தோழர் முகமூடி, தன் பதிவில் அன்னியனுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் ஓரளவு கூட மண்ணின் மைந்தனுக்கு அளிக்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டிருந்தார்.
ஆஹா - ஒரு சக வலைப்பதிவாளரின் நியாயமான கோரிக்கைக்குக் கூட செவி சாய்க்கவில்லை என்றால் என்னிடம் கம்ப்யூட்டர் இருந்து என்ன பயன், கலப்பை இருந்து என்ன பயன், ப்ளாஷ்தான் இருந்து என்ன பயன்?
ஆனால் மண்ணின் மைந்தன் படம் பார்க்க முடியவில்லையே? (பார்க்கும் படியாகவும் இல்லையே என இடையே சொல்லும் நபர் சற்று அடங்கவும்!)
கழகக் கண்மணிகளுக்கு புத்துயிர் ஊட்டும் வண்ணமாக, கலைஞர் கதை, உரையாடல், பாடல்கள் எழுதி வெளிவர உள்ள "செல்லக்கிளி" படத்தின் சில காட்சி அமைப்புக்களையும், பாடல்களையும் நம்பத்தகாத வட்டாரங்கள் மூலம் அறியப்பெற்றேன்.
அவற்றை உங்களுக்கு அளிப்பதில் உள்ளபடியே பேருவகை அடைகிறேன் என்று சொன்னால் அது மிகை ஆகாது என்பதோடு, கீழே உள்ள ஃப்ளாஷ் படத்தை தமிழ்மணம் கூறும் நல்லுலகத்தார் பலமுறை பார்த்து, நாட்டு நடப்புக்களை அறிய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.. (இதுதான்பா இந்த செந்தமிழ்லே எழுதினா வர பிரச்சினை - வாக்கியத்தை முடிக்கவே மனசு வர மாட்டேங்குது.)
படத்தில் வரும் பாடல்களையும் நானே பாடி வலை ஏற்றிவிடலாம் என நினைத்தேன் - ஆனால், இரு தினங்களுக்கு முன் தான் என் குரல்வளத்தை உங்களிடம் காட்டி கொடுமைப்படுத்தினேன், மீண்டும் அதையே செய்ய நான் சாடிஸ்ட் கிடையாது.
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் - அட அது கூட முடியாவிட்டால் குறைந்தபட்சம் நட்சத்திரத்திலாவது குத்துவீர், பின்னூட்டமாவது தாரீர்!
தோழர்களே, எழுமின், விழிமின்! கண்ணம்மாவுக்கும் மண்ணின் மைந்தனுக்கும் ஆன கதி இந்த செல்லக்கிளிக்கு ஆகாமல் இருக்க பாடுபடுமின்!
Aug 5, 2005
செல்லக்கிளி - the Preview 05 Aug 2005
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை சினிமா, நக்கல், நட்சத்திரம், ப்ளாஷ், விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
23 பின்னூட்டங்கள்:
//கவலைப்படாதீங்க பெரியவரே..//
சூப்பரப்பு.சிரிப்பை அடக்க முடியவில்லை...
ஃப்ளாஷில கலக்கிப்புட்டிங்க...
சப்பாசு...சப்பாசு...
text is changing very fast. you need it slow it down.
sooper !
சூப்பரப்பு!!!!
நன்றி - சுதர்சன், சிலந்தி, ஆனந்த், துளசி அக்கா
சிலந்தி, அது ஒரு காரணமாகத்தான் வேகமாய் வெச்சுருக்கேன். ரிப்பீட் ஆடியன்ஸ் வேணாமா? (இதைத்தான் மீசையிலே மண் ஒட்டலேன்னு சொல்லுவாங்க))
எங்க இலக்கிய அணித்தலைவர் சுரேசு கலக்குறாரேப்பா.... போட்டு தாக்கிட்டீங்க... அதுலயும் அந்த பஸ் உரையாடல்..
ஒரு விசயம்... நீங்க சொல்ற மாதிரி நம்ம கதாநாயகியும் கதாநாயகனும் வசனம் பேசிட்டாதான் படம் ஓடிடுமே... ஆனா இப்ப திமுக தொண்டர்கள் இல்ல எங்க நம்ம தலையில டிக்கெட்ட கட்டிடுவாங்களோன்னு ஓடறாங்க... என்னா காரணம்னு நான் ஒரு ப்ரிவ்யூ கொடுக்கணுமா ::
அவள்:: அன்பே... ஆருயிரே... அடுக்களையில் வசதியாய் இருக்கும் என்று ஒரு அடுப்பு கேட்கவில்லை... ஒய்யாரக்கொண்டையில் அழகுபார்க்க அடுக்கு மல்லி கேட்கவில்லை... அணிந்து கொள்ள அவசியமான ஒரு அட்டிகைதானே கேட்கிறேன்...
அவன் :: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு என்றே நம் அய்யன் சொன்னதை நீயும் மறந்தாயோ...
அவள் :: ஊண் மறப்பேன் உயிர் துறப்பேன் என்றாயே என் அன்பே... உண்ணவும் சிறிது சுண்டல் தருவாயோ
அவன் :: தேனும் திணைமாவும் போல் சுவையாய் இருக்கிறது உன் பேச்சென்பாயே.. இப்போது பேசுகிறேன் கேள் கண்ணே..
அவள் :: ஆக வழக்கம் போலவே ஒரு காசு பெறாது என்பதனை நாசூக்காக சொல்கிறாய்... அப்படித்தானே...
அவன் :: என்னையே நான் உனக்கு கொடுத்த பின் வேறெதுவும் தரவில்லை என்ற எண்ணம் வருவதே தீது...
பகடி நன்றாக உள்ளது.
கலக்கிட்டீங்க சுரேஷ்..
kalakkal....
supero super..! Enga thandhu padhavi pari poyidumonnu nenachchu pora edamellam 'எங்க இலக்கிய அணித்தலைவர் சுரேசு கலக்குறாரேப்பா.... ' enru oruvaru bayaththil olaruraaru paarunga..!
:-)
good!
-arul
:))
Great work...Nice Effort!
தவறு தொண்டர்களிடம்தான் இருக்கிறது. தலைவர்கள் மேல் தவறில்லை. அவர்கள் ப்ராக்டிகலாகத்தான் நடந்து கொள்கிறார்கள். அதை நேரடையாக பார்க்கும் தொண்டனோ அதில் மட்டும் அவர்களைப் பின்பற்றுவதிலிருந்து தவறி விடுகிறான்.
தலைவர் பேச்சைக் கேட்டு ஒரு தலைமுறையே ஹிந்தி படிக்காமல் எதிர்க்காலத்தைத் தொலைத்தது. அவர் பேரன் மட்டும் அதே மொழியைப் படித்து மந்திரியாகி விட்டான். அதுவும் எப்படி? அடி உதை எல்லாம் பட்டது தொண்டர்கள். அலுங்காமல் மந்திரி ஆனது பேரன்கள். அடித்து கொள்ள ஆயிரம் கை வேண்டும் ஐயா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அது என்ன சார்?
வடகிழக்குல இருந்து வரும்னு சொல்லறீங்க?
வடகிழக்குலதான் நாங்க இருக்கோமுங்கோ, பார்த்து பேசுங்கோ....;)
ஷிவ்..
Suresh,
This is simply a terrific effort :)
சுரேஷ், கெளப்பீட்டிஙக போங்க, படம் அலப்பரையா இருக்கு.
திரு. டொண்டு அவர்களே,
/*
தவறு தொண்டர்களிடம்தான் இருக்கிறது. தலைவர்கள் மேல் தவறில்லை.
*/
தவறு தொண்டர்களிடம் இருக்கிறது - இதை யாரும் மறுப்பதக்கில்லை, தலைவனின் தராதரம் அறியாது, ஒரு ஏமாளியாய், கண்மூடித்தனமாக தலைவனை கொண்டாடுவது அவனது தவறுதான்.
ஆனால் போற போக்குல "தலைவர்கள் மேல் தவறில்லை"ன்னு சொல்றது எப்படி? ஏமாற்று வேலை தவறில்லைன்னு சொல்றீங்களா? புரியலயே !!!
-டண்டணக்கா
:))
கருத்துக்களுக்கு மிக்க நன்றி -முகமூடி, பத்ரி, ஐகாரஸ், சுரேஷ், மாயவரத்தான், விசிதா, அருள், அருண், டோண்டு, ச்ரிஷிவ், பாலா, டண்டணக்கா, நவன் பகவதி, தங்கமணி மற்றும் தென்றல்.
முகமூடி, உங்க வேரியேஷன் சூப்பர்! ஆனா, ஃப்ளாஷிலே கரெக்-ஷன் செய்யறது கொஞ்சம் கஷ்டம்.
ச்ரீஷிவ், வடகிழக்கே இருந்து "நற்செய்தி" வரும்னுதானே சொல்லி இருக்கேன்?
அட கரெக்ஷனுக்கெல்லாம் இல்லீங்க... நம்ம மேட்டர கொஞ்சம் போட்டு வச்சேன்... மைக் கிடைச்சா அரசியல்வாதிங்க போட்டு தாக்கரதில்லையா அதுமாதிரி (நாமும் ஒரு அரசியல்வாதிதான)
இனிமேல் 'பினாத்தல்' சுரேசுன்னு யாரும் சொல்லக்கூடாது. 'பிரமாதம்' சுரேஷ் தான் சரி. அருமை.
இப்போது எனக்குப் புரிந்துவிட்டது!
சுரேஷ்,
சூப்பர்!!! கலக்கிட்டீங்க
முகமூடி,
உங்க பின்னூட்ட வசனம் அருமை!!
வர வர கோஸ்ட் ரைட்டர் ஆவுற தகுதி நம்ம சக வலைப்பதிவாளர்கள் நெறைய பேருக்கு வளந்துகிட்டே போவுது...
:-)
கருத்துக்களுக்கு மிக்க நன்றி காசி (Kasi), கோபி(Gopi) & Agent 8860336 ஞானபீடம்
Post a Comment