று ஒரு புருடா புராணம் கூறுகிறது.. அந்த ஒருவராகத் தானே இருக்க முன்வந்த தன்னலமில்லாத் தொண்டன், தியாக சொரூபம் பினாத்தல் சுரேஷின் தியாகத் திருவரலாறுதான் என்ன?

சுனாமி எச்சரிக்கையை பலநாள் கழித்துச் சொன்னால் என்ன பயன்?
உடனே சொன்னால்தானே மக்கள் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும்?

சரி பில்ட்-அப் எல்லாம் போதும், விஷயத்துக்கே வந்து விடுகிறேன்.

'இங்கிலீஷ்காரன்" என்ற படத்தைப் பார்த்துத் தொலைத்து விட்டேன். எனக்கு ஏற்பட்ட கதி, என் நண்பர்கள், விரோதிகள் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இதை அவசர அவசரமாகப் பதிகிறேன்!

கதையைச் சொன்னால் -'அட நல்லாத்தானே இருக்கு"என்று சொல்வீர்கள்!

சில காட்சிகளை டிவியில் பார்த்தாலும், நல்ல காமெடியா இருக்கும் போல இருக்கே என்றும் எண்ணக்கூடும். (அப்படித்தான் நினைத்து நானும் பார்த்தேன்)

ஆனால், திரைக்கதை என்ற ஒரு ஜந்து இருப்பதாகவே இந்த இயக்குநர் அறிந்திருக்கவில்லை.

படம் நெடுக பழைய படங்களில் வந்த வெவ்வேறு காட்சிகளை சத்யராஜ் மறுபடி நடித்துக் காண்பித்திருக்கிறார். காட்சிகளை கொஞ்சம் மாற்றி இருந்தாலோ, ஒரிஜினலில் உள்ள அபத்தங்களை கோடிட்டு இருந்தாலோ அது கிண்டல், நகைச்சுவை. அதே காட்சியை அப்படியே நடிகர்களை மட்டும் மாற்றி எடுத்ததினால், ஆரம்பத்தில் சில நேரங்களில் வரும் சிரிப்பையும் காணாமல் போக அடித்துவிடுகிறது.

படம் முடியப்போகும் நேரத்தில் அவசரமாக மெஸேஜ் சொல்ல வேண்டிய கட்டாயத்தால் "பெற்றோர் குழந்தைகளை அவர்கள் ஆசைப்படி வர விட வேண்டும்" என்பதை அதீதமான உதாரணங்களோடு கூறி முடிக்கிறார்கள்.
உல்டாக் காட்சிகள், சத்யராஜின் குரல் மாடுலேஷன் மட்டுமே நகைச்சுவை ஆகிவிடாது என்பத்ற்கு ஒரு சரியான உதாரணம் இந்த இங்கிலீஷ்காரன்.

இங்கிலீஷ்காரன் - Accent சரியில்லை!

9 பின்னூட்டங்கள்:

Anand V said...

//சுரேஷ் (penathal Suresh) said...
//thulasi madam-kku sariyaana potti!


:)

முகமூடி said...

முடியாது நான் இங்கிலீஷ்காரன பாத்தேதான் தீருவேன் ;-)

விதி வலியது

Pavals said...

அய்யோ அய்யோ . முதநாளே போய் பார்த்துட்டு, அமைதியா சைலண்டா யாருகிட்டயும் சொல்லாம இருந்தனே, அந்த மாதிரியாவது இருந்திருக்க கூடாதா?, இப்படி நாலு பேரு நம்ம மேல பரிதாபப்படுற மாதிரியா வெளிய சொல்றது.. :-(

Suresh said...

சுரேஷ்,

நானும் சில வாரங்களுக்கு முன்னால் பார்த்தேன். பார்த்துவிட்டு
'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று சும்மா இருந்து விட்டேன்..... :-)

வீ. எம் said...

காப்பாற்றியதுக்கு நன்றி சுரேஷ்.. இருந்தாலும் ஆச யார விட்டது ...ஞாயிற்றுகிழமை பாக்கலாம்னு இருக்கேன்.. !

//தியாக சொரூபம் பினாத்தல் //
ஒரு செகன்ட்ல மிஸ் பன்னி தியாக செருப்பாம் பினாத்தல்னு படிச்சிருப்பேன் , நல்ல வேளை.. :)

//இங்கிலீஷ்காரன் - Accent சரியில்லை! ///
சூப்பர் கமெண்ட்.. :)

இங்கிலீஷ்காரன் - தார் பூசலாம் வாங்க!

பினாத்தல் சுரேஷ் said...

கருத்துக்களுக்கு நன்றி ஆனந்த், முகமூடி, ராசா, சுரேஷ் செல்வா மற்றும் வீ.எம்.

முகமூடி, வீ.எம் - உங்கள் தலைவிதியை யானோ மாற்ற வல்லேன்!

ராசா, சுரேஷ் - தப்புலேயே பெரிய தப்பு தப்பை தப்பு தப்பா பண்ணிட்டு அதை வெளிய சொல்லாம மத்தவங்களையும் தப்பு செய்ய விடறதுதான். உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. இன்னும் இதே போல பத்து படம் பாருங்க!

ஆனந்த் - குத்தியா காட்டறீங்க? எனக்கும் (மறுபடியும்) ஒரு காலம் வரும்!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மலய மாருதம்.

குறைந்தபட்சம் இப்படிப்பட்ட விதிகளையாவது மதியால் வெல்லலாம்:-)

G.Ragavan said...

இந்த மாதிரி படங்களையெல்லாம் நான் பாக்குறதேயில்லை. அதுலயும் சத்தியராஜ் படங்களை பாக்குறத நிப்பாட்டி வருசம் பல ஆகுது. கடைசியா பாத்த விஜயகாந்த் படம் கள்ளழகர். கடைசியா பாத்த சத்தியராஜ் படம் என்ன? நினைவுக்கே வர மாட்டேங்குது..........

துளசி கோபால் said...

நானும் பார்த்தேன். எழுத மனசில்லாம இருந்துட்டேன். அதுக்கப்புறம்
வைரவன்,
துள்ளும் காலம்
அப்படின்னு படங்கள் வந்து சேந்துச்சு.

அதைப் பத்திச் சொன்னாலெ யாராவது கட்டையை எடுப்பாங்கன்னு 'கம்'னு கிடக்கேன்!

 

blogger templates | Make Money Online