வார்த்தைகள் கோர்த்து கதைகளாய்ச் செய்ததில்லை
சேர்த்ததை மாற்றி கவிதைகள் என்றதில்லை
வேர்த்து விறுவிறுத்து வீரனாய் நின்றதில்லை
பார்த்தே பசியாறும் தோற்றம் எனக்கில்லை
வாளெடுத்து போர்செய்து வாகை அணிந்ததில்லை
நாலெழுத்து நானெழுதி நாட்டை மயக்கவில்லை
வேலெடுத்து வீசியே சாதனை செய்யவில்லை
நாளேட்டின் பக்கம் நடுத்தரனைக் கண்டதில்லை
சோற்றுக்கு பொய்சொல்லி சோம்பல் வளர்த்ததில்லை
ஆற்றல் இருக்கோ- அதையாரும் பார்த்ததில்லை
நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றம் ஏதுமில்லை
காற்றடிக்கும் போக்கில் கரைகிறதென் காலம்.
எதிலும் வியப்புமில்லை - ஏதும்புதிய தில்லை
குதிரையாய்க் கண்கட்டி கோட்டிலோடும் வாழ்வில்
பதிலுக் கலைகின்றேன் - என்றுதான் எந்தன்
பதினைந் துநிமிடப் பேறு?
மின்னிடும் பின்னால் (Flash Back:-)) - மறு ஒளிபரப்பு - முதல்முறை பலர் படிக்காததால்..
Aug 1, 2005
பதினைந்து நிமிடப் புகழ்?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை நட்சத்திரம், புனைவு
Subscribe to:
Post Comments (Atom)
9 பின்னூட்டங்கள்:
தளை கிடக்கட்டும் வாத்யாரே! ஓரே ஒரு டவுட்டு. நிமிடப் புகழில் ப் உண்டா? அதான் என்னோ லேட்டஸ்ட்ட ப்னாத்தல்!
nallarukku, naNbarE :)
//வார்த்தைகள் கோர்த்து கதைகளாய்ச் செய்ததில்லை
சேர்த்ததை மாற்றி கவிதைகள் என்றதில்லை//
பினாத்தல்கள் கூடிப்போச்சு போல:-)))))
கவிதை நன்றாக இருக்கிறது.
இந்தவார நட்சத்திரமா?
வருக வருக!!!!
வாழ்த்துக்கள்!!!!
வாரம் ஃபுல்லா பினாத்தப்போறாமா நாங்க?
அட இப்பத்தான் கவனிச்சேன்.. வார நட்சத்திரமா... கலக்குங்க..
ஒரு வாரம் பொனாத்துனாலும் பெனாத்துன மாதிரியா தெரிஞ்சுது, எவ்ளோ அருமையா விசயத்த சொன்னாருன்னு கெட்ட பெயரு வாங்காம... ஒரு வாரம் பெனாத்துனாரு ஆனா ஒரு வருஷம் தாங்கும் போலருக்கேப்பான்னு எல்லாரும் புகழும் அளவு பெனாத்துங்கள்...
உங்கள் நட்சத்திர அந்தஸ்தை கௌரவிக்கும் விதமாக நீங்கள்தான் இன்று முதல் ப.ம.க இலக்கிய அணித்தலைவர்...
இன்றையிலிருந்து 24X7 பினாத்தல் தானா, அய்யோ சாமி ;-)
வாழ்த்துக்கள், சுரேஷ், இந்த வாரம் கலக்குங்க :)
எ.அ. பாலா
பெனாத்துவது என்று முடிவெடுத்தபின் பின்வாங்க மாட்டான் இந்த அஞ்சா சிங்கம்!
வாழ்த்துக்களுக்கு நன்றி - வாழ்த்தியதற்கு வருத்தப் பட வைக்காமல் இந்த வாரத்தை ஓட்டிவிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
எதுகை மோனையுடன் கவிதை நன்றாயுள்ளது.
Post a Comment